Pages

Friday, November 30, 2018

ஒளிப்பதிவாளர் ராபர்ட் (ராஜசேகரன்) விடை பெற்றார்

Attachment.png

பாலைவனச் சோலை

கல்யாணக் காலம்

சின்னப்பூவே மெல்லப் பேசு

மனசுக்குள் மத்தாப்பு

பறவைகள் பலவிதம்

போன்ற படங்களை இயக்கிய இரட்டை இயக்குநர்களில் ஒருவரான ராபர்ட் மறைந்தார். இவரின் சகா ராஜசேகரன் நிழல்கள் பட நாயகன்இது ஒரு பொன்மாலைப் பொழுதுபாடலில் தோன்றி நடித்தவர். இருவரும் படம் இயக்க ஆரம்பித்த பின் பிரபு, ராம்கி (அறிமுகம்) போன்றோருக்கு திருப்புமுனைப் படங்களை அளித்தவர்கள். அடிப்படையில் இவர்கள் ஒளிப்பதிவாளர்கள். ஒருதலை ராகம் இவர்களின் ஒளிப்பதிவில் புகழ் பூத்த படம்.

பாலைவனச் சோலை அதிரி புதிரி வெற்றி. மலையாளத்தில் இது நிஜங்களோட கதா என்று மொழி மாற்றும் அளவுக்குப் பெயர் கொடுத்தது.

நான்கு நாயகர்கள் யுகத்துக்கு இந்தப் படம் முன்னோடி. யாழ்ப்பாணம் வின்சர் தியேட்டரில் ஹவுஸ் புல்லாக ஓடிய போது அண்ணன் படம் பார்த்து விட்டு வந்து சிலாகித்தது இன்னும் பசுமரத்தாணி போல.

சின்னப்பூவே மெல்லப் பேசு படம் பதினாறடி பாய்ந்தது.. எஸ்..ராஜ்குமார் இசையமைப்பாளராகவும் வித்யாசாகர் பின்னணி இசையிலும் அறிமுகமானார்கள். பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் முழங்கின.

பறவைகள் பலவிதம் கல்லூரித் தோழர் கதையை வித்தியாசமாகக் காட்டிய படம். அந்தப் படத்தில் ராம்கி, நிரோஷாவோடு நாச்ற், ஜனகராஜ், தாராவுக்கும் முக்கிய வேடம். சோகம் பொதிந்த

அந்தப் படம் ரசிகர்களால் ஒதுக்கப்பட்டுத்

தோல்வி கண்டது. அத்தோடு ராபர்ட் - ராஜசேகரன் கூட்டணி உடைந்தது.

தொடர்ந்து ராஜசேகரன்பூமனம்படத்தில் வித்யாசாகர் இசையில் நடித்து அமுங்கி இப்போது சின்னத்திரையில் ஒதுங்கி விட்டார்.

தொண்ணூறுகளில் நடிகர் பிரபு மீண்டும் ராபர்ட் - ராஜசேகரன் கூட்டணியில் ஒரு படத்தைக் கொண்டு வர முயன்றும் முடியாமல் போனது அந்த முயற்சி.

கானா பிரபா

30.11.2018


0 comments: