இந்த வாரம் சிறப்பு நேயராக முத்தான ஐந்து பாடல்களோடு வந்திருப்பவர் எங்கள் அன்புக்குரிய பாலைவனத்துச் சிங்கம் "கோபி" என்ற கோபிநாத்.
இந்த றேடியோஸ்பதி வலைப்பதிவில் தொடர்ந்து வித்தியாசமான முயற்சிகளுக்கு ஊக்கமளித்து இன்று ஒரு வருடத்துக்குள் 94 இசைப்பதிவுகளைத் தொடுவதற்கு நம்ம தல கோபி தான் முதற் காரணம். மற்றதெல்லாம் அதற்குப் பிறகு தான். இவரின் உற்சாகப்படுத்தும் கருத்துக்கள், ஆலோசனைகள் தான் இப்பதிவுகளைத் தொடர்ந்து தருவதற்கு ஊக்கசக்தியாக அமைந்தது.
என்னைப் போலவே ராஜாவின் வெறிபிடித்த ரசிகர்களில் ஒருவர் கோபி. கூடவே மலையாளப் பட ரசனையும் சேர்ந்து விட்டது. மாதாந்தம் ஒரு பதிவு, அதுவும் உருப்படியான பதிவு போடுவது என்பதை உறுதியாகக் கொண்ட விடாக்கண்டன் இவர்.
கோபிநாத் என்ற தன் சொந்த வலைப்பதிவில் பழைய நினைவுகள், சிறுகதை, ரசித்தவை என்று பல தரப்பட்ட படைப்புக்களை வழங்கி வருகின்றார்.
இதோ கோபியின் ஐந்து பாடல்களும் அவை குறித்த இவரின் ரசனைப் பகிர்வையும் இனிக் கேளுங்கள்.
நமக்கு எப்பவும் இளையராஜா தான். அவரோட இசை மட்டும் ஏன் ரொம்ப பிடிக்கும் என்ற கேள்விக்கு இந்த நிமிடம் வரை பதில் இல்லை. அவரோட இசை பல நேரங்களில் எனக்கு துணையாக இருந்திருக்கிறது, ஒரு தாய்யை போல. எல்லா உணர்வுகளுக்கும் ராஜாவிடம் இசை இருக்கும். அவரை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். சரி இந்த நேயர் விருப்பதில் எனக்கு பிடித்த பாடல் அனைத்தும் இளையராஜா இசை அமைத்த பாடல்கள் தான். ராஜாவோட பாடல்களில் 5 மட்டும் எடுக்க நான் பட்ட கஷ்டம் எனக்கு தான் தெரியும். என் தோழியின் கூட்டு முயற்சியில் எப்படியே 5 மட்டும் தேர்ந்தெடுத்து விட்டேன்.
தாய்மை
படம் - தளபதி
பாடல் - சின்ன தாய் அவள்.....
அம்மாவின் பாசத்தை யாராலும் கொடுத்துவிட முடியாது. இந்த பாடலை கேட்கும் போது எல்லாம் எல்லோருக்கும் அவர்களின் அம்மாவின் நினைவு வரும். அப்படி ஒரு உணர்வை அந்த பாடலில் ஏற்படுத்தியிருப்பாரு ராஜா. படத்தில் இந்த பாடல் ஆரம்பம் மிக நேர்த்தியாக இருக்கும். ரயிலின் ஓசையுடன் புல்லாங்குழலின் ஓசையும் அருமையாக இணைத்திருப்பாரு ராஜா. ஜானகி அம்மாவின் அந்த தாய்மை குரலும், ஸ்ரீவித்யா மற்றும் ரஜினியின் நடிப்பில் அவர்களுக்கு கண்ணுல தண்ணீர் வருதே இல்லையோ எனக்கு கண்டிப்பாக வரும். பாடலின் கடைசி காட்சியில் சந்தோஷ் சிவன் அந்த மல்லிகை பூவை ரஜினி எடுப்பதை திரை பார்க்கும் போது வாய்பிளந்த பல கோடி ரசிகர்களில் நானும் ஒருவன்.
|
நட்பு & நண்பர்கள்
படம் - புது புது அர்த்தங்கள்
பாடல் - கேளடி கண்மணி பாடகன் சங்கதி....
நிஜமாகவே நம்மோட வாழ்க்கை பாதையை சரியான திசையை நோக்கி சொலுத்த கூடிய சக்தி நட்புக்கு உண்டு. அந்த கடற்கரை பாதையில் அந்த நண்பன் தன்னோட மனச்சுமைகளை தோழியிடம் இறக்கி வைத்தபடி அந்த பாடல் இருக்கும். அவனின் மனபாரத்தையும், வாலி அவர்கள் பாடல் வரிகளின் (கால் போன பாதைகள் நான் போன போது கை சேர்த்து நீ தானே மெய் சேர்த்த மாது) அழத்தையும் உணர்ந்து ராஜாவின் இசை அந்த நட்பின் திசையை நமக்கு சரியாக உணர்த்தியிருக்கும். பாலு அவர்களின் குரல் பாடலுக்கு மேலும் வலிமை சேர்த்திருக்கும்.
|
காதல்
படம் - கோபுர வாசலிலே...
பாடல் - காதல் கவிதைகள் எழுதிடும் நேரம்...
YES I LOVE THIS IDIOT, I LOVE THIS LOVEABLE IDIOTTTTTTTTTT.....என்று நாயகி தன்னோட காதலை அந்த அரங்கத்தில் ஆரவாரத்துடன் வெளிபடுத்தி பின் அந்த ஆரவாரத்தை அப்படியே வயலினில் கொண்டுவந்திருப்பாரு ராஜா. பிறகு அந்த வயலின் இசையை அழகாக முடித்து புல்லாங்குழல் மற்றும் கோவில் மணி யோசையின் துணைக் கொண்டு அந்த ஆரவாரத்தில் இருந்து அழகான மெலோடி காதல் பாடலாக கொடுத்திருப்பாரு. வாலியின் வரிகளும் அந்த காதலை அழகாக சொல்லியிருக்கும். இயக்குனர் பிரியதர்ஷனும் அந்த பாடலை காட்சி படித்திருக்கும் விதம் மிக அழகாக இருக்கும்.
|
காதல் 2
இசைஞானியை பற்றி பேசும் போது கண்டிப்பாக அவரின் ரசிகன் கலைஞானி கமலை பற்றி சொல்லமால் இருக்க முடியுமா என்ன ! ! !
படம் - ஹோராம்
பாடல் - நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி....
இந்த பாடல் ஏன் பிடிக்கும்? முதலில் வருமே அந்த பியனோ இசைக்கா? இல்ல நடுவில் வருமே அந்த மென்மையான புல்லாங்குழல் அதற்காகவா? ஒரு கணவன் தன் மனைவியுடன் கொண்ட காதலை தன் வழக்கமான முத்தத்துடன் காட்சி படித்திருப்பாரே கமல் அதற்காகவா? ஆஷா போஸ்லே அவர்களின் அந்த மென்மையான அம்மிங் வருமே அதற்காகவா? இல்ல கலைஞானி கமல் எழுதிய முதல் பாடல் என்பதற்கா?
ஏற்கனவே எடுக்கப்பட்ட காட்சிகளுக்கு தகுந்தாற் போல் இசை அமைத்தாரே நம்மோட ராஜா அந்த திறமைக்கா?
எதற்காக பிடித்திருக்கு என்று இன்று வரை புரியமால் நான் ரசித்துக் கொண்டுயிருக்கும் பாடல் இது.
|
தனிமை - ஏக்கம் - வேண்டுதல்
படம் - நீங்கள் கேட்டவை
பாடல் - பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
இந்த பாடல் எனக்கு சின்ன வயசுல இருந்தே ரொம்ப பிடிக்கும். இந்த பாடலை எந்த இடத்தில் கேட்டாலும் நின்னு கேட்டுட்டு தான் போவேன். அப்படி ஒரு கொலைவெறி. காரணம் எல்லாம் ரொம்ப சிம்பல் - அம்மா ;)
|
எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த தலைவர் கானா அவர்களுக்கு என்னோட நன்றிகள் ;)
கோபிநாத்
26 comments:
மாப்பி,
எல்லா பாடல்களுமே மிகவும் அழகானவை. எல்லாமே எனக்கும் பிடிக்கும். அதிலும் குறிப்பா 'காதல் கவிதைகள்' & 'சின்ன தாயவள்' இரண்டும் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பிடிக்கும் :)
பதித்தமைக்கு நன்றி + வாழ்த்துக்கள்
ஒரு ரசிகனின் ரசனையை ரசிக்கும் & மதிக்கும் எங்கள் தலைவர் கானா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ;))
\\இந்த வாரம் சிறப்பு நேயராக முத்தான ஐந்து பாடல்களோடு வந்திருப்பவர் எங்கள் அன்புக்குரிய பாலைவனத்துச் சிங்கம் "கோபி" என்ற கோபிநாத். இந்த றேடியோஸ்பதி வலைப்பதிவில் தொடர்ந்து வித்தியாசமான முயற்சிகளுக்கு ஊக்கமளித்து இன்று ஒரு வருடத்துக்குள் 94 இசைப்பதிவுகளைத் தொடுவதற்கு நம்ம தல கோபி தான் முதற் காரணம். மற்றதெல்லாம் அதற்குப் பிறகு தான். இவரின் உற்சாகப்படுத்தும் கருத்துக்கள், ஆலோசனைகள் தான் இப்பதிவுகளைத் தொடர்ந்து தருவதற்கு ஊக்கசக்தியாக அமைந்தது.\\
ஆஹா...ஆஹா...
தலைவா இதெல்லாம் ஓவரு.....இந்த வார்த்தைகளை படித்துவிட்டு என்ன சொல்லறது தல நா தழுதழுக்குது...நன்றியோ நன்றி !
மேலும் பல புதிய முயற்சிகள் நீங்கள் செய்ய வேண்டும் அதில் இந்த அணிலுக்கும் பங்கு வேண்டும் ;))
கோபி உங்கள் தேர்வுகள் ரொம்ப நல்லா இருக்கு.
5 பாட்டுமே ரத்னமா இனிக்குது.
பிள்ளை நிலா அதுல மணிமகுடம்.
வாழ்த்துக்கள்
கானா பிரபா,
உங்களிடம் இந்த வேண்டுகோள்.
கோழிகூவுது படத்திலிருந்து
"பூவே, இளைய பூவே" பாடல் வேண்டும்.
//பிரேம்குமார் said...
மாப்பி,
எல்லா பாடல்களுமே மிகவும் அழகானவை. எல்லாமே எனக்கும் பிடிக்கும். //
உங்க மாப்பியின் பதிவை வாழ்த்தியதற்கு நன்றி சகலை
கோபியின் ரசனையான பாடல்கள் அனைத்தும் மிக இனிமையாக இனிக்கின்றன். நன்றி.
//5 பாட்டுமே ரத்னமா இனிக்குது.
///
repeatuuu :))
ellame sema super songs gopi..
ஆகா ஆகா!!
ஐந்துமே மிக இனிமையான பாடல்கள்,நான் பெரிதும் விரும்பி கேட்கும் பாடல்கள்(கடைசி பாடல் தவிர!ஏன் என்று சொல்கிறேன் :-))!!!
படம் - தளபதி
பாடல் - சின்ன தாய் அவள்.....
மிக அழகான பாடல்!! மிக நளினமான சாரங்கி இசைக்கருவி பயன்பாடு.இந்த இசைக்கருவியை பற்றிய எனது இசை இன்பம் பதிவில் கூட இந்த பாட்டை நான் குறிப்பிட்டிருப்பேன்.
படம் - புது புது அர்த்தங்கள்
பாடல் - கேளடி கண்மணி பாடகன் சங்கதி....
இந்த படத்தின் எல்லா பாடல்களும் தேன் போன்று இனிப்பவை! அதுவும் “குருவாயூரப்பா” பாடல் நான் மிகவும் ரசித்து கேட்கும் பாடல்!!
இந்த பாடலும் மிக மென்மையாக மனதை வருடியபடி நம்மை அமைதி படுத்தி விடும்.
மிக அழகான புல்லாங்குழல்/கோரஸ் பயன்பாடு,இந்த பாடலில்
படம் - கோபுர வாசலிலே...
பாடல் - காதல் கவிதைகள் எழுதிடும் நேரம்...
இளமை கொப்பளிக்கும் பாடல்!!நீங்கள் சொல்வது போன்று அந்த பெண்ணின் குரலில் இருந்து பாடல் ஆரம்பம் ஆகும் விதம் அருமை!! மற்றும் ஆண்/பெண் குரலில் இந்த பாடலில் அழகாக இணைந்து இசையை நம் ஆழ்மனதில் விதைத்து விடும்.
படம் - ஹோராம்
பாடல் - நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி....
ஆஹா!! 100% காதலால் நிறம்பி வழியும் பாடல்கள்!! எப்பொழுது கேட்டாலும் என்னை மெய் மறக்க செய்துவிடும் பாடல்!!பியானோ இசையில் இருந்து பாடகர்களின் காந்தக்குரல் வரை ஒவ்வொரு விஷயமும் நம்மை முழுவதுமாக மயக்கிவிடும்!!
படம் - நீங்கள் கேட்டவை
பாடல் - பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
எனக்கு சின்ன வயதில் ஒரு அண்ணன் இருந்து இறந்து போனான்.அவன் மிக விரும்பி கேட்கும்/பாடும் பாடல் இது என்று என் அம்மா அடிக்கடி சொல்லுவார் (இறக்கும்போது அவனுக்கு நான்கு வயது,எனக்கு மூன்று வயது)அதனால் இந்த பாட்டை கேட்கும் போது என் அம்மா மிகவும் சோகமாகிவிடுவார்!! அதனால் நானும் இந்த பாட்டை கேட்பதில்லை(இப்பொழுது கூட கேட்கவில்லை).தொலைக்காட்சி ,வானொலி ஆகியவற்றில் வந்தால் கூட அலைவரிசையை மாற்றிவிடுவேன்! :-)
என்னை செண்டிமெண்டல் ஆக்கிவிடும் பாடல்!!
Gopi,
kalakkitinga...
All are my favourite songs too..
Listening to all songs now :)
//கோபிநாத் said...
ஒரு ரசிகனின் ரசனையை ரசிக்கும் & மதிக்கும் எங்கள் தலைவர் கானா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ;))//
தல
நம்ம கடமையத் தானே செஞ்சேன், சொன்ன வார்த்தைகள் உண்மை ;-)
//புதுகைத் தென்றல் said...
கானா பிரபா,
உங்களிடம் இந்த வேண்டுகோள்.
கோழிகூவுது படத்திலிருந்து
"பூவே, இளைய பூவே" பாடல் வேண்டும்.//
உங்களின் வேண்டுகோள் செவிசாய்க்கப்பட்டது ;-)
உங்களுடைய பாடல்களும் அனைத்தும் மிக நன்றாக இருக்கின்றது கோபி. எனக்கு பிடித்தவை அவை.
//தமிழ் பிரியன் said...
கோபியின் ரசனையான பாடல்கள் அனைத்தும் மிக இனிமையாக இனிக்கின்றன். நன்றி.//
வருகைக்கு நன்றி தமிழ்பிரியன்
// துர்கா said...
//5 பாட்டுமே ரத்னமா இனிக்குது.
///
repeatuuu :))
ellame sema super songs gopi../
காலை வாராமல் வாழ்த்தியமைக்கு நன்றி சிஸ்டர்
செவ்வந்தி பூக்களும், பூவே இளையப் பூவேவும் கிடைத்தது.
உடனே வேண்டுகோளை நிறைவேற்றிய கானா பிரபா அண்ணாவுக்கு ஒரு ஓ.....
ரகத்திற்கு ஒரு பாடலாய் 5ம் இனிமை கோபி
//CVR said...
ஆகா ஆகா!!
ஐந்துமே மிக இனிமையான பாடல்கள்,நான் பெரிதும் விரும்பி கேட்கும் பாடல்கள்(கடைசி பாடல் தவிர!ஏன் என்று சொல்கிறேன் :-))!!!//
வணக்கம் கவிஞரே
பாடல்களைப் பற்றி இவ்வளவு அழகாய்ச் சொல்லியிருக்கீங்க. கூடவே பிள்ளை நிலா பாட்டுக்கு பின்னால் உள்ள சோகத்தைச் சொல்லிக் கனக்கவச்சிட்டீங்க.
ஆகா இந்தவாரம் கோபியா... இசைப்பிரியராச்சே அவரு. ராசாரசிகர் கோபிக்குப் பிடிச்ச பாட்டுகளைப் போட்ட பிரபாவுக்கும் நன்றி.
சின்னத்தாயவள் பாட்டு ரொம்பவே அருமையான பாட்டு. கேக்குறப்பவே உருக்குமேய்யா. இந்தப் பாட்ட தெலுங்குல இசையரசியைப் பாட வெச்சிருக்காரு ராஜா. பாட்டு தேடிப்பாக்கனும்.
காதல் கவிதைகள் எழுதிடும் நேரம் பாடலும் மிக அழகானது. அந்தக் கதாநாயகியின் பெயர் மறந்து விட்டது.
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி...இது வெறொரு மெட்டில் போடப்பட்டு..படமும் ஆக்கப்பட்டு...பிறகு இளையராஜா மெட்டுப் போட்டார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா....அருமையான பாடல். ஜானகி பாடியிருப்பது மிக நன்றாக இருக்கும். ஏசுதாஸ் பில்லை நிலா வெல்லை நிலா என்று பாடியிருப்பார்.
நல்ல முத்துமுத்தான பாடல்களைக் கேட்டிருக்கின்றீர்கள் கோபி. நன்றி.
அண்ணா கோபி, தங்கச்சி கொஞ்சம் லேட்டு. ஆனாலும் வந்துட்டோம்ல. ;-)
அண்ணன் எப்போதுமே ராஜா ராஜாதான்னு சொல்வார். அதே மாதிரியே பாடல்களையும் தேர்வு செய்திருக்கிறார். :-)
1- சின்ன தாய் அவள்
அருமையான பாடல். ஜானகி பாடல்களில் எனக்கு பிடித்தவையில் அமைந்த ஒன்று. இந்த படத்தில் யமுனை ஆற்றிலே பாடல் பிரமாதம்.
2- கேளடீ கண்மணி
SPB பாடல்னனாலே அது தனி மவுசு. அதுவும் SPB-ராஜா கூட்டணி பேரிய ஹிட் கொடுக்கும் கூட்டணி. ரகுமான் - சித்தாராவின் நடிப்பும் இந்த பாடலில் நன்றாக இருக்கும்
3- காதல் கவிதைகள்
இந்த பாடல் நல்ல பாடல்தான். ஆனால் அடிக்கடி கேட்க முடியாது. சீக்கிரமா சலிச்சிடும். :-P
4- நீ பார்த்த பார்வைக்கு
குரல் அவ்வளவா இந்த பாடலுக்கு பொருந்தவில்லையோ என்று தோணும். ஆனால் இசைதான் இதில் ப்ளஸ் பாய்ண்ட்.
5- பிள்ளை நிலா
சூப்பர் பாடல். :)
அண்ணே, சூப்பர் சாய்ஸ். :-)
@ பிரேம்குமார்
\\மாப்பி,
எல்லா பாடல்களுமே மிகவும் அழகானவை. எல்லாமே எனக்கும் பிடிக்கும். அதிலும் குறிப்பா 'காதல் கவிதைகள்' & 'சின்ன தாயவள்' இரண்டும் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பிடிக்கும் :)
பதித்தமைக்கு நன்றி + வாழ்த்துக்கள்\\
ரொம்ப நன்றி மாப்பி ;)
@ புதுகைத் தென்றல்
\\கோபி உங்கள் தேர்வுகள் ரொம்ப நல்லா இருக்கு.
5 பாட்டுமே ரத்னமா இனிக்குது.
பிள்ளை நிலா அதுல மணிமகுடம்.
வாழ்த்துக்கள்\\
மிக்க நன்றி புதுகைத் தென்றல்...பிள்ளை நிலா பாட்டு உங்களுக்கும் பிடித்திருப்பதில் மிகவும் மகிழ்ச்சி ;)
@ கானா பிரபா
\\உங்க மாப்பியின் பதிவை வாழ்த்தியதற்கு நன்றி சகலை\\
ஆஹா...ஆஹா..தல ஜோடி சேர்ந்துட்டிங்க போல...;))
@ தமிழ் பிரியன்
\\கோபியின் ரசனையான பாடல்கள் அனைத்தும் மிக இனிமையாக இனிக்கின்றன். நன்றி.\\
நன்றி தமிழ் பிரியன் ;)
@ துர்கா
//5 பாட்டுமே ரத்னமா இனிக்குது.\\\
repeatuuu :))
ellame sema super songs gopi..\\
மிக்க நன்றி துர்கா ;))
@ CVR
\\ஆகா ஆகா!!
ஐந்துமே மிக இனிமையான பாடல்கள்,நான் பெரிதும் விரும்பி கேட்கும் பாடல்கள்(கடைசி பாடல் தவிர!ஏன் என்று சொல்கிறேன் :-))!!!\\
மிக்க மகிழ்ச்சி சிவி...ஒவ்வொரு பாடலையும் ரசித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி சிவி ;)
@ Arunkumar
\\Gopi,
kalakkitinga...
All are my favourite songs too..
Listening to all songs now :)\\
உங்களுக்கும் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி அருண் ;)
@ U.P.Tharsan
\\உங்களுடைய பாடல்களும் அனைத்தும் மிக நன்றாக இருக்கின்றது கோபி. எனக்கு பிடித்தவை அவை.\\
மிக்க நன்றி ;)
@ பாச மலர்
\\ரகத்திற்கு ஒரு பாடலாய் 5ம் இனிமை கோபி\\
நன்றி அக்கா ;)
@ G.Ragavan
\\ஆகா இந்தவாரம் கோபியா... இசைப்பிரியராச்சே அவரு. ராசாரசிகர் கோபிக்குப் பிடிச்ச பாட்டுகளைப் போட்ட பிரபாவுக்கும் நன்றி.\\
நன்றி ஜிரா :))
\\இந்தப் பாட்ட தெலுங்குல இசையரசியைப் பாட வெச்சிருக்காரு ராஜா. பாட்டு தேடிப்பாக்கனும்.\\
ஆஹா...நானும் கேட்டுயிருக்கேன்...விரைவில் கிடைத்தல் சொல்கிறேன்..;)
\\பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா....அருமையான பாடல். ஜானகி பாடியிருப்பது மிக நன்றாக இருக்கும். ஏசுதாஸ் பில்லை நிலா வெல்லை நிலா என்று பாடியிருப்பார்.\
மிகவும் உன்னிப்பாக கேட்டு இருக்கிங்க...ஏசுதாஸ் விட அந்த பாட்டுக்கு தியாகராஜன் நடித்திருக்கும் நடிப்பு...யப்பா...அதுக்கு ஒரு போஸ்டரை நடிக்க வச்சிருக்கலாம் ;))
\\நல்ல முத்துமுத்தான பாடல்களைக் கேட்டிருக்கின்றீர்கள் கோபி. நன்றி.\\
ஒவ்வொரு பாடலையும் ரசித்து கருத்துக்களை பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி ஜிரா :)
@ மை ஃபிரண்ட்
\\அண்ணா கோபி, தங்கச்சி கொஞ்சம் லேட்டு. ஆனாலும் வந்துட்டோம்ல. ;-)
அண்ணன் எப்போதுமே ராஜா ராஜாதான்னு சொல்வார். அதே மாதிரியே பாடல்களையும் தேர்வு செய்திருக்கிறார். :-)\\
தங்கச்சி வருகைக்கு ஒரு நன்றி சொல்லிக்கிறேன் ;)
\\அண்ணே, சூப்பர் சாய்ஸ். :-)\\
நன்றி ;)
கா.பி.அண்ணே, கோபி அண்ணே,
அந்த முதல் படத்தைப் போட்டு கோபி அண்ணன் ஏதோ மெசேஜ் சொல்ல வாராரு-ல்ல? :-))
//சின்னத் தாயவள் பாட்டு//
உணர்ச்சிகளுக்காக மட்டுமல்ல! இசைக்காகவும் சிறந்த பாட்டு! நீங்க சொன்னது போல் புல்லாங்குழல்+ரயில் இசை அதில் சிறப்போ சிறப்பு!
//நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி//
இதன் துவக்கத்தில் பியானோ இசை எல்லாம் வந்தாலும், இதைக் கம்போஸ் செய்த போது ஒரே ஒரு வாத்தியம் மட்டுமே வைத்துக் கம்போஸ் செய்தாராம் ராஜா! அந்த ஒற்றை ஆதார சுருதி பாடல் முழுக்க ஒலிச்சிக்கிட்டே இருக்கும்! இரவில் தனிமையில் கேட்டால் தெளிவாக காதில் விழும் அந்த ஸ்ருதி!
//பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா//
//கேளடி கண்மணி பாடகன் சங்கதி....//
ஒன்றும் சொல்வதற்கில்லை!
இந்த இரண்டு பாடல்களும் தனிப்பட்ட சோகங்களுக்கு இட்டுச் செல்லும்!
அதிலும் நட்பு பற்றிய பாடல்! கேளடி கண்மணி...என்று என் நண்பனுக்கு மிகவும் பிடிச்ச பாட்டு அது! ஒவ்வொரு கல்லூரி விழாவிலும் பாடுவான்! பாடினான்! (என் கண் முன் நிகழ்ந்த அவன் மறைவு!)
இன்றும், மற்றவர்கள் காரில் பயணம் செய்தால் கூட, இந்தப் பாடலை ஒலிக்க விட்டால் கொஞ்சம் ஒரு மாதிரி ஆகி விடுவேன்!
ஸோ, சாரி கோபி - நீங்க கொடுத்த இந்த ரெண்டு பாட்டை மட்டும் நான் கேட்கவில்லை! அதான் தாமதமாகவும் பின்னூட்டுகிறேன்.
காதல்,தாய்மை,நட்பு,தனிமை-ன்னு தலைப்பு வாரியாக ராஜாப் பாடல்களைக் கலக்கிட்டீங்க! எல்லாம் சென்டிமென்ட்டல் பாட்டாத் தான் தேடிப் பிடிச்சிருக்கீங்க! :-)
@ஜிரா
//ஏசுதாஸ் பில்லை நிலா வெல்லை நிலா என்று பாடியிருப்பார்//
பரவாயில்லை!
பிள்ளை பாடுவது! பிள்ளைக்காகப் பாடுவது தானே! மழலையாகவே பாடிட்டுப் போகட்டுமே! மலையாளத் தமிழ் ஆனாலும் மழலைத் தமிழ் வாடைக்காக விட்டுடுங்க!
Vendam, dont want to get into this song :-(
பிகு:
அதற்காக ஜேசுதாஸ் பாடும் திருப்புகழ் பாட்டு உச்சரிப்புக்கு எல்லாம் வக்காலத்து வாங்க மாட்டேன்! :-)
//
படம் - நீங்கள் கேட்டவை
பாடல் - பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
எனக்கு சின்ன வயதில் ஒரு அண்ணன் இருந்து இறந்து போனான்.அவன் மிக விரும்பி கேட்கும்/பாடும் பாடல் இது என்று என் அம்மா அடிக்கடி சொல்லுவார் (இறக்கும்போது அவனுக்கு நான்கு வயது,எனக்கு மூன்று வயது)அதனால் இந்த பாட்டை கேட்கும் போது என் அம்மா மிகவும் சோகமாகிவிடுவார்!! அதனால் நானும் இந்த பாட்டை கேட்பதில்லை(இப்பொழுது கூட கேட்கவில்லை).தொலைக்காட்சி ,வானொலி ஆகியவற்றில் வந்தால் கூட அலைவரிசையை மாற்றிவிடுவேன்! :-)
என்னை செண்டிமெண்டல் ஆக்கிவிடும் பாடல்!!
//
:(((
எல்லாப்பாடலுமே சிறந்தப்பாடல்கள்.. கோபி யின் தேர்வுகள் எல்லாமே எனக்கும் பிடித்தப்பாடல்கள்.
தலைவர் கானா சொல்லுவதுபோல ஒப்பந்தம் செய்யப்படாத ஒரு விளம்பரக்காரராக வும் ஒவ்வொரு பதிவுக்கும் நல்ல விமர்சனமும் ஊக்கமும் கொடுத்து கானாவை தொடர்ந்து சிறப்பான பாடல்களை தரசெய்வதில் கோபிக்கு ஒரு தனிப்பங்கு உண்டு.
@ KRS
\\இதன் துவக்கத்தில் பியானோ இசை எல்லாம் வந்தாலும், இதைக் கம்போஸ் செய்த போது ஒரே ஒரு வாத்தியம் மட்டுமே வைத்துக் கம்போஸ் செய்தாராம் ராஜா! அந்த ஒற்றை ஆதார சுருதி பாடல் முழுக்க ஒலிச்சிக்கிட்டே இருக்கும்! இரவில் தனிமையில் கேட்டால் தெளிவாக காதில் விழும் அந்த ஸ்ருதி!\\
தகவலுக்கு ரொம்ப நன்றி தல....கண்டிப்பாக கவனிக்கிறேன் ;))
\\என் நண்பனுக்கு மிகவும் பிடிச்ச பாட்டு அது! ஒவ்வொரு கல்லூரி விழாவிலும் பாடுவான்! பாடினான்! (என் கண் முன் நிகழ்ந்த அவன் மறைவு!)\\
;(((
@ கயல்விழி முத்துலெட்சுமி
\\எல்லாப்பாடலுமே சிறந்தப்பாடல்கள்.. கோபி யின் தேர்வுகள் எல்லாமே எனக்கும் பிடித்தப்பாடல்கள்.
தலைவர் கானா சொல்லுவதுபோல ஒப்பந்தம் செய்யப்படாத ஒரு விளம்பரக்காரராக வும் ஒவ்வொரு பதிவுக்கும் நல்ல விமர்சனமும் ஊக்கமும் கொடுத்து கானாவை தொடர்ந்து சிறப்பான பாடல்களை தரசெய்வதில் கோபிக்கு ஒரு தனிப்பங்கு உண்டு.\\
பாசக்கார அக்காவிற்க்கு என் பாசமான நன்றிகள் ;))
Post a Comment