Pages

Wednesday, June 7, 2017

🍁 இசைஞானி இளையராஜா இசையில் 🍁 💚 மெளனம் சம்மதம் ❤️ 🎼 பின்னணி இசைத் தொகுப்பு



🌷
மெளனம் சம்மதம் படம் ஞாபகமிருக்குதா என்று கேட்டாலேயே "ஓ தெரியுமே" என்று விட்டுக் "கல்யாணத் தேனிலாஆஆஆ" என்று ஆலாபனை எடுத்துப் பாட ஆரம்பித்து விடுவார்கள் படத்தைப் பார்த்தவர்களும் சரி பார்க்காதவர்களும் சரி.
இந்தப் படத்தில் இன்னொரு மெட்டு சின்னக்குயில் சித்ரா குரலில் "ஒரு ராஜா வந்தானாம்" ஏக பிரபலம்.
தயாரிப்பாளர் கோவை செழியன் மம்முட்டையைத் தமிழுக்கு அழைத்து வந்து முறையே அழகன், மெளனம் சம்மதம், புதையல் ஆகிய படங்களைத் தயாரித்தார். இதில் மெளனம் சம்மதம் பக்கா மலையாளத் துப்பறியும் கதைப் பின்னணி கொண்டது. மம்முட்டியின் இம்மாதிரிக் கதைகளின் துப்பறியும் கூட்டணி எஸ்.என்.ஸ்வாமி கதை எழுத, பிரபல இயக்குநர் கே.மது இயக்கிய படமிது.
மெளனம் சம்மதம் ஒரு சுவாரஸ்யம் கலந்த விறு விறுப்பான துப்பறியும் கதைப் பின்னணி கொண்டிருந்தாலும், காட்சி அமைப்பில் மலையாள சினிமாவுக்குண்டான அம்சத்தோடு இருக்கும். இந்தப் படத்தைப் பிரமாண்டம் ஆக்கியதே இதன் பின்னணி இசை தான் என்னுமளவுக்கு இசைஞானி இளையராஜா பின்னி எடுத்திருக்கிறார். அதை நீங்கள் இந்த முழு நீள இசைக் கோப்பில் உணர முடியும்.
இதே பின்னணி இசைக் கோப்பை வைத்துத் திகிலூட்டும் பெரும் பிரம்மாண்டத்தைக் கொடுக்க முடியும் என்பதற்கு உதாரணமாகப் படத்தில் இடம் பெறும் கொலை நிகழும் காட்சியில் கொடுக்கப்பட்ட பின்னணி இசை ஒரு சோறு பதம்.
https://soundcloud.com/kanapraba/ms10
மெளனம் சம்மதம் படத்தின் முகப்பு இசை "சிக் சிக் சா" பாட்டின் வாத்திய வடிவமாகவும் இறுதிக் காட்சியில் கல்யாணத் தேனிலாவுமாக நிறைக்கிறது. மம்முட்டி அமலா மேல் காதல் கொண்டு அதைச் சொல்லுமிடத்தும் கல்யாணத் தேனிலாவின் இசைக் கீற்று ஒலிக்கிறது.
இந்தப் படத்தை இத்தகு இசை நுட்பத்தோடு அனுபவித்துக் கேட்க இன்னொரு முறை திரையிடப்படாதா என்ற ஆசையும் ஊறுகிறது.
முழு இசையோட்டத்தையும் அனுபவித்துப் பாருங்கள் பின்னணி இசையின் நாயகன் இசைஞானி இளையராஜா என்று மீண்டும் நிரூபித்து நிற்கின்றது.

0 comments: