புதியவன் திரைப்படத்தின் கதைக்களம் இயக்குநரை மையப்படுத்தியதால், பிரபல படத் தொகுப்பாளர் என்.ஆர்.கிட்டு மற்றும் கங்கை அமரன் மற்றும் வைரமுத்து ஆகியோர் காட்சிகளில் தோன்றினார்கள்.
ஒரு இசையமைப்பாளராக கங்கை அமரன் குறித்த சூழலுக்கான பாடலை மெட்டுக் கட்டவும், வைரமுத்து பாடல் வரிகளை எழுதுவதும், பாடுவதுமாக அந்தக் காட்சி அமையும்.
https://www.youtube.com/watch?v=w0ekofjDnBI
இந்த மெட்டை அப்படியே தூக்கிக் கொண்டு போய் அடுத்த ஆண்டு ஏவிஎம் தயாரிப்பில் வெளிவந்த “நாம் இருவர்” படத்தில் இசையமைப்பாளர் கங்கை அமரன் பயன்படுத்திக் கொண்டார்.
அந்தப் பாடல் தான்
“திருவிழா திருவிழா இளமையின் தலைமையில் ஒரு விழா”
https://youtu.be/sHS3di-NMO0?si=8GGfaq38SpecnI6x
கவிஞர் வாலியின் வரிகளில் ஜெயச்சந்திரன், B.S.சசிரேகா பாடும் இந்தப் பாட்டு வெளிவந்த காலத்தில் ரெக்கார்டிங் சென்டர்களின் ஹிட் பாடல்களில் ஒன்று.
இப்பாடலின் முழுமையான வாத்திய இசையும் உண்டு.
https://youtu.be/eMtFd595Sxc?si=VpRFmoY3vZP9Mspa
பாடல்கள் பதிந்தது போக மீதமுள்ள பகுதியில் ரெக்கார்டிங் சென்டர் அண்ணன்மார் இந்த வாத்திய இசையை இணைத்து விடுவார்கள்.
அதுவொரு காலம் ❤️
கானா பிரபா
0 comments:
Post a Comment