Pages

Saturday, March 24, 2007

S.கணேசராஜ் நினைவில் சின்னத்தாயி பாடல்கள்



தமிழ் சினிமா இயக்குநர் S.கணேசராஜ் நேற்று 23 மார்ச் காலமானதாக செய்தியில் வந்த போது உடன் என் நினைப்பில் வந்தது தாயகத்தில் நான் இருந்த காலகட்டத்தில் 92 ஆம் ஆண்டு "சின்னத்தாயி" என்ற கணேஷ்ராஜ் இயக்கத்தில் வெளிவந்த படத்தின் பாடல்கள்.





அன்றைய காலகட்டத்தில் மின்சாரவசதி இல்லாத காலத்தில் யாழ்ப்பாணம் , ஷண் ரெக்கோடிங்க் பார் என்ற ஒலிப்பதிவுக் கூடத்தில் ஒலிநாடாவில் பதிவு செய்து சைக்கிள் சக்கரம் சுற்றிக் கேட்ட பாடல்களை மீண்டும் இரை மீட்கின்றேன். இப்பதிவில் என் குரற் பதிவோடு சின்னத்தாயி படப்பாடல்களையும் நீங்கள் கேட்கலாம்.
இயக்குநர் S.கணேசராஜ் அவர்களுக்கு என் அஞ்சலிகள்.

சின்னத்தாயி பாடல்கள் பற்றி நான் பேசுகிறேன்



பாடல்களைக் கேட்க

4 comments:

துபாய் ராஜா said...

அன்பு பிரபா ! அன்னாரது மறைவிற்கு
ஆழ்ந்த வருத்தங்கள்.சின்னத்தாய் படப்பாடல்கள் அனைத்தும் கிராமியப்பின்னணியில் அமைந்த சிறப்பான பாடல்கள்.

குறிப்பு:எங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 'செவல்' கிராமத்தில் நடந்த கதையாதலால்
'செவலு சின்னத்தாய்' என்றுதான் முதலில் பெயரிடப்பட்டது.
படப்பிடிப்பும் அக்கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில்தான் நடந்தது.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பிரபா!
இயக்குநர் மறைவுக்கு அனுதாபங்கள்!
இப்படம் பார்த்த ஞாபகம் இல்லை.பாடல்கள் நல்ல துல்லியமாக இருக்கிறது. வார்த்தைகள் அச்சொட்டாக ஒலிக்கிறது.
கிராமிய இளையராஜா....கலக்கிறார்.
நல்லா ஆய்வு செய்கிறீர்கள்.

கானா பிரபா said...

//raja said...
அன்பு பிரபா ! அன்னாரது மறைவிற்கு
ஆழ்ந்த வருத்தங்கள்.சின்னத்தாய் படப்பாடல்கள் அனைத்தும் கிராமியப்பின்னணியில் அமைந்த சிறப்பான பாடல்கள்.

குறிப்பு:எங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 'செவல்' கிராமத்தில் நடந்த கதையாதலால்
'செவலு சின்னத்தாய்' என்றுதான் முதலில் பெயரிடப்பட்டது.//

வணக்கம் ராஜா

திருநெல்வேலி மாவட்டத்து மக்களின் ரசனைக்கும் ஈழத்தவரின் ரசனைக்கும் பல இடங்களில் பொருந்திப் போகின்றது. சின்னத்தாயி பாடல்கள் வெளிவந்த காலகட்டத்தில் காலை, மதியம், மாலை இப்பாடல்கள் தான் என் செவியை நிறைத்தன.

உங்களின் மேலதிக தகவல்களை ரசித்தேன். இப்படியான தகவல்களை நான் தேடிப்படிப்பதுண்டு. மிக்க நன்றிகள்

கானா பிரபா said...

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
இப்படம் பார்த்த ஞாபகம் இல்லை.பாடல்கள் நல்ல துல்லியமாக இருக்கிறது. வார்த்தைகள் அச்சொட்டாக ஒலிக்கிறது.
கிராமிய இளையராஜா....கலக்கிறார்.//

வணக்கம் யோகன் அண்ணா

இப்படம் வெளியே பெரிதாகப் பிரபலமாகவில்லை. பாடல்கள் அனைத்தும் 100 வீத கிராமியத்தென்றல். அதனால் தான் எனக்கும் இவற்றில் ஈர்ப்பு வந்ததோ தெரியவில்லை. வருகைக்கு நன்றிகள்.