Thursday, October 2, 2008
றேடியோஸ்புதிர் 23 - பிரபலங்கள் இருந்தும் வெளிவராத அந்தப் படம்?
றேடியோஸ்புதிர் ஒரு வார இடைவெளிக்குப் பின் மீண்டும் ஒரு நாள் முன்னதாகக் களம் இறங்குகின்றது. ஜீஜீபி கேள்வியெல்லாம் கேட்காதீங்க என்று ஆயில்ஸ் பாப்பா வரை முறையிட்டதால் இந்த வாரம் மிகவும் கஷ்டமான கேள்வி என்ற நினைப்பில் ஒரு கேள்வி கேட்கின்றேன்.
நிலவே மலரே திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகி மீசையில்லாமல், நடிப்புமில்லாமல் கொஞ்சக்காலம் ஓட்டியவர் நடிகர் ரகுமான். பிறகு தமிழ் வாய்ப்புக்கள் போய் மீண்டும் கே.பாலசந்தரின் "புதுப்புது அர்த்தங்கள்" படத்தின் மூலம் மீசையுடனும், கொஞ்சம் நடிப்புடனும் மீண்டும் வந்தவர். அந்தப் படம் கொடுத்த வாழ்வால் எக்கச்சக்கமாக அவர் தொடர்ந்து நடித்த படங்களில் அவரே மறந்து போன படமொன்றின் பெயர் "பட்டணந்தான் போகலாமடி". இந்தப் படத்தின் இசை சங்கர் கணேஷ். ஆனால் இந்தப் படத்தில் ஒரு பிரபலமான ஜோடி பாடும் பாடல் காட்சி இருக்கின்றது. அந்தப் பாடலின் இசை கூட அந்த ஜோடியில் ஒருவராக வரும் ஆண் பிரபலம் தான்.
அந்த ஆண் பிரபலம், அந்தக் காலகட்டத்தில் பெரும் புகழோடு நடித்துக் கொண்டிருந்த பெண் பிரபலத்தோடு இணைந்து நடிக்கவென பாடல்களும் இசையமைக்கப்பட்டு, ஒரேயொரு பாடற் காட்சியை மட்டும் எடுத்ததோடு கிடப்பில் போன படத்தின் பாடலே பின்னர் பட்டணந்தான் போகலாமடி படத்தில் பயன்படுத்தப்பட்டது.
கேள்வி இதுதான் அந்த வெளிவராத படத்தின் பெயர் என்ன?
கீழே இருக்கும் சொற்களில் பொருத்தமான இரண்டு சொற்களைப் பொருத்தினால் விடை தொபுகடீர் என்று வந்து குதிக்கும். இந்தப் படப்பெயர் 80 களில் வந்த பிரபலமான இசையோடு சம்பந்தப்பட்ட படத்தின் பாடலின் முதல் வரிகளில் இருக்கின்றது.
கரகம், காவடி, ஒயிலாட்டம், மேளம், பறை, உடுக்கு, இசை, நாதஸ்வரம், நாயனம், பைரவி, நாட்டை, கரகப்பிரியா,கீரவாணி, சிந்து, ரசிகப்பிரியா, சண்முகப் பிரியா
Subscribe to:
Post Comments (Atom)
53 comments:
me the firstuu.. :-)
முந்தினம் பார்த்தேனே
பார்த்ததும் வேர்த்தேனே
சல்லடை கண்ணாக
உன்னையும் கண்டேனே....
ச்சும்மா ஒரு இண்டர்வல்லு ப்ரேக்குக்காக வாரணம் ஆயிரம் பாட்டு..
கும்மி அடி.. கும்மி அடி..
குனிஞ்சு குனிஞ்சு கும்மி அடி.. :-)
என் பதில் சரியா?
கமேண்டை வெளியிடுப்பா..
இல்லன்னா கடையை ஒடச்சி நாராசம் பண்ணிடுவோம்.. :-))
///கரகம், காவடி, ஒயிலாட்டம், மேளம், பறை, உடுக்கு, இசை, நாதஸ்வரம், நாயனம், பைரவி, நாட்டை, கரகப்பிரியா,கீரவாணி, சிந்து, ரசிகப்பிரியா, சண்முகப் பிரியா//
யோசிக்கின்றேன்...
தொபுக்கடீர் (குதிச்சிட்டேன்!!!!)
ஏன் என் பதில் வரலை?
உடனே தெரிஞ்சாகணும்..
ஆமா.. பதிவுல ஒருத்தரு மீசையோட இருக்காரே.. அவர் யாரு? உங்க அண்ணனா?
///கரகம், காவடி, ஒயிலாட்டம், மேளம், பறை, உடுக்கு, இசை, நாதஸ்வரம், நாயனம், பைரவி, நாட்டை, கரகப்பிரியா,கீரவாணி, சிந்து, ரசிகப்பிரியா, சண்முகப் பிரியா//
யோசிக்கின்றேன்...
கமேண்டை வெளியிடுப்பா..
இல்லன்னா கடையை ஒடச்சி நாராசம் பண்ணிடுவோம்.. :-))
சேச்சேச்சேச்சே.. இவ்வளவு ஈசியான கேள்வியா?
நான் சொல்லியிருக்கேண் பாருங்க பதிலை.. அது கண்டிப்பா சரியானதுதான். :-)
நான் சொல்லியிருக்கேண் பாருங்க பதிலை.. அது கண்டிப்பா சரியானதுதான்.
காவடிச் சிந்து
bagyaraj padam. aana padam veliya varalai. isai kooda avar thaan.
ம்ம் ம்ம் .. மூட்டையைக் கட்டிக்கோ
எதுக்கு?
பட்டணம் தான் போகலாமடி பொம்பளே
பணம் காசு தேடலாமடி
நல்ல கட்டாணி முத்தே என் கண்ணாட்டி நீயும்
வாடி பொண்டாட்டி தாயே
டவுனுப் பக்கம் போகாதீங்க மாப்பிள்ளே
டவுனாயிப் போயிடுவீங்க
அந்த டாம்பீகம் ஏழைக்கு தாங்காது பயணம்
வேண்டான்னா கேளு மாமா
கெட்டவுங்க பட்டணத்தை
ஒட்டிக்கோணும் என்பதாலே
கெட்டவுங்க பட்டணத்தை ஒட்டிக்கோணும்
என்பதாலே
பட்டிக்காட்டை விட்டுப் போட்டு பல பேரும்
போவதாலே
கட்டுச் சோத்தைக் கட்டிக் கொள்ளடி பொம்பளே
தட்டிச் சொன்னா கேக்க மாட்டேண்டி
நல்ல கட்டாணி முத்தே என் கண்ணாட்டி நீயும்
வாடி பொண்டாட்டி தாயே
வேலை ஏதுங்க? கூலி ஏதுங்க?
வெட்கக் கேட்டை சொல்றேன் கேளுங்க
அங்கே வேலை ஏதுங்க? கூலி ஏதுங்க?
வெட்கக் கேட்டை சொல்றேன் கேளுங்க
காலேஜு படிப்பு காப்பி ஆத்துதாம்
பி.ஏ. படிப்பு பெஞ்சு துடைக்குதாம்
ஆளை ஏய்ச்சி ஆளும் பொழைக்குதாம்
அஞ்சிக்கி ரெண்டு கஞ்சிக்கலையுதாம்
மேலே போனது நூத்திலே ஒண்ணாம்
மிச்சம் உள்ளது லாட்ரி அடிக்குதாம்
எப்படி?
ஒண்ணான சாமியெல்லாம் ஒண்ணுமே
எண்ணாம தவிக்கையிலே
மாப்பிள்ளே ..ஒண்ணான சாமியெல்லாம் ஒண்ணுமே
எண்ணாம தவிக்கையிலே
உன்னாலே என்னாகும் எண்ணாம போனா
பின்னாலே கேளு மாமா
ராத்திரி பகலா ரிக்ஷா இழுப்பேன்
நைசா பேசி பைசா இழுப்பேன்
அம்மா ..ஒதுங்கு ..ஒதுங்கு ..ஒதுங்கு...
ராத்திரி பகலா ரிக்ஷா இழுப்பேன்
நைசா பேசி பைசா இழுப்பேன்
டிராமா சினிமா சர்க்கஸ் பாப்பேன்
ராஜா மாதிரி சிகரெட்டும் பிடிப்பேன்
வேர்த்து உருகினா பீச்சுக்குப் போவேன்
மீந்த பணத்திலே மீனு வாங்குவேன்
ஆத்தாடி உன் கையிலே குடுப்பேன்
ஆத்தச் சொல்லியே சாப்பிட்டுப் படுப்பேன்
மேலே?
இதுக்கு மேலே சொல்ல மாட்டேண்டி
பொம்பளே
இந்த ஊரில் இருக்க மாட்டேண்டி
நான் இப்போதே போவோணும்
உங்கப்பாவைக் கேட்டு ஏதாச்சும்
வாங்கி வாடி
பட்டணம் தான் போகலாமடி பொம்பளே
பணம் காசு தேடலாமடி
நல்ல கட்டாணி முத்தே என் கண்ணாட்டி நீயும்
வாடி பொண்டாட்டி தாயே
டவுனுப் பக்கம் போகாதீங்க மாப்பிள்ளே
டவுன் ஆயிப் போயிடுவீங்க
அந்த டாம்பீகம் ஏழைக்கு தாங்காது பயணம்
வேண்டான்னா கேளு மாமா
மனுஷனை மனுஷன் இழுக்குற வேலை
வயிறு காய்ஞ்சவன் செய்யிற வேலை
மனுஷனை மனுஷன் இழுக்குற வேலை
வயிறு காய்ஞ்சவன் செய்யிற வேலை
கணக்குக்கும் மீறி பணம் வந்த போது
மனுஷனை சும்மா இருக்க விடாது
என்னை மறந்து உன்னை மறந்து
எல்லா வேலையும் செய்வே துணிந்து
இரவு ராணிகள் வலையிலே விழுந்து
ஏமாந்து போவே .. இன்னும் கேளு ...
போலீசு புலி புடிக்கும் மாப்பிள்ளே
புர்ராவைப் பெயர்த்தெடுக்கும்
அங்கே போவாதே வீணாக சாவாதே மாமா
பொண்ஜாதி பேச்சைக் கேளு
அப்பிடியா? ஆஹா...
நீ உலகம் அறிஞ்ச பொம்மனாட்டி
நான் ஒண்ணுமே தெரியா கம்மனாட்டி
நீ உலகம் அறிஞ்ச பொம்மனாட்டி
நான் ஒண்ணுமே தெரியா கம்மனாட்டி
ஊரு விட்டு ஊரு போனா
சீரு கெட்டுப் போகுமின்னு
ஊரு விட்டு ஊரு போனா
சீரு கெட்டுப் போகுமின்னு
உண்மையோட சொன்ன சொல்லு
நன்மையாக தோணுது
பட்டணம் தான் போக மாட்டேண்டி
உன்னையும் பயணமாக சொல்ல மாட்டேண்டி
நல்ல கட்டாணி முத்தே
என் கண்ணைத் தொறந்தவ நீ தான்
பொண்டாட்டி தாயே
ஏரோட்டிப் பாத்தி பிடிச்சி அதிலே
நீர் பாய்ச்சி நெல்லு விதைச்சி
நம்ம ஊரோட ஒண்ணாக உள்ளதைக் கொண்டு
நாம் உல்லாசமாக வாழ்வோம்
ஏரோட்டிப் பாத்தி பிடிச்சி அதிலே
நீர் பாய்ச்சி நெல்லு விதைச்சி
நம்ம ஊரோட ஒண்ணாக உள்ளதைக் கொண்டு
நாம் உல்லாசமாக வாழ்வோம்
ஊரு விட்டு ஊரு போனா
சீரு கெட்டுப் போகுமின்னு
ஊரு விட்டு ஊரு போனா
சீரு கெட்டுப் போகுமின்னு
உண்மையோட சொன்ன சொல்லு
நன்மையாக தோணுது
பட்டணம் தான் போக மாட்டேண்டி
//புதுப்புது அர்த்தங்கள்" படத்தின் மூலம் மீசையுடனும், கொஞ்சம் நடிப்புடனும்//
வன்மையாக கண்டிக்கிறோம்!
ரகுமான் ரசிகர் மனறம்
தோஹா - கத்தார்
//ஏரோட்டிப் பாத்தி பிடிச்சி அதிலே
நீர் பாய்ச்சி நெல்லு விதைச்சி
நம்ம ஊரோட ஒண்ணாக உள்ளதைக் கொண்டு
நாம் உல்லாசமாக வாழ்வோம்//
இதைத்தான் நான் ஊருல போய் செய்யப்போறேன்!
புதிர் போடச்சொன்னா இப்படியா????
இதுவரைக்கும் ஒருத்தர் மட்டும் சரியான பதில் கொடுத்திருக்கிறார் ;)
அவர் ஆயில்யனோ மைபிரண்டோ இல்லை என்பது கூடுதல் தகவல்
//கானா பிரபா said...
இதுவரைக்கும் ஒருத்தர் மட்டும் சரியான பதில் கொடுத்திருக்கிறார் ;)
அவர் ஆயில்யனோ மைபிரண்டோ இல்லை என்பது கூடுதல் தகவல்
//
ஷேம் ! ஆயில்யா ஷேம்! (மை ப்ரெண்ட் உமக்கும்தான்!)
தொபுக்கடீர் (குதிச்சிட்டேன்!!!!)
ஹய்ய்ய் ஜாலியா இருக்கு இன்னொரு தபா குதிச்சிக்கிறேன்ப்பா!
ப்ளீஸ்
ப்ளீஸ்!!!!
KavadiSindhu? Pakyaraj?
தங்க்ஸ் சரியான கணிப்பு
வாழ்த்துக்கள் ;-)
காவடி சிந்து
இன்னும் ஒருவர் சரியான பதிலோடு வந்திருக்கிறார்.
சும்மா யோசிச்சி சொல்கின்றேன். 'காவடிச் சிந்து' ஆக இருக்குமோ?
இதென்ன விளையாட்டு? சரியா புதிர் போடத்தெரியலன்னு கேஸ் போடப்போறோம்.. பாட்டைப்போடுங்க.. படம் என்னன்னு க்கேளுங்க சரி..வெளியே வராத டப்பாக்குள் போன படத்தைப்பற்றியெல்லாம் கேட்டா என்ன சொல்வது?
காவடிச்சிந்து
நான் அம்பேல், சத்தியமா தெரிலீங்கண்ணா :)
- என். சொக்கன்,
பெங்களூர்.
படம்: காவடிச்சிந்து..
பிரபலங்கள்: பாக்யராஜ், அமலா
தல சரியா... இதுவும் ஈஸின்னு நினைக்கிறேன்...
//இதுவரைக்கும் ஒருத்தர் மட்டும் சரியான பதில் கொடுத்திருக்கிறார் ;)
அவர் ஆயில்யனோ மைபிரண்டோ இல்லை என்பது கூடுதல் தகவல்//
அது தூயா வா..?
//இன்னும் ஒருவர் சரியான பதிலோடு வந்திருக்கிறார்.//
அது ரிஷான்ஷெரீஃப் தானே...?
உள்ளேன் ஐயா ;)
காவடி சிந்து
கலை
சும்மா யோசிச்சு சொன்னதே சரியான விடையாச்சு
அனானி நண்பரே
சரியான கணிப்பு
தமிழ்ப்பறவை
பின்னீட்டிங்
எழினி.ப
சரியான கணிப்பு
நன்றி பிரபா
நன்றி, இம்முறை தந்த புதிருக்கும் அதை ஒரு நாள் முன்னரே தந்ததற்கும்.
அந்த படத்தின் பெயர் காவடிச் சிந்து
நடிகர்கள் பாக்கியராஜ், அமலா
நான் நினைக்கிறேன் இசை கூட பாக்கியராஜ் என்று.
இதற்கு முன்னர் தான் அவரது இது நம்ம ஆளு, ஆராரோ ஆரிராரோ படங்கள் வெளியாகியிருக்க வேண்டும்.
இவர் மீது ஒரு காலத்தில் சற்று நம்பிக்கை இருந்தது. பின்னர் இது நம்ம ஆளு டைரக்ஷன் தொடர்பாக எழுத்தாளார் பாலகுமாரன் சில விடயங்களை மனம் திறந்த பின்னர் ......ம்ம்ம்ம்
வேறென்ன பிரபா....
இப்படம் பற்றி 88 அல்லது 89ல் வெளியான பொம்மை இதழில் ஒரு சிறப்பு கட்டுரையும் பாக்கியராஜ் எம் ஜி ஆர் தொப்பியில் மழையில் நனைந்தபடி ஆடும் ஒரு ப்டமும் வந்தது.
அருண்மொழி வர்மன்
சரியான கணிப்பு, இதே ஆள் தான் இசையும் கூட.
பாலகுமாரனின் பேட்டியை தவறவிட்டுவிட்டேன், அப்படி என்ன சொன்னார்?
//முத்துலெட்சுமி-கயல்விழி said...
வெளியே வராத டப்பாக்குள் போன படத்தைப்பற்றியெல்லாம் கேட்டா என்ன சொல்வது?//
ஆஹா ;-) அதான் ஏகப்பட்ட க்ளூவும், விடைத் துண்டங்களும் கொடுத்திருக்கேனே, ரொம்ப சுலபமான பதில் இது. இந்தப் படப்பெயரில் ஒரு பிரபலமான இசையோடு சம்பந்தப்பட்ட படப்பாட்டு இருக்கு. பாடியவர் ஒரு பெண் குரல். அவருக்கு தேசிய விருதெல்லாம் கிடைச்சுது போதுமா?
//Naga Chokkanathan said...
நான் அம்பேல், சத்தியமா தெரிலீங்கண்ணா :)//
ஆகா நீங்களுமா? உங்களுக்கு ஜிஜிபி ஆச்சே
//தமிழ்ப்பறவை said...
//இன்னும் ஒருவர் சரியான பதிலோடு வந்திருக்கிறார்.//
அது ரிஷான்ஷெரீஃப் தானே...?//
இல்ல தல, அவர் பதிவைப் பார்த்ததும் ஓடி ஒளிஞ்சிருப்பார் இந்நேரம் ;-)
/கானா பிரபா said...
இன்னும் ஒருவர் சரியான பதிலோடு வந்திருக்கிறார்./
தல ஏன் இந்த ஓரவஞ்சனை?????????என்னோட பேரை மட்டும் சொல்லாம அடம் பிடிக்குறீங்க??????
தங்கக்கம்பி
சரியான கணிப்பு வாழ்த்துக்கள்.
நிஜம்ஸ்
நீங்க சரியான விடை சொன்னது என்றால் உங்களிடம் சுட்டு, போட ஆயிரம் பேர் வந்திடுவாங்க என்ற பயம் தான், சரி இப்போ சொல்றேன், கலக்கீட்டீங்
ராகவன்
நீங்கள் தான் முதலில் சொன்ன நேயர் ;-)
////இன்னும் ஒருவர் சரியான பதிலோடு வந்திருக்கிறார்.//
அது ரிஷான்ஷெரீஃப் தானே...?//
இல்ல தல, அவர் பதிவைப் பார்த்ததும் ஓடி ஒளிஞ்சிருப்பார் இந்நேரம் ;-)//
என்ன பாஸ் என்னைய வச்சுக் காமெடி பண்றீங்களா ? ஏதோ விஷேசத்துக்கு 4 நாள் லீவு எடுக்க விடமாட்டீங்களே அண்ணாச்சி :( என்னா ஒரு வில்லத்தனம் ?
அந்தப் படம் 'காவடிச் சிந்து' தானே ?
////இன்னும் ஒருவர் சரியான பதிலோடு வந்திருக்கிறார்.//
அது ரிஷான்ஷெரீஃப் தானே...?//
இப்பத்தான் வந்தேன் தமிழ்ப்பறவை. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா விடையைச் சொல்லிட்டன் ல.
(கானா அண்ணாச்சி,இதுக்காகவாச்சும் பரிசை எனக்குக் கொடுக்கணும் நீங்க )
ரிஷான்
பின்னீட்டீங்க, பார்த்தீங்களா தமிழ்ப்பறவை, ரிஷான் விடையை டக்குனு சொல்லிடுவார்னு சொன்னேல்ல ;-)
http://www.thamilbest.com/ இங்க இந்தப் பதிவ இணைச்சிருக்கேன் அண்ணாச்சி
//http://www.thamilbest.com/ இங்க இந்தப் பதிவ இணைச்சிருக்கேன் அண்ணாச்சி//
மிக்க நன்றி தல
welcome rishan...already i asked praba annachi that not to post any puzzles till rishan's arrival. but he refused my request...
ennaa villathanam...?
but i know u might have answered.
sorry for (poor)english...
so many office nails to pluck
Kaavadichindu
இறுதியாக வந்த தஞ்சாவூர்க்காரன் உட்பட 12 பேர் சரியான விடையளித்திருக்கின்றீர்கள்.
வெளிவராத அப்படம்: காவடி சிந்து
80 களில் பிரபலமான இசையோடு வந்த படத்தின் பாடலில் நினைவூட்டும் அப்படத் தலைப்பு சிந்து பைரவி படத்தில் வரும் "நானொரு சிந்து காவடிச் சிந்து"
போட்டியில் பங்குபற்றியவர்களுக்கும், சரியான பதில் அளித்தோருக்கும் நன்றி நன்றி நன்றி
ஆ, வென்று விட்டேனே :). எனக்கு உண்மையில் அந்த படம் தெரியாது. சும்மா இரண்டு சொற்களை தகவல்படி இணைத்துப் பார்த்தேன். சரியா வந்திட்டுது :).
வாங்கோ கலை
நான் சொன்னனான் தானே இந்தப் போட்டிகள் மிகவும் சுலபமானது என்று.
Post a Comment