
20 வருஷங்களுக்குப் பின்னர் இந்தப் படம் கைக்கு வந்தது. எவ்வளவோ நல்ல படங்கள் என்றாலும் கால ஓட்டத்தின் பின் அவற்றை மீண்டும் பார்க்கும் போது ரசிக்கும் வண்ணம் இருக்காது ஆனால் இப்படத்தை இப்போது தான் பார்த்தபோது அதே புத்துணர்ச்சியைக் கொடுத்திருந்தது.
தமிழிலும் பெயர் வாங்கிய இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணாவின் இயக்கத்தில் நடித்த இந்தத் திரைப்படத்தில் அளவுக்கு அதிகமான தமிழ் திரையில் பிரபலமான நடிகர்களின் ஆக்கிரமிப்பினால் தெலுங்குப் படச் சுவடு மொழியில் மட்டுமே தெரிந்தது. வெங்கடேஷ், ரேவதி, மஞ்சுளா, வைஷ்ணவி, சுரேஷ் சக்கரவர்த்தி (அழகன் படத்தில் அதிராம் பட்டினத்தில் இருந்து வந்து ரகளை பண்ணிய உறவுக்காரர்) இவர்களோடு குணச்சித்திர வேடத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நடித்திருப்பார்.
ஒரு இசைக்கலைஞனாக வரவவேண்டும் என்ற இலட்சியத்தோடு அநாதையாய் வாழும் வெங்கடேஷக்கு பணக்காரப் பெண் ரேவதியின் நட்பு கிடைக்கின்றது. இருவரின் நட்பு காதலாக மாறும்போது ரேவதியின் தாய் மஞ்சுளா ரூபத்தில் தொல்லை வருக்கின்றது காதலருக்கு. தம் தடைகளை மீறி இவர்கள் சேர்ந்தார்களா அல்லது வெங்கடேஷின் இசைக்கனவு மட்டும் பலிக்கின்றதா என்பதே கதை. மிகவும் சிம்பிளான கதைக்கு சுவாரஸ்யம் ஊட்டுவது கவர்ச்சியற்ற ரேவதி வெங்கடேஷ் ஊடல்களும், பாடல்களும் தான். ஆனால் தெலுங்கு இலக்கணப்படி ஒரு குத்து டான்ஸ் போடவேண்டும் என்ற இலட்சியத்தோடு இளவரசியை நுழைத்திருப்பது கரும்புள்ளி. எஸ்.பி பாலசுப்ரமணியம் பாடிக்கொண்டே நடிக்கும் காட்சிகள் வெகு இயல்பு. தங்கையாக சோடாப்புட்டிக் கண்ணாடியோடு வரும் வைஷ்ணவியும், வில்லி மஞ்சுளாவும் கூட அலட்டல் இல்லாத நடிப்பில் கலக்கியிருக்கின்றார்கள்.
ஆர்ப்பாட்டமான படங்கள் எடுக்கும் சுரேஷ் கிருஷ்ணாவின் அறிமுகம் அவரது குரு நாதர் கே.பாலசந்தரின் "ஏக் துஜே கேலியே"வில் ஆரம்பித்தது. அதே பாணியிலான ஒரு இனிய காதல் சித்திரமாக இதையே வெங்கடேஷ் முதலும் கடைசியுமாகக் கொடுத்திருக்கின்றார் போல. வெங்கடேஷ் - ரேவதி ஜோடி கனகச்சிதமான தெரிவு. வழுக்கி விழுந்ததும் காதல், மோதலில் வரும் காதல் போன்ற வகையறாக்கள் இல்லாமல் காதல் அரும்பும் விதத்தை அழகான காட்சிப்படுத்தலில் காட்டி சபாஷ் வாங்குகின்றார் இயக்குனர்.

இந்தப்படம் ஹிந்தியில் லவ் என்று சல்மான்கான் -ரேவதி ஜோடியில் வந்திருந்தது. அதற்கு இசை ஆனந்த் மிலிந்த். தெலுங்கிலும் தமிழிலும் ராஜா கலக்கிய "ஈ நாடே (ஆத்தாடி ஏதோ ஆசைகள்)" பாட்டை காப்பியடித்ததோடு சொதப்பியும் இருக்கிறார் ஹிந்தியில்.
முன்னர் இந்த மூன்று படங்களையும் வைத்துப் போட்ட பதிவு இதோ

இந்தப் படத்துக்கான இசைப்பிரிப்பை ஆரம்பித்த போது வேண்டாம் என்று ஒதுக்கவே முடியாத அளவுக்கு கலக்கலான 26 இசைத்துண்டங்களை சேகரிக்க முடிந்தது, அந்தத் தேன் வந்து உங்கள் காதில் பாயட்டும் இதோ :)
ரேவதி வெங்கடேஷ் முதல் சந்திப்பு
000000000000000000000000000000000000000000000000000000000000000000 ரேவதி ,வைஷ்ணவி, வெங்கடேஷ் சந்திப்பில் 000000000000000000000000000000000000000000000000000000000000000000 தன்னைக் கண்டும் காணாமல் ஒதுங்கிப் போகும் வெங்கடேஷை நினைத்துக் கவலை கொள்ளும் ரேவதி, பின்னர் தன்னை அவன் தேடிக் கொண்டிருப்பதை அடுத்த நாள் ஒழிந்திருந்து காணும் போது கலக்கும் மகிழ்ச்சிப் பிரவாகம், இந்த இசை மூலமே பின்னர் ஒவ்வொரு காட்சியில் வித்தியாசமாக, வெவ்வேறு சூழ்நிலைக்கு ஏற்ப வெவ்வேறு வாத்தியங்களில் காட்டப்படுகின்றது. இங்கே வருவது கீபோர்ட்டில் அமையும் கிட்டார் 000000000000000000000000000000000000000000000000000000000000000000 இசைக்கலைஞர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வீட்டுக்கு வெங்கடேஷ் வருகை. எஸ்.பி.பி பியானோவில் வாசிப்பதை வெங்கடேஷ் கிட்டாரில் வாசித்துக் காட்டுகிறார். 000000000000000000000000000000000000000000000000000000000000000000 மழை இரவில் தனக்காக கல்லறைப் பகுதியில் காத்திருக்கும் ரேவதியைத் தேடிப் போகும் வெங்கடேஷ், இங்கே அந்த மூல இசை ஹோரஸோடு பயன்படுத்தப்படுகின்றது. கூடவே மழைத்துளிகள் ஒவ்வொன்றாய் விழுமாற்போல இசை கலக்க 000000000000000000000000000000000000000000000000000000000000000000 வெங்கடேஷ் தன் காதலை ரேவதிக்கு தொலைபேசி மூலம் சொல்லும் காட்சி, ஹோரஸோடு இசை கலக்க, இந்த காட்சி எடுத்த விதமும் அழகு, இசையும் கொள்ளை அழகு, டயலாக்கோடு கேட்டுப் பாருங்கள் இதோ 000000000000000000000000000000000000000000000000000000000000000000 மாதர் சங்கத்தில் கிடைக்கும் முதல் பாடும் வாய்ப்பில் கிடைத்த கசப்பான அனுபவத்தில் பாட்டு நிகழ்ச்சியை நடத்தாமல் "ஜனகணமண" பாடும் வெங்கடேஷ். முழுமையாக எஸ்.பி.பி பின்னணி குரலில் 000000000000000000000000000000000000000000000000000000000000000000 நிகழ்ச்சியைக் குழப்பிய வெங்கடேஷ் மேல் மாதர் சங்கத் தலைவி மஞ்சுளா (ரேவதி அம்மா) கொள்ளும் கோபம், ரேவதி வெங்கடேஷ் ஊடல், கிட்டாரில் மூல இசை சோகமாக 000000000000000000000000000000000000000000000000000000000000000000 படத்தில் இருக்கும் மிக நீண்ட வயலின் சங்கதி, காதலர்களின் பிரிவைக் காட்டுகின்றது. பஸ் ஸ்டாண்டில் தேடி வரும் வெங்கடேஷைப் புறக்கணிக்கும் ரேவதி, இந்த இசைத் துண்ட முடிவில் ஊடல் கலைந்து சேரும் காதலர்களை விசில் இசையோடு சேர்த்து வைக்கும் இசைஞானி 000000000000000000000000000000000000000000000000000000000000000000 சாக்ஸபோன் இசையோடு காதலர்கள் மனமகிழ்வு மூல இசையின் இன்னொரு வடிவம் 000000000000000000000000000000000000000000000000000000000000000000 வெங்கடேஷின் முன் கோபத்தை கட்டுப்படுத்த பத்து எண்ண வேண்டும் என்று பழக்கும் ரேவதி, வெறும் இசையாலே அந்த பத்திலக்கமும் 000000000000000000000000000000000000000000000000000000000000000000 ரேவதி வீட்டுக்கு வந்து மாதர் சங்க நிகழ்ச்சியில் அவமதித்ததற்காக மன்னிப்புக் கேட்கவரும் வெங்கடேஷ், மஞ்சுளா அவமதித்தும், ரேவதியின் காதலுக்காக அடக்கமாகப் போகும் காட்சி 000000000000000000000000000000000000000000000000000000000000000000 திருட்டுத் தனமாக ரேவதி அறைக்குள் வெங்கடேஷ் வருதல், ஈ நாடே பாடலை சித்ரா, எஸ்.பி.பி பின்னணி இசை இல்லாமல் பாடும் ஒரு சில வரிகளோடு 000000000000000000000000000000000000000000000000000000000000000000 ரேவதி அறையில் வெங்கடேஷைக் காணும் மஞ்சுளா போலீசை வரவழைத்து கைது செய்யும் காட்சி, ஆர்ப்பாட்டமான இசையில் ஆரம்பித்து அழும் வயலினோடு ஓய்கின்றது 000000000000000000000000000000000000000000000000000000000000000000 காதலர்களின் பிரிவுத்துயரை வெறும் சோக இசையால் காட்டும் காட்சி, ரேவதி தன் ரத்தத்தால் சுவரில் வெங்கடேஷ் பெயரை எழுதுதல் 000000000000000000000000000000000000000000000000000000000000000000 தாயின் கண்காணிப்பில் கல்லூரிக்கு வரும் ரேவதி காரில் இருந்து இறங்கி கையில் வெங்கடேஷ் பெயரைப் பச்சை குத்திக் கொள்ளும் காட்சிப் பின்னணி 000000000000000000000000000000000000000000000000000000000000000000 வெங்கடேஷின் கையெழுத்துக் கிறுக்கல்களோடு இருக்கும் மேசை விரிப்பைப் போர்த்திக் கொண்டு ரேவதி வீட்டுக்குள் நடத்தும் உள்ளிருப்பு போராட்டம் 000000000000000000000000000000000000000000000000000000000000000000 நீண்ட இடைவெளிக்குப் பின் காதலர்கள் காணும் காட்சி, சோக வயலினில் ஆரம்பித்து சந்தோஷ ரீங்காரமாய் வெங்கடேஷ் ரேவதிக்கு கட்ட வரும் தாலியை சேற்றுக்குள் எறியும் மஞ்சுளாவை மிரட்டி அந்த தாலியை சுத்தம் செய்து வாங்கும் காட்சி, கலகக் குரலாய் இசை 000000000000000000000000000000000000000000000000000000000000000000 மஞ்சுளாவை காரில் கடத்தும் வெங்கடேஷ் தேவாலயத்தில் வெங்கடேஷ், ரேவதி திருமணம் முடிக்கும் நிகழ்வில் ரேவதி மயங்கிச் சாய்தல் 000000000000000000000000000000000000000000000000000000000000000000 தேவாலயத்துக்கு வரும் வெங்கடேஷ் 000000000000000000000000000000000000000000000000000000000000000000 மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் ரேவதி 000000000000000000000000000000000000000000000000000000000000000000 படத்தின் நிறைவுக்காட்சி மனதைக் கனக்க வைக்கும் இசையோடு நிரந்தரப் பிரிவின் சோக வாத்தியம்
10 comments:
நான் தான் மொத ஆளு
இப்போதைக்கு உள்ளேன் ஐயா ;)
வருகைக்கு நன்றி கலைக்கோவன்
பின்னணி இசையை அனுபவியுங்க :)
வெங்கடேஷ், நாகார்ஜுனா வின் வருகைக்குபின்னரே தெலுங்கு பட உலகின் போக்கு மாறியதாக சொல்லுவார்கள். இப்படத்தின் ஆடியோ சிடியை அண்மையில் கண்டும் இளையராஜா என்று தெரியாமல் வாங்காது விட்டு விட்டேன். இனி கிடைக்குமோ தெரியாது........
கோபிநாத் said...
இப்போதைக்கு உள்ளேன் ஐயா ;)
//
இசையை கேட்டு சொல்லுங்க தல
வணக்கம் அருண்மொழிவர்மன்
இந்தப் படத்தின் பாடல்களும் சரி, பின்னணி இசையும் சரி 80 களில் தவிர்க்க முடியாத ராஜாவின் முத்திரைகளில் ஒன்று.
உள்ளேன் ஐயா ;)
வருகைக்கு நன்றி நிஜம்ஸ்
எனக்கு எல்லாத்துலயும் ஒரே இசை (ப்ரியதமா) மட்டும்தான் வருது; யாரும் இதை சொல்லலையா?/யாருமே இன்னும் கேக்கலையா?/எனக்கு மட்டும்தான் பிரச்சனையா?
ROSAVASANTH //
போனவாரம் update பண்ணிய போது ஒலித்துணுக்குகள் இடம் மாறியும் ஒரே துணுக்கையும் பகிருகின்றன. விரைவில் சீர் செய்கிறேன்.
Post a Comment