Pages

Thursday, April 23, 2020

காதல் பித்து பிடித்தது இன்று பார்த்தேனே ❤️ ️



எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு ஒரே படத்தில் ஒன்பது பாடல்கள் 💚

காதல் ஒரு கவிதை என்ற படத்தைப் பற்றித் தெரிந்திருக்கிறீர்களா? என்றால் பலருக்குத் தெரிந்திருக்காது ஆனால் Maine Pyar Kiya ஐக் கேட்டால் ஹிந்திவாலாக்களில் இருந்து தமிழ் வாலாக்கள்வரை தெரியாதவர்கள் மிகச் சொற்பம். எண்பதுகளின் இறுதியில் வெளிவந்த இந்தப்படம் அப்போதிருந்த அனைத்துச் சாதனைகளையும் அடித்துத் துவம்சம் செய்துவிட்டு வெற்றிக் கொடி நாட்டிய படம். சல்மான்கானின் ஆரம்ப காலப் படம். நாயகி பாக்யஶ்ரீக்கும் கோயில் கட்டாத குறை. இந்தப் படத்தின் இயக்குநர் சூரஜ் பர்ஜாட்ஜா ஒரு சூரன் தான் இல்லாவிட்டால் இந்த Maine Pyar Kiya படத்தைத் தொடர்ந்து ஒரு சிறு இடைவேளை விட்டு ஐந்து வருடம் கழித்துவந்து எடுத்த Hum Aapke Hain Koun..! படம்கூட அசுரத்தனமான வெற்றியைக் குவித்தது. அதிலும் சல்மான்கான் தான் நாயகன், இரண்டு படங்களிலும் ராம் லக்‌ஷ்மண் தான் இசையமைப்பாளர்.
Maine Pyar Kiya படத்தின் தெலுங்கு, மலையாளப் பதிப்புகளோடு அப்போது தமிழில் “காதல் ஒரு கவிதை” என்ற பெயரில் இந்தப் படம் வெளியானது.படத்தில் மொத்தம் 11 பாடல்கள்,அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வாலியே எழுதினார்.அந்தக் காலத்து ஆல் இந்தியா ரேடியோ வானொலிப் பிரியர்கள் இந்த காதல் ஒரு கவிதை படப் பாடல்களில் குளிர் காய்ந்திருப்பார்கள். அந்த நேரம் இளையராஜா அலையிலும் ஓரமாக வந்த மென் புயல் இந்தப் பாடல்கள்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் ஹிந்தியில் ஏற்கனவே ஏக் துஜே கேலியேவில் பாடியதை எல்லாம் பாலசந்தர், கமலஹாசன் பந்தமாக வைத்துக் கொள்ளலாம் ஆனால் ஒரே படத்திலேயே மொத்தம் 9 பாடல்களை சுளையாக வாங்குவதெல்லாம் பெரிய சாதனை தான். இரண்டு பாடல்கள் ஒரே மெட்டில் இருந்தாலும் (சோகம், ஜோடிப் பாட்டு. என் சிற்றறிவுக்கு எட்டிய விதத்தில் சங்கராபரணத்தில் அதிக பட்சம் 9 பாடல்களைப் பாடிய எஸ்.பி.பிக்கு அடுத்த பாய்ச்சல் இது. ஹிந்தியில் பிலிம்பேர் விருதையும் இந்தப் பாடல்களுக்காகச் சுவீகரித்துக் கொண்டார். Maine Pyar Kiya படத்தின் ஓட்டத்தோடு போட்டி போட்டது அந்தப் படத்தின் பாடல்கள் விற்பனை வருவாய். இன்றும் மூக்கில் கை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். சும்மாவாமுதல் ஐந்து இடங்களில் பல்லாண்டுகளாக இருந்தது இந்தப் படப் பாடல்களின் சாதனை.
இந்த மாதிரி அரிய பாடல்களைச் சேகரிக்கும் எனக்கு 13 வருடங்களுக்கு முன் ஃபைனாஸ் Music Corner இல் காதல் ஒரு கவிதை படத்தின் இசைத் தட்டில் இருந்து குறு வட்டுக்குப் பதிய வைத்து வாங்கி வந்தேன். ரெக்கார்டிங் பார் காரர் கூட விநோதமாகப் பார்த்திருப்பார்.அந்தப் பாடல்களைச் சேதாரம் இல்லாமல் இங்கே தருகிறேன் அனுபவியுங்கள்.
காதல் பித்து பிடித்தது இன்று (தமிழில் சித்ரா பாடும் இந்தப் பாட்டு ஹிந்தியில் லதா மங்கேஷ்கர் பாடியது)
https://soundcloud.com/kanapra…/kaathal-pithu-female-version
காதல் பித்து பிடித்தது இன்று - எஸ்.பி.பி தனிக்குரலில்
காதல் பித்து பிடித்தது இன்று - எஸ்.பி.பி & சித்ரா ஜோடிப் பாட்டு
கானா பிரபா

0 comments: