Pages

Tuesday, July 10, 2007

மரகதமணியின் மயக்கும் இசை



இன்றைய பதிவிலே தமிழ், தெலுங்கு திரையுலகில் 90 களில் குறிப்பிடத்தக்க இசைப்பங்களிப்பை வழங்கிய இசையமைப்பாளர் மரகதமணியின் பாடற் தொகுப்பின் முதற் பகுதி, பாடல்கள் குறித்த அறிமுகங்களோடு இடம்பெறுகின்றது.

கே.பாலசந்தரின் "வானமே எல்லை" திரைப்படத்திற்கு ஒப்பந்தமாகி, ஆனால் அந்தத் திரைப்படம் வெளிவர முன்பே அவரின் கவிதாலயா தயாரிப்பு நிறுவனம் மூலம் சம காலத்தில் தயாரித்த "நீ பாதி நான் பாதி" தமிழில் மரகதமணிக்கு ஒரு அறிமுகத்தைத் தந்தது. இயக்குனர் வசந்த் "கேளடி கண்மணி" திரைப்படத்திற்குப் பின் இயக்கிய திரைப்படம் "நீ பாதி நான் பாதி".
இந்தத் திரைப்படத்தில் இருந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் "நிவேதா" என்ற பாடல் இடம்பெறுகின்றது.

தொடர்ந்து "வானமே எல்லை" திரையில் இருந்து "சிறகில்லை" என்ற பாடல் சித்ராவின் குரலில் ஒலிக்கின்றது. தமிழ்த்திரையுலகப் பிரபலங்களின் வாரிசுக்களை நாயகர்களாக்கி வந்த வானமே எல்லை திரைப்படத்தில் நாகேஷ் மகன் ஆனந்த்பாபு, கண்ணதாசன் மகள் விசாலி, மேஜர் சுந்தரராஜன் மகன் கெளதம் போன்றோர் நடித்திருந்தனர்.


இறுதியாக மம்முட்டியும் மூன்று நாயகிகளும் நடித்த கே.பாலசந்தரின் இயக்கத்தில் வந்த "அழகன்" திரையில் இருந்து "தத்தித்தோம்" என்ற பாடலை சித்ரா பாடுகின்றார். தமிழ்த்திரையிசைப் பாடல்களில் மேற்கத்தேய வாத்தியம் ஒன்றோடு போட்டி போட்டுப் பாடும் மிகச் சில பாடல்களில் இதுவும் ஒன்று. கீபோர்ட் வாத்தியத்தை நாயகன் இசைக்க, போட்டியாக வருகின்றது நாயகியின் பாடல், தன் மனவெளிப்பாடாக.

12 comments:

பாரதிய நவீன இளவரசன் said...

Maragadhamani is popular as KEERAVAANI. Keeravaani is at his best in Bharathan's malayalam film DEVA RAAGAM (Stg: Sridevi) in 1996. Earlier, he also composed in Subhasankalpam, a K.Vishwanath flim. He got national award for his composition in ANNAMAYYA (Stg: Nagarjuna).

He is also known in Hindi movie circles (but as M.M.Kreem)...Sur, Zhakm, Jism are the few Hindi movies that he composed music.

வந்தியத்தேவன் said...

பிரபா மரகதமணியின் முதல் வெளிவந்த படம் அழகன் என நினைக்கிறேன் ஏன் எனெனில் அந்தப் படம் விமர்சனத்தில் ஆனந்தவிகடன் இவர் தமிழ்த் திரையுலக்கிற்க்கு இடைட்த இன்னொரு சிறந்த இசையமைப்பாளர் என எழுதியிருந்தார்கள். அழகனில் பல பாடல்கள் அற்புதமானவை. ஆனால் பிற்காலத்தில் இவர் கீரவானி என்ற பெயரில் மளையாள சினிமாவில் மூழ்கிவிட்டார். இறுதியாக ஸ்ருடண்ட் நம்பர் 1 என்ற படத்திற்க்கு இசையமைத்திருந்தார். அதில் விழாமலே இருக்கமுடியுமா சிறந்த பாடல்.

http://www.enularalkal.blogspot.com

கானா பிரபா said...

வணக்கம் வந்தியத் தேவன்

தமிழில் மரகதமணியின் இசையில் "அழகன்" முதலில் வெளிவரவில்லை. நான் ஒலிப்பதிவில் குறிப்பிட்டது போல் பாலசந்தரின் தயாரிப்பில் சமகாலத்தில் உருவான "நீ பாதி நான் பாதி" மற்றும் "வானமே எல்லை" படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். "நீ பாதி நான் பாதி" முந்திக்கொண்டது. இந்த மூன்று படங்களுமே 1991 இல் தான் வந்தன.

Anonymous said...

Azhagan is a masterpiece indeed!

சிநேகிதன்.. said...

அருமை... கானா அண்ணா உங்கள் வர்ணனையில் பின்னனியாக வரும் இசை எந்த திரைப்படம்???

கானா பிரபா said...

சிறீகாந்

உண்மை தான் அழகன் பாடல்கள் இன்றைக்கும் எவ்வளவு தரமும் கேட்டுக்கொண்டேயிருக்கலாம்,

வணக்கம் சினேகிதன்

ஒலிப்பதிவைக் கேட்டு உங்கள் கருத்தை அளித்தமைக்கு மிக்க நன்றிகள், என் பின்னணி இசை "சீனி கம்" ஹிந்தி திரைப்படத்தின் மூல இசையாகும்.

G.Ragavan said...

அருமையான பாடல் பிரபா. மிகவும் பிடித்த பாடலும் கூட. மரகதமணி நல்ல இசையமைப்பாளர். ஆனாலும் சில படங்களே செய்துள்ளார்.

சிநேகிதன்.. said...

\\என் பின்னணி இசை "சீனி கம்" ஹிந்தி திரைப்படத்தின் மூல இசையாகும்.\\
நன்றி அண்ணா!! அருமையான இசை!! ராஜா ராஜா தான்!!!

Sud Gopal said...

வானமே எல்லையில் எல்லாப் பாடல்களுமே நன்றாக இருக்கும்.

நீ ஆண்டவனா,ஜனகனமண என,நாடோடி மன்னர்களே,கம்பங்காடு... என் விருப்பவரிசைப்படி..

இவரோட தங்கை ஸ்ரீலேகா தான் இந்தியாவிலேயே(உலகிலேயே..???)மிகக் குறைந்த வயதில் திரை இசையமைப்பாளர் ஆனவர்.இளைய தளபதி அறிமுகமான "நாளைய செய்தி"க்கு இசையமைத்தவர் ஸ்ரீலேகா தான்.

ஹிந்தியில் ஜிஸ்ம்,பஹேலி போன்ற சமீபத்திய படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார் கீரவாணி.

பிரபா உங்கள் தெரிவுகள் ஒவ்வொன்றும் முத்துகள்..(இருந்தாலும் நீ ஆண்டவனாவைப் போட்டிருந்தா இன்னும் கொஞ்சம் மகிழ்ந்திருக்கலாம்.ஆசை யாரை விட்டது ;-))

கானா பிரபா said...

//Bharathiya Modern Prince said...
Maragadhamani is popular as KEERAVAANI. Keeravaani is at his best in Bharathan's malayalam film DEVA RAAGAM (Stg: Sridevi) in 1996.//

பாரதத்தின் நவீன இளவரசே வாருங்கள் ;-)

மரகதமணியின் ஒலித்தொகுப்பு இன்னும் 2 பாகமிருக்கின்றது, அதில் நீங்கள் குறிப்பிட்ட தேவராகம், அன்னமய்யா பாட்டுக்களும் தகவல்களும் வரும்.

உங்கள் கருத்துக்களுக்கு என் மேலான நன்றிகள்.

கானா பிரபா said...

// G.Ragavan said...
அருமையான பாடல் பிரபா. மிகவும் பிடித்த பாடலும் கூட. மரகதமணி நல்ல இசையமைப்பாளர். ஆனாலும் சில படங்களே செய்துள்ளார்.//

வணக்கம் ராகவன்

தமிழில் இவர் செய்த படங்கள் குறைவு என்றாலும் பாடல்கள் எல்லாமே அருமை.

கானா பிரபா said...

//சுதர்சன்.கோபால் said...
பிரபா உங்கள் தெரிவுகள் ஒவ்வொன்றும் முத்துகள்..(இருந்தாலும் நீ ஆண்டவனாவைப் போட்டிருந்தா இன்னும் கொஞ்சம் மகிழ்ந்திருக்கலாம்.ஆசை யாரை விட்டது ;-)) //


வாங்க சுதர்சன்

வானமே எல்லையில் எனக்கு பிடிச்ச முதல் பாட்டு " சோகம் இனியில்லை". கவலை வேண்டாம் மற்றப்பாடல்களையும் ஒரு சிறப்புப் படையலில் தருகின்றேன்.