Pages

Thursday, January 24, 2008

சிறப்பு நேயர் - புதுகைத்தென்றல்

றேடியோஸ்பதியின் சிறப்பு நேயர் தொடரை கடந்த வாரம் நண்பர் ஜீவ்ஸ் பிள்ளையார் சுழிபோட்டு ஆரம்பித்து வைத்தார். அவரின் கைராசி நன்றாகவே வேலை செய்து வியாபாரம் சூடு பிடித்து விட்டது. அண்ணாச்சியின் படம் வேறு முதல் தடவை வலையில் அரங்கேறியதால் தல ரேஞ்சுக்கு ஆளோட புகைப்படம் வேறு வெகு பிரபலமாற்று.

மை பிரண்ட் போன்ற சகோதரங்கள் ஒரு நாளைக்கு ஒரு போஸ்ட் வீதம் போடுங்கண்ணா என்று அன்புத் தொல்லை வேறு. ஆனாலும் "இது ஆவுறதில்ல" என்று கவுண்டர் பாஷையில் சொல்லி விட்டு வாரா வாரம் பிரதி வெள்ளி தோறும் இந்த றேடியோஸ்பதி சிறப்பு பதிவர்களைக் கொண்டு வர இருக்கின்றேன்.

இப்பதிவில் உங்களுடைய ஆக்கங்களும் இடம்பெற வேண்டுமானால், உங்களுக்கு மிகவும் பிடித்த ஐந்து பாடல்களைத் தேர்ந்தெடுத்து அவற்றில் உங்களை ஈர்த்த அம்சங்களையும் சொல்லி வைத்து ஒரு மடலை என்ற kanapraba@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பி விடுங்கள்.

சரி நண்பர்களே, இனி இந்த வார சிறப்பு நேயர் யாரென்று பார்ப்போம்.

இந்த வாரம் வலம் வரும் நேயர் புதுகைத் தென்றல் என்ற பெயரில் கடந்த நவம்பர் 2007 இல் பதிவுலகுக்கு வந்து
புதுகைத் தென்றல்

பாட்டுக்குப் பாட்டு

என்று பதிவுகளை அள்ளிக்குவிக்கும் பெண் நேயர். கொழும்பில் தற்காலிகமாக இருந்து கொண்டு இலங்கையில் இயற்கை வனப்பை அணு அணுவாக அவர் ரசிப்பது இவர் சுட்டிருக்கும் புகைப்படங்களிலும் பதிவுகளிலும் தெரிகின்றது.


புதுகைத் தென்றல் சற்று வித்தியாசமாக இலங்கை வானொலியில் வலம் வரும் "இவ்வார நேயர்" பாணியிலேயே தன் விருப்பப் பாடல்களைக் கொடுத்திருக்கின்றார். கேட்டு ரசியுங்கள்.


இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்,

வணக்கம். அன்பு நெஞ்சங்களே! நமது இன்றைய கருத்தும் கானமும் நிகழ்ச்சியில் வளமைப்போல் நேயர் ஒருவரின் பாடல் தெரிவு இடம்பெறுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம், வடக்கு வீதி, இலக்கம் 2037 ஐ சேர்ந்த நேயர்
"தென்றல்" அவர்களின் விருப்பப் பாடல் தெரிவுகள் இடம்பெறுகின்றன.
நிகழ்ச்சிக்கு போகலாமா?


1.இறைவனை வழிபடுதலில் பலவகை உண்டு. தாயாக, தந்தையாக, பிள்ளையாக, நண்பனாக என்று நினைத்து வழிபடுவார்கள். "சரணாகதி" என்ற நிலைமிகவும் உன்னதமானது. களத்தூர் கண்ணம்மா படத்தில் இடம்பெற்றுள்ள இப்பாடல் தனக்கு மிகவும் பிடித்ததாக கூறுகிறார் நேயர்.

அம்மாவும் நீயே! அப்பாவும் நீயே!
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே!
முருகா! முருகா! முருகா!
Get this widget Track details eSnips Social DNA


2. இருமணம் இனைவது திருமணம். அந்தத் திருமண உறவை குறித்து அழகாக விளக்குவது இந்தப்பாடல். பாடலின் இடையே இருக்கும் "விகடம்" வெண்பொங்கலின் நடுவே கடிபடும் மிளகைப் போல "நச்".
அந்த அருமையான பாடல் இடம்பெற்றுள்ள திரைப்படம்
"அவள் ஒரு தொடர்கதை".

கடவுள் அமைத்து வைத்த மேடை
கிடைக்கும் கல்யாண மாலை.
இன்னார்க்கு இன்னாரென்று
எழுதி வைத்தானே தேவன் அன்று.

Get this widget Track details eSnips Social DNA


3.இன்றைய "கருத்தும் கானமும்" நிகழ்ச்சியில் புதுகையைச் சேர்ந்த நேயர் தென்றல் அவர்களின் விருப்பப் பாடல் தெரிவுகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.

உறவிலேயே சிறந்தது கணவன் - மனைவி உறவு. இடையிலே ஏற்பட்டு இறுதி வரைத் தொடர்வது. மனதில் நீங்கா இடம் பெற்றுள்ள பாடலாக நேயர் கூறும் அப்பாடப் பாடல் "புதிய முகம்" படத்தில் இடம் பெற்றுள்ளது.

கண்ணுக்கு மெய்யழகு
கவிதைக்கு பொய்யழகு
அவரைக்கு பூ அழகு
அவருக்கு நான் அழகு.
Get this widget Track details eSnips Social DNA4. தாய்மை பெண்ணை முழுதாக்குகிறது. வெட்கமும், சந்தோஷமும் பூசியது
அந்த 10 மாதத் தவக்காலம். தாய்மையை கொண்டாடும் இந்தப் பாடல் தனக்கு மிகவும் பிடிக்க காரணமாக கூறுகிறார் நேயர். "பூந்தோட்ட காவல்காரன்"
திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் இதோ :

சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு.
Get this widget Track details eSnips Social DNA


5. குழந்தையின் முதல் பாட்டு தாலாட்டு தான். தாயின் தாலாட்டைமறக்கமுடியுமா?
இந்தப் பாடலை கேட்கும் பொழுதெல்லாம் தூக்கம் கண்களை தழுவும் என்கிறார் நேயர்,
"நினைத்ததை முடிப்பவன்" படப் பாடலை நேயரோடு சேர்ந்து நாமும் ரசிக்கலாம்.


இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப் பூவினில்
தொட்டிலைக் கட்டி வைத்தேன்.- அதில்
பட்டுச்சிறகுடன் அன்னச் சிறகினை மெல்லென
இட்டு வைத்தேன். நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யார் யாரோ வந்து பாராட்ட.

Get this widget | Track details | eSnips Social DNA


என்ன நேயர்களே! பாடல்களை ரசித்தீர்களா? நானும் ரசித்தேன்.
மீண்டும் இதுபோன்றதொரு நிகழ்ச்சியில் தங்களை சந்திக்கும்
வரை வணக்கம் கூறி விடை பெறுவது தங்கள் அபிமான

கே... எஸ்.. ராஜா.

18 comments:

கோபிநாத் said...

புதுகைத் தென்றல் முதல்ல கையை கொடுங்க..சூப்பர் பாட்டு ;))

பாடலின் அறிமுகம் கூட புதுமையாக இருக்கு..;))

1. \\அம்மாவும் நீயே! அப்பாவும் நீயே!\\ -

ஆரம்ப பாடலே அருமையான பாடல். அந்த பாடலை பாடும் குழந்தையின் முகத்தில் ஒரு ஞான ஒளி தோன்றும். பின்நாளில் கலைஞானியாகி இப்போது தசாவதாரம் எடுத்திருக்கிறது. ;))

2. \\கடவுள் அமைத்து வைத்த மேடை\\ -

எனக்கு பிடித்த பாடல். பாடலும் கூடவே கதையாக சொல்லும் அந்த விதம் மிக அழகாக இருக்கும்.

3. \\உறவிலேயே சிறந்தது கணவன் - மனைவி உறவு. இடையிலே ஏற்பட்டு இறுதி வரைத் தொடர்வது. மனதில் நீங்கா இடம் பெற்றுள்ள பாடலாக நேயர் கூறும் அப்பாடப் பாடல் "புதிய முகம்" படத்தில் இடம் பெற்றுள்ளது.\\

அழகான அறிமுகம்...சூப்பர் ;)

\\ கண்ணுக்கு மெய்யழகு\\

ரகுமான் - வைரமுத்து கூட்டாணியில் உருவான அருமையான பாடல்களில் இது ஒன்று.


4. \\ சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா\\

ரசித்த பாடல்...கங்கை அமரன் அவர்கள் எழுதி பாடல் என்று நினைக்கிறேன்.

5. \\இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப் பூவினில்\\

அருமையான தாயின் தாலாட்டு...அந்த தாய்மையின் குரல் யாருடையாது என்று சொன்னால் நன்றாக இருக்கும்..;))

\\என்ன நேயர்களே! பாடல்களை ரசித்தீர்களா? நானும் ரசித்தேன்.\

ரசித்தேன்...நல்தொரு தொகுப்பை தந்தமைக்கு நன்றி ;)

கானா பிரபா said...

தல

அணு அணுவா ரசிச்சு பின்னூட்டியிருக்கீங்க. இந்தப் பச்சைக்கிளிக்கொரு பாட்டு வரலஷ்மி பாடியது.

புதுகைத் தென்றல் said...

நன்றி கோபிநாத்,

நான் மிகவும் விரும்பிய பாடல்கள், தங்களுக்கும் பிடித்திருப்பது மகிழ்வை தருகின்றது.

புதுகைத் தென்றல் said...

பிரபா
சிறப்பு நேயராக என் பாடல்களை தந்தற்கு மிக்க நன்றி.

புதுகைத் தென்றல், பாட்டுக்குப்பாட்டு ஆகியவை தான் என் பிளாக்.

மதுரைமல்லி என் தங்கையினுடையது.

பேரன்ட்ள் கிளப்பில் நான் மெம்பர். என்பதை இங்கே அறியத் தருகிறேன்.

பாடல்களை கேட்டு மகிழ்ந்தேன்

புதுகைத் தென்றல் said...

இந்தப் பச்சைக்கிளிக்கொரு பாடல்
கானக் கந்தர்வனின் குரலில் கேட்கும்
பொழுது என்னை மறந்து என் இமைகள் தானாக மூடிக்கொள்ளும்.

.:: மை ஃபிரண்ட் ::. said...

//கோபிநாத் said...
புதுகைத் தென்றல் முதல்ல கையை கொடுங்க..சூப்பர் பாட்டு ;))
//

அண்ணாவுக்கு ஒரு பெரிய்ய்ய ரிப்பீட்டேய்...


//இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப் பூவினில்
//

ஜூப்பரோ ஜூப்பர். ;-)

//கடவுள் அமைத்து வைத்த மேடை//
கதை சொல்லும் பாணியில் அமைந்த சூப்பர் பாட்டு. இதே படத்தில் உறவுகள் தொடர்கதை பாட்டும் சூப்பர்..

//அம்மாவும் நீயே! அப்பாவும் நீயே!
//

கமலின் அறிமுக பாடல்.. இன்றும் பள்ளியில் சில நேரங்களில் பாடப்படும் பாடல்..

//கண்ணுக்கு மெய்யழகு//
இதுவும் அழகான பாடல். ஆனால், இதை விட நேற்று இல்லாத மாற்றம் பாடல் இன்னும் சூப்பர். ;-)

//சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு//

இவங்க ஜேசுதாஸ் ரசிகைன்னு இன்னுமா மத்தவங்க கண்டுபிடிக்கல? ;-)

புதுகைத் தென்றல் said...

வாங்க மைஃபிரன்ட்,

நான் ஜேசுதாஸ் ரசிகை அப்படீன்னு நிப்பாட்டிட முடியாத. எனக்கு எல்லாத்துக்கும் அவர் பாட்டுதான்.
அம்மா திட்டும்போது தஞ்சம் அடைவது அவரிடம்தான்.

பரிச்சை எழுதபோகும் முன் அவரது குரலைக் கேட்டால்தான் ராசி.

(இதுக்காக எக்ஸாமுக்கு முன்னாடி ரேடியோ கேட்டுபுட்டுதான் கிளம்புவோம். 1 பாட்டுக்கு மேல கேட்டால் எக்ஸாம் சூப்பர்தான்.
இன்னமும் இந்த சென்டிமென்ட் தொடரது. இதுக்கு அப்பா திட்டினா திரும்ப தாலாட்ட யேசுதாஸ். )

CVR said...

அழகான பாடல்கள்!!

குறிப்பாக புதிய முகம் மற்றும் பூந்தோட்ட காவல்காரன் படங்களிலிருந்து வந்த பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை!!
பதிவில் அறிமுகங்களும் சுருக்கமாகவும் ரசிக்கும்படியும் இருந்தது!
வாழ்த்துக்கள்!! :-)

பாச மலர் said...

ஐந்தும் அருமையான பாடல்கள்..

G.Ragavan said...

ஆகா... புதுகைத் தென்றலா...வாழ்த்துகள்.

ஐந்து பாடல்களுமே அருமையானவை.

களத்தூர் கண்ணம்மாவில் எம்.எஸ்.ராஜேஷ்வரி பாடிய பாடல். சுதர்சனம் அவர்களின் இசையில். மிகவும் அருமையான பாட்டு.

கவியரசர்+மெல்லிசை மன்னர் கூட்டணின்னாலே கலக்கல்தான். கடவுள் அமைத்து வைத்த மேடையும் அப்படியொரு கலக்கல்தான். பாட்டும் இருக்கனும்... மிமிக்கிரியும் இருக்கனும். அதுவும் இதுவும் மெட்டுக்குள்ள ஒத்துப் போகனும். இதெல்லாம் இன்னைக்குச் செய்யச் சொன்னா ரொம்பவே கஷ்டப்படுவாங்க.

இசையரசியின் இன்னிசைக் குரலில் கண்ணுக்கு மையழகு மயக்குகிறது. இசைப்புயலும் வைரமுத்துவும் அவர்கள் பங்குக்குச் சிறப்பு செய்த அருமையான பாடல்.

கங்கை அமரன் எழுதிய பாடல் இது. சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு. மிக அழகான பாடல். கேட்கவும் பார்க்கவும் கூட.

வரலட்சுமி அவர்களின் குரலை மறக்க முடியுமா? ஆகா...வெள்ளிமலை மன்னவா என்று அரற்றும் பொழுதும்....பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப் பூவினில் என்று உருகும் பொழுதும்....சொல்லவல்லாயோ கிளியே சொல்ல நீ வல்லாயோ என்று மருகும் பொழுதும்...ஏடு தந்தானடி தில்லையிலே என்று எகிறும் பொழுதும்....உன்னை நானறிவேன் என்று கதறும் பொழுதும்...ஆகா...எத்தனை பாவங்கள் அந்தக் குரலில்.

இந்தப் பாடல்களைக் கேட்கக் குடுத்த பிரபாவிற்கும் நன்றி பல.

புதுகைத் தென்றல் said...

வாங்க சீ வீ ஆர்

வாழ்த்துக்களுக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

நன்றி பாசமலர்.

புதுகைத் தென்றல் said...

அனு அனுவாய் ரசிச்சிருக்கீங்க

ஜீ.ராகவன்

நன்றி

cheena (சீனா) said...

புதுகைக்த் தென்றலின் தேர்வு அருமை. அத்தனை பாடல்களையும் எத்தனை தடவை வேண்டுமானாலும் கேட்கலாம்.

நந்தியா said...

வணக்கம்
உங்கள் சிறப்ப நேயர் பிரிவில் வெகு விரைவில் சந்திக்கின்றொம்.
பட் எனக்க புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகம் தானாட என்றா பாடலும் தேவதை பொல் ஒரு பெண் இங்கு வந்ததது நம்பி உன்னை நம்பி என்றா பாடலும்
வாலை மீனுக்கும் விலங்கு மீனுக்கம் கலியாணம் என்றா பாடலும் தரவிங்களா?
எல்லாமே கலியாணம் சம்பந்தமான பாடல் தான்.....

கானா பிரபா said...

புதுகைத் தென்றலின் ஆக்கத்துக்கு வரவேற்புக் கொடுத்த உங்கள் அனைவருக்கும் நன்றி.

நந்தியா உட்பட உங்கள் பதிவுகளை அனுப்பி வையுங்கள். பாடல்கள் கட்டாயம் வரும்.

Jeeves said...

தென்றலாய் வீசும் பாடல்கள். குறிப்பாக அனைத்துமே.

கடவுள் அமைத்து வைத்த மேடை புதுமை என்றால்
இந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப் பூவில் பாட்டிலும் ஒரு புதுமை உண்டு. இந்தப் பாடல் எம்.ஜி.யார் ஆட்சிக் காலத்தில் ( என்று நினைக்கிறேன்) பள்ளிக் கூடங்களில் எழுதி வைக்கப்பட்ட ஒன்று.
"எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே "


இது யேசுதாஸின் குரலில் தான் எனக்கும் பிடிக்கும். ரொம்ப அழகா குழைஞ்சு வரும். ( அதுக்காக வரலட்சுமி அவர்களின் குரல் ஒன்றும் தாழ்ந்து விடவில்லை )


அம்மாவும் நீயே அப்பாவும் நீயே - மறக்க முடியுமா என்ன ?

வாழ்த்துகள் புதுகைத் தென்றல்

புதுகைத் தென்றல் said...

வருகை தந்த அன்பு நெஞ்சங்களுக்கு
நன்றி.