Saturday, October 31, 2026
எல்லாம் இன்ப மயம் ❤️
Friday, October 30, 2026
தேவா இசையில் பாடிய இசையமைப்பாளர் ஆர்.கோவர்த்தனம் மாஸ்டர்
நேற்று மறைந்த சதா மாஸ்டரைப் பற்றி இந்த வார ஆரம்பத்திலும் நினைத்திருத்திருந்தேன். அவரின் சிறிய தந்தை கோவர்த்தனம் தூண்டுகோலாக இருந்தார்.
காரணம், தேனிசைத் தென்றல் தேவா குறித்த ஒரு பதிவை எழுத இருந்தேன். அதில் நாயகன் கோவர்த்தனம் அவர்கள் தான்.
தேனிசைத் தென்றல் தேவாவுக்கு இசை ஒருங்கமைப்பாளராக கோவர்த்தனம் மாஸ்டர் இருந்த போது, ஒரு அருமையான வாய்ப்பும் அவருக்கு வாய்த்திருக்கிறது. தேவா இசையில் “நாடு அதை நாடு" என்ற திரைப்படத்தின் முகப்புப் பாடலைப் பாடியவர் வேறு யாருமல்ல, கோவர்த்தனம் அவர்கள் தான்.
படத்தின் முகப்போட்டத்தில் பாருங்கள்
https://www.youtube.com/watch?v=p5yLUYUBCus&t=47s
“கங்கை நதியோரம் ராமன் நடந்தான்"
“வரப் பிரசாதம்” படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை இளையராஜா ரசிகர்கள் மறக்க மாட்டார்கள்.
படத்தி இசையமைப்பாளர் கோவர்த்தன் என்றாலும், அன்னக்கிளி படத்துக்கு முன்பே இசை ஆர்.கோவர்த்தன், உதவி ராஜா என்று முகப்பு எழுத்தோட்டத்தில் இளையராஜாவை அடையாளப்படுத்திய திரைப்படம். அன்னக்கிளி 1976 ஆம் ஆண்டு மே மாதம், அதே ஆண்டு ஏப்ரலில் வரப்பிரசாதம் வெளிவந்தது.
கோவர்த்தனம் அவர்களது மூத்த சகோதரர் ஆர்.சுதர்சனம். சதா (சதானந்தம்) அவர்களது தந்தை.
கோவர்த்தனம் மாஸ்டர் புகழ் பூத்த பாடல்களை வழங்கி இருக்கிறார். குறிப்பாக “நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்து பாடுகின்றான்”, அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி” ஆகியவை.
எடுத்த எடுப்பிலேயே முதல்படம் ‘ஜாதகம் திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் இசையமைக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
பிரபல பின்னணிப் பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸை இவர்தான் தமிழில் முதன்முதலில் அறிமுகப்படுத்தினார்.
பிரபல இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி, இளையராஜா, விஜயபாஸ்கர், சந்திரபோஸ், தேவா என பல இசையமைப்பாளர்களுக்கு உறுதுணையாக இருந்துள்ளார் கோவர்த்தனம்.
விபத்தினால் செவித்திறனை இழந்தவர். சேலத்தில் தன் இறுதிக் காலத்தைக் கழித்த இவரின் சிரம ஜீனத்தை அப்போது குமுதம் கட்டுரையாக வெளியிட்டது.
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது இவருக்கு 10 லட்சரூபாய் நிதிஉதவி செய்து இருக்கிறார்.
இப்படியாக அமைந்த கோவர்த்தனம் அவர்களின் இறுதிக் காலம் சோகமானது. ஆனால் அவர் தன்னம்பிக்கையூட்டும் பாடலொன்றை இசையமைத்திருக்கிறார்.
பொற்சிலை திரைப்படத்தில் இடம்பெற்ற அந்தப் பாடல் இதுதான்
நாளை பொழுது உந்தன் நல்ல பொழுதாகுமென்று
நம்பிக்கை கொள்வாயடா
இறைவன் நம்பிக்கை தருவானடா
https://www.youtube.com/watch?v=meIERs1Lndo
கானா பிரபா
30.10.2026
Thursday, October 29, 2026
சதா மாஸ்டர் (சதானந்தம்)
பழம் பெரும் இசையமைப்பாளர் சுதர்சனம் மாஸ்டரின் புதல்வர் மற்றும் இசைஞானி இளையராஜாவின் ஆஸ்தான கிட்டார் வாத்திய விற்பனர் இன்று காலமானார்.
சதா மாஸ்டருக்கு கிட்டார் வாங்கிக் கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் அப்பா
இன்று மறைந்த சதா மாஸ்டர் ஒரு சமயம் தன் அண்ணனிடம் பழுதுபார்க்க வந்த கிட்டாரை எடுத்து வசிக்கப் பார்த்ததும், கிட்டார் உரிமையாளர் இதொன்றும் விளையாட்டுப் பொருள் அல்ல என்று கண்டிப்பாகச் சொல்லவும், தானும் கிட்டார் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பு வந்ததாக, சுபஶ்ரீ தணிகாசலம் நிகழ்த்தும் QFR 700 நிகழ்வில் பகிர்ந்திருக்கிறார்.
சதா மாஸ்டரின் தந்தை பிரபல இசையமைப்பாளர் சுதர்சனம் மாஸ்டரிடம் உதவி இசையமைப்பாளராக இருந்த ஆர்.கே.சேகர் தான் கிட்டார் ஒன்றை வாங்கி, கிட்டார் பழக அனுப்பினாராம்.
சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தையின் ஐம்பதாவது நினைவாண்டு நிகழ்விலும் இவர் கலந்து கொண்டார்.
இவர் தன்ராஜ் மாஸ்டரிடம் கிட்டார் பயில ஆரம்பித்த பின்னர் இணைந்து கொண்டவர் இளையராஜா.
மெல்லிசை உலகின் ஆளுமை ராம்ஜி Ramjhi Issai Mazhalai அவர்கள் சில வருடங்களுக்கு முன் பகிர்ந்த ஃபேஸ்புக் பகிர்வில், 1968 ஆம் ஆண்டில் தன்னுடைய சகோதரர் ஷான் சந்திரசேகர் உருவாக்கிய BLUERICKS இசைக்குழுவில் சதானந்தம் அவர்கள் Lead Guitarist ஆக இயங்கியதைக் குறிப்பிட்டிருக்கிறார்.
இவரோடு இணைந்து கிட்டார் வாத்திய விற்பன்னராக இருந்தவர் ராதா விஜயன் (நடிகர் எம்.கே.ராதாவின் புதல்வர்). அவரும் QFR 700 இல் கலந்து கொண்டவர்.
இவர்களோடு ராம்ஜி ட்ரம்ஸ் வாத்தியத்தைக் கவனித்துக் கொண்டார்.
சதா என்ற சதானந்தம் அவர்கள் முதன்முதலில் படத்துக்காக கிட்டார் வாசித்தது ஜெயகாந்தனின் “யாருக்காக அழுதான்” படத்தில் ராம்ஜியின் சகோதரர் எஸ்.வி.ரமணனின் இசையில் தான்.
எஸ்.வி.ரமணன் அனிருத்தின் தாத்தா.
அந்தப் படம் வெளிவந்தது 1966 இல். இந்த ஆண்டோடு 60 ஆண்டுகள் சதா அவர்களது இசைப் பயணம் ஆரம்பித்து.
இதில் 45 ஆண்டுகள் இசைஞானி இளையராஜாவின் பாசறையில்.
சமீபத்தில் வாவ் தமிழா பேட்டியில் உலகம் சுற்றும் புகழ் பூத்த கிட்டார் வாத்தியக் கலைஞர் பிரசன்னாவிடம், நீங்கள் வியந்து பார்த்த கிட்டார் வாத்தியக்காரர் யார் என்று கேட்டதும், அவர் பதில் சொல்வதற்குள், இவர் யாராவது மேற்கத்தேய வாத்தியக் கலைஞரைச் சொல்வார் என்று பார்த்தால் அவர் குறிப்பிட்டவர்
“சதா மாஸ்டர்” ❤️🙏
கானா பிரபா
29.10.2026
Friday, October 23, 2026
பாடகர் கிருஷ்ணராஜ் இன் பாட்டுப் பயணம்
அவர் ஒரு அறிமுக இயக்குநர்
இவர் ஒரு அறிமுகப் பாடகர்
இருவருக்குமான முதல் வாய்ப்பு, பாடல் பதிவாகிறது, ஆனால் படமோ முடங்கிப் போகிறது.
அவர் அகத்தியன் என்ற இயக்குநர், இவர் கிருஷ்ணராஜ் என்ற பாடகர்.
இசையமைப்பாளர் தேவா அறிமுகத்தில் அவரிடம் பக்திப் பாடல்கள் பாடியவருக்குத் திரைப்படப் பாடல் வாய்ப்பு வாய்க்கிறது, சரத்குமார் நடிப்பில் அகத்தியன் இயக்கவிருந்த, “அதிகாலை சுபவேளை” படத்தில் இடம்பெற்ற
“உன்ன நான் தொட்டதுக்கு”
https://youtu.be/vz3I-8kMk10?si=YQzr-IyDxeMYRisw
பாடல் வழியாக. ஆனால் அந்தப் படம் வெளிவராமல் முடங்கிப் போனது.
இந்தப் பாடல் பின்னர் SPB பாடிய “ஊர்மரியாதை” படத்தில் வெளிவந்தது
https://youtu.be/eap91tjwFQI?si=Vl7eCz8e583T7lTy
பாருங்கள் அப்பவே கிருஷ்ணராஜ் பாடிய பாடல் இன்னொருவருக்குப் போயிருக்கிறது. பின்னாளில் நலம் நலமறிய ஆவல் பாடலுக்கும் இப்படித்தானே நேர்ந்தது.
பின்னாளில் இதே அகத்தியன் இயக்கிய “காதல் கோட்டை” படம் “வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா” பாடல் வழி பாடகர் கிருஷ்ணராஜுக்குப் பெரும் புகழ், இருவருக்கும் மறுவாழ்வு அளித்தது வரலாறு.
வேம்படிதாளம் என்ற ஊரில் சேலம் மாவட்டத்தில் பிறந்தவர்.
உள்ளூர் இசைக்கச்சேரிகளில் பாடி வந்தவருக்கு ஒரு சமயம் பாடல் போட்டியில் முதற் பரிசு கிடைக்கிறது. அந்தப் பரிசைக் கொடுத்தவர் பிரபல இசையமைப்பாளர் வி.குமார்.
அப்போது தான் முழுமையான பாடகராக வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் கிளர்கின்றது. இந்தப்பதிவை எழுதியவர் கானா பிரபா
தமிழ் நாடு இசைக்கல்லூரியில் முறையாக இசை பயின்று, “சங்கீத வித்துவான்” பட்டத்தை மட்டுமல்ல, முதல் மாணவர் என்ற உன்னதத்தைத் தொட்டதால் அன்றைய தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பதக்கம் வழங்கிக் கெளரவித்தார்.
தமிழ்த் திரைப்பட உலகில் அவருக்குத் திறவுகோலாய் அமைந்தது, இசையமைப்பாளர் ஆர்.ராமானுஜன் அவர்களுடனான அறிமுகம். அவரிடமேயே முதல் பாட்டு பாடியிருக்கிறார். அந்த சமயம், விளம்பரப் பாடல்கள், பக்திப் பாடல்களைப் பாடல்கள் என்று தொடர்கிறார்.
அது சரி
யார் அந்த ராஜன் சக்ரவர்த்தி?
அதுவும் இவர் தான்.
“ வா அருகில் வா” திரைப்படத்தில்
சாணக்யா இசையில்
இதயக் கோயிலில்
https://youtu.be/-7_6Wk28kAs?si=Jk03zuJoZ3rl0zIV
பொன்னுமணி பூச்சரமே
https://youtu.be/-VchU84LUqw?si=qP0gwLsalW50HIKE
ஆகிய இரு பாடல்கள் வழியாக அறிமுகமாகிறார்.
தேவாவின் இசையில் ராஜன் சக்ரவர்த்தி என்ற பெயரிலேயே,
அம்மா தானம்மா - மண்ணுக்கேத்த மைந்தன்
https://youtu.be/1Mm7T6_lus8?si=6OzyqbwI0zp__oNb
மாலைக் கருக்கல் வந்து - நாடோடிக் காதல்
https://youtu.be/NHuh1EoSrAE?si=M6hARLHnjGwNKMIR
வைகாசி பொறந்தாச்சு படத்தில் “வாழை மரம்” பாடல்,
அண்ணாமலை அண்ணாமலை (மாங்கல்யம் தந்துனானே)
https://youtu.be/I59WC79Cfrs?si=XsH0rG3rjl2vuuSh
மேலும் “வாயாடி” என்ற இன்னொரு பாடல். “வைதேகி கல்யாணம்” படத்தில்
ஆலமரத்தடி” என்று பாடிக் கொண்டே பயணித்தாலும் பெரிய அடையாளம் இவருக்கு வாய்க்கவில்லை.
“அறிமுகம் கிருஷ்ணராஜ்”
என்று தேவா இசையில் ஆனந்த ராஜ் நடித்த, மணிவண்ணன் இயக்கிய “கவர்ன்மெண்ட் மாப்பிள்ளை” படம் இவருக்கு இன்னொரு தடவை அறிமுகம் கொடுக்கிறது.
தேனிசைத் தென்றல் தேவாவின் பாசறையில் track பாடகர் மட்டுமல்ல, பாட்டுச் சொல்லிக் கொடுப்பவரே இவர் தான் என்று இயங்கினார்.இந்தப்பதிவை எழுதியவர் கானா பிரபா
தன்னுடைய முதல் பாடலை அகத்தியனுக்குப் பாடி, படம் வெளிவராமல் இருந்ததோ அதே அகத்தியனின் “காதல் கோட்டை” வழியாக “வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா” இவருக்குப் பெரிய புகழைக் கொடுக்கிறது.
பிறகென்ன ஏறுமுகம் தான்.
ராஜன் சக்ரவர்த்தி என்று
ரஜினி புகழ் பாடல்கள்
https://youtu.be/bRed4MvIV2E?si=3nm26JIIQh8aKMyd
என்ற தனிப்பாடல் தொகுப்பில் பாடியவர் பின்னாளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கே பாடுவேன் என்று நினைத்திருப்பாரா?
“நகுமோ” பாடலை track பாடியவர், ஹரிஹரன் பாடிய இன்னொரு வடிவமும் பதிவாகியது. ஆனால் ரஜினி தேர்ந்தெடுத்தது கிருஷ்ணராஜ் பாடியதையே.
கிருஷ்ணராஜ் பாடிய எண்ணற்ற புகழ்பூத்த பாடல்களில், நான் அடிக்கடி விரும்பிக் கேட்பவை ஐந்து
தேவா இசையில்
“உன்னருகே நான் இருந்தால்”
https://youtu.be/xranbNagWoU?si=m4FAvHIM6uD3LAHn
இதயம் இதயம் இணைகிறதே
https://youtu.be/SVT_HaaVyA4?si=JBtfuWjJ9q4AcpjG
“ஜனவரி நிலவே நலம் தானா”
https://youtu.be/8snzPlRDKjc?si=_6rI6BwDy8yLI6DN
யுவன் ஷங்கர் ராஜா இசையில்
“ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்”
https://youtu.be/nXIU8aiB-NM?si=_tPDqBKjdEqIbu_w
“ஐயய்யோ”
https://youtu.be/uS8Z4nLJ53I?si=O06jyH5MNqZIPEzX
இவரின் பிரிவுச் செய்தியைக் கேட்ட கணம் “நீ பார்த்துட்டுப் போனாலும்”
https://youtu.be/DsWdEBZf4Fk?si=PJYUKydtkN7p2lUc
பாடல் தான் மனசுக்குள் ஓடியது.
கிருஷ்ணராஜ் மகளின் அறிமுகம் கிட்டியதும் அகத்தியன் படத்தில் தான். தேனிசைத் தென்றல் தேவா இசையில் ஜீவரேகா, கார்த்திக் உடன் இணைந்து “ஓவெண்புறா ஒன்று” பாடலைப் பாடியிருக்கிறார்.
தஞ்சாவூரு மண்ணெடுத்து பாடலைக் கூட கிராமியப் பண் பாடும் பாடகருக்காக கிருஷ்ணராஜ் பாடிய ஒத்திகைப் பாடல் தானாம். ரோஜா கம்பைன்ஸ் ஒட்டுமொத்தமாக இதை ஆதரிக்க இதுவே இறுதியானது தான் பின்னாளில் சரித்திரம் படைத்தது.
சிங்கப்பூர் ஜனாதிபதி எஸ்.ஆர்.நாதன் வாழும் காலத்திலேயே அவர் முன்னால் “தேனிசைத் தென்றல்” தேவாவின் தஞ்சாவூரு மண்ணெடுத்து பாடி அவரிடம் பாராட்டுப் பெற்றவர்.
எஸ்.ஆர்.நாதனுக்குப் பிரியாவிடை கொடுத்த பாட்டைப் பாடிய இருவரும் பிரியாவிடை கொடுத்து விட்டனர்.
கானா பிரபா
23.10.2026
Shared post
Thursday, October 22, 2026
தேவா இசையில் இயக்குநர் கூட்டு
90 களில் ஒரு வித்தியாசமான கூட்டணி நிகழ்ந்தது. இயக்குநர் P.வாசுவின் கதையை கே.எஸ்.ரவிகுமார் இயக்குவார். கே.பாக்யராஜை தன்னுடைய நாயகனாக்கி இயக்குவார் P.வாசு.
இந்த இரண்டு வித்தியாசமான கூட்டணியிலும் பொதுவாக இருந்த இருவரில் ஒருவர் குஷ்பு, இன்னொருவர் தேவா.
செம்பட்டுப்பூவே
வெண்மொட்டுத்தேரே
ஸ்ரீரங்கக் காவிரியே..
பொன் மொட்டு மானே
பூந்தட்டுத் தேனே
பூமியின் தேவதையே..
https://youtu.be/AScsdiUGgUY?si=ePW9Q6KdWxQEhtnN
இலங்கையின் பண்பலை வானொலிகளில் பொற்காலத்தில் அந்தந்த வானொலி நேயர்கள் மட்டுமல்ல, வானொலிப் படைப்பாளர்களாக இருந்தவர்களுக்கும் கூட இந்தப் பாடலைக் கேட்டால் உச்சி குளிர்ந்து விடும், கண்கள் பூத்து விடும்.
“புருஷ லட்சணம்” படத்தில் இடம்பெற்ற அந்தப் பாடல் தேனிசைத் தென்றல் தேவா இசையில் SPB முழுமையாக ஆக்கிரமித்து, சின்னக் குயிலுக்கும் இடம் கொடுத்த அற்புதமான பாடல்.
புருஷ லட்சணம் படம் பி.வாசு கதையில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ஜெயராம் & குஷ்பு அந்தக் காலத்தில் ஜோடி போட்டு நடித்த வெற்றிச் சித்திரங்களில் ஒன்று.
“ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன்”
https://youtu.be/-P9xW2c0owc?si=RdPOqhHYvo0YgUrE
பாடலில் அம்மன் பெயர்களை நிரலிட்டு எழுதிய
கவிஞர் காளிதாசனை மறக்காமல் இன்னும் வைத்திருக்கிறது.
இப்படிப் பக்தி மயமான சித்ராவுக்கு இன்னொரு ரகளையான பாட்டாக
“அண்ணாசாலை”
ஈழத்தில் இருந்து இந்தப் பாடலைக் கேட்ட போது சென்னையில் ஃபேமசான றோட்டாம் என்று நண்பர்களுக்குள் பேசிக் கொள்வோம். 😁
“காக்கைச் சிறகினிலே நந்தலாலா”
https://youtu.be/9Sd3l945lBE?si=WHRsb9EUifFDWw2L
எஸ்பிபி & சித்ரா கூட்டணியில் அற்புதங்களில் ஒன்று. இந்தப் படம் தெலுங்குக்குப் போன போது இந்த மெட்டையும் தேவா பயன்படுத்திக் கொண்டார், ஆனால் “செம்பட்டுப் பூவே” பாடலுக்குப் பதில் வேறொன்று. ஆகவே செம்பட்டு நமக்கு மட்டுமேயானது என்று பெருமையடித்துக் கொள்ளலாம் 😊
ஜெயராம், குஷ்பு பற்றிச் சொல்லும் போது அவர்கள் ஜோடி கட்டிய இன்னொரு படமான “மனசு ரெண்டும் புதுசு” படம் கூட மலையாள இயக்குநர் லோகிததாஸின் மூலகதையை எடுத்து அமிர்தம் இயக்கியது.
இதில் “சோளிக்கே பீச்சே”
https://youtu.be/K0Ei4lHF6aM?si=Ehi6CpbV67cSiId8
பாடலைத் தமிழுக்குத் தருவித்திருப்பார் தேவா.
“சொர்க்கத்தில் அம்மா”
இந்தப் பெயரில் தான் முதலில் உருவானது பி.வாசு கதை, திரைக்கதை, வசனம் எழுத, திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் நடித்த “அம்மா வந்தாச்சு”
“நந்தினி நந்தினி ஓ நந்தினி”
https://youtu.be/wZ_XzaEw0LI?si=EA8ptHuo7XfzwtYr
மனோகரமான பாட்டு ❤️
“உனக்கொரு தாயிருக்கா”
https://youtu.be/6poxe3BY-Ak?si=ZgYco-6EEwLpkzMs
சோக ராகம் பாடும்.
“தினத்தந்தி பேப்பரில”
https://youtu.be/M6_y3gxZLTY?si=gxqAGvjUmaKMSXu4
அந்தக் காலத்தில் ஹிட் அடித்த ஒன்று.
“இது உனக்காகப் பாடும் ராகம்”
https://youtu.be/2UUBcfsalsE?si=60S583S22FsHt5HS
SPB, சுசீலாம்மா, சித்ரா இணைந்த வித்தியாசமான பாட்டு.
“அம்மா வந்தாச்சு” படத்தை கே.பாக்யராஜின் பூர்ணிமா தயாரிப்பில், பாக்யராஜ், குஷ்பு, ஶ்ரீதேவி விஜயகுமார் நடித்திருந்தார்கள்.
பாடல்கள் அனைத்தையும் கவிஞர் வாலி எழுத, தேனிசைத் தென்றல் தேவா இன்னிசை வழங்கினார்.
இந்த மாதிரி வித்தியாசமான இயக்குநர் கூட்டணி என்று சொல்லும் போது, இயக்குநர் அகத்தியன் கதையில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய “பொண்டாட்டி ராஜ்யம்” குறிப்பிட வேண்டிய ஒன்று.
“அணிலுக்கு மூணு கோடு போட்ட ராமரே”
https://youtu.be/D_vXZ2SHmUU?si=SGt_CqAdb438UD-d
என்னவொரு தேனிசைத் தென்றல்
“பொண்டாட்டி ராஜ்ஜியம் தான் நடக்குது”
https://youtu.be/HTNnr_Cg7nQ?si=iD2D53Us-QWKqSjw
SPB மிரட்டுவார் இப்படி “தண்டால் எடுங்கடா”
https://youtu.be/IKwZju7NqAA?si=DU9r-hXu_RqIk4Qm
முன்பே “அதிகாலை சுபவேளை” படத்துக்குக் கொடுத்து அங்கே பயன்படாமல், அதாவது அந்தப் படமே வராமல் இடம் மாறிய
“ராகம் ஒன்று சுகமானது”
https://youtu.be/0QaJCsolfFg?si=QQ0G3xx7rMKE9k7v
கேட்டால் சொர்க்க லோகமானது ❤️
சரவணனைக் கச்சிதமான குடும்பத் தலைவராகக் காட்டி ஜனரஞ்சக அந்தஸ்துக் கொடுத்தது “பொண்டாட்டி ராஜ்ஜியம்”
பின்னாளில் சரவணன் இயக்குநர் அகத்தியனிடம் வேண்டி வாங்கிக் கொண்ட கதை “சந்தோஷம்” ஆனது.
அட இங்கேயும் தேனிசைத் தென்றல் தேவா தான்.
இந்தப் படத்தில்
“சாமியே ஐயப்பா”
https://youtu.be/gaKvxng8JXg?si=g8fayih9whAJoidm
தேவா குழுவினர் பாடும் பாடலும்,
சேதுமாதவா உன்னைச் சேர்த்து அணைக்கவா
https://youtu.be/E8pQMjo31sA?si=3b_3DMNgyRX10nvq
உன்னிகிருஷ்ணன், அனுராதா ஶ்ரீராம் குரல்களிலும் இனிக்கும்.
கானா பிரபா
22.10.2026
Tuesday, October 20, 2026
சக இசையமைப்பாளர்களோடு தேனிசைத் தென்றல் தேவா
நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆரீரோ….
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆராரிரோ….
இசையமைப்பாளர் ஒருவர் இன்னொரு இசையமைப்பாளரிடம் பாடுவது ஒன்றும் புதுமை அல்ல.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா போன்ற ஜாம்பவான்களோடு நீண்டு செல்லும்.
அந்த இரு சாதனையாளர்களோடு இணைவது பெருமையாகவும் உணர்வார்கள்.
ஆனால், கங்கை அமரனைப் போலவே ஒரு தோழமை உணர்வோடு நெருங்கி அழைத்துப் பாடக் கேட்டிருப்பார்கள் என்றே தேனிசைத் தென்றல் தேவாவை நினைப்பேன்.
“உனக்கென்ன குறைச்சல்
நீயொரு ராஜா…”
என்று வெள்ளி விழா படத்தில் வி.குமார் இசையில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அது போலவே அணுகுவேன் “மாமன்னன்” படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் “மாமன்னன்” படத்தில் தேவா பாடிய “நெஞ்சமே நெஞ்சமே” பாடலைக் கேட்குந்தோறும்.
ஒரே காலகட்டப் பகுதியில் நடிகர் மணிவண்ணனுக்காக “ஐயா வூடு தெறந்து தான் கிடக்கு” என்று இசைஞானியார் பாடியது போன்ற ஒரு பக்கம், இன்னோர் பக்கம் தேவாவும் அச்சொட்டாகப் பிரதிக் குரலாக “கோகுலத்துக் கண்ணா”, “மனிஷா போலிருப்பாளா” என்று தன் இசையில் பாடியது மட்டுமல்ல, சிற்பி அவர்களின் இசையில் கூட “உதவிக்கு வரலாமா” படத்தில் பாடியிருக்கிறார் அந்தப் பாடல்
நீதான் நீதான்
https://www.youtube.com/watch?v=CTQedBBGcno
காதல் மன்னன் படத்தில் “மெட்டுத் தேடித் தவிக்குது” மெல்லிசை மன்னர், “திலோத்தமா” பரத்வாஜ், இவர்களோடு “மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா”
https://youtu.be/SrDeTvc-URU?si=cUzl_h6voDyJa1x5
என்று கவலைப்படாதே சகோதரா என்று அஜித் படத்தில் முன்பே அதே சூழலில் கொடுத்த தேவாவையும் களமிறக்கி இருக்கிறார்.
இதே காலகட்டத்தில் இயங்கிய ஆதித்யனும் தேவாவுக்கானது என்று சப்பா சப்பா
https://youtu.be/-LRl0i9Dh9M?si=XB5c-Zgskw-JCr9g
பாடலை “கலர் கனவுகள்” படத்துக்காகப் பாட வைத்திருக்கிறார்.
இங்கே ஒரு சிறப்பு இருக்கிறது, ஒரு காலத்தில் தேவா பக்திப் பாடல்களுக்கு இசையமைத்த சூழலில் அவருக்காகப் பாடிய கே.பி.சுந்தராம்பாளை நினைவுபடுத்தும் கோவை கமலாவும் இணைந்து பாடியுள்ளார்.
தேவா இசையில் ஹரிஹரன் குரல் தனித்துவமானது. அது குறித்து முழு நீளக் கட்டுரையே வரைந்துள்ளேன். இங்கே ஹரிஹரன், லெஸ்லி, லூயிஸ் கூட்டணியில் மோதி விளையாடு (மோதி விளையாடு)
https://www.youtube.com/watch?v=ZP6y3F3GyFA
என்று கூட்டணியில் ஒருவராகப் பாடினார்.
தேவாவின் குரலை வேறு பரிமாணத்தில் கொண்டு போன முக்கியமான பாடல் வரிசை உண்டு.
அதில் வாழ் திரைப்படத்துக்காக பிரதீப்குமார் இசையில் இவர் பாடிய
Feel Song (வாழ் ) – பிரதீப் குமார்
https://www.youtube.com/watch?v=FoC2wmBcBJM
பாடலைக் கேட்டுப் பாருங்கள். புதுமையாக இருக்கும்.
தேவாவை நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஜனரஞ்சகமாக அடையாளப்படுத்தியவர் ஜி.வி.பிரகாஷ்குமார். தெறி படத்துக்காக
ஜித்து ஜில்லாடி
https://www.youtube.com/watch?v=9lkT6HnwCzQ
தெறிக்க விட்டது. பின்னர் கேப்டன் மில்லரிலும் பாட அழைத்தார்.
இளையராஜா தன் புதல்வர்கள் இசையில் பாடியது போலவே தேவாவும் தன் மகன் ஶ்ரீகாந்த் தேவா இசையில் “வள்ளியம்மா வள்ளியம்மா”
https://www.youtube.com/watch?v=uH8zHrPvO2c
பாடலை “தீ” படத்துக்காகப் பாடியிருக்கிறார்.
இளைய தலைமுறை இசையமைப்பாளர்களில் தேவா மீது நேசமும் பாசமும் கொண்டவர் அநிருத். அவரும் மான் கராத்தே படத்தில்
Open The Tasmac
https://www.youtube.com/watch?v=yJehMbu4MdQ
பாடலுக்காக இவரை அழைத்தார்.
கர்ணன் படத்துக்காக சந்தோஷ் நாரயணன் இசையில்
மஞ்சனத்தி புராணம்
https://www.youtube.com/watch?v=OQGRugYyvok
இன்னொரு முக்கியமான பாடல். இதில் நாட்டுப்புறத் தெம்மாங்குக் குரலாய் ஒலித்திருப்பார்.
தேவாவுக்கு இன்னொரு அழகான பக்திப் பாட்டு “சாமி குலசாமி” (மூக்குத்தி அம்மன்) – கிரிஷ் கோபாலகிருஷ்ணன்
https://www.youtube.com/watch?v=w4brafYUvc0
ரஹ்மானுக்கு மெல்லிசை மன்னர் குரலுக்குப் பிரதியீடாக தேவாவை நினைத்திருப்பார் போல, “லால் சலாம்” படத்தில் “அன்பாளனே” என்று மீண்டும் அழைத்தார்.
மேலும் தமன், கோபி சுந்தர், ஹிப் ஹாப் தமிழா, ஷான் ரால்டன், ஜிப்ரான் என்று நீண்டு செல்கிறது புதுப் புது இசையமைப்பாளர் இசையில் தேவாவின் குரலில் ஒலித்த பாடல்கள்.
இவ்விதம் நீண்டு செல்லும் பாடகர் தேவா இன்னொருவருக்காகப் பாடிய பாடல்களில் சமீபத்தில் வெளிவந்த ஈழத்துத் திரைப்படம் “போராட்டம்” படத்தில் “சோறு தான் முக்கியம்”
https://www.youtube.com/watch?v=tFxiDagMXuo
என்ற பாடலைத் துள்ளிசையாக ஈழத்து இசை இளவல் மதீசன் இசை வழங்கப் பாடியிருக்கிறார். இன்றைய கணக்கில் தேவா பாடி திரைக்கு வெளிவந்த இறுதிப் பாடல் இதுதான்.
ஒரு “கானா” பாடகரை எல்லாவித பரிமாணங்களிலும் அலங்கரித்துப் பாட வைத்திருக்கிறார்கள்.
அதற்குக் காரணம் அவரது நெகிழ்வுப் போக்கு அவர்தம் குரலிலும் மிளிர்ந்ததே.
❤️❤️❤️
இந்தப் பதிவை இன்று காலை ரயில் பயணத்தில் எழுத வேண்டும் என்று எண்ணிக் கொண்டே இலக்கியாவைப் பள்ளிக்கூடத்துக்கு அழைத்துப் போகும் காரில் ஏறும் போது “நெஞ்சமே நெஞ்சமே” பாடலை முணுமுணுத்தேன்.
“அப்பா! எனக்கு இந்தப் பாட்டுப் பிடிக்கும் காரில் போகும் போது போடுங்கோ” என்றார் இலக்கியா
பிறகென்ன வழி நெடுக
நெஞ்சமே…நெஞ்சமே… தான்
❤️❤️❤️
அன்பு தான் வெல்லுமே
எந்த நாளும்
ஒளி எங்கு போகும்
உனை வந்து சேரும்
நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆரீரோ…❤️
கானா பிரபா
20.10.2026





