![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEja4MusbV03lbEFFiX_5kEJLVMHHAJ7GNIpjlC3nU4LlPfJprknIWf-jbIKJoATRsNQWKpvuPV9208R1Seg33U8llaIivCohCjgd1cAuyYEKlq3hQKM62Wki6NxY2PXJzhKz_xMdK7LD1M/s400/j5.png)
தமிழ்த் திரையிசையில் ஜென்சியின் பாடல்கள் அழுத்தமான முத்திரை பதித்த முத்துக்கள். அவை சொற்பமே என்றாலும் அன்றிலிருந்து இன்று வரை முதல் நாள் கேட்ட புத்துணர்வைக் கொடுக்க வல்லன. ஒரு வெகுளிப்பெண் காதல் மொழி பேசுமாற்போல இருக்கும் ஜென்சியின் குரலில் இருக்கும் அந்தக் கனிவு.
ஜென்சியின் பாடல்களை அணு அணுவாய் ரசித்துப் பதிவு போடவேண்டும் என்று நினைத்தே மூன்றாண்டுகள் றேடியோஸ்பதியை ஓட்டி விட்டேன். இன்று குறைந்த பட்சம் ஜென்சி பாடிய ஒரு சில ஜோடிப்பாடல்களையாவது தரவேண்டும் என்று கங்கணம் கட்டியிருக்கின்றேன்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8Qm1b257dTbPL20W3pOxpkzBPPhqadljGZ1l1-uhdfBG51f54c1kuZOr_mI03LUDGPMl_aUhXW8vQvNbpQI6eI5NhxRM0BNviggriwVbHMBOHbwqxGtaqFMTg9mTm6xKx0kJqbX7AoM4/s400/J4.png)
"மயிலே மயிலே உன் தோகை இங்கே" இந்தப் பாடல் இடம்பெறும் "கடவுள் அமைத்த மேடை" 1979 ஆம் ஆண்டில் வந்த படம், 31 ஆண்டுகளுக்கு முன்னர் வந்த படத்தில் இப்படியொரு நவீனமான இசையைக் கேட்கும் போது இசைஞானியின் வல்லமையை வியக்காமல் இருக்க முடியவில்லை. கிட்டாரில் ஆரம்பித்து புல்லாங்குழல் கையேந்திப் பின் இடையிசையில் கிட்டார் மெல்ல வயலினுக்கு கையளிக்க கீபோர்ட் தானும் இருக்கிறேன் என்று காட்ட எல்லாமே நேர்த்தியான இசை அணிவகுப்புக்கள். இவற்ற்றுக்குப் பின்னால் ரிதம் போடும் மிருதங்கம் தனி ஆவர்த்தனமாக மேய்ந்துகொண்டிருக்கும். எஸ்.பி.பாலசுப்ரமணியம் அனாயசமாகப் பாட, ஒன்றும் தெரியாத அப்பாவிப் பெண் கணக்காய் ஜென்சியின் குரல், கையில் இருக்கும் சொத்து பத்தை எல்லாம் எழுதி வைக்கத் தூண்டும்.
"காதல் ஓவியம் பாடும் காவியம்" இந்தப் பாட்டில் வரும் ஞானஸ்நானம் எடுக்கும் அந்தப் பெண் குழந்தை மேரி , அல்லது தீட்சை எடுக்கும் அந்த விச்சு என்ற பையன் வயசு தான் எனக்கு இந்த "அலைகள் ஓய்வதில்லை" படம் வந்தபோதும். காதல் பூக்க ஆரம்பிக்கும் பருவத்தில் தான் இந்தப் பாடலின் அதி உன்னத தத்துவத்தை உணர்ந்து நேசிக்கக் கற்றுக் கொண்டேன். காதலித்தால் ஒரு கிறீஸ்தவப் பெண்ணைக் காதலிக்க வேண்டும் என்ற அளவுக்கு இந்தப் பாடலின் மேல் ஓர் ஈர்ப்பு. பின்னாளில் காதலியாய் வரித்துக் கொண்டவளைக் கூட இந்தப் பாடலை வைத்துக் கற்பனை செய்யும் அளவுக்குத் தொடர்ந்தது. இசைஞானி இளையராஜாவுக்கு மாற்றாக எந்த ஒரு குரலையும் இப்பாட்டில் எப்படிப் பொருத்திப் பார்க்க முடியாதோ அதே அளவுக்கு ஜென்சியை விலக்கி இந்தப் பாடலை எந்தப் பாடகியைக் கொண்டும் ஈடு செய்து விட முடியாது.
"லாலாலலா லாலாலலா" இப்படி ஆரம்பிக்கும் போதே மனதில் ஊஞ்சலைக் கட்டி வைத்து காதலியை அதில் இருத்தி ஆட்டி வைக்கத் தோன்றும் "கீதா சங்கீதா" என்ற பாடலைக் கேட்ட கணத்தில். இசைஞானி இளையராஜாவுக்கு மலையாளக் குயில்கள் மீது ஏனோ தனிப்பிரியம். அதிலும் மென்மையான குரலில் ஒரு ராஜாங்கமே படைக்கும் ஜெயச்சந்திரனோடு ஜென்சியும் "அன்பே சங்கீதா" வாகச் சேர்ந்து கொண்டால் சொல்லவா வேண்டும். குறிப்பாக "கீதா" என ஜெயச்சந்திரன் விளிக்க "கண்ணா" எனவும் "சங்கீதா" எனும் போது "என் கண்ணாஆஆஆ" என சமநிலைப்படுத்தும் காதல் அலைவரிசை இருவரின் குரல்களில்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhIAYIn247Bpp2-sf2J3s1UpFQC6axWgCDYNWp13iC2vUC0LMyT4SsXmR2TIpkmCrDw8r-Md7ugIXHZrgyliBYRCgLVh3VZkdnLyO8MNt-Uo0k8QRxsyqlI7v9RyCEAs7KbFEel3O6CFAc/s400/n9.gif)
விஜயன் அறிமுகக் காட்சி, "ஆயிரம் மலர்களே மலருங்கள்" சிறு பகுதியோடு
தமிழ் தெரியாத பெண்ணும் ஆணும் காதலிக்கும் போது இளையராஜா கைகொடுத்தால் எப்படியிருக்கும். ப்ரியா படத்தில் வரும் "என்னுயிர் நீதானே" பாடல் அதற்கு விடை சொல்லும். கே.ஜே.ஜேசுதாஸ், ஜென்சி இன்னொரு சிறப்பான பாடல் ஜோடி ஆனால் இந்த ஜோடியின் குரல் அதிகம் ஒலிக்காததால் இழப்பு இசை ரசிகர்களாகிய எமக்குத் தான்.
ஜென்சியின் குரல் இன்னும் பதிவாகும்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBzjtQSKINZ6tEdk3YQpAlYN2GH8mf48UqQ47qH214xGxUok0KzOHIZgbOEMne_vhJPuTW3zpjE3vUMGJtuUrGXGevk4U1kehppJWRzdcClF39YEvDCvhlmDVFIvz-w6_4Cd9e8Nj4pzU/s400/j3.png)
39 comments:
பாடல்கள் இ.ராஹிட்ஸ்ல இப்பவும் எப்பவும் கேட்டுக்கிட்டே இருக்கலாம்ன்னு ஃபீல் பண்ண வைக்கிற ரகம்!
சூப்பர் கலெக்ஷன் பாஸ் :)
நான் மிகவும் ரசிக்கும் பாடல்களில் ஜென்சிக்கு என்றும் இடமுண்டு. என்னையும் சில வருடங்கள் பின்னோக்கி பயணப்பட வைத்தீர்கள் .நல்ல பதிவு நன்றி.
Mayile Mayile was her first song.. Raaja sir has writen in one of his books, "Yaarukku Yaar Ezhuthuvathu" something extraordinary about this song... I remember Bavatha told in one interview that Raaja advised her to sing like Jency...
ஜான்சிக்கும் நன்றி, பிரபாவுக்கும் நன்றி. கன நாட்களின் பின் பதினமகாலத்துக்குள் யோய் வந்த மாதிரி இருந்தது. விஜயன் நம்மளுக்கு சுதாகரை விட ரொம்ப ஹீரோவாக இருந்தார்.. அந்ந்ந்ந்த காலத்தில்.
வருகைக்கு நன்றி ஆயில்யன் பாஸ் ;)
ARAN said...
நான் மிகவும் ரசிக்கும் பாடல்களில் ஜென்சிக்கு என்றும் இடமுண்டு. என்னையும் சில வருடங்கள் பின்னோக்கி பயணப்பட வைத்தீர்கள் .நல்ல பதிவு நன்றி.//
மிக்க நன்றி நண்பா
நன்றி கானா பிரபா
நண்பர்களே,
இந்த சுட்டிகளையும் பாருங்கள் ,கேளுங்கள்.
http://paasaparavaikal.blogspot.com/2009/04/3.html
http://raviaditya.blogspot.com/2009/07/blog-post_17.html
//காதலித்தால் ஒரு கிறீஸ்தவப் பெண்ணைக் காதலிக்க வேண்டும் என்ற அளவுக்கு இந்தப் பாடலின் மேல் ஓர் ஈர்ப்பு. பின்னாளில் காதலியாய் வரித்துக் கொண்டவளைக் கூட இந்தப் பாடலை வைத்துக் கற்பனை செய்யும் அளவுக்குத் தொடர்ந்தது. //
ஓப்பன் ஸ்டேட்ஸ்மெண்ட் எல்லாம் விடுகின்றீர்கள் கவனம்.
ஜென்சியின் சகல பாடல்களும் பெரும்பாலும் ஹிட் தான். நல்ல தொகுப்பு.
Anonymous said...
Mayile Mayile was her first song.. Raaja sir has writen in one of his books, "Yaarukku Yaar Ezhuthuvathu" something extraordinary about this song... //
வாங்க நண்பா, உங்களிடமிருந்து தான் இப்படியான அரிய தகவலை எல்லாம் வாங்க வேண்டியிருக்கு மிக்க நன்றி
தல மயிலே மயிலேவை அடுத்த இடுகையில் குடுங்க.
ஜென்சி பாடல்களைத் தந்தமைக்கு முதலில் நன்றி.
இன்னும் பல நல்ல பாடல்கள் இருக்கின்றன.
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்...
பூ வண்ணம் போல மின்னும்/நெஞ்சம்..
என் வானிலே ஒரே வெண்ணிலா...
அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும்...
ஒரு இனிய மனது..
இரு பறவைகள் மலை முழுவதும் ..
ஆயிரம் மலர்களே மலருங்கள்...
அலங்கார பொன் ஊஞ்சலே ...
இதயம் போகுதே ...
தம்தனனம்தன தாளம் வரும்...
மீன்கொடி தேரில் ...
எல்லாப் பாடல்களையும் எதிர்பார்க்கிறேன்.
ஆஹா... தல! ஜென்சிய பத்தி பதிவு போட்டீங்க(மூன்றாவது தடவை?)
வலையில் ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஜென்சிய பத்தி வந்துவிடுகிறது.
முதல் படம் “தி்ரிபுரசுந்தரி”1978 பாட்டு“வானத்து பூங்குயிலே” ”அடுத்து ”அடிப்பெண்ணே” முள்ளும் மலரும்.
இதமான ராகங்கள்,
மிக்க நன்றி...
ஆரம்பமே அமர்க்களம்
...எங்கியோ போயிட்டீங்க
நல்ல தொகுப்பு அண்ணா
நன்றி தல ;))
நன்றி..ரசித்தேன்...
‘மயிலே மயிலே’ பாடல் வேண்டும் தருகிறீர்களா?
thamizhparavai@gmail.com
Jensy is my all time favorite singer.. all things you said about her voice is very true. Her voice will be there forever.
An year ago I also tried to gather all her songs and blogged it. Please check it out when you get a chance.
http://chummafun.blogspot.com/2008/08/jency.html
நன்றி, கானா பிரபா. ஜென்சியின் குரலுக்கு தனி இடம் உண்டு. மேலும் சில பாடல்களுக்கு காத்திருக்கிறேன்.
மேலே ஜென்சி பாடியிருக்கும் பாடல்கள் எல்லாம் ஜானகி பாடிய பாடல்கள் என்று நினைத்திருந்தேன். கண்களை திறந்தற்கு நன்றி.
offtopic
சில மாதங்களுக்கு முன் SPB அவர்கள் இசை நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று இருந்தேன். அங்கே SPB மற்றும் SP Sailaja அவர்கள் காதல் ஓவியம் பாடலின் தெலுங்கு வடிவத்தினை பாடினார்கள். அது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. வீட்டிற்கு வந்த பிறகு youtube அந்த பாடலை தேடினேன், அப்பொழுது கிட்டியது ஒரு வைரம். இளையராஜா(தமிழ்) மற்றும் சைலஜா(தெலுங்கு) குரல்களில் ரீமிக்ஸ் செய்ய பட்ட பாட்டு http://www.youtube.com/watch?v=VGXrb1k4cLw
உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறன்
பகிர்வுக்கு நன்றி நண்பரே
ஜென்சியின் குரலுக்கு அவரே பாடிய ,"தெய்வீக ராகம் ,தெவிட்டாத பாடல் "என்ற வரியே சரி பொருத்தம் .
விசரன் said...
ஜான்சிக்கும் நன்றி, பிரபாவுக்கும் நன்றி. கன நாட்களின் பின் பதினமகாலத்துக்குள் யோய் வந்த மாதிரி இருந்தது./
நன்றி அண்ணை
ரெண்டு said...
நன்றி கானா பிரபா
நண்பர்களே,
இந்த சுட்டிகளையும் பாருங்கள் ,கேளுங்கள்.//
வணக்கம் ரெண்டு
சுட்டிகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி, அந்த நண்பர்களும் நம்ம பார்ட்டி தான் ;)
வந்தி
இருக்கிறதை எல்லாம் சொல்லி சரண்டர் ஆகி விடலாமே ;)
எம்.எம்.அப்துல்லா said...
தல மயிலே மயிலேவை அடுத்த இடுகையில் குடுங்க.//
அவ்வ்வ், நீங்க நேரா பின்னூட்டப் பெட்டிக்கு வந்துட்டீங்களா ;)
வாங்கோ ரிஷான்
ஜென்சியி ஜோடிப்பாடல்களைத் தான் இங்கு இட்டேன், தனிப்பாடல்கள் வரும்
கே.ரவிஷங்கர் said...
ஆஹா... தல! ஜென்சிய பத்தி பதிவு போட்டீங்க(மூன்றாவது தடவை?)//
வாங்க தல, ஜென்சிக்கு ஸ்பெஷலாக இது தான் முதல் பதிவு ஆனா அவரின் பாடல்கள் நிறைய றேடியோஸ்பதியில் வந்திருக்கு. தகவல்களுக்கும் நன்றி பாஸ்
வருகைக்கு நன்றி கலைக்கோவர்,யோகா மற்றும் தல கோபி
சாரிண்ணா,
காதல் ஓவியத்திற்கு மேலே அதற்கு இணைப்பு இருப்பதை கவனிக்கவில்லை.படித்தபடி கடந்து விட்டேன் :(
அப்துல்லா
வருகைக்கு நன்றி தமிழ்ப்பறவை
சரண்
உங்கள் பதிவைப் பார்த்தேன் அருமை
சுப்பராமன்
மேலும் பாடல்கள் வரும்
சரவணன்
தெலுங்கில் ராஜா குரலுக்கு மாற்றீடாக எஸ்பிபியும் இருந்ததை முன்னர் கேட்டிருக்கின்றெஎன், ஆனால் என்னவோ தமிழ் தான் அழகாக இருக்கிறது. கேட்டுப் பழகியதோ என்னவோ ;)
தொடுப்புக்கு நன்றி
கரிசல்காரன்
வருகைக்கு நன்றி
பூங்குழலி
மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு
அப்துல்லா தம்பி
என்ன இது கொலைக்குற்றமா பண்ணீட்டிங்க ;)
//ஜென்சியின் பாடல்களை அணு அணுவாய் ரசித்துப் பதிவு போடவேண்டும் என்று நினைத்தே மூன்றாண்டுகள் றேடியோஸ்பதியை ஓட்டி விட்டேன். இன்று குறைந்த பட்சம் ஜென்சி பாடிய ஒரு சில ஜோடிப்பாடல்களையாவது தரவேண்டும் என்று கங்கணம் கட்டியிருக்கின்றேன்//
அப்பாடா...
உங்களைக் கேட்டு கேட்டு அலுத்தே போச்சு! இப்போ "மயிலே மயிலே" வந்து உங்கள ஒரு கொத்து கொத்தி, பதிவு வாங்கிருச்சி பாத்தீங்களா? மயிலாரே நீங்க வாழ்க! :)
தனி-மயிலே வாழ்க!
கனி-மையிலே வாழ்க!
ஜென்சி போல், இனி-மையிலே வாழ்க! :)
//தமிழ்த் திரையிசையில் ஜென்சியின் பாடல்கள் அழுத்தமான முத்திரை பதித்த முத்துக்கள். அவை சொற்பமே என்றாலும் அன்றிலிருந்து இன்று வரை முதல் நாள் கேட்ட புத்துணர்வைக் கொடுக்க வல்லன. ஒரு வெகுளிப்பெண் காதல் மொழி பேசுமாற்போல இருக்கும் ஜென்சியின் குரலில் இருக்கும் அந்தக் கனிவு//
ஜென்சி-க்கு நல்ல, உண்மையான அறிமுக வரிகள்!
//காதலித்தால் ஒரு கிறீஸ்தவப் பெண்ணைக் காதலிக்க வேண்டும் என்ற அளவுக்கு இந்தப் பாடலின் மேல் ஓர் ஈர்ப்பு//
:)
மயிலார் ஜென்சியை வர வைச்சாரு!
ஜென்சி, கா.பி. அண்ணாச்சி கிட்ட உண்மையை வரவைக்கறாங்க! வாழ்த்துக்கள் கா.பி :))
//Anonymous said...
Mayile Mayile was her first song//
May be Not!
மயிலே மயிலே பாட்டு கடவுள் மைத்து வைத்த மேடை படத்தில்...அதுக்கும் முன்னாடியே முள்ளும் மலரும் வந்துருச்சி! "அடிப் பெண்ணே" என்ற பாட்டில் அதுல ராஜா இசையில் ஜென்சி கலக்கி இருப்பாங்க! அப்படியே "சின்னப் பொண்ணு" குரலில் மொத்த பாட்டே சில்லுன்னு இருக்கும்! :)
ஜானகி அம்மா கூட இது போல "சின்னப் பொண்ணு குரலுக்கு", தன் குரல் மாத்திப் பாடுறது தான் வழக்கம்!
ஆனால் செயற்கைத்தனம் இல்லாமல், ஜென்சி-க்கு அது இயற்கையாகவே அமைந்து விட்டது இன்னும் அழகு!
தமிழில், ஜென்சி-யின் முதல் பாடல், ஜானகியோடு பாடினது-ன்னு நினைக்கிறேன்! பாட்டு சட்டு-ன்னு நினைவுக்கு வரலை! யாராச்சும் அறிந்தவர் சொல்லுங்களேன்! ஆனா அது ராஜா இசையில் தான்!
ஜென்சி பாடல்கள் தொடரும்-ன்னு நீங்க போட்டாலும்...
நீங்க இத்தினி நாள் காக்க வைச்ச கொடுமையால்...உங்களை நம்பாம...இதோ சில ஹிட்ஸ்... :))
* என்னுயிர் நீ தானே
* மீன் கொடி தேரில்
* தம்தன நம்தன காதல் வரும்
* என் வானிலே
* தெய்வீக ராகம்
* காதல் ஓவியம்
* ஆயிரம் மலர்களே
போன்ற பாடல்கள் எல்லாரும் கேட்பது தான்!
ஆனால் அதே புதிய வார்ப்புகள் படத்தில், "இதயம் போகுதே" பாடல்...is very very haunting...
இதயம்ம்ம்ம் போஓஓகுதே-ன்னு, அதே "சின்னப் பொண்ணு குரலில்" சோகத்தை இழுத்துக் கொடுப்பாங்க ஜென்சி! ஒத்த தந்தி போல அவங்க இழுக்குற இழுப்புல, ச்சே இளமையில் இவ்ளோ கஷ்டமா-ன்னு நிஜமாலுமே இதயம் போய் விடும்!
அதே போல, "இரு பறவைகள் மலை முழுவதும் எங்கே எங்கே"-ன்னு பாடும் போது, "எங்கே எங்கே"-வில் ஒரு கொக்கி போடுவாங்க! இப்பவும் இந்தப் பின்னூட்டம் எழுதும் போது, அதை நினைச்சிப் பார்க்கையில், எங்கே எங்கே-ன்னு இனிக்குது! :)
இன்னுமொரு ஜென்சி டச், "பனியும் நானே, மலரும் நீயே" பாட்டு! ஒரே சமயத்தில் வேகமாவும் பாடி, மெதுவாகவும் பாடி, காதல் கூடலைக் கண் முன்னே கொண்டு வருவாங்க! கூடலில் வேகமும் இருக்கும், மென்மையும் இருக்கும்-ல்ல? அதே போல நிறுத்தி நிறுத்தி...
மனம்ம்ம்-தரும்ம்ம்-என் தேகம் உன்னோடு
தினம்ம்ம்-தினம்ம்ம்-நீ காதல் நீராடு-ன்னு...அட...இதுக்கு மேலச் சொல்ல கொஞ்சம் வெட்கமா இருக்கு! முருகா! :)
அதே போல்...மலேசியா வாசுதேவனோடு கூடப் பாடும் ஒரு பாட்டு, "அலங்காரப் பொன் ஊஞ்சலே"! இதுல மலேசியா தான் மொத்த பாட்டும் பாடுவாரு! ஆனா ஜென்சி பாட்டு முழுக்க ஹம்மிங் மட்டுமே!
இந்தப் பாட்டையும், அந்த ஹம்மிங் மட்டும் கேட்குமாறு தொகுப்பு இருந்தா, அதைக் கட்டாயம் போடுங்க கா.பி அண்ணாச்சி! kRS நேயர் விருப்பம்!
ஜென்சி, யேசுதாஸ், SPB கூடப் பாடி இருந்தாலும், ஜென்சி-ஜெயச்சந்திரன் குரல் காம்பினேஷனுக்கு கொஞ்சம் கெமிஸ்ட்ரி அதிகம்! :) ஆனா சேர்ந்து பாடினது ரொம்ப இல்லை! :(
"கீதா சங்கீதா", மற்றும் "அக்கா ஒரு ராஜாத்தி"...அப்பறம் இன்னொன்னு...அவ்ளோ தான்-ன்னு நினைக்கிறேன்!
//அவை சொற்பமே என்றாலும்//
ஆமா...மொத்தம் முப்பது பாட்டு கூட இல்லை, தமிழில் ஜென்சி குடுத்தது! இது ஒரு புறம் வருத்தம் தான் என்றாலும்...ஜென்சியின் ஒவ்வொரு பாடலும் நினைவில் நிக்குது-ன்னா, அதுக்கு இதுவும் ஒரு காரணமா இருக்கலாம்!
சுசீலாம்மா தந்த முத்துக்களைச் சொல்லச் சொன்னா, எதை எடுப்பது எதை விடுப்பது-ன்னு கொஞ்சம் குழப்பம் வரும்! ஆனா ஜென்சி-க்கு அந்தப் பிரச்சனையே இல்லை! அத்தனை பாட்டையும் சொல்லீறலாம்!
தமிழ்த் திரையுலகம் ஜென்சியை இன்னும் பயன்படுத்தி இருக்க வேண்டும்!
ஜென்சியைப் பலப்பல கோணங்களில் நன்கு அறிமுகப்படுத்திய ராஜா, அதுக்கு அப்பறமா ஜென்சியை ஏன் அதிகம் பயன்படுத்திக்கலை-ன்னு தான் தெரியலை! :(
தெரியாத தகவல்கள்....
நன்றி அண்ணே...
இந்த அம்மா பாடிய பாடல்கள் அனைத்தும் இனிமை, இது நன்றாக இல்லை என்று ஒன்றை கூட சுட்டிக்காட்ட முடியாது. அனைத்து பாடல்களும் நெஞ்சில் நிற்கும் பாடல்களாக இவருக்கு அமைந்திருக்கும். ஏனோ குறைந்த பாடல்களோடு நிறுத்திக்கொண்டார்..........
//May be Not!
மயிலே மயிலே பாட்டு கடவுள் மைத்து வைத்த மேடை படத்தில்...அதுக்கும் முன்னாடியே முள்ளும் மலரும் வந்துருச்சி! "அடிப் பெண்ணே" என்ற பாட்டில் அதுல ராஜா இசையில் ஜென்சி கலக்கி இருப்பாங்க! அப்படியே "சின்னப் பொண்ணு" குரலில் மொத்த பாட்டே சில்லுன்னு இருக்கும்! :) //
ஜென்சி அவர்களுடைய முதல் பாடல் மயிலே மயிலே தான்.. முதலில் வந்தது "அடி பெண்ணே " பாடலாக இருக்கலாம்... ஜென்சியின் பேட்டியில் படித்தேன்..
கண்ணபிரான் சுவாமிகளே
உங்கள் பின்னூட்டத்தையே பதிவாக ரசித்துப் படித்தேன் ;-))
ஜென்ஸியின் ஹம்மிங்கோடு இருக்கும் பாடல்களையும் ஒரு தொகுப்பா கொடுக்கிறேன் தல
//கண்ணபிரான் சுவாமிகளே//
No way! krs-ன்னே கூப்புடுங்க!
மனம்ம்ம்-தரும்ம்ம்-என் தேகம் உன்னோடு-ன்னு எல்லாம் அணு அணுவா சுவாமிகளா ரசிப்பாங்க? :)
//உங்கள் பின்னூட்டத்தையே பதிவாக ரசித்துப் படித்தேன் ;-))//
தோடா!
அப்படியே முன்பு கேட்ட வாணி ஜெயராம், உமா ரமணன் சிறப்புப் பதிவுகளையும் மறந்துடாதீக! :)
வருகைக்கு நன்றி ஜெட்லி தம்பி, பனிமலர்
கே.ஆர்.எஸ்// அப்படியே ஆகட்டும் ;)
ஜென்சி மிகச்சிறந்த பாடகிகளில் ஒருவர். அவருடைய குரலில் புதுவித இளமைத்தன்மை தெறிக்கும். அவர் இளம்வயதில்தானே பாடினார். ஆயினும் அவரது குரலிலேயே கலந்தது என்று சொல்லலாம்.
திரிபுரசுந்தரி படத்தில் துவங்கிய அவரது பயணம் வெறும் முப்பது பாடல்களில் முடிந்தது பெரும் சோகம். ஆனாலும் ஜென்சிக்கு என்று தனியிடம் இருப்பதை மறுக்கவே முடியாது. எஸ்.பி.ஷைலஜா எத்தனை பாடல்கள் பாடியிருக்கிறார். ஆயினும் ஜென்சிக்கு இன்றும் இருக்கும் வரவேற்பு நிதர்சனம்.
இந்த ஒலிப்பதிவைக் கொடுத்தமைக்கு நன்றி.
அன்பு கானா பிரபா ஜென்சி பேட்டி ஏதாவது போட்டிருக்கீறீர்கள இன்று தான் உங்கள் தளம் பார்க்க முடிந்தது. இல்லையென்றால் எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள் அவரின் அலைபேசி எண் தருகிறேன் பேட்டி எடுத்து பதியுங்கள். எனது மின் முகவரி covairavee@gmail.com
Post a Comment