Pages

Thursday, November 13, 2008

றேடியோஸ்புதிர் 27 - நம்ம பதிவரின் சொந்தக்கார இசையமைப்பாளர்?


திரையுலகம் என்பது வாய்ப்பைத் தேடிப் போன எல்லோருக்குமே தன் வாசல் கதவைத் திறந்து விடவில்லை. அதே போல் என்னதான் திறமைசாலிக என்றாலும் மேலதிகமாக அதிஷ்ட தேவதையும் கரம் பற்றாவிட்டால் தொலைந்து போகும் மாய லோகம் அது. றேடியோஸ்புதிரில் பிரபலமான பல இசையமைப்பாளர்களது பாடல்கள் குறித்த பதிவுகள் வந்திருக்கின்றன. அவ்வப்போது அத்திப் பூக்களாய் வந்த இசையமைப்பாளர்களது தொகுப்பும் இடம் பெற்றிருக்கின்றது. அந்த வகையில் இன்று நான் தரப்போகும் புதிர் உங்களில் பலருக்கு அறிமுகம் இல்லாத இசையமைப்பாளர்.

தொண்ணூறுகளில் தாயகத்தில் இருந்த போது சக நண்பர் வட்டத்தோடு கேட்டு ரசித்து அனுபவித்த பாடல்களில் இதுவுமொன்று. ஏனோ இப்பாடலில் ஒரு ஈர்ப்பும் இருக்கின்றது. இனிய இசையும் வித்தியமெட்டும் தான் காரணமோ?
இந்தப் பாடலை இங்கே முழுமையாகத் தருகின்றேன். கேள்வி இது தான். இந்தப் பாடலுக்கு இசை வழங்கிய இசையமைப்பாளர் உங்களுக்கு எல்லாம் பரவலாக அறிமுகமான பிரபல பதிவரின் உறவினர். இவர் தனது பதிவொன்றில் இந்த இசையமைப்பாளர் குறித்து ஒரு வரியில் சொல்லியிருக்கின்றார். குறித்த இசையமைப்பாளர் யார் என்பதைக் கண்டுபிடிக்க கஷ்டப்படுவீர்கள் எனவே அந்த பதிவர் யார் என்று சொல்லி விடுங்களேன், கூடவே அவர் குறிப்பட்ட அவரின் உறவினரான இசையமைப்பாளர் பெயரைச் சொன்னால் போனஸ் வாழ்த்துக்கள் ;-)
பாடலுக்குள்ளே இப்பாடலுக்காக இசையமைத்த படத்தின் பெயரும் இருக்கின்றது.
இந்தப் பதிவர் பெயரின் பாதி பிரபல ஹிந்திப் பாடகியின் பெயர் ஆகும். அவர் அகத்தியன் இயக்கிய படமொன்றில் பாடிய பாடகி. இந்தப் பதிவரின் வலைப்பக்கத்தின் பெயர் புரட்சித் தலைவர் நடித்த படமொன்றின் தலைப்பு ;)Chemparuthi chemparuthi - Kana Praba

மேற் சொன்ன புதிருக்கான விடை:

அந்தப் பதிவர்: இளா
அவரின் பெயரில் உள்ள பாடகி: காதல் கவிதை படத்தில் பாடிய பிரபல ஹிந்தி பாடகி இளா அருண்.
அவரின் வலைப்பக்கம்: விவசாயி
அவரின் சொந்தக்கார இசையமைப்பாளர்: இவரின் மாமன் முறையான திலீப் என்ற செந்தில்நாதன்,
மனோ, சுவர்ணலதா குரல்களில் ஒலித்த இந்த அருமையான பாடல் இடம்பெற இருந்த திரைப்படம்: பவளக்கொடி
பின்னர் இந்தப் பாடல் தாட் பூட் தஞ்சாவூர் என்ற திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டது.
இளா தன்னுடைய இந்தப் பதிவிலே தன் உறவுக்கார இசையமைப்பாளர் பற்றி ஒன்பதாவது கேள்விக்கான பதிலாக சொல்லியிருக்கிறார்.

28 comments:

கைப்புள்ள said...

இவர் தன்னுடைய பதிவில் உபயோகிக்கும் பெயரைத் தன் முதற்பெயராகக் கொண்ட ஒரு பிரபல இந்திப் பெண் பாடகி இருக்கிறார். விளம்பரத்துறையில் பிரபலமான ஒருவரின் அக்கா இவர் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த பாடகி பாடிய மிகப் பிரபலமான பாடல் ஒன்றும் இருக்கிறது.

MyFriend said...

me the first. :-)

Anonymous said...

ஹை....

அல்ப்பேஷ் உங்களுக்கும் அனுப்பிட்டாரா ??

:)))

☼ வெயிலான் said...

வாழ்த்துக்கள்!!!
வாழ்த்துக்கள்!!!!
வாழ்த்துக்கள்!!!!!

கானா பிரபா said...

//செந்தழல் ரவி said...
ஹை....

அல்ப்பேஷ் உங்களுக்கும் அனுப்பிட்டாரா ??//

ஆஹா அப்படின்னா இவர் எல்லா இடமும் அனுப்பிட்டாரா, சரி தூக்கிடுறேன் ;)

//வெயிலான் said...
வாழ்த்துக்கள்!!!
வாழ்த்துக்கள்!!!!
வாழ்த்துக்கள்!!!!!//

நன்றி வெயிலான், ஆனா மேலே ரவி சொன்னதைப் பார்த்தா கலக்கமா இருக்கு ;)

G.Ragavan said...

Mr.Young is that blogger.... Farmer is his blog :) correctungala?

கானா பிரபா said...

மைபிரண்ட்

நீங்க தான் முதல், ஆனா பதில் இன்னும் வரலியே

கானா பிரபா said...

கைப்புள்ள

நீங்க தான் விடையோடு வந்த முதல் ஆள் ;)

கானா பிரபா said...

ராகவன்

ஆகா இங்கிலிஷில் சொன்னாலும் சரியாத் தான் இருக்கு ;)

MyFriend said...

//
மைபிரண்ட்

நீங்க தான் முதல், ஆனா பதில் இன்னும் வரலியே //

எல்லார் போல இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமா இருக்கணும்ல. அதான். :-)

KARTHIK said...

அந்தப் பதிவரின் பெயர் இளா
சரியா?

ஆளவந்தான் said...

vivasayee?

கானா பிரபா said...

கார்த்திக்

சரியான கணிப்பு வாழ்த்துக்கள் ;)

ILA (a) இளா said...

இப்போதைக்கு :)

நெலைமைய நெனச்சா :(

கானா பிரபா said...

வாங்க இளா

‍பதில் சொல்லாம போயிட்டீங்களே ;)

கானா பிரபா said...

ஆளவந்தான்

சரியான கணிப்பு ;)

G.Ragavan said...

வீட்டுக்கு வந்துதான் பாட்டைக் கேட்டேன். இந்தப் பாட்டை முந்தியே கேட்டிருக்கேன். கேட்டப்பவே பிடிச்ச பாட்டு. திரும்பவும் கேக்க வெச்சமைக்கு நன்றி. :)

Anonymous said...

தெரியலை , ஆனா பாட்டு கேக்க இனிமையா இருக்கு

ILA (a) இளா said...

பவளக்கொடிக்காக இசையமைப்பட்டு, தாட்பூட் தஞ்சாவூர் என்ற படத்தில் பின்னாடி உபயோகிக்கப்பட்டது.அவர் பேரு செந்தில்நாதன்.

கானா பிரபா said...

இளா

மேலதிக தகவல்களோடு இசையமைப்பாளர் பெயரையும் சொல்லியிருக்கீங்க வாழ்த்துக்கள்,

கானா பிரபா said...

// G.Ragavan said...
வீட்டுக்கு வந்துதான் பாட்டைக் கேட்டேன். இந்தப் பாட்டை முந்தியே கேட்டிருக்கேன்.//

வாங்க ராகவன்

அருமையான இசையமைப்பாளர் கலையுலகில் நிலைக்காமை வருந்தத் தக்கதே.

//சின்ன அம்மிணி said...
தெரியலை , ஆனா பாட்டு கேக்க இனிமையா இருக்கு//

வாங்க சின்ன அம்மணி

உங்க எல்லோருக்கும் தெரிஞ்ச பதிவர் தான் அவர் ;)

MyFriend said...

கடவுள் எனும் முதலாளி..
கண்டெடுத்த தொழிலாளி..
விவசாயீஈஈஈஈஈஈஈஈஈஈ..
விவசாயீஈஈஈஈஈஈஈஈஈஈ..
விவசாயீஈஈஈஈஈஈஈஈஈஈ..
:-)

கானா பிரபா said...

மைபிரண்ட்

பாட்டாவே படிச்சிட்டீங்களா சரி சரி ;)
வாழ்த்துக்கள்

கோபிநாத் said...

உள்ளேன் தல ;))

கானா பிரபா said...

இம்முறை ஆறு பேர் சரியான விடை சொல்லிருக்கிறீர்கள், மற்றவங்க ஓடி ஒளிஞ்சிட்டீங்கப்பா ;)

அந்தப் பதிவர்: இளா
அவரின் பெயரில் உள்ள பாடகி: காதல் கவிதை படத்தில் பாடிய பிரபல ஹிந்தி பாடகி இளா அருண்.
அவரின் வலைப்பக்கம்: விவசாயி
அவரின் சொந்தக்கார இசையமைப்பாளர்: செந்தில்நாதன்
பாடல் இடம்பெற்ற திரைப்படம்: பவளக்கொடி

அரவிந்த் said...

Really a tough one.. Since i'm new to this blogs, it was very difficult.. I've heard this often.. without knowing MD & movie name.. Thanks for the information.. Really nice song..

கானா பிரபா said...

வாங்க அரவிந்த்

இந்த அருமையான பாடலைப் போட வேளை பார்த்திருந்தேன், அதனால் தான் புதிரோடு வந்தது, உங்களைப் போன்ற புது வலைப்பதிவர்களுக்கு உண்மையில் சிக்கலான கேள்வி தான்.
மிக்க நன்றி உங்கள் வருகைக்கு.

சந்தனமுல்லை said...

நான் சாட்டிலேயே சொல்லிட்டேனே! நன்றி பகிர்ந்தமைக்கு!