Pages

Friday, July 23, 2010

தஞ்சைப் பெருங்கோயில் தரிசனம் - iTunes இல் அரங்கேறும் றேடியோஸ்பதி

சோழப்பேரரசு தன் உச்சத்தில் இருந்த காலத்தின் கல்வெட்டாய் கம்பீரமாய் இன்றும் திகழ்வது தஞ்சைப் பெருங்கோயில் என்று சிறப்பிக்கப்படும் பிரகதீஸ்வரர் ஆலயம். ராஜராஜசோழ மன்னன் தன் காலத்தில் சமயத்தையும், கலையையும் எவ்வளவு உச்சமாக மதித்தான் என்பதற்குச் சான்றாக இன்றும் மிடுக்கோடு நிற்கின்றது இந்த இராஜராஜேஸ்வரம்.

இவ்வாலயம் எழுப்பி இந்த ஆண்டோடு ஆயிரம் ஆண்டுகள் கடக்கின்றது என்பது பெருமையோடு நினைவுகூர வைக்க வேண்டிய விடயம். இதுவரை என் இந்தியப்பயணங்களில் தஞ்சைப் பெருங்கோயிலைக் காண வாய்ப்புக் கிட்டவில்லை என்ற ஆதங்கம் இருந்தது. அதை ஓரளவு ஈடுகட்டும் விதத்தில் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நான் படைக்கும் "அறிவுக்களஞ்சியம்" நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அறிவிப்பாள சகோதரி திருமதி சிவாஜினி சச்சிதானந்தாவை அழைத்து ஒரு சிறப்புப் படையலைப் படைத்திருந்தேன். இவர் தஞ்சைப் பெருங்கோயிலுக்குச் சென்ற அந்த அனுபவங்களை மிகவும் சுவையாகப் பகிர்ந்த போது இடையிடையே "ராஜ ராஜ சோழன்" படத்தில் வரும் இவ்வாலயத்தின் சிறப்பைக் கூறும் பாடல்களையும் கொடுத்து ஒரு சிறப்புப் பெட்டக நிகழ்ச்சியாக அமைத்தோம்.


இப்போதெல்லாம் Apple நிறுவன உற்பத்திகளை ஆளாளுக்கு iPhone, iPod, iPad ஆகப் பிரித்து மேய்ந்து கொண்டிருக்கையில் றேடியோஸ்பதியின் அடுத்த பரிமாணமாக முதல் Podcast ஆக இந்த "தஞ்சைப் பெருங்கோயில் தரிசனம்" என்ற ஒலிப்பெட்டகத்தைத் தருவதில் பெருமகிழ்வு கொள்கின்றேன். தொடர்ந்து இவ்வகையான சிறப்புப் பெட்டக நிகழ்ச்சிகள், கலைஞர்கள் பேட்டிகளும் வர இருக்கின்றன. தொடர்ந்த உங்கள் ஆதரவுக்கு நன்றி, Apple நிறுவனத்துக்கு ஒரு "ஓ".



இந்த ஒலிப்பகிர்வை itunes வழியாக நேரடியாகத் தரவிறக்கி உங்கள் ஒலிப்பெட்டியில் இணைக்க

http://itunes.apple.com/podcast/thanjai/id383047672

நேரடியாகக் கேட்க



தஞ்சைப் பெருங்கோயில் புகைப்படம் நன்றி: travel.webshots.com

12 comments:

ஆயில்யன் said...

நினைவடுக்குகளில் நிறைந்திருக்கும் தஞ்சை பெரிய கோவிலினை பற்றிய செய்திகளோடு தரிசன அனுபவத்தினை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிகள்! மேலும் பல சுவாரஸ்யமான பேட்டிகளையும் எதிர்பார்க்கின்றோம்!

Thamiz Priyan said...

நல்ல பதிவு. அம்மையார் ரசிப்போடு உரையாடினார். தஞ்சைக்கு சென்று பழந்தமிழர்களின் கட்டடக் கலை அற்புதத்தைக் காண வேண்டும் என்ற வெறி கூடிப் போய் விட்டது.

Krubhakaran said...

http://viewsofmycamera.blogspot.com/2010/07/blog-post.html

இதையும் கொஞம் பாருங்க சார்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

Radiospathy on iTunes!
அரங்கேற்ற வேளை(லை)யா? :)
வாழ்த்துக்கள் கா.பி.அண்ணாச்சி!

ஆயிரம் ஆண்டுகள் என்பது கலைக்கு ஒரு மகத்தான ஆயுள்!
தஞ்சைப் பெரிய கோயில் பற்றி எத்தனை தலைமுறை, எவ்வளவு பேசினாலும்...ஆவல் தீராது!

ஆன்மீகம்-இலக்கியம்-சிற்பம்-ஓவியம் என்று அன்று பெரிய கோயிலில் சங்கமித்த கலைகள்...
இன்றும் சங்கமித்துக் கொண்டு இருக்கின்றன...புகைப்படம், பாடல், iTunes என்று! பெரிய கோயிலே, உனக்கு ஆயுள் கெட்டி! பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல கோடி நூறாயிரம்!

கோபிநாத் said...

தல அருமையான தொகுப்பு தல..தஞ்சை பெரிய கோவிலை பற்றி நிறைய செய்திகள் அதுவும் பொன்னியின் செல்வனோட சேர்ந்து சொல்லும் போது மிக அருமையாக இருந்தது.

பகிர்ந்து கொண்ட திருமதி சிவாஜினி அவர்களுக்கும் என்னோட மனமார்ந்த நன்றிகள் ;)

இன்னும் அந்த கோவிலை பார்க்க முடியமால் இருக்கும் உங்களை போல நானும் ஒருவன் ;)

கானா பிரபா said...

வருகைக்கு நன்றி ஆயில்ஸ், தொடர்வோம் ;)

கானா பிரபா said...

தமிழ் பிரியன் said...

தஞ்சைக்கு சென்று பழந்தமிழர்களின் கட்டடக் கலை அற்புதத்தைக் காண வேண்டும் என்ற வெறி கூடிப் போய் விட்டது.//

வாங்க பாஸ், நீங்களும் நம்ம கோஷ்டியா ;)

கானா பிரபா said...

krubha said...

http://viewsofmycamera.blogspot.com/2010/07/blog-post.html

இதையும் கொஞம் பாருங்க சார்//

வணக்கம் நண்பா

படங்களைப் பார்த்தேன் வியந்தேன். தஞ்சைப் பெருங்கோயிலை இவ்வளவு அழகாகவும் விதவிதமாகவும் எடுத்திருக்கின்றீர்களே , பாராட்டுக்கள் உங்களுக்கு

ஜோசப் பால்ராஜ் said...

எங்க ஊரு கோயிலைப் பத்தி எங்க படிச்சாலும் சிலிர்த்துக்கும். அதுவும் இப்ப ஆப்பிள் வரைக்கும் எங்க கோயிலை கொண்டு வந்துட்டிங்க. ரொம்ப மகிழ்சியா இருக்கு.

சீக்கிரம் தஞ்சாவூர் வாங்க பிரபா. கோயிலுக்கு கூட்டிட்டுப் போறேன்.

Krubhakaran said...

நன்றி நன்பரே, உங்கள் இசை கட்டுரைகளை விடவா என் பார்வை நன்றாக உள்ளது? எல்லாம் பழந்தமிழனின் கலை திறன், ஆனால் இன்றைய நிலையோ?

கானா பிரபா said...

கோபிநாத் said...

பகிர்ந்து கொண்ட திருமதி சிவாஜினி அவர்களுக்கும் என்னோட மனமார்ந்த நன்றிகள் ;)//

மிக்க நன்றி தல

கானா பிரபா said...

வருகைக்கு நன்றி தல கே.ஆர்.எஸ்

பிரமிப்பின் உச்சம் இந்தத் தஞ்சைப் பெருங்கோயிலுக்கு ஏதோ எம்மால் இயன்ற சிறு துளி நன்றிக்கடன் இது.


வாங்க ஜோசப்

தஞ்சைப் பெருங்கோயில் காண உங்கள் துணையைக் கண்டிப்பாகக் கேட்கின்றேன் மிக்க நன்றி