Pages

Sunday, October 19, 2008

"நெற்றிக்கண்" பின்னணிஇசைத்தொகுப்பு


கடந்த றேடியோஸ்புதிரில் "நெற்றிக்கண்" திரைப்படத்தின் பின்னணி இசையைக் கொடுத்து ஒரு புதிரைக் கேட்டிருந்தேன். இயக்குனர் கே.பாலசந்தர் முன்னர் தனது நண்பர்களுடன் இணைந்து "கலாகேந்திரா" என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை ஏற்படுத்தி தனது இயக்கத்திலேயே பல படங்களை இயக்கியிருந்தார். பின்னர் 1981 இல் கவிதாலயம் என்ற பெயரில் (பின்னர் கவிதாலயா ஆயிற்று) தயாரிப்பு நிறுவனம் ஏற்படுத்தி வெளியாட்களையும் தனது தயாரிப்பில் படங்கள் இயக்கச் செய்தார். அந்த வரிசையில் கவிதாலயம் தயாரித்த முதல் படமே "நெற்றிக்கண்" இதன் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்.

லீலைகள் செய்யும் கிருஷ்ணன் போல தந்தையும், அடக்கமான ராமன் போல மகனுமாக இரட்டை வேடத்தில் ரஜினிகாந்த் செய்திருப்பார். கூடவே லஷ்மி, சரிதா, மேனகாவுடன் பின்னாளில் அதிரடி நாயகியாக விளங்கிய விஜயசாந்தி இப்படத்தில் ஒரு ரஜினிக்கு மகள், இன்னொரு ரஜினிக்கு தங்கையாக சிறுவேடமொன்றில் நடித்திருப்பார்.

இப்படத்தின் இசை, இசைஞானி இளையராஜா. பாடல்களைப் பொறுத்தவரை, "ராமனின் மோகனம்" (கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.ஜானகி), "தீராத விளையாட்டு பிள்ளை" (ஏஸ்.பி.பாலசுப்ரமணியம்), "மாப்பிளைக்கு மாமன் மனசு" (மலேசியா வாசுதேவன், பி.சுசீலா), "ராஜா ராணி ஜாக்கி" (எஸ்.பி.சைலஜா, மலேசியா வாசுதேவன்)ஆகிய பாடல்கள், எல்லாமே ரசிக்கக் கூடியவை.


இளையராஜாவின் ஆரம்பகாலப் படங்களில் பின்னணி இசையில் பெரிய அளவிற்கு இப்படம் முத்திரை பதித்தது என்று சொல்வதற்கில்லை. காரணம் இந்த முழுநீள மசாலாப்படத்தில் இசையால் தூக்கி நிறுத்தும் காட்சிகளுக்குப் பதில் ரஜினியின் ஸ்டைல் நடிப்பையே நம்பியிருக்கின்றார்கள். ஆனாலும் படத்தின் முகப்பு இசையும், பின்னர் இங்கே நான் கொடுத்திருக்கும் இசைத் தொகுப்புக்களும், இப்படத்திலும் தன்னைக் காட்ட முடியும் என்று ராஜா உணர்த்தியிருக்கின்றார். ஓவ்வொரு படத்திலும் குறித்த ஒரு வாத்தியத்தின் முக்கியத்துவத்தைக் காட்டும் ராஜா இப்படத்தில் வயலினை முக்கியத்துவப்படுத்தியிருக்கின்றார் என்பதை இப்படப் பின்னணி இசைத் தொகுப்பில் இருந்து கண்டு கொள்ளலாம்.

இசை 1
படத்தின் முகப்பு இசை, இதில் கலவையாக மெல்லிசையும், ஆர்ப்பரிக்கும் வாத்திய இசையும், கூடவே ராமனின் மோகனம் பாடலை நினைவுபடுத்தும் அந்த மெட்டிசையும் விரவியிருக்கின்றது.



இசை 2
மகன் ரஜினியை நல்லவர் என்பதைக் காட்டும் காட்சி. இதில் புல்லாங்குழல் ஆரம்பத்துடன், கிட்டார் இசை கலக்கின்றது.



இசை 3
தந்தை ரஜினி சில்மிஷ மன்னர் என்பதைக் காட்ட குறும்போடு வரும் இசை முன்னதில் இருந்து வேறுபட்டது. 2.30 நிமிடங்களுக்கு வசனமே இல்லாமல் இவரின் அறிமுகக் காட்சி இசையாலேயே நிரப்பப்பட்டிருக்கின்றது.



இசை 4
மேலே இசை 3 இல் தந்த தந்தை ரஜனிக் காட்சியின் இசைத்துண்டில் இருந்து வயலின் வாசிப்பை மட்டும் பிரித்தெடுத்துத் தருகின்றேன். இந்த இசை தான் இப்படத்தின் உயிர்நாடி இசை. தந்தை ரஜினி வரும் காட்சிகள் பலவற்றில் இதுதான் பயன்பட்டிருக்கின்றது.



இசை 5
இசை 3 மற்றும் இசை 4 இல் தந்த அந்த வயலின் இசை நோஸ்ட்ஸ் விசில் சத்த வடிவில், அப்பா ரஜினி தன் சில்மிஷத்தை ஆரம்பிக்கத் தயாராக இருக்கிறார் என்பதைக் காட்ட.




இசை 6
இசை 3, இசை 4 மற்றும் இசை 5 இல் வந்த அதே இசை இங்கே வயலினில் சற்று மெதுவாக. அப்பா ரஜினி சரிதாவிடம் அடி வாங்கிய ஏமாற்றத்தில் இருப்பதைக் காட்ட




இசை 7
மேலே இசை 4, 5, 6 இல் வந்த அதே இசை மெதுவாக வயலின் இசைக்கப்படுகின்றது. மனைவியிடம் மாட்டிய ரஜினி




இசை 8
மேனகா, ரஜினி மீது காதல் கொள்ளும் காட்சி, ராமனின் மோகனம் பாட்டின் மெட்டு புல்லாங்குழல் இசையாக.




இசை 9
மேலே இசை 8 இல் தந்த ராமனின் மோகனம் மெட்டு சோக இசை புல்லாங்குழலில், மேனகா காதல் தேல்வி விரக்தியில்




இசை 10
ராமனின் மோகனம் பாடல் சோகப் பாடலாக எஸ்.ஜானகி படத்தில் மட்டும் பாடும் பாடல், இசைத்தட்டில் இது இருக்காது.




இசை 11
அப்பா ரஜினியை கண்காணிக்கும் மகன் ரஜினி




இசை 12
படத்தின் இறுதிக் காட்சி இசை

20 comments:

ஆயில்யன் said...

மீ த பர்ஸ்ட்டு வந்தேன் :))))

ஆயில்யன் said...

//தந்தை ரஜினி சில்மிஷ மன்னர் என்பதைக் காட்ட குறும்போடு வரும் இசை முன்னதில் இருந்து வேறுபட்டது. 2.30 நிமிடங்களுக்கு வசனமே இல்லாமல் இவரின் அறிமுகக் காட்சி இசையாலேயே நிரப்பப்பட்டிருக்கின்றது.//

படத்தின் வெற்றிக்கு பெரிதும் காரணமாய் இருந்த இந்த ஸ்டைல் கேரக்டர் (எனக்கு நொம்ப பிடிக்குமாக்கும்!)

ஆயில்யன் said...

முதல் நன்றி போட்டோ செம சூப்பரூ! (நானும் அப்புறம் யூஸ் பண்ணிப்பேன் ஆமாம்!)

முரளிகண்ணன் said...

அருமையான தொகுப்பு + அழகான விளக்கம்

G.Ragavan said...

நல்ல இசைத்தொகுப்பு. நன்றி பிரபா.

நெற்றிக்கண் படமும்...பாடல்களும் மிகமிக இனிமை. இந்தப் படத்தில் எல்லாப் பாடல்களுமே சுகம் சுகம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம் ரகம்.

கர்நாடக இசை மெட்டில்.....மேற்கத்திய இசைக் கோர்வையில்....ஆஆஆஆஆஆ.. மாப்பிள்ளைக்கு மாமன் மனசு என்று தொடங்கும் போதே ஜிவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

ராமனின் மோகனம்...ஜானகி மந்திரம்...என்று தொடங்கி..ராமாயணம் பாராயணம்.. காதல் மந்திரம் என்று போகையில்..இதயத்தில் என்னவோ உருகுமே...என்னங்க பேரு அதுக்கு?

ராஜாராணி ஜாக்கி....வாவ் வாவ்... வாழ்வில் என்ன பாக்கி.. வாவ் வாவ்... இளையராஜா..எங்கய்யா போனீரு?

தீராத விளையாட்டுப் பிள்ளைக்கு இப்படியும் மெட்டு பொருத்தமாகத்தான் இருக்குது.

நெற்றிக்கண்.. இளையராஜா இசையில் அருமையான படம்.

enRenRum-anbudan.BALA said...

Gr8 work, Nice review and thanks :)

கோபிநாத் said...

இப்போதைக்கு உள்ளேன் ஐயா ;)

கானா பிரபா said...

ஆயில்யன்

அந்த தந்தை ரஜினியின் ஆரம்ப காட்சியில் அவரின் பி.ஏ இற்கும் இடையில் இப்படி உரையாடல் வரும்

"சார் தொழிலாளர்கள் ஸ்ரைக் பண்றாங்க" - பி.ஏ

"அவங்க கேட்டதை கொடுத்திடுங்க" - ரஜினி

"தொழிலாளர் சங்கத் தலைவர் உங்களைப் பார்க்கணுமாம்" - பி.ஏ

"சரி அவர் கேட்கிறதையும் கொடுத்திடுங்க" - ரஜினி

நான் மாஞ்சு மாஞ்சு படம் எடுத்து போட்டா பாவிப்பீங்களா, சரி ஒரே செட்டுங்கிறதால ஒண்ணும் பண்ண முடியல ;)

கானா பிரபா said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி முரளிகண்ணன்

வாங்க ராகவன்

பாடல்கள் எல்லாமே நீங்க சொன்னது போல் அபாரம். இந்த மசாலாப்படத்தில் சண்டைக் காட்சிகள் அதிகம் இல்லாம இரண்டு ரஜினி முட்டல் மோதலுடன் பாடல்களும் வந்து விட்டன. மாப்பிளைக்கு பாடல் ஏற்கனவே இசையரசி போஸ்டில் போட்டோமே.

உங்களின் சிறப்பான சிலாகிப்புக்கு மிக்க நன்றி

கானா பிரபா said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி முரளிகண்ணன்

வாங்க ராகவன்

பாடல்கள் எல்லாமே நீங்க சொன்னது போல் அபாரம். இந்த மசாலாப்படத்தில் சண்டைக் காட்சிகள் அதிகம் இல்லாம இரண்டு ரஜினி முட்டல் மோதலுடன் பாடல்களும் வந்து விட்டன. மாப்பிளைக்கு பாடல் ஏற்கனவே இசையரசி போஸ்டில் போட்டோமே.

உங்களின் சிறப்பான சிலாகிப்புக்கு மிக்க நன்றி

கானா பிரபா said...

வாங்க தங்ககம்பி

இசைஞானியின் சாதனையை மெச்ச நாமெல்லாம் சிறு துளிகள், தங்கள் அன்புக்கு நன்றி

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாலா

தல கோபி

மீண்டு(ம்) வாங்க ;)

சந்தனமுல்லை said...

நல்ல இசைத்தொகுப்பு கானாஸ்!! :-).பகிர்தலுக்கு நன்றி! சின்னபாண்டிக்கு ரொம்ப குஷி போல..தலைவர் படத்தை பார்த்ததும்!!

தங்ஸ் said...

/*இளையராஜாவுக்கு இணையான உங்களின் உழைப்பு இங்கே தெரிகிறது.அத்தனையும் அழகு*/

ரிப்பீட்டேய்...இசை விருந்துக்கு நன்றி!

ARV Loshan said...

நல்ல தேடல் ! "ராமனின் மோகனம்" பாடல் இன்று கேட்டாலும் இனிமை..
எனக்கு இந்தப் படத்தில் "தீராத விளையாட்டுப் பிள்ளை" பாடலும் பிடிக்கும் !SPB கலக்கி இருப்பார்!
நான் நினைக்கிறேன் ரஜினி styleஐ வித்தியாசப் படுத்தி (தந்தையும்,மகனுமாக)கலக்கிய ஒரே படம் இதுவாகத் தான் இருக்க முடியும்.(மூன்று முகமும் உண்டு!)

கானா பிரபா said...

வாங்க சந்தனமுல்லை

சின்னப்பாண்டிக்கு பாட்டு மட்டுமில்லை, ஸ்டில்லிலும் கண் வச்சிட்டார்

தங்க்ஸ்

வாங்க வாங்க ;-)


லோஷன்

உண்மை தான் நெற்றிக்கண் அளவுக்கு வித்தியாசம் காட்டிய இருவேடங்கள் அவருக்கு சொற்பமே.

ஷைலஜா said...

நெற்றிக்கண் படமும் பிரமாதம்,பாடல்களும் அள்ளும்...தொகுத்து அருமையா அளிச்சிடீங்களே இங்க....நிதானமா ஒவ்வொண்ணா கேட்டு ரசிச்சேன் கானாப்ரபா

கானா பிரபா said...

வாங்க சைலஜா

கேட்டு உங்கள் கருத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி

Anonymous said...

தல, உங்க பேச்சு டூ கா... பின்ன என்ன பாஸ்.. பகவதிபுரம் ரயில்வே கேட் பட பின்னணி தொகுப்பு கேட்டு எவ்ளோ நாள் ஆச்சு...!! மனசு இல்லையா இல்ல டைம் இல்லையா.. அவ்ளோ தான் நம்ம நட்பா.. ஹ்ம்ம் ஹ்ம்ம்

~ரவிசங்கர் ஆனந்த்

கானா பிரபா said...

வரும் தல வரும் ;)

Anonymous said...

நெற்றிக்கண எனக்கும் பிடித்த படம் கூட. அதை மீண்டும் உங்கள் உழைப்பு எனக்கு உணர்த்துகிறது பிரபா சார்.