Sunday, June 17, 2007
ஆத்தாடி ஏதோ ஆசைகள் - மூன்று மொழிகளில்
80 களின் இறுதியில் தெலுங்கு தேசத்திலிருந்து ஏராளமான படங்கள் தமிழில் வெளியாகி நன்றாக ஓடி திருட்டு வீ.சி.டிக்கு நிகராக தமிழ்ப் படத்தயாரிப்பாளர்களுக்குத் தலைவலி தந்த காலமது.
விஜயசாந்தியின் "பூவொன்று புயலானது", டாக்டர் ராஜசேகரின் "இதுதாண்டா போலீஸ்", நாகர்ஜூனாவின் " உதயம்", "இதயத்தைத் திருடாதே" என்று தொடர்ந்து
"எங்கடா உங்க எம்.எல்.ஏ", "ஆம்பள", "சத்தியமா நான் காவல்காரன்" என்று தமிழ் ரசிகர்களின் பொறுமைக்குச் சோதனை கொடுத்தது வேறு கதை. ஒன்றில் அதி தீவிர சண்டைக் காட்சிகள், அல்லது இளையராஜாவின் இசை இவை தான் இந்த மொழிமாற்றுப் படங்களின் வெற்றியை அப்போது தீர்மானித்தன.
அந்தவகையில் தமிழ் பேசக்கூடிய தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் மற்றும் ரேவதி, எஸ்.பி.பாலசுப்ரமணியம் நடித்த, வெங்கடேஷின் அப்பா ராமா நாயுடுவே முதலீடு போட்ட தெலுங்கு திரைப்படமான "பிரேமா" இளையராஜாவின் இசையில் முத்திரை பதித்தது. பின்னர் அது தமிழில் "அன்புச் சின்னம்" என்று மொழிமாற்றப்பட்டும் ஹிந்தியில் "Love" என்று மீள சல்மான் கான், ரேவதி ஜோடியோடு எடுக்கப்பட்டும் வெளியாகின. தமிழ், தெலுங்குக்கு ராஜாவின் இசையே இருந்தது. தெலுங்கியில் எஸ்.பி.பி ஐ வைத்து அழகான பாடல்கள் இருக்கும். அதில் "ஈ நாடே" என்ற பாடல் குறிப்பிடத்தக்கது. சித்ராவும் பாலுவும் பாடிய சிறந்த ஜோடிப்பாடல்களில் இதையும் அடித்துச் சொல்லலாம். பாடலைக் கேட்க
இந்தப்பாடலைத் தமிழாக்கும் போது தமிழில் மனோ பாடியிருப்பார், தெலுங்கில் பாலுவோடு ஜோடி சேர்ந்த சித்ரா தான் தமிழுக்கும். இந்தப் படத்தில் "யூ ஆர் மை ஹீரோ" என்ற இன்னொரு இனிமையான பாடலும் இருக்கும். தெலுங்கில் பாடிய எஸ்.பி.பி, சித்ரா கூட்டு, மனோ, சித்ரா கூட்டை விடச் சிறப்பானது என்பது என் கருத்து. ஆனாலும் 90 களின் ஆரம்பத்தில் சென்னை வானொலியின் "நீங்கள் கேட்டவை" நிகழ்ச்சியில் அதிக இடம் பிடித்த பாடல்களில் இதுவுமொன்று. பாடலைக் கேட்க
ஹிந்தியில் "Love" என்ற பெயரில் வெளியான போது அந்தப்படத்திற்கு இசை ஆனந்த் மிலிந்த். ஆனால் அவருக்குக் கை கொடுத்ததென்னவோ இளையராஜாவே தான். தெலுங்கில் "ஈ நாடே", தமிழில் "ஆத்தாடி ஏதோ ஆசைகள்" இந்த இரண்டு பாட்டின் மெட்டினையும், இசையில் சில சங்கதிகளையும் எடுத்து எஸ்.பி.பி, சித்ரா கூட்டோடு ஒரு மாதிரி ஒப்பேற்றிவிட்டார். ஹிந்தித் தழுவலும் இனிமையாகத் தான் இருக்கின்றது. பாடலைக் கேட்க
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
நல்ல பாடல்கள் !! ரசித்தேன்!!
வாழ்த்துக்கள்!!
அரிய பாடல்`லாம் எடுத்து போடுறீங்க. பராட்டுக்கள்!
முடிஞ்சா நான் நிரம்ப நாளா தேடிட்டு இருக்கற பாடல் ஒண்ணு, கெடச்சாப் போடுங்க.
வலைல எங்கும் இல்ல. பதம்(sample) தான் கெடைக்குது!
இந்தில 'மகாதேவ்' படத்துல வந்த ரிம் ஜிம், நம்ம ராசா தான் இசை.
89களிலோ 90களிலோ வந்திருக்கணும். வினோத் கன்னா, மீனாட்சி சேசாத்திரி
நடித்திருப்பார்கள்.ராசாவின் இளைய மகனார் அதை மறுபொதிப்பு செய்து
தீண்டத் தீண்ட`னு கொடுத்திருப்பார்.ஊற்றுகைப்(original) பாடல் கெடச்சாப் போடுங்க தோழரே.
நன்றிகள்.
-பிரதாப்
//குட்டிபிசாசு said...
நல்ல பாடல்கள் !! ரசித்தேன்!!//
வருகைக்கு நன்றிகள் நண்பரே
உங்க ரசனை நம்ம ரசனையோடு ஒத்துப்போவுது போல ;-)
"Aathaadi yetho aasaigal.... " is a fantastic song. When i heard this song for the first time in the radio commercials, i thought the movie would become a musical hit and budding telugu actor venkatesh would hit tamil audience hearts... but both didnt happen. The film was a damp squib... but this song is an exception. Thanks Prabha for sharing this song on the net.
நீங்கள் கேட்டவைக்கு சில விண்ணப்பங்கள்:
1) ஆடல் பாடல் காதல் என்பது அப்போது..
ஊடல் கொண்டு ? செய்வது இப்போது..
நாளை வருவது கல்யாணம், கச்சேரி கொண்டாட்டம்.
(என்ன படம்னு தெரியல, 70களின் கடைசியில் வந்திருக்கும்னு நெனைக்கறேன். ஷோபா,படாபட் மாதிரி யாரோ நடிச்சது).
2) இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்.
3) அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா. சொல்லித் தந்த வானம் தந்தை அல்லவா..
4) மழை தருமோ இந்த மேகம்..
இன்னும் நிறைய இருக்கு.. அப்பாலிக்கா வாரேன்.
//பிரதாப் said...
அரிய பாடல்`லாம் எடுத்து போடுறீங்க. பராட்டுக்கள்!
முடிஞ்சா நான் நிரம்ப நாளா தேடிட்டு இருக்கற பாடல் ஒண்ணு, கெடச்சாப் போடுங்க.//
வாங்க பிரதாப்,
மகாதேவ் பாட்டுக்கள் என் கைவசம் இல்லை, முயற்சி செய்து அவற்றைத் தருகின்றேன். அதில் "அந்த நிலாவைத் தான்" பாட்டு மாற்றிப் போட்டிருப்பதாக அறிகின்றேன்.
//Bharathiya Modern Prince said...
"Aathaadi yetho aasaigal.... " is a fantastic song. //
வாங்க வெங்கடேஷ்
பெயர்ப் பொருத்தம் நல்லாயிருக்கு ;-)
படம் வந்த காலத்தில் நான் ஊரில் சின்னவயசுப்பையன், ஆனால் பாட்டுக்களை அப்போதே விரும்பிக்கேட்டேன். தெலுங்குப் பாடலை வெளிநாடு வந்தபின் தான் கேட்டேன். ராஜாவின் பல நல்ல பாட்டுக்கள் படங்களின் தோல்விகளால் தொலைந்து போயிருக்கின்றன.
//SurveySan said...
நீங்கள் கேட்டவைக்கு சில விண்ணப்பங்கள்://
சர்வேசா
உங்க பாட்டுக்கள் வரும் ரும் ம்...
வணக்கம். இன்றுதான் எங்கள் ஊர் தொலைக்காட்சியில் நண்டு படம் ஒளியேறியது. அப்போதுதான் முதன் முறையாக (பல முறை கேட்டிருந்தாலும்) பாடல் காட்சியை பார்த்து ரசிக்க முடிந்தது. அந்தப் பாடல், அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா!!
வணக்கம் மணி
பாடல்கள் எல்லாமே நண்டு படத்தில் நன்றாக இருக்கும், ஆனால் இயக்குனர் மகேந்திரனுக்குத் திருப்தி தராத திரைப்படங்களில் இதுவும் ஒன்று. தன் கதை எழுதியவர் எழுத்தாளர் சிவசங்கரி
மூன்று பாடல்களையும் கேட்டேன். தெலுங்கில் மிகவும் நன்றாக இருப்பது போலவும்...அடுத்து இந்தி...அடுத்து தமிழ்...இந்த வரிசையில் நன்றாக இருப்பது போல எனக்குத் தோன்றுகிறது.
வணக்கம் ராகவன்
-உங்களுடைய தர வரிசையில் தான் என் விருப்பமும் கூட, தெலுங்கு தான் முதலில்
தல அருமையான பாடல்கள்....நல்லவேலை லிங்க் கொடுத்திங்க
நன்றி தல ;)
வாங்க தல
நானும் இந்தப் பாட்டுக்களை திரும்ப திரும்ப கேட்டுக்கிட்டுருக்கேன்.
Post a Comment