Pages

Sunday, October 17, 2021

கவியரசு கண்ணதாசன் நெஞ்சில் ஒரு பாட்டெழுத

“தன்னை மறந்து 

மண்ணில் விழுந்து, 

இளமை மலரின் மீது.....

கண்ணை இழந்த வண்டு

தேக சுகத்தில் கவனம்.....

காட்டு வழியில் பயணம்....

கங்கை நதிக்கு.......

மண்ணில் அணையா...?”

இந்த வரிகளை அனிச்சையாக முணு முணுத்துக் கொள்பவர்களைப் பார்த்திருக்கலாம். 

“சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்” என்று இன்னொரு அடிகள் சொல்வதைப் போலத் தான் இந்தத் திரையிசைப் பாடல்கள் நல்லதொரு ஒத்தடம். அதிலும் ஏதோவொரு சூழலுக்காகப் போடப்படும் பாட்டு வரிகள் நம் வாழ்வின் இயக்கத்தோடு பங்கு போட்டு நம்மை ஆற்றுப்படுத்துகிறது. அதனால் தான் சொல்கிறேன், இப்படியான பாடல்களைக் கேட்பது வரமென்றால் இசையோடு வாழ்வதெல்லாம் தவம்.

ஒரு விரகதாப சூழலில் விரசம் கலக்காமல் பாடலைக் கொடுப்பது என்பது கோபுரத்தில் செதுக்கியிருக்கும் சிற்பம் போல. காட்சி அதுவாக இருந்தாலும் மனதில் தங்குவது என்னமோ உள் மனத்தின் ஆர்ப்பரிப்புகள் தான். 

பகலில் ஓர் இரவு படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கவியரசர் கண்ணதாசன். இன்னும் இப்படி இளையராஜாவுக்காக அனைத்துப் பாடல்களையும் எழுதிய படங்களும் உண்டு.

பாடல் பிறக்கும் களத்தையும் விபரிக்க வேண்டும் அதே சமயம் அங்கு நிகழும் சம்பவத்தையும் கொடுக்க வேண்டும். ஆனால் கவிஞர் அங்கு ஒரு பார்வையாளன் அதனால் காய்த்தல் உவத்தல் இன்றி அந்த நிகழ்வைத் தன் பாட்டு வரிகளில் அடக்க வேண்டும். அப்படியே அந்தக் காட்சியை விபரித்துக் கொண்டு போகும் கவிஞர் 

“இந்த நிலைதான் என்ன விதியோ.....?”

என்ற விடை காணாக் கேள்வியோடு நிறுத்தி விடுகிறார்.

கவியரசு கண்ணதாசன் அவர்கள் மறைந்து இன்றோடு 40 ஆண்டுகள். அவரை ரசித்து பின் அவரோடு இயங்கிய நம் காலத்து இசைஞானி இளையராஜாவின் இசைக்குக் கண்ணதாசன் அவர்கள் கொடுத்த பாடல் திரட்டை இந்த நாளில் பகிர்ந்து கொள்கின்றேன்.

1. நான் பேச வந்தேன் – பாலூட்டி வளர்த்த கிளி

2. அடி ஆத்திரத்தில் – பாலூட்டி வளர்த்த கிளி

3. கொல கொலயா முந்திரிக்கா (சந்தோஷம்) – பாலூட்டி வளர்த்த கிளி

4. கொல கொலயா முந்திரிக்கா (சோகம்) – பாலூட்டி வளர்த்த கிளி

5. வாடியம்மா – பாலூட்டி வளர்த்த 

6. டியர் அங்கிள் – உறவாடும் நெஞ்சம்

7. வாழ்வென்னும் சொர்க்கத்தில் – ஆளுக்கொரு ஆசை

8. குதிரையிலே நான் இருந்தேன் – அவர் எனக்கே சொந்தம்

9. தேவி செந்தூரக் கோலம் (சந்தோஷம்) – துர்காதேவி

10. தேவி செந்தூரக் கோலம் (சோகம்) – துர்காதேவி

11. நான் ஆயிரக் கண் காளி – துர்காதேவி

12. ஆத்தாடி – மாரியம்மன் திருவிழா

13. தங்க குடுத்துக்குப் பொட்டும் இட்டேன் – மாரியம்மன் திருவிழா

14. ஓல்டெல்லாம் கோல்டு – ஓடி விளையாடு தாத்தா

15. செவ்வந்திப் பூ முடிச்ச சின்னக்கா – பதினாறு வயதினிலே

16. ஆட்டுக்குட்டி முட்டை இட்டு - பதினாறு வயதினிலே

17. ஆழக் கடலில் தேடிய முத்து – சட்டம் என் கையில்

18. ஒரே இடம் நிரந்தரம் – சட்டம் என் கையில்

19. சொர்க்கம் மதுவிலே – சட்டம் என் கையில்

20. கடைத் தேங்காயோ – சட்டம் என் கையில்

21. மேரே நாம் அப்துல்லா – சட்டம் என் கையில்

22. தேவதைகள் வாழ்த்துவது – திருக்கல்யாணம்

23. தாலி ஒரு தேவை – திருக்கல்யாணம்

24. தேன்மல்லிப் பூவே – தியாகம்

25. உலகம் வெறும் இருட்டு – தியாகம்

26. வசந்தகாலக் கோலங்கள் – தியாகம்

27. நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் உண்டு – தியாகம்

28. வருக எங்கள் செல்வங்கள் – தியாகம்

29. இயற்கை ரதங்களே – வாழ நினைத்தால் வாழலாம்

30. தனக்கொரு சொர்க்கத்தை – வாழ நினைத்தால் வாழலாம்

31. வாழ்க்கை ஓடம் செல்ல – அவள் அப்படித்தான்

32. ஒரு பொதியால் ஒண்ணு – பைரவி

33. நண்டூருது நரியூருது – பைரவி

34. ஏழுகடல் நாயகியே – பைரவி

35. கண்ணன் அருகே பாடவேண்டும் – கண்ணன் ஒரு கைக்குழந்தை

36. மேகமே தூதாக வா - கண்ணன் ஒரு கைக்குழந்தை

37. மோக சங்கீதம் - கண்ணன் ஒரு கைக்குழந்தை

38. கோவில் மணி ஓசை – கிழக்கே போகும் ரயில்

39. செந்தாழம் பூவில் – முள்ளும் மலரும்

40. மஞ்சள் நிலாவுக்கு – முதல் இரவு

41. என் ராகங்கள் – முதல் இரவு

42. காமாட்சி மீனாட்சி – முதல் இரவு

43. ஆசை வச்சேன் – முதல் இரவு

44. திருத்தேரில் வரும் சிலையோ – நான் வாழ வைப்பேன்

45. எந்தன் பொன் வண்ணமே (ஆண்) - – நான் வாழ வைப்பேன்

46. எந்தன் பொன் வண்ணமே (பெண்) - – நான் வாழ வைப்பேன்

47. இந்த மின்மினிக்கு – சிகப்பு ரோஜாக்கள்

48. என் கண்கள் என்றும் – திரிபுர சுந்தரி

49. வானத்துப் பூங்கிளி – திரிபுர சுந்தரி

50. கீச்சு கீச்சு தாம்பலம் – ஆயிரம் வாசல் இதயம்

51. ஜெயிப்பேன் ஜெயிப்பேன் – ஆயிரம் வாசல் இதயம்

52. ஒரு தங்க ரதத்தில் – தர்மயுத்தம்

53. அட போய்யா போய்யா – தர்மயுத்தம்

54. காலங்கள் மழைக்காலங்கள் – இதயத்தில் ஓர் இடம்

55. மாணிக்கம் வைரங்கள் – இதயத்தில் ஓர் இடம்

56. காவேரி கங்கைக்கு மேலே – இதயத்தில் ஓர் இடம்

57. சிந்து நதிக்கரை ஓரம் – நல்லதொரு குடும்பம்

58. பட்டதெல்லாம் போதுமா – நல்லதொரு குடும்பம்

59. One And Two – நல்லதொரு குடும்பம்

60. செவ்வானமே பொன் மேகமே – நல்லதொரு குடும்பம்

61. பூந்தோட்டம் பூவில் – நதியைத் தேடி வந்த கடல்

62. ஆயிரம் மலர்களே – நிறம் மாறாத பூக்கள்

63. இரு பறவைகள் – நிறம் மாறாத பூக்கள்

64. ராஜாப் பொண்ணு (சந்தோஷம்) – ஒரே முத்தம்

65. ராஜாப் பொண்ணு (சோகம்) – ஒரே முத்தம்

66. பாவையர்கள் மான் போலே – ஒரே முத்தம்

67. ஆத்தங்கரையில் – ஒரே முத்தம்

68. வா நாளுக்கு நாள் – ஒரு இரவு ஒரு பறவை

69. கண்ணாடி ராமைய்யா – ஒரு இரவு ஒரு பறவை

70. தங்கக்குடமே – ஒரு இரவு ஒரு பறவை

71. இளமையெனும் பூங்காற்று – பகலில் ஒரு இரவு

72. பொன்னாரம் பூவாரம் – பகலில் ஒரு இரவு

73. தோட்டம் கொண்ட ராசாவே – பகலில் ஒரு இரவு

74. கலையோ சிலையோ – பகலில் ஒரு இரவு

75. தாம்த தீம்த – பகலில் ஒரு இரவு

76. எங்கெங்கோ செல்லும் – பட்டாக்கத்தி பைரவன்

77. தேவதை ஒரு தேவதை – பட்டாக்கத்தி பைரவன்

78. வருவாய் கண்ணா – பட்டாக்கத்தி பைரவன்

79. நெஞ்சுக்குள்ளே – பட்டாக்கத்தி பைரவன்

80. யாரோ நீயும் நானும் – பட்டாக்கத்தி பைரவன்

81. ஜில் மாலிஷ் – பட்டாக்கத்தி பைரவன்

82. வான் மேகங்களே – புதிய வார்ப்புகள்

83. நேரமிது நேரமிது – ரிஷிமூலம்

84. ஐம்பதிலும் ஆசை வரும் – ரிஷிமூலம்

85. வாடா என் ராஜாக்கண்ணா - – ரிஷிமூலம்

86. மழை வருவது – ரிஷிமூலம்

87. நெஞ்சில் உள்ள காயம் – ரிஷிமூலம்

88. அழகிய கண்ணே – உதிரிப்பூக்கள்

89. நான் உன்னை – எல்லாம் உன் கைராசி

90. பேரைச் சொல்லவா – குரு

91. எந்தன் கண்ணில் – குரு

92. பறந்தாலும் – குரு

93. ஆடுங்கள் பாடுங்கள் – குரு

94. ஶ்ரீதேவி என் வாழ்வில் – இளமைக் கோ

95. என் வானிலே – ஜானி

96. வாழும் மட்டும் நன்மைக்காக – காளி

97. அழகழகாப் பூத்திருக்கு – காளி

98. அடி ஆடு பூங்கொடியே – காளி

99. தித்திக்கும் முத்துச்சரம் – காளி

100. ராதா ராதா நீ எங்கே – மீண்டும் கோகிலா

101. சின்னஞ்சிறு வயதில் – மீண்டும் கோகிலா

102. நான் தேவதை – சூலம்

103. ஆவாரம் காட்டுக்குள் – அர்ச்சனைப் பூக்கள்

104. பூத்து நிக்குது – எச்சில் இரவுகள்

105. கடற்கரையில் – எச்சில் இரவுகள்

106. ஒரு ஊரில் ஒரு மகராணி – கர்ஜனை

107. குத்தும் ஊசி – கர்ஜனை

108. வந்தது நல்லது – கர்ஜனை

109. தாலாட்டுதே வானம் – கடல் மீன்கள்

110. கலைமானே – கடல் மீன்கள்

111. ராஜா ராணி – நெற்றிக்கண்

112. மனதினில் புதிய அருவி – ஊமை உள்ளங்கள்

113. அழகே அழகு – ராஜ பார்வை

114. நேற்று இந்த நேரம் – டிக் டிக் டிக்

115. அழகே வா – கவிதை மலர்

116. ராமனின் மோகனம் – நெற்றிக்கண்

117. தீராத விளையாட்டுப் பிள்ளை – நெற்றிக் கண்

118. மாப்பிள்ளைக்கு மாமன் மனசு – நெற்றிக் கண்

119. கூந்தலிலே – பால நாகம்மா

120. பூங்காற்று புதிதானது – மூன்றாம் பிறை

121. கண்ணே கலைமானே – மூன்றாம் பிறை


 இளையராஜா பாடல் திரட்டு நன்றி : அன்பு


இவற்றில் ஒரே நாளில் கவியரசருக்கு இசைஞானி மெட்டுப் போட்டுக் கொடுத்ததும் எழுதிய பாடல்கள் “கூந்தலிலே மேகம் வந்து ( பால நாகம்மா), மாப்பிள்ளைக்கு மாமன் மனசு (நெற்றிக் கண்) மற்றும் கண்ணே கலைமானே (மூன்றாம் பிறை)

இவை மூன்றும் வெவ்வேறு தளங்களில் இயங்கும் பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கவியரசர் கண்ணதாசன் அவர்கள் மறைந்து மூன்றாண்டுகள் கழித்து வெளிவந்த உன்னை நான் சந்தித்தேன் (1984) படத்தில் அவரின்

“தேவன் தந்த வீணை அதில் தேவி செய்த கானம்

எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

https://www.youtube.com/watch?v=CL5RSbG3FnY

எஸ்.ஜானகி & ஜெயச்சந்திரன் 

https://www.youtube.com/watch?v=ovRdpbTp57U

இரண்டு வடிவங்களும் கவிவரிகளாய் அமைந்தது காலம் சொல்லி வைத்த சிறப்பு.

"நிலையில்லாத மனிதர்கள் 

அவர்க்கும் என்ன உறவுகள் 

உள்ளம் என்றும் ஒன்று அதில் 

இரண்டும் உண்டல்லவா"  (வசந்த காலக் கோலங்கள்)

கோடையில் மழை வரும்

வசந்தகாலம் மாறலாம்

எழுதிச் செல்லும்

விதியின் கைகள் மாறுமோ ( ஆயிரம் மலர்களே மலருங்கள்)

என்று கவியரசர் கண்ணதாசன் தான் கொண்ட இசையமைப்பாளர்கள் போன்றே இளையராஜாவுக்கு பன்முகப் பாடல்கள், அவற்றில் தன் தனி முத்திரை பதித்த தத்துவ முத்துகளாய்க் கொட்டிக் கொடுத்திருக்கின்றார்.

மேகத்திலே வெள்ளி நிலா

காதலிலே பிள்ளை நிலா

தாகமெல்லாம் தீருவது

பிள்ளையின் தாலாட்டிலா....

https://www.youtube.com/watch?v=p3raAAvCkmQ

கவியரசரின் தேவை உணர்ந்து தேடிக் கொடுத்த முத்துகள் எத்தனை எத்தனை....

கானா பிரபா

17.10.2021

0 comments: