Pages

Sunday, June 7, 2009

அன்று இளையராஜா போட்ட மெட்டு; இன்றைய யுவனுக்கும் சேர்த்து

"யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்" என்பார்கள். தென்னிந்திய இசைச் சகாப்தத்தில் இசைஞானி இளையராஜாவின் இசைமரபினைப் பின்பற்றிய விழுதுகளாக அவரின் பாணியை எடுத்தாண்டு வாழ்ந்து போன இசையமைப்பாளர்கள் உண்டு, இன்று இசைஞானி இளையராஜாவின் திரையிசைப் பங்களிப்பு என்பது 80களில் கோலோச்சிய தனியதிகாரம் என்ற நிலை கடந்து இன்று மற்றைய இசையமைப்பாளர்களோடு பங்கு போட்டுப் பயணிக்கின்றது. இந்த நிலையில் அண்மைய இரண்டு வருடங்களாக சினிமாவில் ரீமிக்ஸ் வைரஸ் பரவியபோது ராஜாவின் முத்தான பழைய பாடல்களையும் அது விட்டுவைக்கவில்லை. தவிர வெங்கட்பிரபுவும், பிரேம்ஜியும் சேர்ந்து கூட சில ஆண்டுகளுக்கு முன்னர் இளையராஜாவின் பாடல்களை ஓரளவு ரசிக்கும் வகையில் மீள் இசையாகக் கொடுத்திருந்தார்கள். அந்த இசைத்தட்டையும் அனுபவித்து வருகின்றேன்.

இளையராஜாவின் பாடல்களைப் படங்களில் ரீமிக்ஸ் என்னும் மீள் இசைவடிவமாகக் கொடுப்பதோடு மட்டும் நின்று விடாது, "சுப்ரமணியபுரம்" , "பசங்க" போன்ற படங்களில் அவரின் பாடல்களை உள்ளே லாவகமாகப் பின்னணியில் படரவிட்ட காட்சியமைப்புக்கள் கூட அப்படங்களின் வெற்றியில் சிறிது பங்கு போட்டுக் கொண்டன.

இப்போது இது பரிணாம வளர்ச்சி கண்டு இன்று இளையராஜாவின் பாடலையே ஒரு படத்தின் முக்கியமான காட்சியமைப்புக்கு பின்னணி இசையாக மாற்றிக் கொடுக்கும் ட்ரெண்ட் வந்துவிட்டது, அதை ஆரம்பித்து வைத்துப் புண்ணியம் கட்டிக் கொண்ட பெருமை இசைஞானியின் வாரிசு யுவனுக்கே போய்ச் சேர்ந்திருக்கின்றது. முன்னர் தன் தந்தை இளையராஜா "பாரதி" படத்தில் இசையமைத்துக் கொடுத்த "நல்லதோர் வீணை செய்தே" என்ற பாடலை விஜய் நடிப்பில் உருவான "புதிய கீதை" படத்தின் இறுதிக்காட்சியில் நுழைத்த யுவன், இன்று "சர்வம்" படத்தின் ஆர்யா, த்ரிஷா காதல் காட்சிகளுக்காக தன் தந்தையின் இன்னொரு இசை வடிவத்தை மீள் இசைவடிவம் கொடுத்துப் பயன்படுத்தியிருக்கிறார்.

வாழ்க்கை திரைப்படத்தில் இடம்பெற்ற மெல்ல மெல்ல என்னைத் தொட்டு என்ற பாடலை பி.சுசீலாவும் ராஜ் சீதாராமனும் இப்படிப் பாடியிருந்தார்கள்.

பாடலைக் கேட்க


இந்தப் பாடலில் பயன்படுத்தப்பட்ட இசைவடிவம் இதற்கு முன்னரேயே 1983 இல் கன்னடத்தில் மணிரத்னம் இயக்கிய "பல்லவி அனுபல்லவி" படத்தின் முகப்பு இசையில் இப்படிப் பயன்படுத்தப்பட்டிருந்தது.

இசையைக் கேட்க



கூடவே அந்தப் படத்தின் முக்கிய காட்சி ஒன்றிலும் பயன்படுத்தப்பட்டது, அதன் காணொளி இதோ.


1983 இல் பல்லவி அனுபல்லவி படத்தில் பிரசவித்த இந்த இசைஞானியின் இசை 26 வருஷங்கள் கழித்து அவர் வாரிசு யுவனால் "சர்வம்" படத்திற்காகப் பயன்படுத்தப்பட்டதை பிரித்தெடுத்துத் தொகுப்பாக இங்கே அளிக்கின்றேன். இந்த இசைக் காட்சிகள் படத்தின் இடைவேளை வரை வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில் இந்த சர்வம் படத்தில் பயன்படுத்தப்பட்ட இசையை மொபைல் போனின் ரிங் டோனாக நீங்கள் பயன்படுத்தும் வசதிக்காக எடிட் பண்ணி இங்கே தருகிறேன், தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

தரவிறக்கம் செய்ய

வாழ்க்கை படத்தில் வந்த மெல்ல மெல்ல என்னைத் தொட்டு பாடலில் வந்த முகப்பு இசையை மொபைல் போனின் ரிங் டோனாக நீங்கள் பயன்படுத்தும் வசதிக்காக இங்கே தருகிறேன், தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

தரவிறக்கம் செய்ய

தொடர்ந்து சர்வம் படத்தில் முக்கிய காட்சிகளில் வந்த அந்த இசை மெட்டை ஒரு சில இடங்களில் வெவ்வேறு இசைக்கருவிகளைக் கொண்டு வேறுபடுத்தியிருக்கிறார் கேட்டு அனுபவியுங்கள்.

காட்சி ஒன்று


காட்சி இரண்டு


காட்சி மூன்று


காட்சி நான்கு


காட்சி ஐந்து


காட்சி ஆறு


காட்சி ஏழு


காட்சிஎட்டு


காட்சி ஒன்பது


காட்சி பத்து


ஆர்யா மேல் த்ரிஷாவுக்கு வரும் காதல்காட்சியோடு நிறைவு பெறுகிறது இந்த இசைஜாலம் இப்படியான ஒரு முத்தாய்ப்பான கலக்கல் இசையோடு

32 comments:

ஆயில்யன் said...

மீ த உள்ளேன் அய்யா!)

ஆபிஸ்ல பிசியா இருக்கும்போது பதிவு போட்டா அட்டெண்ட்ன்ஸ் மட்டும் தான் போட இயலும் தல !

இன்னும் ஸ்பீக்கர் வசதி எல்லாம் செஞ்சு தர்ல ஆபிஸ்ல :(

M.Rishan Shareef said...

அருமையான பதிவு கானாபிரபா. உங்கள் தேடல் வியக்கவைக்கிறது.

நீங்கள் சொல்வது சரிதான்..சுப்ரமணியபுரம் படத்தில் சிறு பொன்மணி அசையும் பாடலை இன்று எங்கு கேட்டாலும் சுப்ரமணியபுரம் படம்தான் நினைவுக்கு வருகிறது. ராஜாவுக்கு வயதாகும். இசைக்கு வயதாகுவதேது?

நல்ல பதிவு..தொடருங்கள் நண்பரே !

thamizhparavai said...

கலக்கல் தலை ,.... பின்னிட்டீங்க...
நானும் இன்னைக்குதான் சர்வம் பார்த்துட்டு முதல் பாதியை எஞ்சாய் பண்ணிட்டிருந்தேன்...
ராஜா ராஜாதான்...
//ராஜாவுக்கு வயதாகும். இசைக்கு வயதாகுவதேது?//
கவிஞரே சொல்லிட்டாரு அப்புறமென்ன...?!

சரவணகுமரன் said...

வாழ்க்கை - பல்லவி அனுபல்லவி

எது வந்தது முதலில்?

கோபிநாத் said...

தல

அசத்திட்டிங்க ;)

கானா பிரபா said...

சரவணகுமரன் said...

வாழ்க்கை - பல்லவி அனுபல்லவி

எது வந்தது முதலில்?//

தல

நீங்க இந்தக் கேள்வியைக் கேட்டதும் ஒரு தபா செக் பண்ணினேன், பல்லவி அனுபல்லவி தான் முதலில் வந்தது 1983 இல், பதிவிலும் திருத்தி விட்டேன், நன்றி :)

கோபிநாத் said...

ஒரு பெண்ணை பார்த்தவுடன் தனக்கு ஏற்படும் காதலை நாயகன் இப்படி சொல்லுவான் "மனசுக்குள்ள இசையராஜா மீசிக் கேட்டது போல இருந்துச்சி" வராணம் ஆயிரம் படத்தில். அந்த நாயகியை கவர்வதற்க்கு கூட ராஜாவோட இசை தான் உடனே வரும்.

இப்படி பல படங்களை சொல்லிக்கிட்டே போகலாம்.

சரவணகுமரன் said...

//பல்லவி அனுபல்லவி தான் முதலில் வந்தது 1983 //

அப்படி நான் கேள்விப்பட்டதால் தான், கேட்டேன்.

பல்லவி அனுபல்லவி - பின்னணி இசையாக உணர்வு பூர்வமாக இருக்கும்.

வாழ்க்கையில் சில்க் ஆடும் கிளப் சாங். என்னவோ போல் இருக்கும்.

ISR Selvakumar said...

உங்கள் இசை கலந்த பதிவுகள் யாவும் நன்றாக உள்ளன.

உங்களது (இளையராஜா) ஆர்வம் வெகுவாக என்னைக் கவர்கிறது.

Anonymous said...

Lakshmi - how good was her look then.She was an actress who had glamour and beauty, grace and talent combined together.Still she has her own charm, even at this age.

M.G.ரவிக்குமார்™..., said...

ரொம்ப ரொம்ப நன்றீங்கய்யா......ரிங்க்டோன் download பண்ணிட்டேன்.

Anonymous said...

அருமையா இருக்கு கானா இந்தப்பதிவு

கானா பிரபா said...

ஆயில்ஸ்

அதையும் பண்ணிக்கொடுக்கச் சொல்லிக் கேட்குறது :0

ரிஷான்

வருகைக்கு நன்றி :)

தமிழ்ப்பறவை

மிக்க நன்றி தல :)

தல கோபி

ராஜாவின் நினைவுகள் என்றும் அழியாம இருக்கும் என்பதற்கு நீங்க சொன்ன உதாரணங்கள் சேர்த்து காட்டலாம் இல்லையா.

கலைக்கோவன் said...

ரிங் டோனுக்கு நன்றி..,
பதிவுக்கும் தான்

G.Ragavan said...

மிக நல்ல பாட்டு. திரைப்படப்பாடலை பின்னணி இசையாகப் பயன்படுத்துவது அறுவதுகளில் மெல்லிசை மன்னர் தொடங்கினாலும்... எழுபதுகளில் அதை அளவுக்கு மீறிப் பயன்படுத்தித் திகட்ட வைத்தார்கள் சங்கர்-கணேஷ். நல்ல வேளையாக இளையராஜாவின் இசை மாற்றத்தைக் கொண்டு வந்தது.

மெல்லமெல்ல பின்னணி இசை பல்லவி அனுபல்லவியில் நன்றாக இருந்தாலும்.... வாழ்க்கை படப்பாடலில் அது மேம்பட்டு முழுமைப்பட்டிருப்பது போலத் தோன்றுகிறது.

காட்சியமைப்பைத் தவிர்த்து விட்டுச் சொன்னது மேலுள்ள கருத்து.

இளையராஜாவிற்குப் பிறகான இசையமைப்பாளர்களில் அவருடைய பாதிப்பில்லாத இசையமைப்பாளர்களே கிடையாது எனலாம். அவருக்கு முந்திய மெல்லிசை மன்னரே... இளையராஜாவின் வருகைக்குப் பிறகு அவரைத் தன்னுடைய இசையில் பாட வைத்ததில் இருந்து இதைத் தெரிந்து கொள்ளலாம். இதில் யுவனெல்லாம் எம்மாத்திரம்.

நாரத முனி said...

தல சொன்னத செஞ்சிடீங்களே!!

Anonymous said...

அட்டகாசமான தொகுப்பு கானா பிரபா, நன்றி!

என்னய்யா அநியாயமா இருக்கு, ‘சர்வம்’ பிஜிஎம்க்கு யுவன் வாங்கின தொகையில பாதிப் பணம் நியாயப்படி இளையராஜாவுக்குதான் போகணும் - ஒரே ட்யூனை வெச்சுகிட்டு உருட்டி உருட்டி விளையாடியிருக்காரே!

- என். சொக்கன்,
பெங்களூர்.

மாயா said...

அருமையான தொகுப்பு அண்ணா !

கானா பிரபா said...

சரவணகுமார்

அந்த சில்க் ஆடும் காட்சிப்பாட்டை ஒரு அருமையான காதல்பாட்டுக்கு பாவித்திருந்தால் இன்னும் நினைவில் காட்சியும் நிறைந்திருக்கும் இல்லையா.

வணக்கம் செல்வக்குமார்

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.

//Anonymous said...

Lakshmi - how good was her look then.She was an actress who had glamour and beauty, grace and talent combined together.//

வாங்க நண்பரே

அவர் சிவகுமார் போல மார்க்கண்டேயணி, நடிப்பிலும் கூட

வருகைக்கு நன்றி நேசன்

கானா பிரபா said...

சின்ன அம்மணி

மிக்க நன்றி, இசையை அனுபவித்ததுக்கு :)

கலைக்கோவன்

நன்றி தல :)

ராகவன்

உங்கள் கருத்தோடு முழுதும் ஒத்துப் போகின்றேன், விரிவான பகிர்வுக்கு நன்றி

நாரதமுனி

சொன்னதைச் செய்துட்டோம்ல :)

வணக்கம் சொக்கரே

பாதிப்படமே ராஜா தானே :) ஆனா வாரிசு கணக்கில் இருந்து ட்ராஸ்பர் பண்ணிடுவார் போல

வருகைக்கு நன்றி மாயா

Unknown said...

தல டெம்பிளேட் நல்லா இருக்கு.

நானும் கேள்விப் பட்டேன்.கேட்டேன்.
முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

How to name it இசைக் கூட
இதயத்தைத் திருடாதே படத்தில் பின்னணியாக வரும்.இன்னொரு படத்திலும் வரும்.

இதயத்தைத் திருடாதே என்றதும் உடனே ஞாபகம் வருகிறது.அயன் பாட்டில் வரும் கிடார் இசை (நெஞ்சே..நெஞ்சே) ஹாரிஸ் இதயத்தைத் திருடாதேயில் இருந்து சுட்டுட்டாரு கேட்டிங்களா?

தல A.M.ராஜா மகன் ராஜா இசையில் பாடிய “காத்திருந்தால்”(இந்த வரிதான் என்று ஞாபகம்) பாட்டு இருக்கிறதா?


இரு பொன்மனி அசையும்...ஆஹா..
என்ன பாட்டு தல. வயலின் பொங்கி எழும்.

ராஜாவின் எல்லா பாட்டிலும் “லட்சணம்” இருக்கும்.

Anonymous said...

அருமை

அன்பேசிவம் said...

இந்த BGM ஐ படம் வந்த புதுசுல நான் ரொம்பவே தேடினேன். நல்ல பதிவு. நண்பரே.,

கானா பிரபா said...

வணக்கம் ரவிஷங்கர்

அருமையான உதாரணங்களோடு உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி. இதயத்தைத் திருடாதே போடணும்.

நீங்க கேட்ட பாட்டு ராசா மகன் படத்தில் "காத்திருந்தேன் தனியே" என்னிடம் இருக்கு, நிச்சயம் கொடுக்கிறேன்.

வருகைக்கு நன்றி அனாமோதய நண்பர்

வணக்கம் முரளிகுமார்

தங்கள் வருகைக்கு நன்றி

Suddi said...

Hi,

Raja Raja Than.

Raja's BGM with violin is something which goes into heart directly.

Maniratnam & Raja, KB & Raja combinations created beautiful music as well as BGM, that's remembered even today.

But after these guys brokeup, such BGM's have gone. Even Raja does not give such BGMs anymore, excepting Pithamagan..

Ringtone downloaded, thanks a lot.
Continue to post such good stuff.

அறுந்தவாயன் said...

எண்பது தொன்னூறுகளில் இளையராஜாவை தவிர தமிழில் (இந்தி சினிமா உலகைபோல)அவருக்கு போட்டியாக வேறு நல்ல இசையமைப்பாளர்கள் கிடையாது (உண்மையில்அதுதான் அவரது LUCK ன்னு சொல்லலாம்) அதனால அப்ப வந்த திரைபடங்களில் 90% இவரது இசையாகத்தான் இருக்கும். அப்ப கேட்கும் அனைத்துபாடல்களும் இவரது பாட்டுக்களாகத்தான் இருக்கும். அதனால அப்ப விரும்பியோ விரும்பாமலோ அவரது பாட்டுக்கள மட்டும் தான் கேட்டாக வேண்டும். அப்படி கேட்டு கேட்டு நம்மைஅறியாமலேயே நமது மனதில் அவரது பாடல்கள் பதிந்துபோய் அதை இப்பொழுது கேட்கும்பொழுது ரொம்ப பிடிக்கிறது. இதுதான் இதிலிருக்கும் உண்மை. அந்தகாலத்திலிருந்து இந்தி பாடல்களையும் கேட்டு வரும் நண்பர்களுக்கு இளையராஜாவின் பாதிப்பு அந்தளவிற்கு இருக்காது. நான்கூட இளையராஜாவின் பாடல்களைவிட இந்திபாடல்களை ரொம்ப ரசித்தவன், ரசித்துக்கொண்டிருப்பவன். அதனால நான் சொல்ல வருவது என்னன்னா நீங்களெல்லாம் இளையராஜாவ அளவுக்கு மீறி தலைல தூக்கிவச்சு ஆடறீங்கன்னு நினைக்கிறேன்.

கானா பிரபா said...

அறுந்த வாயான்

‍ நாங்க ஹிந்தி, மலையாளம், தெலுங்கி, கன்னடா என்று எந்த மொழி பேதமில்லாமலும், எந்த இசையமைப்பாளர் பேதமில்லாமலும் ரசிப்போம். திறமை எங்கிருந்தாலும் அதை ரசிப்பது தான் உண்மையான ரசிகருக்கு அழகு. உங்களுக்கு நான் சொல்லித் தேவை இல்லை, ஹிந்தி இசையமைப்பாளர்கள் ராஜா காலத்தில் தமிழிலும் இசையமைத்தார்கள் ஆனால் தமிழுக்குரிய பாங்கை அவர்களால் கொண்டு வரமுடியவில்லை. ராஜாவுக்கு போட்டி ராஜா தான். ரஹ்மானுக்கு போட்டி ரஹ்மான் தான். அவர் தனித்து இயங்குவதால் மட்டுமே நாம அவர் பாட்டைக் கேட்கணும் என்று தலையெழுத்து இல்லையே.

குடுகுடுப்பை said...

இந்த இசை ஒரு மயக்க வைக்கும் இசைதான்.

குடுகுடுப்பை said...

ஓ வானமுள்ள காலம் மட்டும் வாழும் இந்த காதல் பாட்டு எங்கனா கெடச்சா போடுங்க கானா

Unknown said...

NANRIKAL PALA KODI UNGALUKKU!!!

YOU HAVE DONE A GOOD JOB AND RARE TOO!!!

கானா பிரபா said...

குடுகுடுப்பை said...

இந்த இசை ஒரு மயக்க வைக்கும் இசைதான்.//

வாங்க நண்பா

நீங்க கேட்ட பாட்டு இருக்கு, கண்டிப்பா போடுறேன்.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தயா

Venkatesh Balasubramanian said...

Hi Gana Prabha,

I just visited ur blog and amazing work you have done in getting the Sarvam backgound score. Excellent work by Yuvan. Thanks to you I have got couple of excellent ilayaraja ringtones.

Venkatesh