இன்று பின்னணிப் பாடகி, சின்னக்குயில் சித்ராவின் 61 வது பிறந்த தினம். சித்ராவின் குரல் நம் காலத்துக் காதலியின் ஓசையாய், எண்ணற்ற பாடல்களால் நெருக்கமாய் இருப்பது.
தமிழ்த் திரையிசையில் மிக நீட்சியான வரலாற்றைக் கொண்ட பாடகிகளில் சித்ராவுக்குப் பின் யாரும் அடையாளப்படவில்லை. இனியும் அது சாத்தியப்படாது.
பாட்டுப் போட்டிகளைப் பாருங்கள். புதிய பாடகர்களைத் தட்டிக் கொடுப்பது மட்டுமன்றி, நுணுக்கமான சங்கதிகளைக் காட்டி அவற்றில் கவனமெடுக்க வேண்டும் என்ற ஒரு குருவின் ஆத்மார்த்த அக்கறை சித்ராவின் தனித்துவம். எஸ்பிபி அருகே அமர்ந்து இவ்விதம் அவர் கொடுக்கும் கண்டிப்பைப் பார்த்து எஸ்பிபியே கலாட்டா பண்ணியதை அறிவீர்கள். கானாபிரபா
காதலிக்கும் பருவத்தின் ஆரம்ப நாட்களைப் போலத் தொடர்ந்து வரும் காலங்கள் இருக்காது போல ஒரு சில பாடகர்களின் ஆரம்பகாலத்துப் பாடல்களைக் கேட்கும் சுகமே தனிதான்.
சின்னக்குயில் சித்ரா தமிழில் மட்டும் 70 இசையமைப்பாளர்களுக்குப் பாடிய தொகுப்பை அவரின் பிறந்த நாள் சிறப்புத் தொகுப்பாக என் 3 மணி நேர உழைப்பில் வழங்குவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இப்படியொரு சாதனை அவருக்கு முன்னர் பலர் நிகழ்த்தியிருக்கலாம் ஆனால் சித்ரா அதன் நீட்சியாக நிறைவு பெறுகிறார்.
1. இளையராஜா – இந்த மான் உந்தன் சொந்த மான் – கரகாட்டக்காரன்
2. எம்.எஸ்.விஸ்வநாதன் – கஸ்தூரி மான்குட்டியாம் – ராஜ நடை
3. கே.வி.மகாதேவன் - அஷ்ட திக்கிலும் - பதில் சொல்வாள் பத்திரகாளி
4. கங்கை அமரன் – மழலையின் மொழியினில் – பிள்ளைக்காக
5. எஸ்.பி.பாலசுப்ரமணியம் - இதோ இதோ என் பல்லவி – சிகரம்
6. மரகதமணி (கீரவாணி) –– ய ய யா யாதவா உன்னை - தேவராகம்
7. சந்திரபோஸ் – மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு – அண்ணா நகர் முதல் தெரு
8. தேவா – தங்கமகன் இன்று – பாட்ஷா
9. ஏ.ஆர்.ரஹ்மான் – அஞ்சலி அஞ்சலி – டூயட்
10. வித்யாசாகர் – அன்பே அன்பே – உயிரோடு உயிராக
11. எஸ்.ஏ.ராஜ்குமார் – தொடு தொடு எனவே – துள்ளாத மனமும் துள்ளும்
12. பரத்வாஜ் – உன்னோடு வாழாத வாழ்வு – அமர்க்களம்
13. வி.எஸ்.நரசிம்மன் – அழகிய கல்யாணப் பூமாலைதான் – சின்னமணிக்குயிலே
14. சங்கீதராஜன் – தேதி சொல்லட்டுமா - பூவுக்குள் பூகம்பம்
15. மனோஜ்பட்னாகர் – கண்களா மின்னலா – என்றென்றும் காதல்
16. சிற்பி – காதல் காதல் காதல் – பூச்சூடவா
17. செளந்தர்யன் – கண்கள் ஒன்றாக – சேரன் பாண்டியன்
18. லஷ்மிகாந்த் பியாரிலால் – அழகிய நிலவிது – மங்கை ஒரு கங்கை
19. ஆர்.டி.பர்மன் – நதியா நதியா – பூமழை பொழியுது
20. சங்கர் – கணேஷ் – ஒரு காதல் தேவதை – இதயத் தாமரை
21. டி.ராஜேந்தர் – சொல்லாமத்தானே – ஒரு தாயின் சபதம்
22. தேவேந்திரன் – கண்ணுக்குள் நூறு நிலவா – வேதம் புதிது
23. அம்சலேகா – நந்தவனப் பூக்கள் – கேப்டன் மகள்
24. கே.பாக்யராஜ் - சலசலவென ஓடும் – பொண்ணு பார்க்கப் போறேன்
25. கார்த்திக் ராஜா – பாண்டியனின் ராஜ்ஜியத்தில் – பாண்டியன்
26. ஆகோஷ் – முந்தானை சேலை – அரிச்சந்திரா
27. பாலபாரதி – நீ பேசும் பூவா – கோல்மால்
28. பரணி – ஏ தன்னானே தாமரைப்பூ – பெரியண்ணா
29. யுவன் ஷங்கர் ராஜா – யாரோ யாருக்குள் – சென்னை 28
30. கண்ணன் - ரோஜா பூ ஒன்று – இரண்டாவது படம்
31. பிரேம்ஜி அமரன் – ஹே கொடி மாங்கனி – பார்ட்டி
32. ஹாரிஸ் ஜெயராஜ் – இதுதானா – சாமி
33. ஜி.வி.பிரகாஷ்குமார் – உயிரிலே – வெள்ளித்திரை
34. ஜேம்ஸ் வசந்தன் – நான் போகிறேன் – நாணயம்
35. மணிமேகலை – உடலும் இந்த உயிரும் – நாளைய தீர்ப்பு
36. தமன் – ஆராரிராரோ கேட்குதம்மா – வாரிசு
37. இமான் – என்னுயிரே – அண்ணாத்த
38. மகேஷ் – உடையோடு பிறக்கவில்லை – நம்மவர்
39. மணிஷர்மா - எல்லா மலையும் - ஏழு மலை
40. பிரேமி ஶ்ரீனி – சங்கமத்தின் சங்கமோ – நாளை மனிதன்
41. ஆதித்யன் ஒயிலா பாடும் பாட்டில் – சீவலப்பேரி பாண்டி
42. யுவராஜ் - நெஞ்சோடு ராகம் – பூவிழி ராஜா
43. எம்.எஸ்.முராரி – பூங்காற்றே கேளாயோ – சோலைக்குயில்
44. சரத் - சந்திக்காத கண்களில் – 180
45. ராஜேஷ் கண்ணா - உயிருள்ள ரோஜாப்பூவே - நான் வளர்த்த பூவே
46. நிவாஸ் கே பிரசன்னா – சேதுபதி - கொஞ்சிப் பேசிட வேணாம்
தொகுப்பு கானாபிரபா
47. விஜய் ஆனந்த் - ஒருவனுக்கு ஒருத்தி - காவலன் அவன் கோவலன்
48. வி.குமார் - பட்டுப்பூச்சி - மீண்டும் மகாத்மா
49. ரவீந்திரன் - காலம் கனிந்தது - லஷ்மி வந்தாச்சு
50. ஸ்வரராஜ் - பொல்லாத – ஸ்வர்ணமுகி
51. தேவி ஶ்ரீ பிரசாத் - நீ வரும் போது - மழை
52. ஜிப்ரான் – மெளனம் பேசும் போது – அமர காவியம்
53. ஶ்ரீகாந்த் தேவா – எங்கள் செல்லக் கண்ணம்மா – வெற்றிவேல் சக்தி வேல்
54. வி.ஜெயசேகர் – மேற்கில் மழை – சிறைக்கதவுகள்
55. தாணு – அதிகாலை நான் பாடும் – புதுப்பாடகன்
56. எம்.ரங்கராவ் – குடும்பம் ஒரு கோவில் – குடும்பம் ஒரு கோவில்
57. ஜெர்ரி அமல்தேவ் – புத்தம் புதியது – பூவே இளம் பூவே
58. சம்பத் செல்வன் – பூவே என்ன போராட்டம் – ஓடங்கள்
59. ஷியாம் – என்ன ஆச்சு – விலங்கு
60. ஆர்.பாண்டியராஜன் – குக்கூவென – நெத்தியடி
61. மனோஜ் – கியான் – சின்னக்கண்ணன் – செந்தூரப் பூவே தொகுப்பு கானாபிரபா
62. ராம் லக்ஷமன் – காதல் பித்து – காதல் ஒரு கவிதை
63. தாயன்பன் – குக்கூ குக்கூ குயிலின் குக்கூ – அன்று பெய்த மழையில்
64. குணசிங் – கண்ணுக்குள் தீபம் ஏந்தி – சங்கு புஷ்பங்கள்
65. எல்.வைத்யநாதன் – என்னை விட்டுப் பிரிவது – என் காதல் கண்மணி
66. பாபு போஸ் – என்னுயிரே என்னுயிரே – நண்பர்கள்
67. விஜி மேனுவேல் – கண்ணுக்குள் உன்னைத்தான் – இதயவாசல்
68. ராஜேஷ் – இளம் தென்றலே – புதிய காற்று
69. இளைய கங்கை – சந்தனக்கிளி ரெண்டு – மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
70. ராஜ் & கோட்டி – இன்ப ராகங்கள் – ஹலோ பிரதர்
பதிவை எழுதியவர் : கானா பிரபா
தயவு செய்து பெயரை நீக்கி விட்டு ஃபேஸ்புக் வாட்சாப் தளங்களில் பகிராதீர்கள்.
0 comments:
Post a Comment