Pages

Tuesday, April 25, 2023

எம்.எஸ்.ராஜேஸ்வரி செல்லம் கொஞ்சும் குரலின் நினைவில் ஐந்தாண்டுகள் ❤️

“அம்மாவும் நீயே அப்பாவும் நீயே

அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே” 

கலையுலகில் கலைஞானி கமல்ஹாசனின் 62 வருடகால ஓய்வறியாத் திரை இயக்கத்தைக் காட்டும் போதெல்லாம் இந்தப் பாடல் தான் மனத்திரையில் அங்கேறும். 

என்று களத்தூர் கண்ணம்மாவில் தன் முப்பது வயது குரலில் அப்போதைய ஆறு வயதுக் குழந்தைக் கமலுக்குக் குரல் கொடுத்தவர் தான்,  தன் அறுபது வயதில் பேபி ஷாம்லியின் ஆறு வயதுக் குரலாக  

“பாப்பா பாடும் பாட்டு கேட்டு தலைய ஆட்டு” (துர்கா),

https://www.youtube.com/watch?v=ndMacY2PdYs&t=21s

“யக்கா யக்கா யக்கா கிளியக்கா” (செந்தூர தேவி) 

https://www.youtube.com/watch?v=qBniaRcPXIo

பாடிய புதுமை படைத்தவர். இவ்விதம் சங்கர் – கணேஷ் ஆட்சியிலும் குழந்தைக் குரலாக இருந்தவர்.

திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் இசையில் எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடிய 

“மண்ணுக்கு மரம் பாரமா

 மரத்துக்கு இலை பாரமா

 கொடிக்கு காய் பாரமா

 குழந்தை தாய்க்குப் பாரமா”

பாடலின் தாளக் கட்டு பின்னாளில் பல இசையமைப்பாளர்களுக்கு முன்னுதாரணமாக அமைந்து “கேவிஎம் ரிதம்” என்றே அதனை அடையாளக் குறியிட்டுச் சிறப்பிப்பார்களாம்.

“படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு – பாடம்

படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு”

என்று கே.வி.மகாதேவனே இதே தாளக்கட்டில் இவருக்குப் பாட்டளித்துத் தொடர்ந்து சிறப்பித்தவர்.

“அம்புலிமாமா வருவாயா”

https://www.youtube.com/watch?v=VqN7T25mBOk

கே.வி.எம் இவருக்குக் கொடுத்த இன்னொரு பாட்டு.

“பூப்பூவா பறந்து போகும்

பட்டுப்பூச்சி அக்கா

நீ பளபளன்னு போட்டிருப்பது

யாரு கொடுத்த சொக்கா”

https://www.youtube.com/watch?v=BWqfrLY-BUg

“திக்குத் தெரியாத காட்டில்" பாட்டெல்லாம் அன்றைய இலங்கை வானொலியின் பொற்காலப் பாட்டுகளில் ஒன்று.

“புதுப் பெண்ணின் மனசைத் தொட்டுப் போறவரே” (பராசக்தி), 

“சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?” (டவுண் பஸ்),

போன்ற காதல் பாடல்களிலும் தன்னை அடையாளப்படுத்தியவர்.

 “நான் சிரித்தால் தீபாவளி” 

 நாளுமிங்கே ஏகாதசி”

என்று நாயகன் பாடலில் புழம்பெரும் பின்னணிப் பாடகி ஜமுனா ராணியுடன் 

பழமைத் தொனியில் பாடியவர்.

சந்திரபோஸ் இசையிலும் இவரைக் குழந்தையாக்கி 

“எந்தக் கதை சொல்ல”

https://www.youtube.com/watch?v=vidLHP4Ph6M

பாட வைத்ததோடு புதுமையாக அதில் கே.ஜே.ஜேசுதாஸையும், எஸ்.பாலசுப்ரமணியம் ஆகியோரையும் இணைத்தார்.

கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், சங்கர் – கணேஷ் உள்ளிட்ட இசையமைப்பாளர்கள் மட்டுமல்ல இளையராஜாவும் தன் பங்குக்கு இவரைக் குழந்தையாக்கி

“ஒரு பாட்டு உன் மனசை இழுக்குதா”

https://www.youtube.com/watch?v=OhkvSwG0CCw

“பாசமழை” பாடலில் அழகு பார்த்தார்.

எம்.எஸ்.ராஜேஸ்வரியின் புகழ்பூத்த பாட்டுப் பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம், நூறைத் தாண்டும்.

இன்னும் எனக்கு மனசுக்கு நெருக்கமாக இருக்கும் பாட்டு ஒன்று உண்டு. அது “மகாதேவி” படத்தில் இடம்பிடித்த, பாலசரஸ்வதியோடு இணைந்து பாடிய

“சிங்காரப் புன்னகை 

கண்ணாரக் கண்டாலே 

சங்கீத வீணையும் 

ஏதுக்கம்மா……”

https://www.youtube.com/watch?v=ljIlGUsw8Ww

குழந்தைத் தனம் கொண்ட குரலாள் எம்.எஸ்.ராஜேஸ்வரியை 

என்றும் நினைவில் கொள்வோம்.

கானா பிரபா

25.04.2023

0 comments: