Thursday, September 2, 2010
பொப்பிசைச் சக்கரவர்த்தி A.E.மனோகரனுடன் ஒரு கல(கல)க்கல் மாலைப்பொழுதில்
""சுராங்கனி" என்ற பைலாப்பாடலுக்கு நாற்பது வயசுக்கு மேலிருக்கும் ஆனால் அந்தப் பாடலை எங்கே கேட்டாலும் நான்கு நாட்களுக்கு முன் பிறந்த குழந்தை கூடத் தொட்டிலில் இருந்து பைலா ஆட்டம் ஆடும். அந்த அளவுக்குப் பெரும் புகழ்பெற்ற இந்தப் பாட்டுக்குச் சொந்தக்காரர் பொப்பிசைச் சக்கரவர்த்தி A.E.மனோகரன் அவர்கள்.
பாடகராக, நடிகராக இன்றும் இளமைத் துடிப்போடு உலகெங்கும் ஓடியோடி ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் மிதக்கவைக்கும் தன் இசைப்பயணத்தைத் தொடர்ந்து வரும் மனோகரன் அவர்கள் அவுஸ்திரேலியாவுக்குப் பல தடவைகள் வந்திருந்தாலும் எட்ட இருந்து அவரை ரசித்துப் பார்க்கும் கடைக்கோடி ரசிகர்களில் நானும் ஒருவன். இம்முறை அவுஸ்திரேலியாவின் பேர்த், மெல்பன் நகரங்களோடு சிட்னிக்கும் வந்து தன் பைலாப்பாடல்களால் கலக்க வந்திருக்கும் இவரை நேற்று வானொலிக் கலையகத்தில் நேரே சந்தித்துப் பேசி மகிழ ஒரு வாய்ப்புக் கிட்டியது.
ஆண்டாண்டுகாலமாகப் பழகியவர் போன்று இயல்பாகப் பேசி , நகைச்சுவைத்துக் கலகலப்பான ஒரு மாலை நேரத்தை வானொலி ரசிகர்களுக்கும் எங்களுக்கும் அவர் ஏற்படுத்தி விட்டார். நெடு நாள் ஆசையாக அவரை வானொலிப் பேட்டி காணும் ஆசையில் ஒரு பாதியாக இந்தப் பேட்டி அமைந்து விட்டது. இன்னொரு பேட்டியில் இவரது வாழ்க்கைப் பயணத்தைப் பெட்டக நிகழ்ச்சியாக உருவாக்க ஆவல் கொண்டிருக்கின்றேன்.
நேற்று அவர் தந்த இந்த கலகல பேட்டியைக் கேட்டுப்பாருங்கள், பேச்சோடு பாடியும் ஆடியும், தன் ரசிகர்களோடு பழைய நினைவுகளை இரைமீட்டும் ஒரு பைலாப் பேட்டியாக அமைந்து விட்டது இது ;)
நாளை மறுதினம் செப்டெம்பர் 4 ஆம் திகதி A.E.மனோகரன் அவர்களுடன் தென்னிந்தியத் திரைப்படப்பாடகி T.K.கலா, மலேசியப் பாடகர் ராஜராஜசோழன் ஆகியோரின் கலக்கல் இசை நிகழ்ச்சியை சிட்னி ரசிகர்கள் தவற விடாதீர்கள்.
பேட்டியின் நடுவே பாடிக் குஷிப்படுத்தும் A.E.மனோகரன் அவர் அருகே தீவிர ரசிகர் கலைச்செல்வன்
A.E.மனோகரன் அவர்களது பிரபலமான பாடல்களில் சில
சுராங்கனி சுராங்கனி
அன்பு மச்சாளே எந்தன் ஆசை மச்சாளே
சில சில பாவையர்
மால்மருகா எழில் வேல்முருகா நீயே
பிரண்டி, பியர், விஸ்கி போடாதே
பறந்து வந்து பாடுகின்றேன்
சிறு சின்னஞ்சிறிய என் வயதினிலே
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
சூப்பர் பாஸ்
சுராங்கனி குழுவாக பாடிய மாணவ பருவத்து க்ரூப்ஸ்ல நாங்களும் உண்டேய்ய்ய்ய்ய்!
interview kku thanks kana ..
ஆயில்யன் said...
சூப்பர் பாஸ்
சுராங்கனி குழுவாக பாடிய மாணவ பருவத்து க்ரூப்ஸ்ல நாங்களும் உண்டேய்ய்ய்ய்ய்!//
நாங்க இப்பவும் பாடுவோமே ;)
//சுராங்கனி" என்ற பைலாப்பாடலுக்கு நாற்பது வயசுக்கு மேலிருக்கும் ஆனால் அந்தப் பாடலை எங்கே கேட்டாலும் நான்கு நாட்களுக்கு முன் பிறந்த குழந்தை கூடத் தொட்டிலில் இருந்து பைலா ஆட்டம் ஆடும்//
//நாங்க இப்பவும் பாடுவோமே ;)//
காபி அண்ணாச்ச்சி
இப்பவும் பாடுவதற்கு மகிழ்ச்சியே!
பைலா ஆட்டம்-ன்னா என்ன?
கொஞ்சம் ஆடியும் காட்டுங்களேன்!
வானொலி நிகழ்ச்சி சூப்பர்! வெறுமனே தகவல், தற்பெருமை-ன்னு பேட்டியாக இல்லாமல், நினைவுகளும் சிரிப்புமாய்...கலகல...கலக்கல்!
சுராங்கணி ஆல் டைம் ஹிட் என்றாலும், எனக்கு இப்பல்லாம் ரொம்ப பிடிச்சது...
பிரண்டி, பியர், விஸ்கி போடாதே :)
எப்பமே பிடிப்பது:
மால்மருகா எழில் வேல்முருகா! மாலில் தொடங்கித் தான் என் முருகனில் முடிப்பார்! :)
கலக்கல் தொகுப்பு தல...சுராங்கனி பாட்டு எல்லாம் கல்லூரியில படிக்கும் பாடம் போல ஒரு பாடம் அது கண்டிப்பாக எல்லாரும் பாடிதான் திருவாங்க ;)
எந்த வயதிலும் நீங்காத ஒரு நினைவு பாடல். பாராட்டுக்குரிய ஒருசிறந்த கலைஞன். சின்னத்திரை நாடகங்களிலும,பிரபலமானவர்.ஈழத்தவர்என்பதில் பெருமைப்படுகிறோம். வாழ்க அவர் சேவை பல ஆண்டுகள் நிலைக்கட்டும்.
அருமை, பழய நினைவுகளை அள்ளிக்கொண்டு வருகிறது
முத்துலெட்சுமி/muthuletchumi said...
interview kku thanks kana ..
//
வருகைக்கு நன்றி முத்துலெட்சுமி
கே.ஆர்.எஸ் மச்சி
ஆடி எல்லாம் காட்டமுடியாது இப்ப ஆவணி வந்திட்டுதே ;)
இவ்வளவு புகழ் நிரம்பிய மனிதர் இயல்பாகப் பேசியது எனக்கும் ஆச்சரியம் தான் பாஸ் ;)
வாங்க தல கோபி ;)
நிலாமதி
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வருகைக்கு மிக்க நன்றி சின்னப்பயல் நண்பரே
நானும் சிலோன் மனோகரன் அவர்களை சந்திச்சிருக்கேனே. கொழும்புவில் விஷன்ஸ் போட்டோ ஸ்டுடியோ லிஃப்டில் சந்தித்தேன். அந்த சிரித்தமுகம். சின்ன மாமியே உந்தன் சிலுக்கு முகமெங்கே பாடலும், சுராங்கனி பாடலும் அப்போது காதில் ஒலித்தது.
GREAT! PLEASE CONTINUE YOUR GOOD SERVICES!
சுராங்கனி பாட்டை மலேசிய டிவியில் மலாய் நண்பர் பாடி கேட்டதுண்டு.....
Post a Comment