Pages

Friday, April 24, 2009

சிறப்பு நேயர் "பாலசந்தர்"


றேடியோஸ்பதியில் இதுநாள் வரை இருந்த வார்ப்புரு மாற்றம் கண்டிருக்கின்றது. இந்த வார்ப்புருவை வாரி வழங்கிய பெருமை நண்பர் பாலசந்தரைச் சேரும். வலையுலகில் திடீரெனப் பூத்த பாலசந்தரின் நட்போடு அவரின் வலைப்பதிவான Design world ஐப் பார்த்துப் பிரமித்துப் போனேன். மிகவும் சிறப்பான வகையில் பல்வேறுவகைப்பட்ட வலைப்பதிவு வார்ப்புருக்களைத் தானே ஆக்கி வழங்கிக் கொண்டிருக்கின்றார் இவர். றேடியோஸ்பதிக்காக சிறப்பானதொரு வார்ப்புருவை பதிய எண்ணியிருந்த எனக்கு பாலசந்தரின் உதவியால கை கூடியிருக்கின்றது. என் எண்ணத்தில் தோன்றியதை அவர் மெய்ப்பித்த அவருக்கு மீண்டும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு அவரின் பிரியமுள்ள ஐந்து பாடல்களை நீண்ட இடைவெளிக்குப் பின் சிறப்பு நேயர் பகுதியில் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகின்றேன்.

பாலசந்தரின் முதலாவது தெரிவு, இருபத்தெட்டு வருஷங்களுக்கு முன் வந்து ஆட்கொண்ட கல்லுக்குள் ஈரம் திரைப்பாடலான 'சிறுபொன்மணி அசையும்", பாடலை இசைத்துப் பாடுகின்றார் இசைஞானி இளையராஜா, ஜோடிக்குரலாக எஸ்.ஜானகி



இவரின் அடுத்த தெரிவு சற்று வித்தியாசமாக அதிகம் கேட்கப்படாத ஆனால் இனிமையான பாடல்களில் ஒன்றான "ஆத்தி வாடையிலே" என்ற பாடல் "சிந்துநதி பூ" படத்திற்காக செளந்தர்யன் இசையில் பாடுகின்றார் கே.ஜே.ஜேசுதாஸ்



"கம்பன் ஏமாந்தான்" என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் "நிழல் நிஜமாகிறது" பாடலை யாருக்குத் தான் பிடிக்காது. மெல்லிசை மன்னர் இசையில் மலர்கின்றது



அடுத்து ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கார்த்திக் பாடும் "அவ என்னைத் தேடி வந்த அஞ்சல" பாடல் புத்தம் புது மெட்டாக "வாரணம் ஆயிரம்" திரையில் இருந்து பாலசந்தர் ரசனையில் மலர்கின்றது.



நிறைவாக ரங் தே பாசந்தி" என்ற இசைப்புயலின் கைவண்ணத்தில் "Luka Chuppi" என்ற பாடல் லதா மங்கேஷ்கர், ஏ.ஆர்.ரஹ்மான் குரல்களில் இனிதாய் ஒலிக்கின்றது.