ஒரு சிறு இடைவேளைக்குப் பின் மீண்டு(ம்) ஒரு றேடியோஸ்புதிரில் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இந்தமுறை வரும் புதிர் சற்று வித்தியாசமாக திரைப்படத்திற்கு அத்திபூத்தாற்போல நுழைந்த ஒரு கலைஞர் எடுத்த எடுப்பிலேயே அவரின் இசையமைப்பில் வெளிவந்த படத்துக்குத் தேசியவிருதைப் பெற்றுக் கொடுத்த சங்கதியை வைத்துப் புதிர் போடுகின்றேன்.
குறித்த அந்த இசைக் கலைஞர் இந்த ஆண்டோடு 80 வயதை எட்டியிருக்கின்றார், நம்மோடு வாழ்ந்து கொண்டிருப்பவர் இவர். சில ஆண்டுகளுக்கு முன்னர் இவர் இசையமைத்த அந்தப் படம் குறித்த ஆண்டில் வெளியான படங்களில் சிறந்த இசைக்கான தேசிய விருதைப் பெற்றுக் கொண்ட தமிழ்ப்படம் அது. கூடவே இதே படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த நடன இயக்குனர் ஆகிய பிரிவுகளிலும் தேசிய விருதைத் தட்டிக்கொண்டது மேலதிக தகவல்.
கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவின் அடலெயில்ட் நகரில் இடம்பெற்ற படவிழாவிலும் கலந்து கொண்டதோடு சிட்னியிலும் இரண்டு காட்சிகள் காண்பிக்கப்பட இருந்தது. இந்தப் படத்துக்கெல்லாம் கூட்டம் வருமா என்று நினைத்தேன். ஆனால் அரங்கம் நிறைந்த காட்சிகளாக அவை அமைந்திருந்தன. கூடவே படத்தின் கதையம்சமும் எடுத்த விதமும் கூட இயல்பானதொரு வரலாற்றுச் சித்திரமாக அமைந்தது.
சரி, கேள்வி இதுதான். எடுத்த எடுப்பிலேயே தான் முதலில் இசையமைத்த படத்தில் தேசிய விருதைப் பெற்றுக் கொண்ட அந்த இசைக்கலைஞர் யார்? குறித்த அந்தத் தமிழ்ப்படத்தின் பெயர் சொன்னால் போனஸ் புள்ளிகள் ;)
Subscribe to:
Post Comments (Atom)
25 comments:
Year : 2006
Music Director : Lalgudi Jayaraman Movie : Sringaram
G3 பின்னீட்டிங் ;)
Me first time hearing abt this movie.. reviews paatha nalla irukkum pola irukkae !!!
P.S.. Appuram eppadi answera correcta pottennu yosikkareengala.. all google/wiki aandavar arul dhaan :)
http://en.wikipedia.org/wiki/National_Film_Award_for_Best_Music_Direction
indha linkla tamil la ARR & Ilayaraja thavirthu vera yaar irukkangannu paathen.. answer sikkiruchu :D
//ஒரு சிறு இடைவேளைக்குப் பின் மீண்டு(ம்) ஒரு றேடியோஸ்புதிரில் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. //
வந்ததே ரொம்ப லேட்டு இதுல கேள்வி கேக்குறாராம்ல
#யாரை யார் கேள்விக்கேக்குறது
#போயிட்டு அப்புறமா வாங்க
சரி போனா போவுது தெரிஞ்ச பதிலை சொல்றதுல என்னா ஆகிடப்போவுது
சிருங்காரம்
லால்குடி ஜெயராமன்
[முடிந்தால் படத்தினை அப்லோடவும் தேசிய விருது பெற்ற படத்தினை அகிலம் முழுவதும் பார்த்து ரசிப்போம்! #ரிக்வெஸ்ட்டு]
ஆயில்
அதுக்குள்ள காப்பியடிச்சுப் போட்டாச்சா ;)
தல...இதெல்லாம் ஓவரு ;))
தல கோபி
இது ஓவரு இல்ல லிமிட்டட் ;)
//தேசிய விருதைப் பெற்றுக் கொண்ட அந்த இசைக்கலைஞர் யார்?//
டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா
படம் பெயர்: தெரியவில்லை
பதில் சரியா தல!
மகராஜன்
அந்த விடை தவறு ;) பாலமுரளிகிருஷ்ணா அல்ல
L Subramanian
//கானா பிரபா said...
ஆயில்
அதுக்குள்ள காப்பியடிச்சுப் போட்டாச்சா ;)
//
தவறானதொரு குற்றச்சாட்டு தலை குனிந்து கவலை தோய்ந்த முகத்துடன் விடை பெறுகிறேன் நன்றி வணக்கம்!
என் நலம் விரும்பிகள் ஆத்திரப்படாமல் அமைதி காத்து நிற்கும்படி தாழ்மையுடன் கேட்டும் கொள்கிறேன்!
செந்தில்குமார் விடை தவறு
Lalgudi Jayaraman ,Sringaram
//என் நலம் விரும்பிகள் ஆத்திரப்படாமல் அமைதி காத்து நிற்கும்படி தாழ்மையுடன் கேட்டும் கொள்கிறேன்!//
இப்படிச் சொன்னா கொந்தளிக்கனும்னு அர்த்தம், ஏய் எட்றா பெட்ரோல, கொளுத்துடா ஆயிலை
இசைக் கலைஞர்: லால்குடி ஜெயராமன்.
படம்: சிருங்காரம்.
நன்றி: கூகுள் :)
பரிசுத் தொகை எவ்வளவு ஐயா??
லால்குடி ஜெயராமன்?!
Laalgudi Jayaraman
Movie: Sringaram
Srusal
boss.. Lalgudi jayaranamnukkum Mahathmaa gandhijikkum enna differnce? Srirangam thaan naan porantha ooru :))
yarl said...
பரிசுத் தொகை எவ்வளவு ஐயா??/
பாட்டுத் தான் பரிசாக் கிடைக்கும் ;)
மாதவ், சுப்பராமன், கலைக்கோவன், பெயர் குறிப்பிட விரும்பாத அன்பர் மற்றும் ரவிசங்கர் ஆனந்த்
நீங்கள் சொன்ன விடையே தான் ;)
இனியாவது விடையை சொல்லலாம் தானே? ப்ளீஸ் சொல்லுங்கோ.
அந்தப் படத்தின் பெயர்: சிருங்காரம்
இசையமைப்பாளர்: வயலின் வித்தகர் லால்குடி ஜெயராமன்
போட்டியில் பங்கெடுத்து வெற்றி பெற்ற அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி
லால் குடி என்றாலே அவரின் வயலின் இசையும் அவர் இயற்றிய வர்ணம், தில்லானாக்கள் தான் உடனே நினைவில் வரும். இதுவும் இவரின் ஒரு கைவண்ணமா? திறமையான கலைஞ்சர். தகவலுக்கு நன்றி பிரபா.
Post a Comment