Pages

Monday, July 21, 2008

"குணா" பின்னணி இசைத்தொகுப்பு

றேடியோஸ்புதிர் 13, மிகவும் சுலபமாக அமைந்து விட்டது. பலர் குணா என்ற சரியான விடையோடு வந்திருந்தீர்கள். இந்தப் பதிவு குணா திரைப்படத்தின் பின்னணி இசைத் தொகுப்பாக அமைகின்றது. கமல்ஹாசன், புதுமுகம் ரோஷிணி, ரேகா, வரலஷ்மி ஆகியோர் நடித்த இந்தத் திரைப்படம் சாப்ஜானின் கதை, திரைக்கதையிலும் சந்தான பாரதி இயக்கத்திலும் வெளிவந்திருந்தது.

குணா படத்துக்கான லொகேஷன் தேடியபோது கமலின் கண்ணிற்பட்டது கொடைக்கானலில் இருந்த குகையடிவாரம், அது குணா படத்தின் முக்கியமான காட்சிகளுக்குப் பயன்பட்டுப் பின்னாளில் குணா கேவ்ஸ் என்ற புகழோடு இப்போது சுற்றுலாப்பயணிகளின் கண் கவரும் இடமாக இருக்கின்றது.

இந்தப் படத்தைப் பற்றி அணு அணுவாக ரசித்து எழுதவேண்டும் என்பது என் வெகு நாள் ஆசை. அதற்கு முன் இந்தப் படத்தின் பின்னணி இசைத் தொகுப்பைப் கொடுத்து விடுகின்றேன். அபிராமியின் மேல் தீராத பக்தி கொண்டவர் அபிராமிப் பட்டர். இந்த அபிராமி மீது தீராக் காதல் கொள்கின்றான் குணசேகரன் என்னும் குணா. இப்படத்தின் பின்னணி இசையில் தெய்வீகம் கலந்ததொரு இசையைக் கொடுத்துச் சிறப்பித்திருக்கிறார் இசைஞானி இளையராஜா.படத்தின் முகப்பு எழுத்தோட்ட இசைமுதன் முதலில் ஆலயத்தில் அபிராமியைக் காணல்அபிராமியை கவர வரும் வில்லனிடம் இருந்து தப்பித்தல்மலையுச்சி சமாதிப் புகலிடத்தைத் தேடிப் போதல்அபிராமி, குணாவை காரால் இடிக்கும் காட்சிஅவளை அபிராமியாக நினைத்து குணா உருகும் காட்சிஇரவின் ஏகாந்தம்குணாவிடம் இருந்து மீண்டும் அபிராமி தப்பிக்கும் காட்சிஅபிராமியின் மனதில் தான் இருக்கிறேன் என்ற காதலோடு மெய்யுருகும் குணா. கலக்கல் இசைகாட்டுக்குள் காணும் நீரோடைஎழுதி வைக்கப்பட்ட விதி


அபிராமி குணா மேல் கொள்ளும் காதல்
அபிராமியை குகைக்குள் வைத்து மணம் முடித்தல்வைத்தியரைத் தேடிப் போகும் குணாவில்லனால் தாக்கப்பட்ட குணா, அபிராமியிடம் ஆறுதல் தேடுதல்


அபிராமியும், குணாவும் இந்த உலகத்தை விட்டு நீங்கல்போனசாக குணா குணா பாடல் ஒலிப்பதிவு வேளையில் நடந்த உரையாடலைத் தந்து உதவிய பதிவர் ஸ்ரீ , பரிந்துரைத்த தல கோபி நன்றிகள் அவர்களுக்கு37 comments:

ஆயில்யன் said...

//இந்தப் படத்தைப் பற்றி அணு அணுவாக ரசித்து எழுதவேண்டும் என்பது என் வெகு நாள் ஆசை.///

புரியிது!

புரியிது!

கிட்டதட்ட 15 சிச்சுவேஷன்ல இருந்த எடுத்த மியூசிக்ஸ் அனேகமா இதுவும் கூட அணு அணுவாக ரசிச்ச விஷயம் தான்!

நீங்க எந்த அபிராமி நினைச்சு சுத்துனீங்களோ....????

:))))))))))))))

கோபிநாத் said...

கலைஞானியும் இசைஞானியும் சேர்ந்து செய்யத படங்களில் மிக முக்கிய படம். ஒவ்வொரு காட்சிக்கும் தகுந்தது போல் இசையில் இந்த அளவுக்கு உணர்வு புர்வமாக வித்தியாசத்தை கண்பிக்க நம்ம இசை பிதா நம்ம இசைஞானியை தவிர எவராலும் இயலாது.


\\அபிராமியின் மனதில் தான் இருக்கிறேன் என்ற காதலோடு மெய்யுருகும் குணா. கலக்கல் இசை\\

இந்த பின்னனி இசையை கேளுங்கள். நன்றாக கண்களை மூடி கேட்டு பாருங்கள். படத்தில் கலைஞானி இரு கைகளை மேலே உயர்த்தி கண்களை முடியிருப்பார். கேமரா அவரை ஒரு சுற்று சுற்றிவரும். அதே உணர்வை நீங்களும் அனுபவிப்பிர்கள். ஒரு நிமிடம் நீங்களும் உங்களை மறந்து ஒரு சுற்று சுற்றவைக்கும் இந்த இசை.

\\காட்டுக்குள் காணும் நீரோடை
\\

நாயகி குளிப்பார்த்தற்காக ஏற்படுத்த படும் இடம் அதில் அவளுக்கு ஏற்படும் சுகந்திர உணர்வை தன்னோட இசையின் மூலமாக நமக்கு உணர்த்தியிருப்பார் நம்மோட இசைஞானி.

\\அபிராமியை குகைக்குள் வைத்து மணம் முடித்தல் \\

இருள் சுழ்ந்த இடம், காதல் கல்யாணத்துக்கு தயராகும் வேலை. இது தான் முறை இப்படி தான் செய்ய வேண்டும் என்று சொல்வதற்க்கு யாரும் இல்லை. என்ன செய்வர்கள்? செய்தார்கள் அவர்களே செய்தார்கள் கட்டுவதர்க்கு கரங்கள் இருக்கு நாயகனிடம் அதை காதலுடன் ஏற்று சுமக்க கழுத்து இருக்கிறது நாயகியிடம் சாட்சிக்கு அவர்களோட காதல் வேறு என்ன வேண்டும். இப்படிபட்ட காட்சியில் ஒவ்வொரு இடத்திலும் ராஜா இசையால் அவர்களுக்கு வாழ்த்து சொல்லிக் கொண்டுயிருப்பார்.

\\அபிராமியும், குணாவும் இந்த உலகத்தை விட்டு நீங்கல்\\


இதில் எதை சொல்வது இசையை பற்றியா! இல்ல அந்த காட்சியில் கலைஞானியின் நடிப்பை பற்றியா! அதில் அவர் பேசும் வசனத்தை பற்றியா......அப்படியே வரி அணைச்சிக்க சொல்லுது மனசு. என்ன ஒரு நடிப்பு இல்ல..இல்ல..இல்ல....ன்னு ரத்தம் ஒழுக அழுகையை அடக்கி அந்த வசனத்தை அவர் போதும் பார்க்கனுமே அப்படியே உடம்பெல்லாம் அப்படியே அதிரும். அந்த காட்சியில் எந்த இடத்தில் தன்னோட இசை பேச வேண்டும் எவ்வளவு வேண்டும் என்று அளந்து அளந்து அந்த காட்சிக்கு உயிர் கொடுத்திருப்பாரு பாருங்க நம்ம இசைஞானி இளையாராஜா....அட அட...இதை பற்றியே ஒரு தனி பதிவு போடலாம்.


இது எல்லாம் விதி....எழுதி வைக்கப்பட்ட விதி.....இதை எல்லாம் அவர்கள் செய்ய வேண்டும் அதை தல கானா பதிவாக போட வேண்டும் அதில் நான் இப்படி பின்னூட்டம் போட வேண்டும் என்று எழுதி வைக்கப்பட்ட விதி.

நன்றி தலைவா ;))

ஆயில்யன் said...

//இது எல்லாம் விதி....எழுதி வைக்கப்பட்ட விதி.....இதை எல்லாம் அவர்கள் செய்ய வேண்டும் அதை தல கானா பதிவாக போட வேண்டும் அதில் நான் இப்படி பின்னூட்டம் போட வேண்டும் என்று எழுதி வைக்கப்பட்ட விதி. //


நீங்க ரொம்ப ஆழ்ந்து அனுபவிச்சு எழுதியிருக்கீங்க,வரிகளில் வலம் வரும் உவமைகள் அசத்தல் கோபி அண்ணே!!!

நல்லா இருக்கு :)))

கானா பிரபா said...

ஆயில்யன்

நான் சொன்னதை விட அணுவைத் துளைத்து நம்ம தல கோபி பண்ணியிருக்கார் பாருங்க அதுதான் இந்தப் படத்தின் வலிமை.

கமல் கமல் தான், ராஜா ராஜா தான்

ராமி அபிராமி ;-)

thamizhparavai said...

பிரபா அண்ணாச்சி... கை குடுங்க முதல்ல .. பின்னிட்டீங்க...
அருமை..ஆழ்ந்து ரசித்துக்கொண்டிருக்கிறேன்... கோபிக்கும்,ஸ்ரீ க்கும் சிறப்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்....
ராஜா ராஜாதான் இதை எத்தனை முறை சொன்னாலும் கையும் வலிக்காது,வாயும் வலிக்காது..கேட்கையில் தேனூறும் காது...

thamizhparavai said...

எனக்கு இப்போவே மறுபடியும் குணா படம் பார்க்கும் ஆசையைத் தூண்டி விட்டு விட்டீர்கள்... சிறுவயதில் பார்த்தது...படத்தின் முகப்பு எழுத்தோட்ட இசையே மிக‌ அருமை... க‌தை ந‌ல்ல‌ க‌ளம்.. ராஜா புகுந்து விளையாடி இருக்கிறார்...

thamizhparavai said...

// நம்ம இசைஞானி இளையாராஜா....அட அட...இதை பற்றியே ஒரு தனி பதிவு போடலாம்.//
தல கோபிகிட்ட இருந்து அப்பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...

நிஜமா நல்லவன் said...

இசையில் மீண்டும் உயிர்ப்பித்திருக்கிறேன்!

பினாத்தல் சுரேஷ் said...

உங்கள் அடுத்த பதிவு இதுதானே?

நாயகனும் வில்லனும் தெருத்தெருவாகச் சண்டை போட்டுக்கொண்டே செல்கின்றார்கள். வில்லனின் தாய் கோவென்று அழுதலைக்கண்டு நாயகன் மனமுடையும் காட்சி உச்சகட்டம்.

(ஒரு மாறுதலுக்கு நீங்க இதைக் கண்டுபிடிக்கணும், இந்த மாதிரி ஒரு பதிவு அந்தப்படத்துக்கும் போடணும்ன்றது என் விண்ணப்பம்)

இந்தப்பதிவைப்பற்றி என்ன சொல்ல..

//இந்தப் படத்தைப் பற்றி அணு அணுவாக ரசித்து எழுதவேண்டும் என்பது என் வெகு நாள் ஆசை// ஒத்துப்போகிறேன்..இன்னும் சில படங்களும் என் லிஸ்ட்டில் இருக்கின்றன.

படத்தை தோல்வி காணச் செய்தவர்களும் இன்று பார்த்தால் கொஞ்சம் புரியும் படம். இதையா தோல்வி அடைய வைத்தோம் என்று சற்றேனும் வெட்கப்படவைக்கும். தேவடியா பையா என்னும் சாதாரணத் திட்டுச் சொல் வாழ்க்கையாகவே பரிமளித்தால்? என்பதை விஸ்தாரமாக ஆராய்ந்த படம்..

மொட்டையைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. டப்பா படங்களுக்கே அற்புதமான பாட்டுக்களும் அதைவிட அற்புதமான பின்னணி இசையும் போடும் ஆள். அந்த ஆள் கையில நல்ல கதை வேற கிடைச்சா கேக்கணுமா?

இந்தப்பதிவுக்கு நிஜமாகவே ஒரு பெரிய நன்றி. படத்தை மீண்டும் பார்த்தமாதிரி இருந்தது.

Anonymous said...

Thiru Kana prabha avargalukku,

neengal kunavin pinnani isaiyai silaagiththu ezhuthi irukkireergal. Arumaiyaaga ullathu. Ithe pol ilaiyaraaja isaiyil vantha oru padam "Shiva" Ram gopal varma movie. adhilum pinnani isai arumaiyaaga irukkum. Mudinthaal adhai parri oru pathivu podungalen.

M.Rishan Shareef said...

ஆஹா சூப்பர்..

ஆனா வசனகர்த்தா பாலகுமாரன் பத்தி ஒரு வார்த்தை கூடப் போடலியே பிரபா :(

அபிராமி..அபிராமி..

கானா பிரபா said...

//கோபிநாத் said...

அதை தல கானா பதிவாக போட வேண்டும் அதில் நான் இப்படி பின்னூட்டம் போட வேண்டும் என்று எழுதி வைக்கப்பட்ட விதி.//

தல

உண்மையிலேயே இந்தப் பின்னணி இசைக்கு மெருகூட்டுவது உங்கள் அழகான விளக்கம், எவ்வளவு சிறப்பாகச் சொல்லியிருக்கின்றீர்கள். இந்தத் தாவு தீரும் பிரித்தெடுத்தல் வேலையின் களைப்பை உங்கள் பின்னூட்டம் போக்கி விட்டது. உண்மையிலேயே அருமை. கடைசிப் பகுதியின் காட்சியையும் ஒலியையும் நான் எப்போது கேட்டாலும் கட்டுக்கடங்காத கண்ணீர் வரும், அது தான் கலைஞானியினதும், இசைஞானியினதும் சிறப்பு

கானா பிரபா said...

//தமிழ்ப்பறவை said...
எனக்கு இப்போவே மறுபடியும் குணா படம் பார்க்கும் ஆசையைத் தூண்டி விட்டு விட்டீர்கள்... //

வாங்க நண்பா, எனக்கு முதலில் பார்க்கும் போதே பிடித்த படம், எவ்வளவு தரம் பார்த்தாலும் அனுபவிக்கும் படம் இது.

//நிஜமா நல்லவன் said...
இசையில் மீண்டும் உயிர்ப்பித்திருக்கிறேன்!//

நன்றி நண்பா

கானா பிரபா said...

//பினாத்தல் சுரேஷ் said...
உங்கள் அடுத்த பதிவு இதுதானே?

நாயகனும் வில்லனும் தெருத்தெருவாகச் சண்டை போட்டுக்கொண்டே செல்கின்றார்கள். வில்லனின் தாய் கோவென்று அழுதலைக்கண்டு நாயகன் மனமுடையும் காட்சி உச்சகட்டம். //

வாங்க சுரேஷ்

ஆகா, நமக்கு ஆப்பா ;-), நிச்சயம் கண்டுபிடித்துப் பதிவாகத் தருவேன், ஆனால் அடுத்த பதிவாக இருக்காது, காரணம் நிறையப் பேர் இப்பவே தயாரா இருப்பாங்க, கொஞ்ச இடைவெளி விட்டு ஜனங்க இதை மறந்ததும் மெல்ல எடுத்து விடுகின்றேன்.

//படத்தை தோல்வி காணச் செய்தவர்களும் இன்று பார்த்தால் கொஞ்சம் புரியும் படம். இதையா தோல்வி அடைய வைத்தோம் என்று சற்றேனும் வெட்கப்படவைக்கும். //

உண்மையோ உண்மை, மிக்க நன்றி சுரேஷ்

கானா பிரபா said...

// மது... said...
Ithe pol ilaiyaraaja isaiyil vantha oru padam "Shiva" Ram gopal varma movie.//

வருகைக்கு நன்றி மது, என் பின்னணி இசைத் தொகுப்பில் சிவா நிச்சயம் உண்டு, நினைவுபடுத்தியமைக்கு நன்றி

//எம்.ரிஷான் ஷெரீப் said...
ஆஹா சூப்பர்..

ஆனா வசனகர்த்தா பாலகுமாரன் பத்தி ஒரு வார்த்தை கூடப் போடலியே பிரபா :(//

ரிஷான்

இப்பவே எல்லாத்தையும் வெளியிடக் கூடாது, குணாவை வச்சு ஒரு வாழ்நாள் பதிவு எழுதவேணும், அப்போது பாலகுமாரன் விலக்கமுடியாதவர்.

தருமி said...

as
//சாப்ஜானின் கதை, திரைக்கதையிலும் ...//
அப்படியா? பாலகுமாரன் இல்லியா?

//அணு அணுவாக ரசித்து எழுதவேண்டும் என்பது என் வெகு நாள் ஆசை ...//

அப்படி ஒரு ஆசையில் படம் பார்த்து ஒரு கட்டுரை எழுதி / கிறுக்கி ஆ.வி.க்கு அனுப்பினேன். இப்போது எழுதுங்கள் .. i will come to play second fiddle :)

கானா பிரபா said...

வாங்க தருமி ஐயா

சாப்ஜானின் கதை திரைக்கதை (அவர் வேற்று மொழியில் ஏற்கனவே பண்ணிய கதை என்று எங்கோ படித்தேன், நினைவில்லை).

வசனம் மட்டும் நம்ம பாலகுமாரன், சூப்பர் ஸ்டாருக்கு மட்டுமல்ல சூப்பர் ஆக்டருக்கும் எழுதிட்டார் இவர்.

சில முயற்சிகளைச் சிறப்பாகச் செய்யவேண்டும் என்ற பயத்திலேயே தள்ளிப் போடுகின்றேன் அதில் ஒன்று குணா படம், மற்றது தன்மாத்ரா

Anonymous said...

உங்களின் பதிவும், கோபியின் பின்னூட்டமும் அருமை.

// இப்பவே எல்லாத்தையும் வெளியிடக் கூடாது, குணாவை வச்சு ஒரு வாழ்நாள் பதிவு எழுதவேணும், அப்போது பாலகுமாரன் விலக்கமுடியாதவர்.//

ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் பிரபு!

சென்ஷி said...

உண்மையில் நினைத்துப்பார்க்க முடியாத நிகழ்வின் முதல் அத்தியாயத்தை எப்படி ஆரம்பித்தீர்கள் என்பதில்தான் எனது முழு கவனமும் செல்கிறது. இந்த பெருமைக்கு அழகாக மாலை தொடுத்த கோபியின் பின்னூட்டமும் அருமை. அதிக உணர்ச்சிவசப்பட்டு அழகாக எழுதியிருக்கிறார். ராஜாவின் புகழில் இந்த படம் ஒரு வைரக்கல்.

சந்தனமுல்லை said...

வாவ் என்னமா ரசிச்சிருக்கீங்க!!
எனக்கு படத்தை இன்னொரு தடவை
பார்க்கனும் போல இருக்கு!!
அந்த கடைசி உரையாடல் செம!!

கானா பிரபா said...

//வெயிலான் said...
உங்களின் பதிவும், கோபியின் பின்னூட்டமும் அருமை.//

மிக்க நன்றி நண்பா

கானா பிரபா said...

//சென்ஷி said...
உண்மையில் நினைத்துப்பார்க்க முடியாத நிகழ்வின் முதல் அத்தியாயத்தை எப்படி ஆரம்பித்தீர்கள் என்பதில்தான் எனது முழு கவனமும் செல்கிறது//

வாங்க சென்ஷி

உண்மையில் பாடல்களுக்கு கொடுக்கும் முக்கியத்தில் இம்மியளவும் நாம் வெரைட்டியாக இருக்கும் பின்னணி இசையில் அதிகம் கவனமெடுப்பதில்லை, இப்படியான தொகுப்பு உதவும் என்று நினைக்கிறேன். கோபியின் விளக்கம் உண்மையிலேயே சிறப்போ சிறப்பு.

புதிதாக மேலும் சில இசைத்துண்டங்களை இணைத்திருக்கின்றேன்.

கானா பிரபா said...

//சந்தனமுல்லை said...
வாவ் என்னமா ரசிச்சிருக்கீங்க!!
எனக்கு படத்தை இன்னொரு தடவை
பார்க்கனும் போல இருக்கு!!
அந்த கடைசி உரையாடல் செம!!//


வணக்கம் சந்தனமுல்லை

பாலகுமாரனின் அளவான சிறப்பான வசனப்பங்களிப்பு இப்படத்தின் இன்னொரு பலம்.

சிறில் அலெக்ஸ் said...

சூப்பர் தொகுப்பு. நன்றி பொறுமையாய் அப்புறமா கேக்குறேன்.

Sundar Padmanaban said...

அருமையான பதிவு கானாபிரபா. மிகவும் நன்றி. குணா மறக்கமுடியாத படம்.

நீங்கள் சேர்த்திருக்கும் ஒலிக்கோப்புகளின் சுட்டிகளைத் தரமுடியுமா? கமல் ரசிகர்கள் நடத்தும் ஓர்க்குட் குழுமத்தில் அவர்களிடம் உங்கள் பதிவையும் ஒலிக்கோப்புகளின் சுட்டிகளையும் பகிர்ந்துகொள்ள ஆசை. முடிந்தால் pepsundar@yahoo.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.

நன்றி.

ILA (a) இளா said...

நல்ல தொகுப்புங்க..

ILA (a) இளா said...

படத்தின் ஒலிநாடா வந்த சமயம், தளபதியும் வந்தது. அது மலை மாதிரி இருக்க இந்தப் படம் மடு மாதிரி ஆகியிருந்ததுதான் உண்மை. கமலின் பரீச்சாட்த முயற்சியில் தோல்வியடைந்த படம்.

ஹேமா said...

பிரபா,அருமை அருமை...உங்கள் பதிவு பார்த்துவிட்டு உடனேயே குணா பார்க்க வேணும் போல இருந்து பார்த்தும் விட்டேன்.எப்போதும் உங்கள் பதிவுகளுக்குப் பாராட்டுப் போட வேண்டியிருக்கே(எத்தனை தரம்தான் சொல்றது)என்றுதான் போடாமலிருந்தேன்.முடியவில்லை.உங்களுக்கு ஜே ..இல்ல,கமலுக்கு மட்டும்தான் ஜேஏஏஏஏ....

கானா பிரபா said...

//சிறில் அலெக்ஸ் said...
சூப்பர் தொகுப்பு. நன்றி பொறுமையாய் அப்புறமா கேக்குறேன்.//

வருகைக்கு நன்றி சிறில் அலெக்ஸ்


//வற்றாயிருப்பு சுந்தர் said...
அருமையான பதிவு கானாபிரபா. மிகவும் நன்றி. குணா மறக்கமுடியாத படம்.

நீங்கள் சேர்த்திருக்கும் ஒலிக்கோப்புகளின் சுட்டிகளைத் தரமுடியுமா?//

வணக்கம் சுந்தர்

15 வரையிலான கோப்புக்கள் இருப்பதனால் ஒவ்வொன்றாக அனுப்புவதில் சிரமம் இருக்கின்றது. என்னுடைய தளமுகவரியையே ஆர்குட் குழுமத்தில் கொடுத்து விடுங்களேன்.

கானா பிரபா said...

// ILA said...
படத்தின் ஒலிநாடா வந்த சமயம், தளபதியும் வந்தது. அது மலை மாதிரி இருக்க இந்தப் படம் மடு மாதிரி ஆகியிருந்ததுதான் உண்மை. கமலின் பரீச்சாட்த முயற்சியில் தோல்வியடைந்த படம்.//

இரண்டிலும் ராஜா தானே இன்னொரு ஹீரோ. கமல் வீம்பை மூட்டை கட்டி வச்சு, இன்னொரு தினம் ரிலீஸ் பண்ணியிருக்கலாம்.


//ஹேமா said...
பிரபா,அருமை அருமை...உங்கள் பதிவு பார்த்துவிட்டு உடனேயே குணா பார்க்க வேணும் போல இருந்து பார்த்தும் விட்டேன்.//

வாங்கோ ஹேமா

கமல், ராஜாவைப் பாராட்டினா எனக்கும் வந்து சேரும், நன்றி நன்றி நன்றி ;-)

G.Ragavan said...

குணா திரைப்படம் மிகவும் அளவுக்கதிகமாகச் சிந்தித்ததன் விளைவாகப் பிறந்த படம். அத்தனை சிந்தனைகளுக்கும் தேவையான இசையைக் கொண்டு வருவதற்கு படம் வந்த பொழுது இருந்த ஒரே இசையமைப்பாளர் இளையராஜா.

நல்ல இசைத்தொகுப்புகளைக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் கமல், சந்தானபாரதி, இளையராஜா ஆகியோரின் கலந்துரையாடலையும் கொடுத்தமைக்கு நன்றி. ரூமுக்குள் ஒளித்து வைத்தேன் என்று கங்கை அமரன் சொல்வது பொய்தான் என்றாலும்..உரையாடலை ரசிக்க முடிந்தது.

கானா பிரபா said...

வாங்க ராகவன்

நீங்க சொன்னது போல் ஒலிவாங்கியை ஒளித்து வைத்தது என்று கங்கை அமரன் சொல்வது சினிமாத்தனமானது ;-)

நான் தாயகத்தில் இருந்த போது ஒவ்வொரு பாட்டுக்கும் இடையில் கூட இந்த உரையாடல் தொடரும் காசெட்டை வச்சிருந்தேன். தொலைந்து போய்விட்டது :(

thamizhparavai said...

//நான் தாயகத்தில் இருந்த போது ஒவ்வொரு பாட்டுக்கும் இடையில் கூட இந்த உரையாடல் தொடரும் காசெட்டை வச்சிருந்தேன். தொலைந்து போய்விட்டது :( //
:-/ :-(

Anonymous said...

guna is copy


original english movie is

sweet hostage(s)?


suthan

SurveySan said...

பொறுமையாகப் போடப்பட்ட அருமையான பதிவு தலைவரேன்.
கலக்கி புட்டீங்க.

ஹ்ம். இப்படியெல்லாம் வாசிச்ச நம்ம ராசா காணாமப் போயிட்டாரேன்னு ஏங்கிப்போய் ஒரு பதிவப் போட்டுட்டேன் ;)

கானா பிரபா said...

வாங்க தமிழ்பறவை

குணா போல நிறைய பாடல் பொக்கிஷங்கள் தொலைந்து விட்டது :(

//original english movie is

sweet hostage(s)?


suthan//

தகவலுக்கு நன்றி சுதன், தமிழில் அதை அழகாக இப்படி குணாவாக கொடுக்க திறமையும் வேணுமே.

கானா பிரபா said...

// SurveySan said...

பொறுமையாகப் போடப்பட்ட அருமையான பதிவு தலைவரேன்.
கலக்கி புட்டீங்க.//

மிக்க நன்றி சர்வேசரே, இன்னொரு பதிவும் இதை வச்சே போடணும்.