Pages

Friday, March 26, 2010

றேடியோஸ்புதிர் 52 - அறுபது நாளின் பின் ஒட்டி ஓடிய பாட்டு?

"ஊமை விழிகள்", திரைப்படக் கல்லூரி மாணவர்கள் புது சகாப்தம் படைத்த படமிது, இந்தப் படத்துக்கு முன்னும் பின்னும் இவ்வளவு பிரமாண்டமான வெற்றியை அந்தக் கல்லூரி சந்தித்திருக்காது. ஆபாவாணனின் தயாரிப்பில் சக திரைப்படக்கல்லூரி மாணவர் அரவிந்தராஜ் இயக்கிய படமது.

விஜய்காந்த், கார்த்திக், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் என்று பெரும் நட்சத்திரப்பட்டாளம் நடித்து பெருவெற்றி கண்ட அந்தப்படத்தின் இசை மனோஜ் கியான் இரட்டையர்கள். முன்னணிப்பாடகர்களை ஒதுக்கி விட்டு சுரேந்தர், கிருஷ்ணசந்தர், ஆபாவாணன், சசிரேகா இவர்களோடு நீண்ட இடைவெளிக்குப் பின் பி.பி.சிறீனிவாசையும் பாட வைத்தார்கள்.

இந்தப் படத்தில் மூன்று பாடல்களை சுரேந்தர் பாடியிருக்கிறார், ஆனால் அந்த மூன்று பாடல்களில் ஒன்றை படத்தை திரையிடும் போது இணைக்காமல், அறுபது நாள் கழித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படத்தோடு இணைத்து திரையிட்டார்களாம். கூடவே "அறுபது நாள் கழித்து உங்கள் மனம் கவர்ந்த பாடல் இணைக்கப்பட்டிருக்கிறது" என்ற விளம்பரத்தையும் செய்தார்களாம். ஊமை விழிகள் பட வீடியோ காசெட்டுகளில் இந்தப் பாட்டு இல்லாத படப்பிரதி கூட இப்போதும் உண்டு.

கேள்வி இது தான், அந்த அறுபது நாள் கழித்து ஒட்டி ஓடிய பாட்டு எது? அந்தப் படத்தில் சுரேந்தர் பாடிய மூன்று பாடல்களையும் தருகின்றேன். எதுவென்று கண்டுபிடியுங்களேன்.
போட்டி விதிமுறை ஒருவர் ஒரு பாடலை மட்டுமே தெரிவு செய்யலாம்.

1. குடுகுடுத்த கிழவனுக்கு கல்யாணப் பேச்சு

2. மாமரத்துப் பூவெடுத்து மஞ்சம் ஒன்று போடவா

3. கண்மணி நில்லு காரணம் சொல்லுசரியான பதில்:

கண்மணி நில்லு காரணம் சொல்லு, போட்டியில் பங்கெடுத்துக் கொண்ட அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி

27 comments:

கோபிநாத் said...

2. மாமரத்துப் பூவெடுத்து மஞ்சம் ஒன்று போடவா

தல இதுவா!!???

தமிழ்ப் பிரியன் said...

மாமரத்துப் பூவெடுத்து மஞ்சம் ஒன்று போடவா
ஹிஹிஹி

Thamiz Priyan said...

கண்மணி நில்லு காரணம் சொல்லு..:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மாமரத்து பூவெடுத்தா??

ஆயில்யன் said...

தெரியல பாஸ் ஒருவேளை தோல்வி நிலையென நினைத்தாலா இருக்குமோன்னு நினைச்சேன் அது இல்ல போல அப்பன்னா ராத்திரி நேரத்து பூஜையிலா இருக்குமோ டிரெண்ட் அப்ப இந்த மாதிரி எதாச்சும் ஒரு கிளுகிளுப்பான பாட்டு போட்டா படம் போகும்ன்னு நினைச்சிருப்பாங்களோ - சேர்த்திருப்பாங்களோ?

Sundari said...

கண்மணி நில்லு காரணம் சொல்லு..

கானா பிரபா said...

ஆயில்ஸ்

3 பாட்டு கொடுத்தா இல்லாத பாட்டை சொல்றீரே

தல கோபி

விடை தப்பு

முத்துலெட்சுமி

தப்பே தான் ;)

கானா பிரபா said...

தமிழ்ப்பிரியன்

இரண்டு பதில்கள் சொன்னதால் ஆட்டத்தில் இருந்து நீக்கப்படுகிறீர்கள்

சுந்தரி

இதுவரை வந்தவர்களில் நீங்கள் மட்டுமே சரியான பதில் சொல்லியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

ஆயில்யன் said...

//கண்மணி நில்லு காரணம் சொல்லு/


இதுதான் பாஸ் :)

எம்.எம்.அப்துல்லா said...

குடுகுடுத்த கிழவனுக்கு கல்யாணப் பேச்சு
கூத்துப் பார்த்த இடத்துலதான் நிச்சயமாச்சு!

எம்.எம்.அப்துல்லா said...

அண்ணா சாரி,சாரி.

ஏதோ ஞாபகத்தில் முதல்பாட்டை சொல்லிட்டேன்...

கண்மணி நில்லு காரணம் சொல்லுதான் பிறகு இடம்பெற்ற பாடல்.

கானா பிரபா said...

ஆயில்ஸ் & எம்.எம்.அப்துல்லா

இரண்டு பதில்கள் சொன்னதால் ஆட்டத்தில் இருந்து நீக்கப்படுகிறீர்கள்

ஆயில்யன் said...

//இரண்டு பதில்கள் சொன்னதால் ஆட்டத்தில் இருந்து நீக்கப்படுகிறீர்கள்//

இப்படியே வர்றவங்களை ஆட்டத்துலேர்ந்து நீக்கிட்டே இருந்தா அப்புறம் தனியாத்தான் ஆடணும் பாஸ் கீப் இட் இன் ஞாபகத்துல :))))))))))))

Anonymous said...

kanmani nillu paatuthaan...

Vidai sariya???

Tholvi nilaiyena ninaithal paata konja naal thada pannirunthaanga aprom vittutaanga :)

~Kalaimariba

கானா பிரபா said...

Kalaimariba

உங்கள் பதில் சரியானது, வாழ்த்துக்கள்,

கைப்புள்ள said...

தல இதுவா?

குடுகுடுத்த கிழவனுக்கு கல்யாணப் பேச்சு

கானா பிரபா said...

கைப்புள்ள

பாட்டு தப்பு ;)

M.Rishan Shareef said...

கண்மணி நில்லு காரணம் சொல்லு :-)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஹி..,ஹி..,

சுப்பராமன் said...

ஒரு ஊகம் :)

2. மாமரத்துப் பூவெடுத்து மஞ்சம் ஒன்று போடவா

ஆளவந்தான் said...

பதில் தெர்லேங்கோ

கானா பிரபா said...

ரிஷான்

அதான் பதில்

சுரேஷ்

சிரிக்கப்படாது பதில் சொல்லணும் ;)

ஆளவந்தான்

அதான் 3 கொடுத்தேனே அதில் ஒன்றை சொல்லியிருக்கலாமே


சுப்பராமன்

அந்தப் பதில் தவறு

ஆளவந்தான் said...

//
1. குடுகுடுத்த கிழவனுக்கு கல்யாணப் பேச்சு
//

இது தானோ :)

சென்ஷி said...

கண்மணி நில்லு காரணம் சொல்லு பாட்டுத்தான்..

(இன்னமும் சில பழைய்ய வீடியோ கேசட்டுகள்ல இந்தப் பாட்டு மாத்திரம் பதியப்பட்டிருக்காது! என்னுடைய டிவிடியிலும் இந்தப் பாட்டு இல்லை) :(

கானா பிரபா said...

சென்ஷி மாப்பி

சரியான பதில் தான்

கானா பிரபா said...

சரியான பதில்:

கண்மணி நில்லு காரணம் சொல்லு, போட்டியில் பங்கெடுத்துக் கொண்ட அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி

geethappriyan said...

தல நான் இனி சீக்கிரம் வரபார்க்கிறேன்.எப்போவும் பதில் சொல்லும் முன்னரே புதிர் விடுபடுகிறது,