Pages

Tuesday, January 7, 2014

"அக்னி நட்சத்திரம்" பின்னணி இசைத்தொகுப்பு

அக்னி நட்சத்திரம் திரைப்படம் வெளிவந்து இருபத்தைந்து ஆண்டுகள் நிறைந்து விட்டன ஆனால் இன்றும் ஏதாவது பண்பலை வரிசை வானொலியில் இந்தப் படத்தின் பாடல்கள் ஒலிக்கும் போது நவீனத்துவம் கெடாத இசையை மீண்டும் மீண்டும் மெய்ப்பித்துக்கொண்டே இருக்கின்றது. இசைஞானி இளையராஜா - மணிரத்னம் கூட்டணியில், நாயகன் படத்துக்குப் பின்னர் அதிக எதிர்பார்ப்போடு வந்த படம், நாயகன் அளவுக்கு உச்சத்தை எட்டவிட்டாலும் கூட அந்தக் காலகட்டத்தில் இந்தப் படத்தின் வித்தியாசமான உருவாக்கத்துக்காகப் பேசப்பட்டது. அப்போது நான் இடைநிலைப்பள்ளி மாணவன், எங்களூரில் அரிதாகத் தியேட்டர்களில் திரையிடப்படும் படங்களில் ஒன்றாக, இந்தத் திரைப்படம் மனோகரா தியேட்டரில் திரையிட்டபோது, சக நண்பர்கள் சிலர் பள்ளிக்கூடத்துக்கு வந்து மதில் பாய்ந்து களவாகப் போய்ப் படம் பார்த்துவிட்டு வந்து, அப்போது அறிமுக நாயகியாக வந்த நிரோஷா குறித்துப் பகிர்ந்த சிலாகிப்புக்கள் கொஞ்ச நஞ்சமல்ல :-)

அக்னி நட்சத்திரம், பிரபு கார்த்திக் கூட்டணியில் வந்த படம், நாயகன் பிரபுவின் பெயர் கெளதம் பின்னாளில் கார்த்திக் மகனுக்கே பெயராக அமைந்ததும், இந்தப் படத்தின் வாகனச் சாரதியாக இயங்கிய லட்சுமிபதி என்ற பெயரே வி.கே.ராமசாமியின் சாரதியாக நடித்த ஜனகராஜ் இற்கும் அமைந்தது எதேச்சையான விடையமோ தெரியவில்லை. பிரபு, கார்த்திக் கூட்டணி பின்னாளில் ஆர்.வி.உதயகுமாரின் முதல் படம் உரிமை கீதம், இரும்புப்பூக்கள், சில ஆண்டுகளுக்கு முன்னர் வந்த ராவணன் வரை இருந்தாலும், இந்தப் படம் அளவுக்கு எந்தப் படமும் பேர் வாங்கவில்லை. வி.கே.ராமசாமி, ஜனகராஜ் கூட்டணியும் வருஷம் 16 படம் போல இந்தப் படத்திலும் சேர்ந்திருந்தார்கள் "பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா" என்ற பிரபல வசனம் இந்தப் படம் மூலம் பரவலாகப் பேசப்பட்டது. ஜனகராஜ் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் இதே போல் இன்னொன்று படிக்காதவன் படத்தில் வரும் "என் தங்கச்சியை நாய் கடிச்சிடுச்சுப்பா". நடிகர் விஜய்குமாருக்கு மீள் வரவாக அமைந்தது இந்தப் படம், அப்போது தந்தை பாத்திரம் ஏற்று நடிக்கக் கொஞ்சம் தயங்கினார் என்றும் சொல்லப்பட்டது, ஆனால் இந்தப் படம் தான் சமீப ஆண்டுகள் வரை விஜய்குமாரைத் தொடர்ந்து திரையுலகில் அடுத்த சுற்றில் நிலைத்து நிற்க வழிகோலியது. ஆனந்த் தியேட்டர் அதிபர் ஜி.உமாபதி வில்லனாக நடித்திருந்தார்.

அமலா என்ற அழகுப்பதுமை, ஒரெலி, ரெண்டெலி, மூணெலி என்று சொல்லிக்கொண்டே அஞ்சலி என்று தன் பேரைச் சொல்லும் குறும்புக்காரி, அமலாவுக்கும் இந்தப் படம் மிகவும் பேர் சொன்ன படமாக அமைந்து விட்டது. நிரோஷா வந்த காட்சிகள் சொற்பம், அவரின் வசன உச்சரிப்பும் கொழ கொழ என்றாலும் அந்த சில்க் ரக கவர்ச்சிமுகம் மறக்க முடியுமா?
நாயகன் படத்துக்கு முன்பே அக்னி நட்சத்திரம் எடுக்கப்படவிருந்ததாகவும் பி.சி.ஶ்ரீராம் தான் மணிரத்னத்தைத் தாமதிக்குமாறு சொன்னதாகவும் பி.சி.ஶ்ரீராமே அண்மையில் சொல்லியிருந்தார்.இந்தப் படத்தைப் பொறுத்தவரை மணிரத்னத்தின் முந்திய படங்கள் அளவுக்கு இல்லாத ஒருவரிக்கதை, ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீராம் அமைத்த காட்சிகளின் வடிவமைப்பும், இசைஞானி இளையராஜா கொடுத்த ஆறுபாடல்களும் தான் மிக முக்கிய பலம். குறிப்பாக இந்த ஆறுபாடல்களில் "ராஜா ராஜாதிராஜனெங்கள் ராஜா" பாடல் அந்தக் காலத்தில் பெற்ற உச்சமே தனி. அதே பாணியில் ஒரு பாடலை மெட்டமைத்துத் தருமாறு என்னப் பெத்த ராசா படத்தில் காட்சி அமைக்கும் அளவுக்குப் பிரபலம். பின்னர் ராஜாதி ராஜா படத்தில் "மாமா உன் பொண்ணைக் கொடு" பாடலில் வாத்திய இசையாகவும் இப்பாடல் ஒலிக்கும்.
சங்கர் கணேஷ் இரட்டையர்கள் கூட "வெண்ணிலா என்னோடு வந்து ஆட வா" என்று நியாய தராசு படத்தில் மெட்டமைத்திருக்கிறார்கள். அதை முன்னர் இங்கே பகிர்ந்திருக்கிறேன். http://www.radiospathy.com/2007/11/blog-post.html
இளையராஜாவின் அந்த ஒரு பாடல் தவிர மீதிப்பாடல்களை கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.ஜானகி, சித்ரா ஆகியோர் பாடியிருக்கிறார்கள். பாடல்களை எழுதும் பணியை வாலி கையாண்டார். என்னுடைய முதல் பத்து விருப்பத்தேர்வுகளில் "வா வா அன்பே அன்பே" என்றும் இருக்கும். எப்போது கேட்டாலும் மீண்டும் ஒருமுறை என்று மனசு கட்டளை இடும் வரை அலுக்காமல் கேட்பேன். நின்னுக்கோரி வர்ணம் பாடல் அந்தக் காலத்து கோயில் திருவிழா மெல்லிசை மேடைகளில் உள்ளூர்ப்பாடகர்கள் பாடியபோதே பிரமித்து வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்திருக்கிறேன்.

ஏனோ தெரியவில்லை இதே படத்தைத் தெலுங்கில் கர்சனா என்று மொழிமாற்றும் போது எஸ்.ஜானகிக்குப் பதில் வாணிஜெயராம் ஐப் பாடவைத்தது சுத்தமாக எடுபடவில்லை. கே.ஜே.ஜேசுதாஸ், இளையராஜா குரல்களுக்காக எஸ்.பி.பாலசுப்ரமணியமே பயன்பட்டார், சித்ரா தன்னுடைய அதே பங்களிப்பை வழங்கியிருந்தார்.

இதோ தொடர்ந்து அக்னி நட்சத்திரத்தின் 34 இசைக்குளிகைகைக் கேட்டு இன்புறுங்கள்.

முதலில், கார்த்திக் - நிரோஷா தோன்றும் காதல்காட்சிகள் மூன்றை ஒன்றாக இணைத்துத் தரும் கோப்பு



888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888

பிரபு, கார்த்திக் இருவரும் சேர்ந்து விஜய்குமாரை வேறு இடத்துக்கு மாற்றும் நீண்ட காட்சியில் வரும் நீண்ட பின்னணி இசை

888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 ஜெயச்சித்ரா தன் மகன் கார்த்திக்கை தன்னுடைய தந்தையின் மூத்த சம்சாரம் வீட்டுக்குப் போகச் சொல்லும் காட்சியில் 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 கார்த்திக் தன் தந்தையைத் தேடி அவரின் மூத்த சம்சாரம் வீட்டுக்கு வரும் காட்சி 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 கார்த்திக் தன் தந்தை விஜ்யகுமாருடன் உரையாடல் 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 பிரபு அறிமுகக் காட்சி 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 குடிபோதையில் இருக்கும் தந்தையை கார்த்திக் அவரின் வீட்டுக்கு அழைத்துச் சொல்லும் போது 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 அமலா அறிமுகக் காட்சி 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 பிரபு கார்த்திக் சந்திப்பு (பிரபலமாகப் பேசப்பட்ட இடிக்கும் ஓசை) 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 விஜய்குமாரைக் கண்டு அவர் மகள் தாரா போக முனையும் போது, முத்த மனைவி சுமித்ரா காணும் காட்சி 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 பிரபு, அமலா காதல் 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 நிரோஷா அறிமுகக் காட்சி 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 நிரோஷா - கார்த்திக் சந்திப்பு 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 பிரபு போலீஸ் பணியில் பதவியேற்றதை அறியும் கார்த்திக் 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 பிரபு,கார்த்திக் மோதல் 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 கார்த்திக், பிரபு வீடு வந்து தாக்கும் போது பிரபுவின் தாய் சுமித்ரா காயமடையும் காட்சி 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 பிரபு, கார்த்திக் ஐக் கைது செய்யும் காட்சி 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 கார்த்திக்கை ஜாமீனில் எடுக்க, கார்த்திக் இன் தாய் ஜெயச்சித்ராவுடன் போலீஸ் நிலையம் வரும் சுமித்ரா 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 தன் தங்கையின் நிச்சயதார்த்தத்துக்குத் தந்தை விஜய்குமார் வரவில்லை என்ற கோபத்தில் கார்த்திக், கவலையில் ஜெயச்சித்ரா 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 விஜ்யகுமார் தாய் இறக்கும் காட்சி 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 பிரபு, கார்த்திக்கைக் கண்டு கோபமடைதல் 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 கார்த்திக் இன் தங்கை தாராவை ரயில் நிலையத்தில் மிரட்டும் வில்லன் கோஷ்டி 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 கார்த்திக் ஐச் சந்தித்து நிரோஷா தன் காதலைப் பகிரும் போது 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 வில்லன் சந்திப்பு 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 கார்த்திக், வில்லன் வீடு தேடிப்போகும் போது 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 மருத்துவமனையில் தந்தை விஜய்குமாரைத் தேடிப்போகும் தாரா, சுமித்ரா சந்திப்பு 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 ஜெயச்சித்ரா, சுமித்ரா சந்திப்பு 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 வில்லன் மருத்துவமனை வந்து விஜய்குமாரைச் சந்திக்கும் போது 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 விஜய்குமார் குணமடைந்த சேதி வரும் காட்சி 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 விஜய்குமாருக்கான போலீஸ் பாதுகாப்பு விலகுவதாக பிரபு அறியும் போது 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 பிரபு, கார்த்திகை சேர்த்து வைக்கும் விஜய்குமார் 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 விஜய்குமார் பணிக்குத் திரும்பி வில்லனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் போது 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 நிறைவுக்காட்சி இசை, ராஜா ராஜாதி ராஜனெங்கள் ராஜா பாடலோடு

6 comments:

கோமதி அரசு said...

அருமையான் பின்னணி இசைத்தொகுப்பு.

கானா பிரபா said...

மிக்க நன்றி கோமதி அரசு

கோபிநாத் said...

நன்றி தல ;))

Vetrivendan said...

25 ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரியில் பார்த்து ரசித்ததை நினைவூட்டினீர்கள்.நன்றி .' ஒரு பூங்காவனம் 'பாடலை இன்று கேட்டாலும் ஆகாயத்தில் பறப்பது போன்ற அல்லது தண்ணீரில் மிதப்பது போன்றதொரு உணர்வு ஏற்படும் .

கானா பிரபா said...

மிக்க நன்றி வெற்றிவேந்தன்

Anonymous said...

super kaana sir