2008 ஆம் ஆண்டின் விளிம்பில் நின்று கொண்டிருக்கின்றோம். இந்த ஆண்டைப் பொறுத்தவரை எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் சாதனைகளை விடை வேதனைகளையும், சோதனைகளையும் சம்பாதித்த ஆண்டு. உலகெங்கும் ரத்த வெறி பிடித்து அலையும் போர் அரக்கனின் கோரத்தாண்டம் இந்த ஆண்டிலும் தன் ஈடு இணையற்ற கொடுமையைக் காட்டியது. பிறக்கப் போகும் 2009 ஆம் ஆண்டு ஒரு சுபீட்சமான ஆண்டாக அமைய வேண்டும். வீட்டுக்கும், நாட்டுக்கும் நிரந்தர நிம்மதியை ஒரு இனிய இசை கொடுக்கும் திருப்தியை வழங்க வேண்டும் என்று பிரார்த்தித்து என்னோடு கூடப் பயணித்தவர்களுக்கும், பயணிக்க இருப்பவர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றேன். உங்கள் அனைவருக்காகவும் சிறப்புப் பாடலாக "எல்லோருக்கும் நல்ல காலம் உண்டு நேரம் உண்டு வாழ்விலே" என்ற கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் மறுபடியும் திரைப்பாடலை அர்ப்பணிக்கின்றேன்.Ellorukkum - Jesudas
கடந்த ஒருவாரமாக றேடியோஸ்பதியின் சிறந்த இசைக்கூட்டணிப் போட்டியை வைத்திருந்தேன். இதன் மூலம் வலைப்பதிவு வாசகர்களின் நாடித்துடிப்பை அறிய 2008 இல் சிறந்த இயக்குனர் - இசையமைப்பாளர் என்று இசைக்கூட்டணியாக அமைந்த ஒரு பட்டியலையும் கொடுத்திருந்தேன். இன்றோடு அதன் வாக்கெடுப்பு ஒரு முடிவுக்கு வந்து, இதுவரை கிடைத்த முடிவுகளின் படி வாக்கெடுப்பில் பங்கேற்ற 114 பேரில் 41 பேர் ஹாரிஸ் ஜெயராஜ் - கெளதம் வாசுதேவ மேனன் இணைந்த வாரணம் ஆயிரம் கூட்டணிக்குத் தம் வாக்குகளை அளித்து முதல் இடத்தில் அமையும் இசைக் கூட்டணியாக அமைத்திருக்கின்றார்கள்.
அடுத்ததாக 30 வாக்குகள் அளித்து ஜேம்ஸ் வசந்தன் - சசிகுமார் கூட்டணிக்கு இரண்டாவது இடத்தையும், 9 வாக்குகளைப் பெற்று சரோஜாவில் இணைந்த யுவன் ஷங்கர் ராஜா - வெங்கட் பிரபு கூட்டணிக்கு மூன்றாவது இடத்தையும் அளித்திருக்கின்றார்கள். வாக்கெடுப்பில் பங்கேற்ற அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி நன்றி நன்றி ;-)
முழுமையான வாக்கெடுப்பின் முடிவுகளைக் காண
