ரஜினி என்ற மூன்றெழுத்து மந்திரத்துக்கு இன்றோடு 60 அகவையை தொட்டிருக்கிறது. இன்னும் இடைவிடாது வாழ்க்கை என்னும் Test Match இல் ஆடிக்கொண்டு ரசிகர்களாகிய எங்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கின்றான் இந்தக் கலைஞன்.
மலையாள சினிமாவுலகில் மோகன்லாலில் கலையம்சம் கொண்ட படங்களை எப்படி ரசிக்கின்றேனோ அந்த எல்லையில் வைத்து அவரின் பொழுது போக்குச் சித்திரங்களையும் ரசிக்கின்றேன். அதே போன்று தான் கமலை எவ்வளவு தூரம் ரசிக்கின்றேனோ அந்தளவுக்கு ரஜினியும்.
சினிமா என்ற கனவுத் தொழிற்சாலைக்கு வரும் ஒவ்வொரு மனிதனுக்கும் சோதனைகளும், ஏற்ற இறக்கங்களும் இருந்திருக்கின்றன. அதில் ரஜினி என்ற தனி மனிதனும் விதி விலக்கல்ல. ஆனால் தான் சினிமாவில் வகுத்துக் கொண்ட பாதையை சீராக வைத்துக் கொண்டு அதிலிருந்து இம்மியும் பிசகாமல்
பயணிக்கின்றான் இந்தக் கலைஞன். எது நல்ல சினிமா என்பதைத் தீர்மானிப்பது நான்கு அறிவுஜீவிகள் மட்டுமல்ல, உலகத்தின் கடைக்கோடி மூலையில் இருந்து பார்க்கும் ரசிகனும் கூட.
ஆரம்பத்தில் ரஜினியை பிடிக்காதவர்கள் கூட வாழ்க்கையின் ஏதோ ஒரு சந்தப்பத்தில் இருந்து அவரைப் பிடிக்க ஆரம்பிக்கிறார்கள். அப்படித்தான் நானும்.
மன இறுக்கத்தில் இருந்து விடுபடவும், சோர்வில் இருந்து எழுப்பி நின்று நிமிரவும் இவர் படங்கள் டாக்டர் கொடுக்காத மருந்து வகைகள்.
எஸ்.பி முத்துராமன் போன்ற இயக்குனர்களின் நடிகனாக இருந்த ரஜினி பின்னாளில் தனக்கான கதை, பாத்திரம் என்பதை வடிவமைக்கும் அளவுக்கு உரிமை எடுக்கக் காரணம் தன்னை நேசிக்கும் ரசிகனைப் பூரண திருப்திப்படுத்த வேண்டும் என்ற ஒரே எண்ணம் மட்டுமே.
இன்று இந்தியாவின் குமரி முதல் இமயம் வரை தெரிந்த பிரபலம் என்ற அந்தஸ்து இருந்தாலும், தன் தலையில் கர்வத்தை இமயம் வரை ஏற்றாத கலைஞர் இவர்.
ஆண்டுகள் அறுபதைத் தொட்டிருக்கும் இந்தக் கலைஞனுக்கு நான் தருகிறேன் "பா"மாலை. இவை ரஜினியோடு இது நாள் வரை பணியாற்றிய ஒவ்வொரு இசையமைப்பாளர்களின் இசையில் இருந்தும் கோர்த்த முத்துக்கள்.
முதலில் வருவது இசைஞானி இளையராஜா இசையில் முரட்டுக் காளை படத்தில் இருந்து "பொதுவாக என் மனசு தங்கம்"
அடுத்து மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் "போக்கிரி ராஜா" திரையில் இருந்து "போக்கிரிக்கு போக்கிரி ராஜா"
சந்திர போஸ் இசையில் வரும் இந்தப் பாடல் "ராஜா சின்ன ரோஜா" திரையில் இருந்து "சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா"
இசைப்புயல் ரஹ்மானோடு "முத்து"வாக் கைகோர்த்து "ஒருவன் ஒருவன் முதலாளி
இந்த பால்காரனுக்கு பால் கறக்கவும் தெரியும் பாசம் கலந்து கொடுக்கவும் தெரியும், அண்ணாமலைக்கு இசை கொடுக்கிறார் தேவா. வந்தேண்டா பால்காரன்
"ஹலோ ரஜினி மாமா, உன்னோடு வாழ்த்துக்கள் சொல்லலாமா" , நாட்டுக்கு ஒரு நல்லவன் என்று தமிழ் மாறிய அம்சலோகா இசையில்
தேவுடா தேவுடா என்று இடைவேளைக்குக்குப் பின் வந்து ஒரு வருஷம் ஓட வைத்தார் சந்திரமுகியில். இசை வித்யாசாகர்.
"தேவாமிர்த"மாய் ஒலிக்கும் இந்தப் பாடல் சங்கர் கணேஷ் இசையமைப்பில் அலெக்ஸ் பாண்டியனைக் காட்டிய மூன்று முகம் திரையில் இருந்து
பாடும் நிலா பாலு சூப்பர் ஸ்டாருக்கு மெட்டுக் கட்டிய "துடிக்கும் கரங்கள்" படத்தில் இருந்து "சந்தனம் பூச மஞ்சள் நிலாவும்"
"தப்புத் தாளங்கள்" பாணியில் நடிக்கவும் தெரியும் என்று நிரூபித்த அந்தப் படத்தில் இருந்து விஜயபாஸ்கர் பாட்டுக் கட்டிய "என்னடா பொல்லாத வாழ்க்கை"
விஜய் ஆனந்த் என்ற இசையமைப்பாளருக்கு முகவரி ரஜினியின் "நான் அடிமை இல்லை" படப் பாடல்கள், அதிலும் குறிப்பாக "ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் ஒலிக்கின்றது"
இசையமைப்பாளர் கார்த்திக் ராஜவை அறிமுகப்படுத்திய பாடல் "பாண்டியனின் ராஜ்ஜியத்தில்
ஜீ.வி.பிரகாஷ்குமார் போன்ற அடுத்த தலைமுறை இசையமைப்பாளர்களுக்கும் குசேலன் மூலம் ஒரு வாய்ப்பு "போக்கிரி ராஜா நீயும் பொல்லாதவன்"
ரஜினி ரசிகர்களின் பெரு விருப்பத்துக்குரிய பாடல் "ஆசை நூறு வகை" அடுத்த வாரிசில் இருந்து போனஸ் பாடலாக.
"தேவர் மகனில்" சிவாஜியையும், எத்தனையோ படங்களில் கமலையும், ஏன் சமீபத்தில் "பா"வில் அமிதாப்பையும் பாட வைத்த இசைஞானி இளையராஜா, ரஜினியை மட்டும் விட்டு விடுவாரா என்ன.
"அடிக்குது குளிரு" அது சரி சரி ;-)
நிறைவாக எனக்கு மிகவும் பிடித்த ரஜினி பாடல்களில் ஒன்று, காரணம் பாடிய ஜேசுதாஸ் இசையமைத்த இளையராஜா மட்டுமல்ல இந்தப் பாட்டில் வரும் வரிகள் இந்தக் கலைஞனுக்கே உரித்தானவை.
ஆகாயம் மேலே பாதாளம் கீழே
ஆனந்த உலகம் நடுவினிலே
நில்லாமல் சுழலும் பூமி இது
எல்லாரும் நடிக்கும் மேடை இது
போட்டேன் நானும் வேஷங்களை
படித்தேன் வாழ்க்கை பாடங்களை
நடிப்பேன் உந்தன் மஞ்சத்திலே
இடம் பிடிப்பேன் உந்தன் நெஞ்சத்திலே
சொல்லாமல் புரியும் என் பார்வையில்
திறமை இருந்தால் மாலை இடு
இல்லை என்றால் ஆளை விடு
26 comments:
மீ த பர்ஸ்டேய்ய்ய்ய்ய்ய் :)))))
//ஆரம்பத்தில் ரஜினியை பிடிக்காதவர்கள் கூட வாழ்க்கையின் ஏதோ ஒரு சந்தப்பத்தில் இருந்து அவரைப் பிடிக்க ஆரம்பிக்கிறார்கள்.///
எஸ்ஸு !
கடைசி ப்போட்டோ நிச்சயம் ஒரு டிபரெண்டான ரஜினி இமேஜ் ! :)
பதிவு ரொம்ப பிடித்து இருக்கிறது. எல்லாவிதமான பாட்டுக்களையும் தொகுத்து தந்திருக்கிறீர்கள்.
நன்றி அண்ணா.
//எது நல்ல சினிமா என்பதைத் தீர்மானிப்பது நான்கு அறிவுஜீவிகள் மட்டுமல்ல, உலகத்தின் கடைக்கோடி மூலையில் இருந்து பார்க்கும் ரசிகனும் கூட.//
super
முதல் படத்தில் ரஜினி ரொம்ப அழகாய் இருக்கிறார்.
என்ன இருந்தாலும் ரஜினியின் style இற்கு முன்னால் ஒருவரும் நிற்க ஏலாது.இவ்வளவு கெதியாய் 60 வயது வந்தது தான் கவலையாக இருக்கு. ம்ம்ம்.
அவர் பல்லாண்டு காலம் சந்தோசமாக வாழ வேண்டும்.
super star ரஜினி அவர்களுக்கு என் பிறந்த தின நல் வாழ்த்துக்கள்.
அருமை.
//நிறைவாக எனக்கு மிகவும் பிடித்த ரஜினி பாடல்களில் ஒன்று, காரணம் பாடிய ஜேசுதாஸ் இசையமைத்த இளையராஜா மட்டுமல்ல இந்தப் பாட்டில் வரும் வரிகள் இந்தக் கலைஞனுக்கே உரித்தானவை.
ஆகாயம் மேலே பாதாளம் கீழே
ஆனந்த உலகம் நடுவினிலே
நில்லாமல் சுழலும் பூமி இது
எல்லாரும் நடிக்கும் மேடை இது
போட்டேன் நானும் வேஷங்களை
படித்தேன் வாழ்க்கை பாடங்களை
நடிப்பேன் உந்தன் மஞ்சத்திலே
இடம் பிடிப்பேன் உந்தன் நெஞ்சத்திலே
எல்லாமே புதுமை என் பாணியில்
சொல்லாமல் புரியும் என் பார்வையில்
திறமை இருந்தால் மாலை இடு
இல்லை என்றால் ஆளை விடு//
வளர்ந்துவரும் ஒரு மிகச் சிறிய நடிகரின் மிகப் பெரிய பரிமாணத்தை காட்டும் வகையில் அமைந்த பாடல்.
மனமார்ந்த வாழ்த்துக்கள் சூப்பர் ஸ்டாருக்கு ;))
தல இம்புட்டு ஆளுங்க சூப்பர் ஸ்டாருக்கு மிசிக் போட்டு இருக்காங்களா!!!!..இப்ப தான் தெரியும்.
கலக்கல் தல ;)
//முதல் படத்தில் ரஜினி ரொம்ப அழகாய் இருக்கிறார்.//
repeateee.
தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிரபா,
ரஜினிக்கென்று அமைந்த பாடல்கள் ஏராளம். ரஜினி பிராண்ட் வகைகளையும், சற்று வித்யாசமானவைகளையும் தொகுத்து வெளியிட்டமைக்கு நன்றி.
"ஆசை நூறுவகை" பாடல் மிசிங் என்று நினைக்கிறேன்.
60 வயதில அசின், ஷிரேயா உடன் நடிப்பது நியாயமா?... எனக்கேதொ இது கொஞ்சம் டூமச்சாக தெரிகிறது... தலைவரு யோசிப்பாரா?
முதல் ஆளா துண்டு போட்டதுக்கு நன்றி ஆயில்ஸ் ;)
கலக்கல் தல!
தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டாருக்கு வாழ்த்துக்கள்.
நல்ல பாடல் தெரிவுகள்.
தல ..
இது என்ன
”பா” மாதமோ
//ரஜினி 60 - சிறப்பு "பா"மாலை &
"பா (Paa)" ர்த்தேன், பரவசமடைந்தேன்!//
இவ்வளவு பேர்தான் தானா
இன்னும் லிஸ்ட் இருக்கா..,
பிரமிப்பா இருக்கு கலெக்ஷன்
நல்லாயிருக்கு... நல்லாயிருக்கு... நல்லாயிருக்கு...
Happy birthday to ENTHIRAN.
வாசுகி
இன்றைய சிறுசுகளுக்கும் ரஜினியை பிடிக்கின்றதென்றால் நிச்சயம் அவரின் காந்த சக்தி தான் இல்லையா?
முதல்படத்தை நான் மலேசியாவின் மலாக்கா பிரதேசம் போனபோது ஒரு வீடியோ கடையின் சுவரில் ஒட்டியிருந்தது, படத்தின் அழகைக் கண்டு அப்படியே கமெராவில் சுட்டுக் கொண்டேன், இப்போது அது பதிவுக்கு உபயோகப்பட்டு விட்டது.
பாலகுமாரன்
மிக்க நன்றி
சுரேஷ்
நீங்கள் சொன்னது மிகப்பொருத்தம், அப்போது வளர்ந்து வந்த நடிகராக இருந்தவருக்கு வரிகள் கச்சிதமாகப் பொருந்தி விட்டது.
தல கோபி
மிக்க நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும்
சின்ன அம்மிணி
வருகைக்கு மிக்க நன்றி
குட்டி பிசாசு
ஓவ்வொரு இசையமைப்பாளருக்கும் ஒவ்வொன்றாகப் போட்டேன், இருந்தாலும் ஆசை நூறு வகையையும் இணைக்கிறேன்.
விசரன் said...
60 வயதில அசின், ஷிரேயா உடன் நடிப்பது நியாயமா?.//
அண்ணே,
மைக்கேல் டக்ளஸ் மைக்கேல் டக்ளஸ் என்று ஹொலிவூட்ல ஒரு நடிகர் இருக்கிறார் அவருக்கு வயசு 65 ஆனால் கதரின் ஸீடா ஜோன்ஸ் என்ற குமரியோட ஜோடி கட்டி, இப்ப கல்யாணமும் கட்டியிருக்கிறாரே.
சரி அதை விடுங்கோ, ரஜினி இப்ப கே.ஆர் விஜயாவோடு ஜோடி போட்டு நடித்தால் நீங்கள் பார்ப்பீங்களோ ;)
தல அத்தனையும் முத்து, மிக அருமையான கதம்பம்,
ரஜினிகாந்த் - பெயரிலேயே காந்தம் வைத்திருப்பதாலோ என்னவோ குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காந்தம் போல கவர்ந்திருக்கிறார்..
யார் பில்டப் கொட்டுத்தாலும் நக்கல் பண்ணுவேன்..ஆனா தலைவன் பண்ணா அப்படி ரசிப்பேன் ;)
அண்ணுக்கு ஜே..மன்னனுக்கு ஜே..காளையனுக்கு ஜே!!
அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me
அறுபது வயசாயிடுச்சா?!
வேற வேசங்களையும் ஒத்துக்கொண்டு நடிக்கலாம்கிறது என்னுடைய அபிப்பிராயம், வாழ்த்துக்கள் ரஜனி அங்கிள்.
:)
//எது நல்ல சினிமா என்பதைத் தீர்மானிப்பது நான்கு அறிவுஜீவிகள் மட்டுமல்ல, உலகத்தின் கடைக்கோடி மூலையில் இருந்து பார்க்கும் ரசிகனும் கூட.//
அடி தூளு!
கானாபிரபா பட்டய கிளப்பிட்டீங்க! தலைவர் பாட்டு அனைத்தும் அருமை..ஹி ஹி நன்றி அதுல அப்படியே தலைவர் பாடிய!!!! பாட்டையும் சேர்ந்ததற்கு ;-)
பிரபா,
நல்ல பாடல் தொகுப்பு.
நன்றி,
அருண்
Post a Comment