Pages

Monday, December 29, 2008

றேடியோஸ்புதிர் 32 - பாடலைப் படமாக்காது அடம்பிடித்த இயக்குனர்?


றேடியோஸ்பதியின் வாக்கெடுப்புக்கு இதுவரை வாக்களிக்காதவர்கள் ஒரு எட்டு இங்கே நடந்து போய் வாக்களித்து விட்டு இந்த ஆண்டின் நிறைவாக வரும் றேடியோஸ்புதிருக்கு வாருங்களேன்.

ஒரு காலகட்டத்தில் தொடர்ச்சியான வெற்றிப்படங்களைத் தந்த இயக்குனர் இவர். அதனாலோ என்னவோ அளவுக்கு அதிகம் படங்களை இயக்கித் தள்ளி இப்போது சரக்கில்லாமல் நகைச்சு வைக்கிறார். இவருடைய உதவி இயக்குனர் ஒருவரின் பேட்டியை சில ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்த போது அவர் சொன்ன தகவலை இங்கே புதிராகவே போடுகிறேன்.

ஒரு படத்துக்கான பாடல்களை இசைஞானி இளையராஜா உருவாக்கி அவை ஒலிப்பேழைகளிலும் வந்து வெகு பிரபலம். அபோதெல்லாம் வழக்கமாக எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை வைத்து ஒரு பாடலாவது தரும் ராஜா அந்தப் படத்தில் அவரை உபயோகிக்காமலேயே பாடல்கள் அனைத்தும் பேசப்பட்டன. அதில் ஒரு பாடல் ஆண்குரலிலும், பெண் குரலிலும் தனித் தனியாக இருக்கும். பெண் குரலில் பாடியவர் பி.சுசீலா.ஆண் குரல் பாடலை மட்டும் இயக்குனர் இயக்கிக் கொடுத்து விட்டு படத்தையும் முடித்து விட்டு அடுத்த படத்திற்குப் பாய்ந்து விட்டார். தயாரிப்பாளரோ "படத்தை பிரிவியூ பார்த்த விநியோகஸ்தர்கள் கேட்கிறார்கள், அந்தப் பெண் குரல் பாடலையும் படமாக்கித் தாருங்களேன்" என்று கேட்கவும் அந்த இயக்குனரோ அதெல்லாம் முடியாது என்று மறுத்து விட்டாராம்.

அப்போது அவரின் உதவி இயக்குனராக இருந்தவர் தயாரிப்பாளரிடம் சென்று, "நான் ஒரே நாளில் அந்தப் பாடலைப் படமாக்கித் தருகின்றேன், எனக்கு அந்த வாய்ப்பைத் தாருங்கள்" என்று கேட்கவும், தயாரிப்பாளரும் வேறு வழியின்றி சம்மதித்து, பணத்தையும் கொடுக்கிறார். அந்த உதவி இயக்குனரும் தான் சொன்னது போலவே இதை சவாலாக எடுத்துக் கொண்டு அந்தப் பாடலைப் படமாக்கிக் கொடுக்கிறார். அந்தப் படம் பெரு வெற்றி கண்டது. அந்த உதவி இயக்குனருக்கு நன்றிக் கடனாகக் கிடைத்தது அதே தயாரிப்பாளரின் அடுத்த படத்தினை இயக்கும் வாய்ப்பு. அந்த உதவி இயக்குனர் இயக்குனராகிய அடுத்த படத்தில், அதே இளையராஜா இசையமைக்க முன்னர் சொன்ன படத்தில் தனித் தனியாகப் பாடிய பாடகர் ஜோடி இணைந்து பாடிய பாடல் வெகு பிரபலமானது. படமும் ஓரளவு ஓடியது.

கேள்வி இதுதான், அந்த பெண் குரலில் வந்த பாடலை இயக்காமல் அடம்பிடித்த இயக்குனர் யார்? உதவிக் குறிப்பு, இந்த இயக்குனர் பெயரில் இன்னொரு குணச்சித்திர நடிகர் இருந்தவர், அவர் கூட படங்களை பின்னாளில் இயக்கியவர். வரும் வெள்ளிக்கிழமைக்கு முன் பதிலை சொல்லுங்கள், இல்லாவிட்டால் காத்திருங்கள் ;)

37 comments:

Anonymous said...

பாடல்: ‘ராசாத்தி உன்னை’
படம்: வைதேகி காத்திருந்தாள்
இயக்குனர்: ஆர். சுந்தர்ராஜன்

சரியா? :)

அந்த உதவி இயக்குனர் யார், அவர் பின்னால் செய்த படம் என்ன-ன்னு தெரியலையே :(

- என். சொக்கன்,
பெங்களூர்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வைதேகி காத்திருந்தாள்.. ஆர் சுந்தரராஜன்.. சரியா?

Pavals said...

R. சுந்தரராஜன்

வர வர ரொம்ப சுளுவான கேள்வியாவே கேக்கரீங்க :(

கானா பிரபா said...

சொக்கன்

பின்னீட்டிங்க, அந்த உதவி இயக்குனர் பற்றி சொல்வேன் ;)

கானா பிரபா said...

கயல்விழி முத்துலெட்சுமி

ஒன்று விட்ட ஒரு போட்டியில் தப்பாம சொல்றீங்களே எப்படி ;)

கானா பிரபா said...

கொங்கு ராசா

சத்தியமா இது கஷ்டமான கேள்வின்னு தான் நான் நினைச்சேன்
:( கலக்கீட்டீங்கய்யா

G3 said...

hehe.. director r.sundarrajan :D

தமிழ்ப்பறவை said...

r.sundar rajan

paravai....

கானா பிரபா said...

G3

இவ்வளவு வேகமா விடை சொன்னா நான் அழுதுடுவேன் :(

சரி யாராச்சும் அந்த உதவி இயக்குனரையும் கண்டு பிடிங்க பார்க்கலாம்.

Anonymous said...

இயக்குனர் R. சுந்தர்ராஜன் என நினைக்கிறேன்.

வெங்கட்

Anonymous said...

இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன்?

கானா பிரபா said...

பறவை, வெங்கடேஷ், வெயிலான்

சரியான கணிப்பு, வாழ்த்துக்கள் ;)

ஆயில்யன் said...

ஆக்சுவலா இந்த வருடத்து புதிர் கடைசிப்போட்டி நாம மத்தவங்களை ஊக்கு விக்கும் பொருட்டு கலந்துக்காம இருக்கலாம்ன்ன்னுதான் முடிவு பண்ணிட்டேன்! :)

http://urupudaathathu.blogspot.com/ said...

இயக்குனர் : சுந்தர் ராஜன்
படம் : வைதேதி காத்திருந்தாள்
பாடல் : ராசாத்தி உன்னை காணாது நெஞ்சில்


இவ்ளோ தாங்க என்னால முடியும், இதுக்கு மேல நீங்க தான் சொல்லணும், பதில் சரியா இல்ல தவறான்னு ??

ஆயில்யன் said...

பட் எனக்கு ஆன்சர் தெரிஞ்சு இருக்கே!!!!!


சுந்தர்ராஜன்

அப்புறம் படம் கூட வைதேகி காத்திருந்தாள் :))

G3 said...

:))

//சரி யாராச்சும் அந்த உதவி இயக்குனரையும் கண்டு பிடிங்க பார்க்கலாம்.//

Adhayum solluvomilla :D

Balu anand :)

கானா பிரபா said...

உருப்படாதது அணிமா

நீங்க சொன்னவரே தான் ;) வாழ்த்துக்கள்

ஆயில்ஸ்

உங்களின் பதில் பல சந்தேகங்களை கிளப்புகிறது, யாரிடம் பிட் அடிச்சீங்க ;)


G3

ஒரு பேச்சுக்கு சொன்னா உதவி இயக்குனரையும் சொல்லீட்டிங்களே ;)

Pavals said...

அந்த உதவி இயக்குனரையும் கண்டு பிடிங்க பார்க்கலாம்.//
பாலு ஆனந்த். :)

வடுவூர் குமார் said...

சே! இவ்வளவு பேருக்கு தெரிஞ்சிருக்கு,எனக்கு தெரியலை பாருங்க. :-(
தெரியலை என்று சொல்லவேண்டியதை கூட எப்படி சொல்லவேண்டியிருக்கு பாருங்க!!

வடுவூர் குமார் said...

பாக்கியராஜாவா? அல்லது பார்த்திபனா?

கானா பிரபா said...

கொங்கு ராசா

நீங்க சொன்ன் ஆளுதான் அந்த உதவி இயக்குனர் ;)

வடுவூர் குமார்

பதில் ரொம்ப சுலபம், இன்னும் முயற்சி செய்யுங்க, கிடைக்கும்

முரளிகண்ணன் said...

சுந்தர்ராஜன்

ஆளவந்தான் said...

R.Sundarraajan?

கலைக்கோவன் said...

SPB இல்லாமல் ....ஜெயச்சந்திரன்
இயக்குனர் .. சுந்தரராஜன்
குணசித்திர நடிகர் ...மேஜர் சுந்தராஜன்
அப்பிடின்னா படம்
வைதேகி காத்திருந்தாள் .

அத்திரி said...

படம் பேர் தெரியும், இயக்குனர் பேர் தெரியும்..

வர வர ரொம்பக் கஷ்டமா கேள்வி கேக்குறீங்க... இதெல்லாம் நல்லதுக்கில்ல.. சொல்லிப்புட்டேன்.

Anonymous said...

கானா பிரபா,

உண்மையைச் சொல்லணும்ன்னா, எனக்கு இந்த சம்பவம் தெரியாது, பொம்மையைப் பார்த்து, அப்புறம் க்ளூஸை வெச்சுதான் கண்டுபிடிச்சேன் ...

இதெல்லாம் தொளில் ரகசியம், வெளிய சொல்லப்படாது ;)

- என். சொக்கன்,
பெங்களூர்.

Anonymous said...

ஆர் சுந்தர்ராஜன், படம் வைதேகி காத்திருந்தாள்

கானா பிரபா said...

அத்திரி

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் ;)

சொக்கன்

தொழில் ரகசியத்தை பகிரங்கமா சொல்லீட்டீங்களே ;)


முர‌ளிக‌ண்ண‌ன், ஆள‌வ‌ன்தான், கலைக்கோவ‌ன், சின்ன‌ அம்ம‌ணி

ச‌ரியான‌ ப‌தில் வாழ்த்துக்கள் ;)

G.Ragavan said...

Rasave Unna Kanatha Nenju...

Director R.Sundarrajan

Uthavi iyakunar peru marandhu pochu. Nane raja nane mandhiri padathula varume... "mayanginean cholla thayanginean" athuvum nalla song. nice movie.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

am i correct?
நான் சொல்ரது சரிதானே....

SUREஷ்(பழனியிலிருந்து) said...

உத்வி இயக்குநர் படத்துக்கும் விகா தான் ஹீரோவா?. உ.இ. தெரியலயே

கானா பிரபா said...

SUREஷ்

இரண்டாவது படத்துக்கும் அதே ஹீரோ தான், முதல் பட இயக்குனர் சொல்லலியே

ஜி.ரா

சரியான கணிப்பு ;)

கானா பிரபா said...

படமாக்காது அடம்பிடித்த இயக்குனர் ஆர்.சுந்தரராஜன்

அந்தப் பாடல் வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தில் வரும் "ராசாவே உன்னை காணாத நெஞ்சு".

பாடலை இயக்கிய உதவி இயக்குனர் பாலு ஆனந்த்.

போட்டியில் பங்கெடுத்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி ;)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//am i correct?
நான் சொல்ரது சரிதானே....//


//இந்த இயக்குனர் பெயரில் இன்னொரு குணச்சித்திர நடிகர் இருந்தவர், அவர் கூட படங்களை பின்னாளில் இயக்கியவர்.//


அவர் இப்படித்தான் வசனம் பேசுவார்.

Gopi Krish said...

UDHAVI IYAKUNAR

BALU ANAND

MOVIE

NAANE RAJA NAANE MANDHIRI

CORRECTA?

Gopikrishnan said...

UDHAVI IYAKUNAR

BALU ANAND

MOVIE

NAANE RAJA NAANE MANDHIRI

CORRECTA?

கானா பிரபா said...

சுரேஷ்
நீங்க சொல்ரதும் சரிதான் ;-)

கோபிகிருஷ்ணன்

பதிலை நான் அறிவித்த பின்னர் வந்திருக்கீங்க ;)