Pages

Sunday, March 23, 2008

சிறப்பு நேயர் "சினேகிதி"


கடந்த வாரம் ரிஷான் ஷெரிப்பின் தேர்வுகளோடு வந்த சிறப்பான நேயர் விருந்து பலரைத் திக்குமுக்காட வைத்துவிட்டது போல, அரைச்செஞ்சரி பின்னூட்டங்கள் வரை வந்து அவரைக் கெளரவித்தது. போதாதற்கு அவரின் தனிமடல் விபரம் கேட்டு விண்ணப்பங்கள் வேறு ;-)

இந்த வாரம் வந்திருக்கும் சிறப்பு நேயர், எங்கட யாழ்ப்பாணத்துத் தங்கச்சி, உளவியல் நிபுணி "சினேகிதி". நான் வலைபதிய வந்த காலத்தில் எங்கட ஊர்த்தமிழிலேயே ஊர் நினைவுகள், மற்றும் மண் சார்ந்த இடுகைகளைச் சிறப்பாக அளிக்கமுடியும் என்பதற்கு சினேகிதி போன்றோரின் பதிவுகளையே உதாரணமாக எடுத்துக் கொண்டேன். பல்கலைக்கழகத்தில் உளவியல் சார்ந்த பட்டப்படிப்பின் இறுதி ஆண்டில் இருக்கும் இவர் இடுகைகள் இன்னவை தான் என்று வகைப்படுத்த முடியாதவை. நட்சத்திர வாரத்தில் கூடத் தன் தனித்துவமான உளவியல் சார்ந்த படைப்புக்களைக் கொடுத்துச் சிறப்பித்தவர். சேதுவா இருந்தவையை சாதுவா ஆக்கினவ இவ ;-)

தத்தக்க பித்தக்க என்பது இவரின் பிரத்தியோக தளமாகும். கூடவே தேன் கிண்ணம் என்ற கூட்டு இடுகையிலும் இணைந்திருக்கின்றார். இனி சினேகிதியின்ர பாட்டுத் தெரிவுகளை உவ என்ன மாதிரிக் கொடுத்திருக்கிறா எண்டு பாப்பம்.

பிரபாண்ணா 5 பாட்டு தெரிவு செய்து தரச்சொன்னதும் ஓம் ஓம் என்று மண்டைய ஆட்டிட்டன் ஆனால் ஏன் அந்த 5 பாடல்களும் பிடிக்கும் என்றும் சொல்லோணும் என்று சொன்னதும் அடடா காரணம் வச்சுக்கொண்டா பாட்டெல்லாம் பிடிச்சுப்போகுது என்று கேக்கத் தோணிச்சு. சில பாடல்கள் முதல் தரம் கேட்கும்போது என்ன லூசுப்பாட்டெண்டு நினைப்பன் ஆனால் திரும்ப திரும்ப அந்தப் பாடலைக் கேட்கும் சந்தர்ப்பம் வாய்க்கும்போது புதுசா புதுசா அர்த்தம் விளங்குற மாதிரியிருக்கும் :-)

“நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து
செய்வேன் அன்பே ஓர் அகராதி
நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல்
பார்ப்பேன் தினம் உன் தலை கோதி”


படம் : கிரீடம்
பாடியவர் : சாதனா சர்க்கம்
இசை : ஜீ.வி.பிரகாஷ்


கிரீடம் படம் பார்க்கும்போது வழமைபோல பாட்டை fwd பண்ணிப்பார்த்திட்டன். ஒருநாள் தோழியொருத்தி பாடி record பண்ணி வைத்திருந்ததைக் கேட்டதும் பாடலின் வரிகள் பிடித்தது. அதன்பிறகுதான் இந்தப்பாடலை முழுமையாகக் கேட்டேன் பிறகு பார்த்தேன். சாதனா சர்க்கமின் குரல் எனக்கும் பிடிக்கும். இசை நன்றாக இருந்தால்தான் பாடலின் வரிகளைக் கவனிக்கத்தோணும் என்று நான் நினைக்கிறேன் அந்த வகையில் ஜீவி பிராகாஷ் இசை நன்றாக வந்துள்ளது. இந்தப்பாடலின் வரிகளுக்கு சொந்தக்காரன்/காரி யாரென்று தெரியவில்லை. (ஆனால் எனக்கு ரொம்பநாளாவே இந்த சந்தேகம்...தெரிஞ்சாக்கள் பதில் சொல்லுங்கோ. இந்த தலை கோதிறதில அப்பிடி என்ன கிக் இருக்கு?? அநேகமான பெடியங்களுக்கு தங்கள் காதலி மனைவி அம்மா சகோதரம் இப்பிடி யாரோ ஒரு பெண் தங்கள் தலை கோத வேண்டும் என்ற ஆசை இருக்கு...ஏன் என்று அல்லது இந்த ஆசைக்கு ஏதாவது காரணம் இருக்கா? )



புல்லாங்குழலே பூங்குழலே நீயும் நானும் ஒரு ஜாதி
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே உனக்கும் எனக்கும் சரி பாதி


படம் : அலைபாயுதே
பாடியவர் : ஸ்வர்ணலதா
இசை : AR.Rahman
வரிகள் : வைரமுத்து


இந்தப் பாட்டு எனக்கு மட்டுமில்ல என்ர நிறைய நண்பர்களுக்கும் பிடிக்கும். High school ல படிக்கேக்க நண்பி ஒருத்தி வைரமுத்துவின் கவிதைகள் அடங்கிய ஒரு குண்டுப் புத்தகம் கொண்டுவந்தா .கொஞ்ச நாளா அந்த புத்தகம்தான் எங்கட இடைவேளை நேர பொழுதுபோக்கு. இந்தப்பாடலும் அந்தப் பெயர் மறந்த புத்தகத்திலொரு கவிதை ; ஆனால் பாடலில் இடம்பெறாத வரிகளும் இருக்கு அந்த கவிதையில். யாரிடமாவது அந்தக் கவிதை அல்லது அந்தப் புத்தகத்தின் பெயர் தெரிந்தால் சொல்லுங்கள்.



“‘புகைப்படம் எடுக்கையில் திமிறும் புன்னகை அன்பே அன்பே நீதானே” எழுதும் கவிதையில் எழுத்துப்பிழைகளை ரசிக்கம் வாசகன் நீதானே ”

படம் : பொறி
பாடியவர்கள் : மதுஸ்ரீ , மது பாலகிருஷ்ணன்
இசை : தீனா


பொதுவாவே பாடல்வரிகள் நல்லாயிருப்பதால் பாடல் பிடிக்கிறதா அல்லது இசை நன்றாக இருப்பதால் பாடல்வரிகள் மனதில் பதிந்துவிடுகிறதா என்ற சந்தேகம் எனக்கிருக்கு. ஆனால் இந்தப்பாடலின் மென்மையான இசையும் பூஜாவின் அழகும் பாடல் எடுக்கப்பட்ட பசுமையான இடங்களும் தான் இந்தப்பாடலைத் திரும்ப திரும்ப பார்க்க வைத்தது. பின்னர் பாடல் வரிகளும் பிடித்துவிட்டது.



“கடல் தாண்டும் பறவைக்கெல்லாம் இளைப்பாற மரங்கள் இல்லை
தயங்காமலே கண்டம் தாண்டுமே”


படம்: சத்தம் போடாதே
பாடல் : நா. முத்துக்குமார்
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர் : நேஹா பேசின்



இந்தப்பாடல் முதல்முறை கேட்கும்போது பிடிக்கவேயில்லை. படம் பார்த்தபோதும் பாடல் எடுத்த விதமும் பிடிக்கவில்லை. ஆனால் நான் நினைக்கிறன் மனசுடைந்ததொரு நாளில் நா. முத்துக்குமாரின் வரிகள் என்னைக் கவர்ந்திருக்கிறது. நம்பிக்கை தரும் பாடல்கள் தமிழில் குறைவென்றுதான் நான் சொல்லுவேன். ஆனால் “காட்டிலுள்ள மரங்களுக்கெல்லாம் தண்ணீர் ஊற்ற ஆளே இல்லை தன்னைக்காக்கவே தானே வளருமே” என்று இந்தப்பாடலில் ஒரு வரி வரும் கேட்டுப்பாருங்கள். அதுக்குப் பிறகு நீங்கள் தண்ணியடிச்சா அதுக்கு நான் பொறுப்பில்லை. (bonus : சில நேரம் சில பொழுது சோதனை வரும்பொழுது என்ற பாடலையும் கேட்டுப்பாருங்கள்.



“ உதிக்கின்ற சூரியனில்
விடியலின் களைப்பில்லை
உதிர்கின்ற இலையதனில்
மரணத்தின் பயமில்லை ”


இசைவட்டு: மூங்கில் நிலா
இசை : நிரு
பாடியவர்கள் : ஸ்ரீனிவாஸ் + சுஜாதா
வரிகள் : சுதன்ராஜ்


மூங்கில் நிலா என்ற இசை அல்பத்தில் இடம்பெற்ற இந்தப்பாடல் எனக்கு எப்படி அறிமுகமானது என்று ஞாபகமில்லை. இந்த அல்பத்தில் இடம்பெற்ற அநேகமான பாடல்கள் எனக்குப் பிடிக்கும் ஆனாலும் இந்தப்பாடல் மிகவும் பிடிக்கும்.


26 comments:

சயந்தன் said...

(ஆனால் எனக்கு ரொம்பநாளாவே இந்த சந்தேகம்...தெரிஞ்சாக்கள் பதில் சொல்லுங்கோ. இந்த தலை கோதிறதில அப்பிடி என்ன கிக் இருக்கு?? அநேகமான பெடியங்களுக்கு தங்கள் காதலி மனைவி அம்மா சகோதரம் இப்பிடி யாரோ ஒரு பெண் தங்கள் தலை கோத வேண்டும் என்ற ஆசை இருக்கு...ஏன் என்று அல்லது இந்த ஆசைக்கு ஏதாவது காரணம் இருக்கா? ) //

ஐயோ ஐயோ இதப்பத்தி ஒரு பதிவை எழுதி வைச்சிட்டு வெட்கத்தில இத்தனை நாளா வெளியிடாமல் இருந்திட்டேனே :)

மூங்கில் நிலா பாடல் தவிர்ந்த மற்றப்பாடல்கள் எல்லாம் என் கூடவே திரிபவை பார்ப்பதற்கும் கேட்பதற்கும் :) அதுவும் அக்கம் பக்கம் பாட்டு எனக்கும் வெர்ஜினியாக்கும் ஒரு சேரப் பிடிக்கும்.
எனக்கு பிடிக்கிறதுக்கு காரணம் திரிசா
வெர்ஜினியாக்கு பிடிக்கிறதுக்கு காரணம் வேறென்ன அஜித்தான் :)))

CVR said...

@வணக்கம் சினேகிதி
1.)இந்த படத்திலேயே என்னை மிகவும் கவர்ந்த பாட்டு இது!
பாடலின் வரிகள் கூட பல பேர் கூகிள் சாட் மெசேஜாக இட்டிருந்தார்கள்!
இந்த பாடல் ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகர்களுக்கு அதிகமாக பிடித்திருந்தது.

2.)ஆகா ஆகா!!
இந்த பாடலில் வரும் மாண்டலின் கலந்த இசை ஒரு விதமான trance-க்கு எடுத்துச்சென்று விடும்!! பாடலை படமாக்கியவிதமும் வெகு அற்புதம்.வரிகளை பற்றி கேட்கவே வேண்டாம்!!
"இன்னிசை மட்டும் இல்லையென்றால் ,என்றோ என்றொ இறந்திருப்பேன்"
எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்!! :-)

3.)இந்த பாடலை நான் இதுவரை பார்த்ததில்லை,ஆனால் வரிகளை முன்னமே கவனித்திருக்கிறேன்,எளிமையாகவும் அதே சமயம் காதலர் மனதில் உள்ள இன்பங்களை அழகாக பட்டியலிட்டிருப்பார் கவிஞர்.


"செல்போன் சிணுங்கிட எழுந்திடும் கவனம் அன்பே அன்பே நீதானே"
ஹா ஹா ஹா!!
என்னமா யோசிக்கறாய்ங்கப்பா!! :-)

4.)
இந்த பாடல் எனக்கும் பெரிதாக தெரியவில்லை,பின்னர் நம் கானக்குயில் மருதமோட பதிவுல கேட்டுட்டு எனக்கும் இந்த பாட்டு பிடிச்சு போச்சு!!
உடனே திரும்ப கேட்க ஆரம்பிச்சுட்டேன்.
அதன் விளைவு தான் இந்தப்பதிவு.
நல்ல வேளையாக இந்த பாட்டை இன்னும் திரைடில் பார்க்க வில்லை! :-)

5.)இந்த பாடலை இது வரை கேட்டதில்லை!! கேட்ட வரை இனிமையாகத்தான் இருந்தது.

இனிமையான ஐந்து பாடல்கள் கேட்க அளித்தமைக்கு நன்றி சினேகிதி! :-)

கோபிநாத் said...

ஆகா...இந்த வாரம் சினேகிதியா!!!! நம்ம நட்சத்திர வாரத்தில் கூட கலக்கு கலக்குன்னு கலக்கினாங்க ! ;)

\\இந்த வாரம் வந்திருக்கும் சிறப்பு நேயர், எங்கட யாழ்ப்பாணத்துத் தங்கச்சி, உளவியல் நிபுணி "சினேகிதி". நான் வலைபதிய வந்த காலத்தில் எங்கட ஊர்த்தமிழிலேயே ஊர் நினைவுகள், மற்றும் மண் சார்ந்த இடுகைகளைச் சிறப்பாக அளிக்கமுடியும் என்பதற்கு சினேகிதி போன்றோரின் பதிவுகளையே உதாரணமாக எடுத்துக் கொண்டேன்.\\

எங்களுக்கும் அவர்களின் இயல்பு மாறா எழுத்து நடை பிடிக்கும் தல . ;)

\\நட்சத்திர வாரத்தில் கூடத் தன் தனித்துவமான உளவியல் சார்ந்த படைப்புக்களைக் கொடுத்துச் சிறப்பித்தவர். சேதுவா இருந்தவையை சாதுவா ஆக்கினவ இவ ;-) \\

அருமையான வாரம் அது...என்னை போன்ற பல பேருக்கு தெரியாத பல விஷயங்களை அறிந்து கொள்ள முடிந்தது ;)

வாழ்த்துக்கள்....பாட்டை கேட்டுட்டு வரேன் ;)

கோபிநாத் said...

1. படம் : கிரீடம்
பாடியவர் : சாதனா சர்க்கம்
இசை : ஜீ.வி.பிரகாஷ்

\\சாதனா சர்க்கமின் குரல் எனக்கும் பிடிக்கும். இசை நன்றாக இருந்தால்தான் பாடலின் வரிகளைக் கவனிக்கத்தோணும் என்று நான் நினைக்கிறேன் அந்த வகையில் ஜீவி பிராகாஷ் இசை நன்றாக வந்துள்ளது. \\

சமீபத்தில் நான் அடிக்கடி கேட்கும் பாடல் இது....இசை, குரல், பாடல் வரிகளும் கூட அருமையாக இருக்கும் ;)

\\இந்த தலை கோதிறதில அப்பிடி என்ன கிக் இருக்கு?? அநேகமான பெடியங்களுக்கு தங்கள் காதலி மனைவி அம்மா சகோதரம் இப்பிடி யாரோ ஒரு பெண் தங்கள் தலை கோத வேண்டும் என்ற ஆசை இருக்கு...ஏன் என்று அல்லது இந்த ஆசைக்கு ஏதாவது காரணம் இருக்கா? ) \\

அட என்னாங்க இப்படி கேட்டுப்புட்டிங்க...கிக் இருக்கா வா..தலை கோதும் போது அப்படியே மனசு லேசாகும் பாருங்க...அதெல்லாம் அனுபவிக்கனும்...வார்த்தைகளில் எல்லாம் சொல்றது கொஞ்சம் கஷ்டங்க ;)


2. படம் : அலைபாயுதே
பாடியவர் : ஸ்வர்ணலதா
இசை : AR.Rahman
வரிகள் : வைரமுத்து

சூப்பர் பாட்டுங்க இது...இந்த பாட்டை திரையில் பார்த்துயிருக்கிங்களா...அவ்வளவு அழகாக கவிதை போல எடுத்திருப்பாரு பி.சி ஸ்ரீராம். பாடல் வரிகளையும், இசையையும் பி.சியின் ஒளிப்பதிவும் மிக அழகாக இருக்கும். எனக்கு பிடித்த பாடல் ;)

3. படம் : பொறி
பாடியவர்கள் : மதுஸ்ரீ , மது பாலகிருஷ்ணன்
இசை : தீனா

தீனாவின் இசையில் மன்மதராசாவுக்கு பிறகு ஒரு வந்த அருமையான பாடல் அது. இதுக்கு மேல ஒன்னும் சொல்லறதுக்கு இல்ல ஏன்னா இந்த படத்துக்கு விமர்சனம் எழுதி நம்ம பதிவுல மக்கள் என்னை போட்டு கிழி கிழின்னு கிழிச்சிட்டாங்க ;)))

4. படம்: சத்தம் போடாதே
பாடல் : நா. முத்துக்குமார்
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர் : நேஹா பேசின்

\\ஆனால் “காட்டிலுள்ள மரங்களுக்கெல்லாம் தண்ணீர் ஊற்ற ஆளே இல்லை தன்னைக்காக்கவே தானே வளருமே” என்று இந்தப்பாடலில் ஒரு வரி வரும் கேட்டுப்பாருங்கள். அதுக்குப் பிறகு நீங்கள் தண்ணியடிச்சா அதுக்கு நான் பொறுப்பில்லை. (bonus : சில நேரம் சில பொழுது சோதனை வரும்பொழுது என்ற பாடலையும் கேட்டுப்பாருங்கள். \\

எனக்கும் இந்த பாடல் பிடிக்கல ஏன்னா அந்த குரல்....ஆனா வரிகள் அருமையாக இருக்கும் ;) அந்த படத்தின் அனைத்து பாடல்களும் நா. முத்துக்குமார் அருமையாக எழுதியிருப்பார்.

5. இசைவட்டு: மூங்கில் நிலா
இசை : நிரு
பாடியவர்கள் : ஸ்ரீனிவாஸ் + சுஜாதா
வரிகள் : சுதன்ராஜ்

நல்லதொரு பாடல்....மென்மையான அருமையான பாடல் ;)

மென்மையான தொகுப்பு...நன்றாக இருந்தது..நன்றி ;)

M.Rishan Shareef said...

ஆஹா...இப் பாடல்களும் என் விருப்பத்துக்குமுரியவையே.

1.முதல் பாடலில்,

//அக்கம் பக்கம் யாருமில்லா
பூலோகம் வேண்டும்
அந்திபகல் உன்னருகே
நான் வாழ வேண்டும்
என் ஆசை எல்லாம் உன் நெருக்கத்திலே
என் ஆயுள்வரை உன் அணைப்பினிலே
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்//

வரிகள் மிக அழகானவை.விரும்பும் துணையோடு திகட்டத் திகட்டக் காதலை அனுபவித்து சேர்ந்து வாழ்ந்திடின் ஈரேழு ஜென்ம வாழ்க்கை ஒரு பிறவியிலே போதுமென்கிறது பாடல்.
பாடல்காட்சி அழகாகப் படமாக்கப்பட்டிருக்கிறது.
அதிலும் த்ரிஷா,அஜித் ஜோடியின் பாடல்கள் எல்லாமே சூப்பர்ஹிட்.மிக அழகான ஜோடி.
(இருவரினதும் டிங்,டாங் கோயில்மணி... பாடலும் எனக்கு மிகப்பிடிக்கும்)

2.மிக அழகான துயருரைக்கும் பாடல்.எனது தெரிவுகளிலும் இப்பாடலைப்பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.சுவர்ணலதா மிக மிக அற்புதமாகப் பாடியிருக்கிறார்.குரலில் சோகம் குழைத்து,இசையோடு பயணித்து மனதை வருடுகிறது வரிகள்.

//கண்களை வருடும் தேனிசையில்
நான் காணும் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான்
என்றோ என்றோ இறந்திருப்பேன்!//

உண்மைதானே.மலை போல் தாக்கும் சோகங்களும் சிலபொழுது இசையில் கரைந்திடும்.அனைத்திலும் இசை கலந்த வாழ்வு ஒருவித மன அமைதியைத் தரும்.

//எந்தன் சோகம் தீர்வதற்கு
இதுபோல் மருந்து பிறிதில்லையே

அந்தக் குழலை போல் அழுவதற்கு
அத்தனை கண்கள் எனக்கில்லையே //

மனதில் அவ்வளவு சோகம் பாரமாய் அழுத்துகிறது என்பதைக் குரலில் அழகாக உணர்த்துகிறார் சுவர்ணலதா.

(அன்பின் சினேகிதி,சுவர்ணலதாவின் பாடலைத் தெரிவு செய்திருக்கிறீர்கள்.சக பதிவர் சிலரிடமிருந்து தனிப்பட்ட மின்னஞ்சல்கள் வரும்.எதற்கு ஒரு அழகற்ற பாடகியின் பாடலைத் தெரிவுசெய்தீர்களெனக் கேட்டு.எனக்கும் வந்தது."நீங்கள் கூறும் அழகான பாடகியை இப்பாடலை இதே அழகோடு பாடிக்காட்டச் சொல்வீர்களா? " எனக் கேளுங்கள்.
அவர்களால் முடியாது என்பதால் தொடர்ந்து கேள்வி கேட்கமாட்டார்கள் )

3.//பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்
பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்
விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்
விளையாட்டுப் பிள்ளைகளின் செல்லக்கோபம்
ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல்
அன்பே அன்பே நீயே//

மிக அழகான வரிகளுடனான கவிதை இசையுடன் கலந்து பாடலாக உருப்பெற்றிருக்கிறது.

மிக அபூர்வமாக நாமறியாமலேயே ரசிக்கும் அழகான விடயங்கள் தனது துணைக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிறது.

//பயணத்தில் வருகிற சிறுதூக்கம்
பருவத்தில் முளைக்கிற முதல்கூச்சம்
பரீட்சைக்குப் படிக்கிற அதிகாலை
கழுத்தினில் விழுந்திடும் முதல்மாலை
புகைப்படம் எடுக்கையில் திணறும் புன்னகை
அன்பே அன்பே நீதானே
அடைமழை நேரத்தில் பருகும் தேநீர்
அன்பே அன்பே நீதானே
தினமும் காலையில் எனது வாசலில்
கிடக்கும் நாளிதழ் நீதானே//


//தாய்மடி தருகிற அரவணைப்பு
உறங்கிடும் குழந்தையின் குறுஞ்சிரிப்பு
தேய்பிறை போல்படும் நகக்கணுக்கள்
வகுப்பறை மேஜையில் இடும்கிறுக்கல்
செல்போன் சிணுங்கிட குவிகிற கவனம்
அன்பே அன்பே நீதானே
பிடித்தவர் தருகிற பரிசுப் பொருளும்
அன்பே அன்பே நீதானே
நான் எழுதும் கவிதையில் எழுத்துப் பிழைகளை
ரசிக்கும் வாசகன் நீதானே//

மிக அழகான வரிகள்.
மதுபாலகிருஷ்ணனின் குரலில் அன்றைய கால ஜேசுதாஸின் சாயலடிக்கிறது.
அது கூடப் பாடலை அழகாக்குகிறது.

4.//கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
இளைப்பார மரங்கள் இல்லை
கலங்காமலே கண்டம் தாண்டுமே
ஓஹோஹோஹோ......

முற்றுப்புள்ளி அருகில் நீயும்
மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால்
முடிவென்பதும் ஆரம்பமே

வளைவில்லாமல் மலை கிடையாது
வலி இல்லாமல் மனம் கிடையாது
வருந்தாதே வா//

மிக எளிமையான வரிகளில் வாழ்வின் நிதர்சனத்தை உணர்த்துகிறதல்லவா சினேகிதி?

தமிழையே அறியாத நேஹா பேசினின் ஆண்மை கலந்த குரல் கூட பாடலுக்கு வலுச் சேர்க்கிறது.

5.நம்மவர் நிருவின் இசையில் மிக அழகான இப்பாடலை இன்றுதான் கேட்கிறேன்.

சுதனின் வரிகள் மிக அருமை.
இசையைப் பாருங்கள்.மிக அழகு.

சினேகிதி, 5 பாடல்களும் அருமை.
எனக்கும் விருப்பமான பாடல்களைக் கேட்கச் செய்த நண்பர் கானாபிரபாவுக்கும்,சிறந்த தெரிவுகளுக்கு சினேகிதிக்கும் நன்றிகள் :)

Anonymous said...

(ஆனால் எனக்கு ரொம்பநாளாவே இந்த சந்தேகம்...தெரிஞ்சாக்கள் பதில் சொல்லுங்கோ. இந்த தலை கோதிறதில அப்பிடி என்ன கிக் இருக்கு?? அநேகமான பெடியங்களுக்கு தங்கள் காதலி மனைவி அம்மா சகோதரம் இப்பிடி யாரோ ஒரு பெண் தங்கள் தலை கோத வேண்டும் என்ற ஆசை இருக்கு...ஏன் என்று அல்லது இந்த ஆசைக்கு ஏதாவது காரணம் இருக்கா?)

அட! எனக்கும் இதே சந்தேகமுண்டு. உளவியலாளிக்கே தெரியலையென்றால் நாங்களெல்லாம் எம்மாத்திரம்?

ஆனால் பெண்களுக்கும் அதே போல் கிக் உண்டென்று தான் நினைக்கிறேன்.
“வாலி” படத்தில் அப்படியொரு காட்சி வரும்.

பாடல்கள் அனைத்தும் அருமை சிநேகிதி!

ரசிகன் said...

அடடா.... நல்ல தொகுப்பு.. இதில் சில நான் முன்பு கேட்ட போது கவனிக்காத வரிகளை இப்போது கவனித்து ரசிக்க முடிந்தது.நன்றிகள்.
பேசுகிறேன். பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்.
அடங்காமலே அலைபாய்வதேன்?
மனமல்லவா?...பாடல் என்னை ஏனோ சமிபத்தில் மிகவும் கவர்கிறது,:)
அருமையான பாடல் தொகுப்பிற்க்கு நன்றிகள் பிரபா மாம்ஸ்& சினேகிதி :)

ரசிகன் said...

//இசை அல்பத்தில் //


ஹா..ஹா... இசை “அல்பம்” இல்லை ”ஆல்பம்” :))))))))
பாடம் நல்லாயிருக்கு:)

சினேகிதி said...

ஓ இந்தவாரம் நான் தெரிவு செய்த பாடல்களா:-)) 1001 தான் இருந்தாலும் பிரபாண்ணா இப்பிடி 5 பாட்டென்டு வரைமுறை எல்லாம் போட்டிருக்கக்கூடாது இப்ப எனக்கு guiltyயா இருக்கு நான் எனக்கு பிடிச்ச எத்தின பாட்டுக்குத் துரோகம் செய்திட்டன். சா கவலையா இருக்கு.

அப்ப தலைகோதிற விசயம் என்னைப்போல உங்களுக்கும் சந்தேகம் இருக்கா. நானே அதை எழுதிப்போட்டு பிரபாண்ணாட்ட சொல்லி அதை அழிச்சசிடுங்கோ போடவேண்டாம் என்று சொல்லுவம் என்று நினைச்சன். என்ர கேள்விக்கு ஒருதரும் ஒழுங்கான பதில் சொல்லலையே...சயந்தனண்ணா வெக்கப்படாம பதிவை வெளியிடுங்கோ :-)

வசந்தன்(Vasanthan) said...

'உளவியல் நிபுணி' எண்டு சொன்னப்பிறகு உப்பிடியொரு சந்தேகம் உங்களிட்டயிருந்து வந்திருக்கக் கூடாது.
தலை கோதுறது ஏதோ பெடியளுக்கு மட்டும் தான் பிடிச்ச விசயம் எண்ட மாதிரி எழுதியிருக்கிறியள். நான் நினைக்கிறன் எல்லாருக்கும் இது பொதுவெண்டு.
குழந்தைகள் எல்லாம் தலை கோதப்படுவதை அதிகம் விரும்புகின்றன. வளர்ந்தபின்பு அது தொலைந்துபோக நியாயமில்லை. தலைகோதுவது என்பதை விட நடுவிரலால் உச்சியில் மெலிதாக தேய்த்துக்கொண்டிருப்பது என்றொரு முறையுண்டு. எரிச்சலில், சினத்தில் இருக்கும் குழந்தைகள் இலகுவில் அடங்கிவிடுவார்கள். மடியில் இருக்காமல் ஓடிவிடத் துடிக்கும் குழந்தைகளையும் இம்முறைமூலம் தக்கவைத்திருக்கலாம்.

வளர்ந்தவர்களுக்கு எதிர்ப்பாலார் (ஆண்களுக்கு: தாய், சகோதரி, நண்பி, காதலி, மனைவி) தலை கோதிவிடுவதிலுள்ள சுகம் பற்றிச் சொல்ல எனக்குத் தகுதியில்லை. அனுபவித்தவர்கள் சொல்லலாம். ஆனால் சீப்பால் தலைவாரிக்கொள்ளும்போதே ஒருவிதமான அமைதி கிடைக்கிறதுதானே? என்வரையில் எதிர்ப்பாலார் மட்டுமன்றி யார் தலைகோதிவிட்டாலும் சுகமுண்டு என்றே நினைக்கிறேன். (பாலியற் பங்காளி கோதிவிடுவதைத் தனித்துப் பார்க்க வேண்டும்; அது வேறு சுகங்களோடு தொடர்புடையது ;-))

Anonymous said...

மிக அருமையான தெரிவுகள் சினேகிதி. புல்லாங்குழலே பூங்குழலே பாடல் மிக அருமையான தெரிவு. Wellawatta, nelson place இல் cricket விளையாடிவிட்டு beach இல் இருந்து முதல்முதலா பாடல் வரிகளைப் பற்றி friends உடன் கதைத்த நினைவுகள் வருகிறது. அந்தப் பாடலில் 'அந்தக் குழலைப்போல் அழுவத்தற்க்கு அத்தனை கண்கள் எனக்கில்லையே' என்ரு வருமே- super.
Thanks snekithi.
Thanks Praba.

சயந்தன் said...

என்வரையில் எதிர்ப்பாலார் மட்டுமன்றி யார் தலைகோதிவிட்டாலும் சுகமுண்டு என்றே நினைக்கிறேன்//

உண்மை
முடிதிருத்துபவர் யாராக இருந்தாலும் மசாஜ் என்ற பெயரில் அவர் நாலு தட்டுத் தட்ட நித்திரை வருவதுண்டு :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பின்னூட்டத்திற்கு பாப் அப் விண்டோ கடினமானதாக இருக்கிறது தட்டச்சுவதற்கு
கொஞ்சம் கவனியுங்களேன் கானாப்ப்ரபா..

நல்ல தேர்வுகள் சினேகிதி..
தலைக்கோதல் உண்மைதான் .. என் பையனுக்கு பிறந்த பொழுது நாங்கள் தலைக்கோதினால் தான் தூக்கம் வரும்.. இப்போ மூன்று வயதாகிறது .. டிவி பாக்கும் பொதும் சாப்பிடும் போதும் ( நான் ஊட்டித்தரும்போது ) தன் விரலால் தலையில் வட்டவட்டமாக முடியை ஒரு நூல்பின்னுவது போல் செய்துகொண்டிருப்பான்.. இது பரம்பரையாகவேறு தானே தலைக்கோதிக்கொள்வது தொடர்ந்துவருகிறது எங்கள் வீட்டில் .. :-)

கானா பிரபா said...

வணக்கம் முத்துலெட்சுமி

பின்னூட்டப் பெட்டிச் சிக்கல் என்பது அவ்வப்போது வருகின்றது. இது இந்த டெம்ப்ளேட் கொடுக்கும் பிரச்சனை போல இருக்கின்றது. எப்படித் தீர்ப்பது என்பது தான் எனக்கும் பிரச்சனையாக இருக்கின்றது.

சுரேகா.. said...

சினேகிதியின் தெரிவுகள் அனைத்தும்

அழகான கவிதைத்துவம்.

நன்றி!

கானா பிரபா அண்ணா!
ஒரு உதவி.!

நானும் இப்ப தமிழ்நாட்டில் ஒரு அரசு FM ல் நிகழ்ச்சி தொகுப்பாளரா ஆகியிருக்கேன். எனக்கு கொஞ்சம் டிப்ஸ் வேணும்.
தந்து உதவுங்களேன்.

கானா பிரபா said...

வணக்கம் சுரேகா

முதலில் வானொலி அறிவிப்பாளராக நீங்கள் தேர்வானதற்கு என் வாழ்த்துக்கள்.
வானொலிப் பணியில் கடந்த 9 ஆண்டுகளாக இருக்கும் அனுபவத்தில் என் சார்பில் சில
டிப்ஸ் இதோ:

உலக நடப்புக்கள், உங்களைச் சுற்றி நடப்பவை எல்லாவற்றையும் கூர்ந்து கவனியுங்கள்.
முடிந்தால் சிறு நோட்டுப் புத்தகத்தில் அவ்வப்போது கிடைக்கும் செய்திகளைக் குறித்து வையுங்கள். அவை
எப்போதாவது உங்களுக்கு உதவக் கூடும்.

நிறைய வாசியுங்கள்.

பாடல்களைக் கூர்ந்து கவனியுங்கள், அவற்றில் இசையமைப்பாளரோ, பாடகரோ செய்திருக்கும் புதுமையை
அவதானியுங்கள். இங்கே நம் சக பதிவர்கள் தொடராக இட்டுவரும் சிறப்புப் பதிவுகள் நல்லதோர் உதாரணம்.
குறிப்பிட்ட கொஞ்சக் காலத்துக்கு வானொலியில் நிகழ்ச்சி படைக்கும் போது எழுதி வைத்தே வாசியுங்கள்.
வசனங்களில் வரும் ஏற்ற இறக்கங்களை கோடு மூலம் பிரித்து வைத்தால் வாசிக்க இலகு. கடினமான சொற்களையும்
பல தடவை சொல்லி நாவைப் பழக்கப்படுத்துங்கள்.

பாடல்களின் கவிஞர்கள் யார் யாரென்று இயன்றவரை அடையாளப்படுத்தி வையுங்கள்.

பாடல்களைத் தேர்ந்தெடுத்து நீங்கள் தொகுப்பாகக் கொடுக்கும் போது இயன்றவரை அதே மூடில் வரும் பாடல்களாக
தேர்வு செய்யுங்கள். மாலையில் யாரோ பாடலைப் போட்டு விட்டு, மன்மத ராசாவைப் போட்டால் இடிக்கும். கேட்பவருக்கும்
ரசிக்கமுடியாது.

நேயர்களோடு பேசும் போது ஒரு சில விநாடிகளிலேயே அவர்களின் எண்ணவோட்டத்தை நீங்கள் உணர்ந்து அதற்கேற்ப உங்கள் சம்பாஷணையை வைத்துக் கொள்ளுங்கள்.

மற்றைய பிரபல அறிவிப்பாளர் பாணியைப் பின்பற்றாமல் உங்களுக்கு இருக்கும் திறமையை
மெருகேற்றி உங்களுக்கென்ற ஒரு பாணியை உருவாக்குங்கள். அதில் தான் உங்கள் தனித்துவம் உண்டு.

மேலதிகமான வானொலி சார்ந்த படைப்புக்களுக்கு என்னிடமிருந்து ஏதாவது உதவியோ, தகவலோ தேவைப்பட்டால் இந்த மின்னஞ்சலுக்கு ஒரு மடல் இடுங்கள்.
kanapraba@gmail.com

எழில்பாரதி said...

சினேகிதி உங்கள் தேர்வுகளில் உள்ள அனைத்து பாடலும் எனக்கு மிக பிடித்தவை...

எப்போதும் எல்லோராலும் ரசிக்க கூடிய பாடல்கள்!!!!


மூங்கில நிலாவில் உள்ள அனைத்து பாடல்களும் அருமையாய் இருக்கும்!!

மிகவும் ரசித்தேன் வாழ்த்துகள்!!!!!

சினேகிதி said...

free consulting vera nadakuttha :-))) ellame nalla tips!

vaalthukal Surega!

சுரேகா.. said...

மிக்க நன்றி அண்ணா..

பயனுள்ள டிப்ஸ் தந்தீங்க..நன்றி!

சுரேகா.. said...

சினேகிதி அக்காவுக்கு.....நன்றி!

சுரேகா.. said...

சினேகிதி அக்காவுக்கு.....நன்றி!

MURUGAN S said...

அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்!!

U.P.Tharsan said...

அதிகம் கவனிக்கப்படாத மூங்கில் நிலா பாடல்கள் எனக்கு பிடித்தமான ஒன்று. மற்றவையும் என்னை கவர்ந்தவையே.

சினேகிதி said...

\\ஐயோ ஐயோ இதப்பத்தி ஒரு பதிவை எழுதி வைச்சிட்டு வெட்கத்தில இத்தனை நாளா வெளியிடாமல் இருந்திட்டேனே :)\\

நானும் உங்கட வலைப்பதிவை ஒவ்வொருநாளும் பாரக்கிறன் ஒன்டையும் காணம்...என்னமாதிரி??? அந்தப்பதிலவை வெளியிடுற எண்ணம் இல்லையா?

சினேகிதி said...

வணக்கம் CVR,
பேருந்தில் நீ எனக்கு பாடல் காட்சியாக்கப்பட்ட விதமும் கவிதைதான் இதுவரை பார்க்காதது சரி இனிப்பாருங்க.

எவனோ ஒருவன் பாடலாக்கப்பட்ட விதம் பாடல்வரிகள் போற்றப்பட்டளவுக்கு அவ்வளவாகப் பேசப்படவில்லை ஆனால் எனக்கு மிகவும் பிடிக்கும் அதுவும் பாடலின் முடிவில் மாதவனைக் கண்டதும் வாயைப்பொத்திக்கொண்டு Shalini குடுக்கும் expression ரொம்பப் பிடிக்கும்.

Anonymous said...

அருமையான தொகுப்பு:)