Pages

Friday, February 8, 2008

சிறப்பு நேயர் ".:: மை ஃபிரண்ட் ::."


இந்த றேடியோஸ்பதியின் சிறப்பு நேயராக வலம் வர இருப்பவர் ".:: மை ஃபிரண்ட் ::.".. இதெல்லாம் சொல்லியா தெரியணும்? பதிவில் இருக்கும் "சித்து" வின் படத்தைப் பார்த்தாலே புரியும்னு சலிக்காதீங்க ;-)

மலேசியத் திருநாட்டில் இருந்து பதியும் ஒரு சில பதிவர்களில் .:: மை ஃபிரண்ட் ::. தனித்துவமானவர்.

THe WoRLD oF .:: MyFriend ::. என்ற பிரத்தியோகத் தளத்தில் தன் எண்ணப் பகிர்வுகளையும்,

ஜில்லென்று ஒரு மலேசியா என்ற கூட்டுத்தளத்தில் மலேசியாவின் வரலாறு, பண்பாடு, சுற்றுலா குறித்த தகவல்களையும்,

கூடவே தேன் கிண்ணம், பயமறியா பாவையர் சங்கம் என்று ஒரு லாரி வலைப்பதிவுகளையும் வைத்திருக்கின்றார் இவர். எல்லாவற்றையும் சொல்லணும் என்றால் இந்தப் பதிவே தமிழ் மண முன் பக்கம் ஆகிவிடும். பலவிதமான வலைப்பதிவுகள் வைத்திருந்தாலும் வெகு சிரத்தையோடு எழுதிப் போடுவது இவரின் சிறப்பு. மலேசியா குறித்த இவரின் விதவிதமான பதிவுகள் என் முன்னுரிமை வாசிப்பில் எப்போதும் இருக்கும்.


அழிந்து போய்க்கொண்டிருக்கும் கும்மிக் கலையை இவரின் பின்னூட்டப் பெட்டி வாழ வைத்துக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சரி இனி .:: மை ஃபிரண்ட் ::. இன் சிறப்பு விருப்பங்களை அவர் சொல்லக் கேட்போம்.

பிரபா அண்ணா இப்படி ஒரு அறிவிப்பு விட்டதும் கண்டிப்பாக கலந்துக்கணும் என முடிவெடுத்தாச்சு

. ஆனால், எனக்கு இருக்கிற ஒறெ பிரச்சனை 5 பாடல்கள் தேர்வு செய்யுறதுதான். அண்ணே "5 பாடல் மட்டுமே!"ன்னு ஸ்ட்ரிக்கா சொல்லிட்டார். எனக்கோ 100 பாட்டுக்கு மேலே இருக்கே.. அதுல எது தேர்வு செய்யுறதுன்னு தெஇயாமல் நான் விழிக்க; என்னை பார்த்து என் கணிணி விழிக்க.. என்னை தேர்ந்தெடு என்னௌ தேர்தெடுன்னு ஒவ்வொரு பாடல்களும் என்னை பார்த்து கண் சிமிட்ட ஆரம்பித்து விட்டது
ஒரு வழியா

5 பாடல்கள் தேர்வாகியாச்சு.. ஒன்னொன்னா பார்ப்போம் வாங்க..

1- மனமே தொட்டா சிணுங்கிதானே (தொட்டா சிணுங்கி)

90 களில் வெளியாகிய பல எவர்க்ரீன் பாடல்களில் ஒன்றாக அமைந்தது. ஆனாலும், இது மற்ற பாடல்களை விட கொஞ்சம் தள்ளீ யூனிக்காக தெரிந்த பாடல். கவலை, சந்தோஷம்ன்னு என்ன ஒரு மூட்ல இருந்தாலும் அதுக்கேற்ற மாதிரி இந்த இசையும் என் உயிரோடு கலந்ததுபோல உணர வைக்கும். காலை, மாலை, இரவு என்று நேரம் காலம் பார்க்காமல் கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று..
இந்த பாடல் இரண்டு வெர்ஷன்களில் இருக்கும். ஒன்று ஹரிஹரன் பாடியது. இன்னொன்று ஹரிணி பாடியது. எது சிறந்தது என்று இன்று வரை என்னால் நிர்ணயிக்க முடியவில்லை. இரண்டுமே அற்புதம். இந்த மாதிரி சூப்பர் ஹிட் கொடுத்த ஜெர்ரி இப்போ எங்கே? எங்கே? எங்கே?


2- கல்லூரி மலரே மலரே (சினேகிதியே)

இந்த படம் வெளியான காலத்துல நான் இன்னும் இடைநிலைப்பள்ளியில் படிச்சிட்டு இருந்தேன். கல்லூரி மாணவியா இருந்து இந்த படம் என்னை இம்ப்ரஸ் பண்ணியிருக்குன்னு சொன்னா அது சகஜம். ஆனால், அந்த சின்ன வயசுலேயே இந்த படமும் இந்த படத்தின் பாடல்களும் ரொம்ப ரொம்ப இம்ப்ரஸ் பண்ணியிருந்தது எனக்கு. தினமும் 3 வேளை சாப்பிடுறேனோ இல்லையோ, மூனு வேளை கண்டிப்பா இந்த படத்தை பார்ப்பேன். 6 தடவையாவது இந்த பாடலை கேட்பேன். அப்படி ஒரு பைத்தியம் இந்த பாடல் மேல்.
சுஜாதா, சித்ரா இருவரும் இணைந்து பாடிய முதல் பாடலும் இதுதானே! வித்யாசாகர் வித்தியாசமான இசையில் வைரமுத்துவின் முத்து முத்தான வரிகளுக்கு இவர்கள் இருவருடன் சேர்ந்து சங்கீதாவும் குரல் கொடுத்திருப்பார். பாடலின் ஒவ்வொரு வரியும் அருமையோ அருமை. பல விதமான உதாரணங்களுடன் நட்பை மிக எளிதாக ஆனால் ஆழமாக சொல்லியிருப்பார் கவிப்பேரரசு.
"

ஐஸ்க்ரீம் தலையில் செர்ரி பழம் இருப்பது அரை நொடி வாழ்க்கையடி"
"பாறைகள் மேல் முட்ட நினைத்த முட்டைகள் தவிடுபடி"
இந்த வரிகளின் தனித்துவம் தெரிகிறதா? அது மட்டுமல்லாமல் முயல்-ஆமை கதையும் இதில் கொண்டு வந்திருக்கிறார். நாமெல்லாம் சாதாரணமாவே ஆமையின் சப்போர்ட்டராக இருந்திருப்போம். ஆனால், இந்த பாட்டை கேட்டதிலிருந்து நான் இனி முயலோட கட்சின்னு கட்சிக்கூட மாறிட்டேனா பாருங்களேன்..
"முயலுக்கு ஊசி போட்டு தூங்க வைத்து தேர்தலில் ஆமை ஜெயித்தடி.. முயலுக்கு மயக்கம் தெளிந்துவிட்டால் ஆமையின் பாடு ஆபத்தடி"
Get this widget Track details eSnips Social DNA


3- பளிங்குனால் ஒரு மாளிகை (வல்லவன் ஒருவன்)

மை ஃபிரண்டுன்னா அவ புது பாட்டு மட்டும்தான் கேட்பாள்ன்னு பல பேர் நினைக்கலாம். ஒரு காலம் வரை அதுதான் உண்மையா இருந்தது. 80-இல் வெளியான பாடல்களையாவது கேட்பேன். ஆனால், கருப்பு வெள்ளை படம்ன்னாலே தூர ஓடிடுவேன். இங்கே ரேடியோவில் தினமும் இரவு 11 மணிக்கு இந்த மாதிரி பழைய பாடல்கள் ஒளிப்பரப்புவார்கள். அம்மாக்கு இந்த பாடல்கள் ரொம்ப பிடிக்கும். ஆனால், அந்த பாடல் ரேடியோவில் கேட்டதுமே உடனே ஓடிப்போய் ரேடியோவை அடைத்துவிடுவேன். ரேடியோ ரிப்பேர், ரேடியோவில் இன்னைக்கு பழைய பாட்டு இல்லை, அப்படி இப்படின்னு பல வகையான பொய்களை சொல்லி தினமும் சமாளிக்க வேண்டியது இருக்கும்.. அப்பப்பா.....
இப்படி இருக்கும் சமயத்தில் ஒரு நாள் அகத்தியனின் அதிரடி ரீமிக்ஸின் பழைய பாடல்களின் ரீமிக்ஸ் கேட்க நேரிட்டது.. என்னமா பின்னியிருக்கார் போங்க. அப்போதுதான் முதன் முதலாக இந்த பாடலை கேட்டேன். அந்த சம்பவத்துக்கு பிறகுதான் பழைய பாடல்கள் கூட நல்லா இருக்கேன்னு கொஞ்சம் கொஞ்சமா பழைய பாடல்களை தேடிப்பிடித்து கேட்க ஆரம்பித்தேன். இப்போது என்னுடைய சொந்த கலேக்ஷனிலும் பல பழைய பாடல்கள் இருப்பதுக்கு இந்த பாடல்தான் பிள்ளையார் சுழி. :-)4- வேர் டூ வீ கோ (புதுக்கோட்டையிலிருந்து சரவணன்)

ஒரு டப்பா படம். அதனால், பாடல்களில் அருமையும் மக்களுக்கு தெரியாமல் புதைந்து போனது. இந்த வரி 100% இந்த பாடலுக்கு பொருந்தும். யுவன் இசையில் யுவனே பாடிய பாடல். இதமாக இருக்கும். வரிகளில் ஸ்பெஷல் என்று சொல்ல பெருசா ஒன்றும் இல்லை. இது முழுக்க முழுக்க இந்த இசையால் நான் மயங்கிய பாடல். இந்த இசையில் யுவனின் குரல் பதிந்த விதமும் ஆங்காங்கே கோரஸ் சேர்த்த விதமும் வியக்கும் படி செய்திருக்கிறார் யுவன். பாடல் வெளிவந்ததிலிருந்து சமீப காலம் வரை என் மொபைலின் ரிங்டோனாக இருந்த பாடலும் இதுவே!

Get this widget Track details eSnips Social DNA5- குழலூதும் கண்ணனுக்கு (மெல்ல திறந்தது கதவு)

இந்த காலக்கட்டத்தில் இளையராஜாவின் இசையில் வெளிவந்த பாடல்கள் உலகத் தரம் வாய்ந்தவை. இந்த படத்தின் ஸ்பெஷலிட்டியே MS விஸ்வநாதன் மெட்டமைக்க ராஜா இசையமைத்ததுதான். ஒவ்வொரு பாடல்களும் ஒவ்வொரு முத்துக்கள்.
"ஊருசனம் தூங்கிடுச்சு ஊதக்காத்து அடிச்சிருச்சு" என்ற பாடல்தான் சூப்பர்ன்னு பல பேர் சொல்லி கேட்டிருக்கேன். இந்த பாடலும் என்னை கவர்ந்த பாடல்தான். ஆனால் குழலூதும் கண்ணனுக்கு பாடலில் உள்ள அந்த சுகமான சூழல் நான் கேட்கும்போதெல்லாம் என்னை ஆட்கொள்வதை ஒரு நாள் உணர்ந்தேன். அதிலிருந்து இந்த பாடலும் நான் தினமும் கேட்கும் பாடல் லிஸ்டில் நீங்காத இடம் பிடித்துவிட்டது.

Get this widget Track details eSnips Social DNA


5 பாடல் மட்டும் என சொல்லி என்னை இத்துடன் நிறுத்த சொன்ன பிரபா அண்ணனை இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கண்டிக்கிறேன். :-) அடுத்து சந்தர்ப்பம் கிடைத்தால் மற்ற பாடல்களை பற்றியும் சொல்கிறேன். அதுவரையில் நன்றி கூறி விடைப்பெருகிறேன்.
வணக்கம்

.:: மை ஃபிரண்ட் ::.

16 comments:

MyFriend said...

சூப்பரண்ணே..

:-)

கோபிநாத் said...

மீ த பாஸ்ட்டு தான் இந்த வாரமா! ! ! ! சூப்பர் ;)

கோபிநாத் said...

\\இந்த றேடியோஸ்பதியின் சிறப்பு நேயராக வலம் வர இருப்பவர் ".:: மை ஃபிரண்ட் ::.".. இதெல்லாம் சொல்லியா தெரியணும்? பதிவில் இருக்கும் "சித்து" வின் படத்தைப் பார்த்தாலே புரியும்னு சலிக்காதீங்க \\

;))))

தல
முன்னுரை எல்லாம் சூப்பர் ;))

\\ கூடவே தேன் கிண்ணம், பயமறியா பாவையர் சங்கம் என்று ஒரு லாரி வலைப்பதிவுகளையும் வைத்திருக்கின்றார் இவர். எல்லாவற்றையும் சொல்லணும் என்றால் இந்தப் பதிவே தமிழ் மண முன் பக்கம் ஆகிவிடும். பலவிதமான வலைப்பதிவுகள் வைத்திருந்தாலும் வெகு சிரத்தையோடு எழுதிப் போடுவது இவரின் சிறப்பு. மலேசியா குறித்த இவரின் விதவிதமான பதிவுகள் என் முன்னுரிமை வாசிப்பில் எப்போதும் இருக்கும்.


அழிந்து போய்க்கொண்டிருக்கும் கும்மிக் கலையை இவரின் பின்னூட்டப் பெட்டி வாழ வைத்துக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.\\

இம்புட்டு சொல்லிட்டு எங்க பாசக்கார குடும்பத்தின் பாசக்கார தங்கச்சின்னு என்று சொல்லாததை கண்டிக்கிறேன்...;))

கோபிநாத் said...

\\1- மனமே தொட்டா சிணுங்கிதானே (தொட்டா சிணுங்கி)\\

தேவ்யானி நடிச்ச முதல் படம் தானே இது...நல்ல பாடல் ;)

\\2- கல்லூரி மலரே மலரே (சினேகிதியே) \\

ஆஹா...ஆஹா....ஒரு காலத்தில் கல்லூரியில கலக்கிய பாடல்....எனக்கு பிடித்த பாடல்...;))

\\ சுஜாதா, சித்ரா இருவரும் இணைந்து பாடிய முதல் பாடலும் இதுதானே! வித்யாசாகர் வித்தியாசமான இசையில் வைரமுத்துவின் முத்து முத்தான வரிகளுக்கு இவர்கள் இருவருடன் சேர்ந்து சங்கீதாவும் குரல் கொடுத்திருப்பார். பாடலின் ஒவ்வொரு வரியும் அருமையோ அருமை. பல விதமான உதாரணங்களுடன் நட்பை மிக எளிதாக ஆனால் ஆழமாக சொல்லியிருப்பார் கவிப்பேரரசு.\\

உண்மை...இசையும், வரிகளும், குரல்களும் மிக மிக அழகாக பொருந்தியிருக்கும். அதே போல சுஜாதாவும், சித்ராவும் அந்த படத்தில் வரும் தோழிகள் போல அனுபவித்து பாடியிருப்பார்கள் ;))

\\3- பளிங்குனால் ஒரு மாளிகை (வல்லவன் ஒருவன்\\

அருமையான பாடல்...எல் ஆர் ஈஸ்வரி அவர்கள் இழுத்து பாடியிருப்பதும் அருமை ;)

\\4- வேர் டூ வீ கோ (புதுக்கோட்டையிலிருந்து சரவணன்)\\

ஆஹா...இப்போது தான் இந்த பாடலை கேட்டேன்...நல்லா தான் இருக்கு..;)

\\5- குழலூதும் கண்ணனுக்கு (மெல்ல திறந்தது கதவு)\\

திரு. எம் எஸ் விஸ்வநாதன் அவர்களும், ராஜாவின் கூட்டணியில் அளித்த அற்புதமான பாடல்களில் இதுவும் ஒன்று...எனக்கும் பிடித்த பாடல் ;)

கோபிநாத் said...

பல புதிய புதிய முயற்சிகள் செய்து எங்களை உற்சாகப்படுத்தும் தலைவர் கானா அவர்களுக்கு மீண்டும் ஒரு நன்றி ;))

\\5 பாடல் மட்டும் என சொல்லி என்னை இத்துடன் நிறுத்த சொன்ன பிரபா அண்ணனை இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கண்டிக்கிறேன். :-) அடுத்து சந்தர்ப்பம் கிடைத்தால் மற்ற பாடல்களை பற்றியும் சொல்கிறேன். அதுவரையில் நன்றி கூறி விடைப்பெருகிறேன்.
வணக்கம்

.:: மை ஃபிரண்ட் ::.\\

வாய்ப்பை பயன்படுத்தி அருமையான, ரசிக்கத்தக்க ஒரு தொகுப்பை தந்தமைக்கு தங்கச்சிக்கு ஒரு சிறப்பு நன்றி ;)

pudugaithendral said...

வாய்ப்பை பயன்படுத்தி அருமையான, ரசிக்கத்தக்க ஒரு தொகுப்பை தந்தமைக்கு தங்கச்சிக்கு ஒரு சிறப்பு நன்றி ;)


ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்


சும்மா சொல்லக்கூடாதுங்கபாட்டுகள்

சூப்பர்.........

CVR said...

பாடல்கள் அனைத்தும் அருமை!!

3- பளிங்குனால் ஒரு மாளிகை (வல்லவன் ஒருவன்)
மற்றும்
5- குழலூதும் கண்ணனுக்கு (மெல்ல திறந்தது கதவு)

எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பாட்டுக்கள்!


2- கல்லூரி மலரே மலரே (சினேகிதியே)
மிதமான விருப்பம் கொண்ட பாடல்

மற்ற இரண்டும் சற்றே புதியவை!!
ஆனால் எல்லா பாட்டுக்களுமே கேட்க இனிமையாக இருந்தன!
நல்ல தேர்வுகள்!
நன்றி மை ஃபிரண்ட்!! :-)

கானா பிரபா said...

தல கோபி

பாசக்கார அம்மணின்னு நான் வேற சொல்லணுமாக்கும்.

புதுகைத் தென்றல்

வருகைக்கு நன்றி

சிவிஆரே

மத்தப் பாட்டுக்கள் புதுசா? எந்த லோகத்தில் இருக்கீங்க தல

Anonymous said...

Hi,

This is the first time i am visiting your blog.
i am very excited.
its great!!!!

இளையராஜா இசையில் வந்த பாடல். எனக்கு முதல் வரி மறந்து விட்டது. உங்களுக்கு தெரிந்தால் pls சொல்லவும். கொஞ்சம் classic base ல் அமைந்து இருக்கும் .

"பூவாடை காற்று ஜன்னலை சாத்து...." இவ்வளவு தான் ஞாபகம் இருக்கிறது.

its an eighty's song and its a duet.

i love this song. i forget the first line. i am trying a lot to get it.

pls help me.

thanks in advance.

Nithya balaji

G.Ragavan said...

அருமையான பாடல்கள். முதலில் மை பிரண்டிற்கு வாழ்த்துகள்.

1. மனமே தொட்டால் சிணுங்கிதானே... மிக அருமையான பாடல்.... எனக்கும் ரொம்பப் பிடிக்கும்...

2. சினேகிதியே படத்தில் பாடல்கள் அருமையா இருக்கும்.

3. அருமையான பாட்டு.. இன்னைக்கும் செம பெப் சாங். எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலுக்கு மாற்றா இன்னொரு குரல் இன்னும் வரலைங்குறதுதான் உண்மை. சில குரல்கள் வந்து முயற்சி செஞ்சாலும் நிலைக்கலை.

4. இந்தப் படம் மகாமட்டம்னு தெரியும். ஆகையால பாட்டுகளையும் கேட்டதில்லை. உங்களாலதான் கேக்க முடிஞ்சது.

5. மெல்லிசை மன்னரின் மெட்டுகள் மிக அருமையானவை. இனிமையானவை. அவைகளுக்கும் மேலாக உணர்வுகள் மிகுந்தவை. அவருடைய மெட்டுக்கு வாத்தியக்கோர்வை செய்வது எந்த இசையமைப்பாளருக்கும் இனிய செயலே. அதைத்தான் இளையராஜாவும் செய்திருக்கிறார். மிக அருமையாக. எல்லாப்பாட்டுகளுமே அருமை. ஆனா நீங்க சொன்ன மாதிரி..இந்தப் பாட்டு எனக்கும் ரொம்பப் பிடிக்கும்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இந்த பாடல் இரண்டு வெர்ஷன்களில் இருக்கும். ஒன்று ஹரிஹரன் பாடியது. இன்னொன்று ஹரிணி பாடியது. எது சிறந்தது என்று இன்று வரை என்னால் நிர்ணயிக்க முடியவில்லை//

மனமே தொட்டா சிணுங்கி தானே - ஹரிஹரன் பாடியதும் நல்லாத் தான் இருக்கும்! ஆனா நமக்கு என்னவோ ஹரிணி பாடினது தாங்க! கொஞ்சூண்டு சிணுங்கல் போலத் தெரியும்! அதை டாப் ஆஃப் தி லிஸ்ட்டில் கொடுத்த மைஃபிரெண்டு அக்கா வாழ்க வாழ்க!!

யக்கா-நீங்க கேட்ட கேள்வியை நானும் கேட்கிறேன்-"ஜெர்ரி-எங்கய்யா போனீரு?"

சினேகிதியே பாடல்கள் எல்லாம் அருமை! கா.பி அண்ணாச்சியின் நேயர் விருப்பமான ராதை மனதில் ராதை மனதில் பாட்டைக் கண்ணன் பாட்டில் இட்டிருக்கிறோம்!

பளிங்கினால் ஒரு மாளிகை - LR ஈஸ்வரிக்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்! இதை எத்தனையோ மேடைக் கச்சேரிகளில் கேட்டாகி விட்டது! ஆனா ஈஸ்வரி, ஈஸ்வரி தான்!

குழலூதும் கண்ணனுக்கு - ஆகா! ஞாபகப்படுத்திட்டீங்க! இது எப்படி இன்னும் கண்ணன் பாட்டில் வராம இருக்கு! இருங்க பதிவைப் போட்டுட்டு வாரேன்! ;-)

மங்களூர் சிவா said...

ஒரு லாரி பளாக்ஸ் ஒரு லாரி மீ தி ஃபர்ஸ்ட்டு ஒன்றாக சேர்ந்த இவதானே மை ஃப்ரெண்ட்

பதிவு, 5 பாடல்களும் சூப்பர்.

பாச மலர் / Paasa Malar said...

எல்லாப் பாடல்களும் நன்று
மை ஃப்ரண்ட்..அதிலும் பளிங்கினால்...மற்றும் குழலூதும்...சூப்பர்..

பாச மலர் / Paasa Malar said...

//இளையராஜா இசையில் வந்த பாடல். எனக்கு முதல் வரி மறந்து விட்டது. உங்களுக்கு தெரிந்தால் pls சொல்லவும். கொஞ்சம் classic base ல் அமைந்து இருக்கும் .

"பூவாடை காற்று ஜன்னலை சாத்து...." இவ்வளவு தான் ஞாபகம் இருக்கிறது.//

தலையைக் குனியும் தாமரையே
உன்னை எதிர்பார்த்து
வந்த பின்பு வேர்த்து


...பூவாடைக்காற்று ஜன்னலைச் சாத்து
உத்தரவு தேவி தத்தளிக்கும் ஆவி...

நல்ல பாடல்..வரிகள் மறந்து விட்டன..திரும்பவும் வரிகள் கிடைத்தால் எழுதுகிறேன்...

கானா பிரபா said...

நித்யா பாலாஜி

உங்கள் முதல் வருகைக்கு நன்றி. நீங்கள் கேட்ட பாடலைப் பற்றி பாசமலரே சொல்லீட்டாங்க.

தலையை குனியும் தாமரையே பாடல் "ஒரு ஓடை நதியாகிறது" படத்தில் வருகின்றது.

ராகவன், ரவிஷங்கர் மங்களூர் சிவா, பாசமலர் உங்கள் அனைவரின் கருத்துக்கும் நன்றி

Anonymous said...

yes!!!!!!!!!!!!!!!!!!!!!

thanks a lot pasa malar and gana prabha.

nithya balaji