Friday, April 24, 2009
சிறப்பு நேயர் "பாலசந்தர்"
றேடியோஸ்பதியில் இதுநாள் வரை இருந்த வார்ப்புரு மாற்றம் கண்டிருக்கின்றது. இந்த வார்ப்புருவை வாரி வழங்கிய பெருமை நண்பர் பாலசந்தரைச் சேரும். வலையுலகில் திடீரெனப் பூத்த பாலசந்தரின் நட்போடு அவரின் வலைப்பதிவான Design world ஐப் பார்த்துப் பிரமித்துப் போனேன். மிகவும் சிறப்பான வகையில் பல்வேறுவகைப்பட்ட வலைப்பதிவு வார்ப்புருக்களைத் தானே ஆக்கி வழங்கிக் கொண்டிருக்கின்றார் இவர். றேடியோஸ்பதிக்காக சிறப்பானதொரு வார்ப்புருவை பதிய எண்ணியிருந்த எனக்கு பாலசந்தரின் உதவியால கை கூடியிருக்கின்றது. என் எண்ணத்தில் தோன்றியதை அவர் மெய்ப்பித்த அவருக்கு மீண்டும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு அவரின் பிரியமுள்ள ஐந்து பாடல்களை நீண்ட இடைவெளிக்குப் பின் சிறப்பு நேயர் பகுதியில் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகின்றேன்.
பாலசந்தரின் முதலாவது தெரிவு, இருபத்தெட்டு வருஷங்களுக்கு முன் வந்து ஆட்கொண்ட கல்லுக்குள் ஈரம் திரைப்பாடலான 'சிறுபொன்மணி அசையும்", பாடலை இசைத்துப் பாடுகின்றார் இசைஞானி இளையராஜா, ஜோடிக்குரலாக எஸ்.ஜானகி
இவரின் அடுத்த தெரிவு சற்று வித்தியாசமாக அதிகம் கேட்கப்படாத ஆனால் இனிமையான பாடல்களில் ஒன்றான "ஆத்தி வாடையிலே" என்ற பாடல் "சிந்துநதி பூ" படத்திற்காக செளந்தர்யன் இசையில் பாடுகின்றார் கே.ஜே.ஜேசுதாஸ்
"கம்பன் ஏமாந்தான்" என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் "நிழல் நிஜமாகிறது" பாடலை யாருக்குத் தான் பிடிக்காது. மெல்லிசை மன்னர் இசையில் மலர்கின்றது
அடுத்து ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கார்த்திக் பாடும் "அவ என்னைத் தேடி வந்த அஞ்சல" பாடல் புத்தம் புது மெட்டாக "வாரணம் ஆயிரம்" திரையில் இருந்து பாலசந்தர் ரசனையில் மலர்கின்றது.
நிறைவாக ரங் தே பாசந்தி" என்ற இசைப்புயலின் கைவண்ணத்தில் "Luka Chuppi" என்ற பாடல் லதா மங்கேஷ்கர், ஏ.ஆர்.ரஹ்மான் குரல்களில் இனிதாய் ஒலிக்கின்றது.
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
//ஆத்தி வாடையிலே" என்ற பாடல் "சிந்துநதி பூ" படத்திற்காக செளந்தர்யன் இசையில் பாடுகின்றார் கே.ஜே.ஜேசுதாஸ்//
எனக்கு ரொம்ப்ப புடிச்ச பாட்டு பாஸ்!
பாட்டும் நல்லாருக்கு!
புது டெம்ப்ளட்டும் சூப்பரேய்ய்ய்ய்
தல வார்ப்புரு சூப்பர்!
cool template... :)
வார்ப்புறு அழகா பொருத்தமா இருக்கு!
பாலசந்தரின் தேர்வுகளும் அருமை!
1st and 3rd song enakkum rommmba pudikkum :))))
சூப்பரண்ணே. :-)
கலக்கலா இருக்கு கானா அண்ணா
:)
அதெல்லாம சரிங்கண்ணா, MSVஐ நடுவில் வைத்த காரணம் என்னவோ?
தல புதுவீடு ரொம்ப நல்லா இருக்கு.
எல்லாரையும் போல எனக்கும் முதல் ரண்டு பாட்டும் ரொம்ப்புடுச்ச பாட்டுங்க.
பாலாவின் தேர்வுகளும் அருமைங்க
தல test & சோதனை எல்லாம் வெற்றியா!! ;-)
புது வடிவமைப்பை பற்றி என்ன சொல்ல! அட்டகாசம்..தெய்வம் எங்கும் நிறைஞ்சியிருக்கு ;)
பாலசந்தர் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.
பாடல்கள் அனைத்தும் கலக்கல் ;)
thank you....
புதிய வடிவமைப்பு கலக்கல். பாலச்சந்தருக்கு எனது சார்பாகவும் நன்றிகள். அதிலும் அந்த மும்மூர்த்திகளை மிக அழகாகக் கொண்டு வந்திருக்கிறார். முகபாவங்களும் மிக அருமை. பொருத்தமான படங்களைப் பொருந்துமாறு இணைத்திருப்பது மிகச்சிறப்பு.
பாடல் தேர்வுகளும் அருமை. சிறுபொன்மணி பாடல் யாருக்குப் பிடிக்காது. ஆத்தி பாடலும் அருமை. ஏசுதாசை விட ஜெயச்சந்திரன் குரலுக்கு இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும். கம்பன் ஏமாந்தான் கேட்கக் கேட்க திரும்பக் கேட்க வைக்கும் பாடல்.
புது வார்ப்புரு நல்லாருக்கு...!
சிறு பொன் மணி பாட்டு எனக்கும் பிடிக்கும் ஆத்தீ பாட்டும் நல்லாருக்கு...
நன்றி பாலசந்தர்,உங்களுக்கும்...
வார்ப்புருவை பார்த்து ஒரு நிமிடம் பிரமித்தேன். கலக்கல் ..
பாலச்சந்தருக்கு ஸ்பெசல் நன்றிகள் :))
பாடல்களும் சூப்பர்!
// கானா பிரபா said...
வாழ்த்துகள் அப்துல்லா.
//
அண்ணே நீங்க என்னையும் பேட்டி எடுப்பீங்கள்ல??
(ஆசையப் பாரு :)))
வாங்க அப்துல்லா
கண்டிப்பா செய்வோம், இன்னும் பல வாய்ப்புக்கள் உங்களுக்கு கிடைக்க வாழ்த்துக்கள் :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே
Post a Comment