வணக்கம் வந்தனம் சுஸ்வாகதம் வெல்கம் to நீங்கள் கேட்டவை 19.
ஒரு சிறிய இடைவேளைக்குப் பின் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. ஏற்கனவே பாடல்களைக் கேட்ட பதிவர்கள் வலை மேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்காங்க. இதோ நீங்கள் கேட்ட பாடல்கள்.
பதிவர் முத்துலெட்சுமி, தன் சக பதிவர் மங்கைக்காகக் கேட்ட பாடல் "முத்துக் குளிக்க வாரீகளா", அனுபவி ராஜா அனுபவி திரைக்காக, டி.எம்.செளந்தரராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி குரல்களில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் மலர்கின்றது.
அடுத்ததாக வெயிலானின் விருப்பமாக, இது நம்ம பூமி திரையில் இருந்து இளையராஜா இசையில் "வான மழை போல " என்ற பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் பாடக் கேட்கலாம்.
சுந்தரி விரும்பிக் கேட்டிருக்கும் " அஞ்சு விரல் கெஞ்சுதடி" பாடலை ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி பாட, மனோஜ்-கியான் இரட்டையர்கள் உரிமை கீதம் திரைக்காக இசையமைத்திருக்கின்றார்கள்.
நிறைவாக நம்ம ஓமப்பொடியார் சுதர்சன் கோபால், ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி திரைப்படத்தில் இருந்து மனோ பாடியிருக்கும் "வந்தாள் வந்தாள் ராஜகுமாரி" பாடலை இளையராஜா இசையில் கேட்டிருக்கின்றார்.
பாடல்களைக் கேளுங்கள், கேட்ட வண்ணம் உங்கள் தெரிவுப் பாடல்களையும் அறியத் தாருங்கள். வட்டா...;)
Powered by eSnips.com |
16 comments:
பாடலுக்கு மிக்க நன்றி!!
வாங்க சுந்தரி,
பாடலைப் போடுவதற்கு கொஞ்சம் தாமதமாகிவிட்டது, ஆனாலு ரசித்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன்.
தல
எல்லா பாடல்களும் அருமை....
அடுத்து நமக்கு ஒரு பாட்டு நம்ம ராசாவோட இசையில..மணிரத்தினத்தின் இயக்கத்தில் வந்த படம் "தளபதி" படத்தில் "அடி ராக்கம்மா கையைத்தட்டு"..இந்த பாடலை போடுங்க.
வாங்க தல
உங்க பாட்டு அடுத்த பதிவில் கட்டாயம் வரும்
ஏண்ணே..எங்கே ஆளைக் காணோம்??
நீங்க வர இம்புட்டு தாமதம் ஆன உடனே உங்களைக் கூட்டியாற பிராது கொடுக்கலாமுன்னு நினைச்சேன்..நல்ல வேளை நீங்களே வந்துட்டீங்க...
1)ஜூலி கணபதி - உனக்குப் பிடித்த பாடல்
2)சுந்தரபுருஷன் - கெட்டப்ப மாத்தி
3)ராஜராஜசோழன் - ஏடு தந்தானடி தில்லையிலே...
வர்ட்டா...
நன்றி கானாப்பிரபா..
நான் மங்கைக்காக கேட்டது போட்டுட்டீங்க அடுத்த தொகுப்பில் நான் எனக்காகக்கேட்டதை போடுவீங்களோ?
நன்றி...லட்சுமிக்கும், பிரபாவிற்கும்
//சுதர்சன்.கோபால் said...
ஏண்ணே..எங்கே ஆளைக் காணோம்??
நீங்க வர இம்புட்டு தாமதம் ஆன உடனே உங்களைக் கூட்டியாற பிராது கொடுக்கலாமுன்னு நினைச்சேன்..நல்ல வேளை நீங்களே வந்துட்டீங்க...//
வாங்கண்ணே
நம்ம ஊர்க்கோயில் திருவிழாவில் கொஞ்சம் மெனக்கெட்டுட்டேன். இனிமே டாண்ணு வந்திடுவேன். உங்க பாட்டு அடுத்த வாரம் வரும்.
//முத்துலெட்சுமி said...
நன்றி கானாப்பிரபா..
நான் மங்கைக்காக கேட்டது போட்டுட்டீங்க அடுத்த தொகுப்பில் நான் எனக்காகக்கேட்டதை போடுவீங்களோ?//
வணக்கம் முத்துலெட்சுமி
நீங்கள் கேட்ட பாட்டு அடுத்த பதிவில் நிச்சயம் வரும்
எல்லாமே நல்ல பாட்டுக.
முத்துக்குளிக்க வாரீகளா! ஆகா ஆகா ஆகா! அப்படியே தூத்துக்குடிக்குப் போனா மாதிரி இருக்கே! ஏலே மக்கா என்னல செய்தீக. பிரபா அண்ணாச்சிக்கி ஒரு எளநி வெட்டுங்கடேய் :)
எல்லாஞ் சரிதான். ரொம்ப நாளா ஒரு பாட்டு கேக்குறேனே...அதப் போடக் கூடாதா? சந்திப்பு படத்துல இருந்து "ராத்திரி நிலாவில் ரகசியக் கனாவில்" பாட்டுதான் அது.
//மங்கை said...
நன்றி...லட்சுமிக்கும், பிரபாவிற்கும்//
வணக்கம் மங்கை
தமிழ்ழ றேடியோஸ்பதிக்குப் புடிக்காத வார்த்தை தனியே நன்றி சொல்றது. நன்றி சொல்லீட்டு நீங்க பாட்டும் கேட்கணும் சரியா? ;))
//G.Ragavan said...
முத்துக்குளிக்க வாரீகளா! ஆகா ஆகா ஆகா! அப்படியே தூத்துக்குடிக்குப் போனா மாதிரி இருக்கே! ஏலே மக்கா என்னல செய்தீக. பிரபா அண்ணாச்சிக்கி ஒரு எளநி வெட்டுங்கடேய் :)//
ஆகா ஆகா எங்கே எளநி/ கொடுங்க சீக்கிரமா ;))
வணக்கம் அண்ணாச்சி, உங்க பாட்டு கூடிய சீக்கிரமே வலையேறும்
வணக்கமுங்க.. கோபி சொல்லி இந்த பக்கம் வந்தேன்.. எனக்கு மனதில் உறுதி வேண்டும் படத்துல டைடில் பாட்டு "மனதில் உறுதி வேண்டும்" கிடைக்குமா?
உங்களுக்கும் ஒரு வணக்கமுங்க
உங்க பாட்டு கூடிய சீக்கிரமே வரும்.
நம்ம தல கோபி கட்சிக்கு ஆளெடுக்கிறாரா ;))
ஆகா! நீண்ட இடைவேளைக்கு பின், நாட்களுக்குப் பின் நீங்கள் கேட்டவை. இல்லையில்லை நாங்கள் கேட்டவை.
நன்றி! பிரபு.
வாங்க வெயிலான்
இந்த முறை நீங்களும் லேட்டா வந்திட்டீங்க ;)
Post a Comment