Pages

Thursday, September 27, 2007

நீங்கள் கேட்டவை 21

வழக்கம் போல் வகை வகையான பாடல்களை வலைப்பதிவர்கள் கேட்டிருக்கும் நீங்கள் கேட்டவை 21 இல் சந்திக்கின்றோம்.

இன்றைய நீங்கள் கேட்டவை நிகழ்ச்சியின் முதல் பாடல் அண்மையில் மறைந்த நடிகர் விஜயனுக்கு அர்ப்பணமாக ஒலிக்கின்றது. ஏற்கனவே வீடியோஸ்பதியில் விஜயன் நினைவாக "நிறம் மாறாத பூக்கள்" திரைப்படத்தில் இருந்து "ஆயிரம் மலர்களே மலருங்கள்" பாடலைத் தந்திருக்கின்றேன். றேடியோஸ்பதியில் ஒலி வடிவில் நடிகர் விஜயன் நடித்த "ஒரு விடுகதை ஒரு தொடர்கதை" திரைப்படத்தில் இருந்து " விடுகதை ஒன்று....தொடர்கதை ஒன்று" என்ற பாடலை கங்கை அமரன் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி ஆகியோர் பாடக் கேட்கலாம். காலம் மறக்கடிக்காத பாடல் உங்கள் காதுகளையும் வருடட்டும்.

சரி இனி நீங்கள் கேட்ட பாடல்களுக்குச் செல்வோம்.
முதலில் பாடலை விரும்பிக் கேட்டிருக்கும் சுதர்சன் கோபால், ராஜ ராஜ சோழன் திரைப்படத்தில் இருந்து "ஏடு தந்தானடி தில்லையிலே" என்ற இனிய பாடலை வரலஷ்மி பாடக் கேட்கின்றார். இசை: குன்னக்குடி வைத்திய நாதன்

அடுத்ததாக ஜீ 3 இன் விருப்பமாக மனதில் உறுதி வேண்டும் படத்தில் இருந்து அதே வரிகளோடு கே.ஜே. ஜேசுதாஸ் பாடும் பாடல் இளையராஜா இசையில் மலர்கின்றது.

அவள் அப்படித்தான் திரைப்படத்தில் இருந்து நக்கீரன் விரும்பிக் கேட்கும் பாடல் ஒலிக்கின்றது. "வாழ்க்கை ஓடம் செல்ல" என்ற அந்தப் பாடல் எஸ்.ஜானகி குரலில் இளையராஜா இசையில் ஒலிக்கின்றது.

நிறைவாக சந்தன முல்லை, "வான் போலே வண்ணம் கொண்டு: என்ற பாடலை சலங்கை ஒலி திரையில் இருந்து இளையராஜா இசையில், எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.பி.சைலஜா பாடக் கேட்கின்றார்.

பாடல்களைக் கேளுங்கள், கேட்ட வண்ணம் உங்கள் விருப்பப் பாடல்களையும் அறியத் தாருங்கள்.

முகப்புப் பட உதவி : சீர்காழி இணையத் தளம்

Powered by eSnips.com

25 comments:

Anonymous said...

thank you prabha.. office-l ketta mudiyalai..

சந்தனமுல்லை said...

பாடலுக்கு நன்றி கானா பிரபா....:-)

எனது அடுத்த விருப்பமாக, "சாலையோரம் சோலையொன்று "!!

G.Ragavan said...

விடுகதை ஒரு தொடர்கதை....அருமையான படம். அருமையான பாடல்கள். இந்தப் பாடல் நல்ல பாடல்தான். ஆனாலும் இந்தப் படத்தின் சிறப்பான பாட்டு "நாயகன் அவன் ஒருபுறம் அவன் விழியில் மனைவி அழகு" என்ற பாடல். கே.ஜே.யேசுதாசும் எஸ்.ஜானகியும் பாடியது. மிகமிக அருமையான பாட்டு. கங்கை அமரன் இசை. கங்கையமரன் இசையைக் கேட்கும் பொழுது...கிராமத்துப் பாடல்களில் அண்ணனைப் போல இசையமைத்தாலும்...அவர் மெல்லிசை மன்னரின் பாணியைப் பின்பற்றுவது போலத் தோன்றுகிறது.

கானா பிரபா said...

வணக்கம் நக்கீரன்

பாடலை ஆறுதலாகக் கேட்டு விட்டு, புதிய விருப்பத்தையும் அறியத் தாருங்கள்.

கானா பிரபா said...

வருகைக்கு நன்றி சந்தனமுல்லை

உங்க அடுத்த பாட்டு வரும்

SurveySan said...

தலைவரே,

இந்தப் பதிவில் ( http://vinmathi.blogspot.com/2007/09/blog-post.html ) உள்ள அனைத்துப் பாடலும் ஒரே பதிவில் போட்டு

இந்தப் பதிவுக்கு ( http://surveysan.blogspot.com/2007/08/blog-post_3515.html ) ஒரு வெளம்பரம் வர மாதிரி போட்டா புண்ணியமா போவும் :)

MSV புகழ் ஓங்குக!

கானா பிரபா said...

தலீவா

ரேடியோஸ்பதியை ரேடியோ மிர்ச்சி ரேஞ்சுக்கு விளம்பரங்களை எல்லாம் இணைக்கக் கேட்கிறீங்களா ;-))

ஆனாலும் நல்ல காரியத்துக்கு நம்ம பங்கும் இருக்கட்டுமே, நிச்சயமா போட்டுர்ரேன்ன்ன்ன்ன்ன்ன்ன்

SurveySan said...

:) நன்றி. நன்றி. நன்றி.

பாட்டக்கேட்டு வீரு கொண்டு எழட்டும்.
கையெழுத்துக்கள் அதிகமாகட்டும் ;)

எனக்கு விளம்பரம் வேண்டாம். அந்த பெட்டிஷன் பக்கத்துக்கு மட்டும் போடுங்கோ. :)

கானா பிரபா said...

சர்வேசா

பாட்டுக்கள் அப்புறம் வரும், இப்போதைக்கு நிரந்தர வாக்குச் சாவடி றேடியோஸ்பதியின் முன் பக்கத்தில் அமைத்திருக்கின்றேன், பார்க்கவும்

SurveySan said...

மீண்டும் ஒரு நன்னி! :)

VSK said...

படம் பெயர் நினைவுக்கு வரவில்லை.

பாடலோ மறக்கவொண்ணா பாடல்1

"அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே!"

பாடியவர் ஜானகி
இடையில் இளையராஜாவும் ஒரு வசனம் பேசுவார்.

இந்தப் படத்தில் மொத்தமே 4 பாடல்கள்தான் என நினைக்கிறேன்.

ஆனால், ராஜாவின் மகுடத்தில்மேலாக நிற்பது இதுவெனாவே எனது எண்ணம்!

இதில் இன்னொரு பாடல்.. 'வேதம் நீ இனிய நாதம் நீ" என்னும் ஜேசுதாஸின் பாடல்.

இரண்டுமே இருந்தால் போடுங்கள், தயவு செய்து.

நன்றி

கானா பிரபா said...

//G.Ragavan said...
கங்கையமரன் இசையைக் கேட்கும் பொழுது...கிராமத்துப் பாடல்களில் அண்ணனைப் போல இசையமைத்தாலும்...அவர் மெல்லிசை மன்னரின் பாணியைப் பின்பற்றுவது போலத் தோன்றுகிறது.//

வணக்கம் ராகவன்

"நாயகன் அவன் ஒரு புறம்" பாட்டு முன்னர் நீங்கள் கேட்டவையில் வந்தாகிவிட்டது. அருமையான பாடல்.

கங்கை அமரனின் இசையில் மலர்களே மலருங்கள், மெளனகீதங்கள், வாழ்வே மாயம், நீதிபதி என்று எத்தனையோ நல்ல படங்களைப் பட்டியல் இடலாம் இல்லையா?

கோபிநாத் said...

தலைவா...அனைத்து பாடல்களும் அருமை ;))

ஆனா ஒரு சின்ன சந்தோகம்....

\\நிறைவாக சந்தன முல்லை, "வான் போலே வண்ணம் கொண்டு: என்ற பாடலை சலங்கை ஒலி திரையில் இருந்து இளையராஜா இசையில், எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.பி.சைலஜா பாடக் கேட்கின்றார்.\\

சலங்கை ஒலிக்கு இசை ராஜா இல்லைன்னு நினைக்குறேன்...படத்தின் டைட்டில் போடும் போது அதில் கே.வி.மகாதேவன்னு பார்த்தா ஒரு ஞாபகம் அதான்....

என் சந்தோகத்தை திருத்து வையுங்கள் தலைவா....

கானா பிரபா said...

//என் சந்தோகத்தை திருத்து வையுங்கள் தலைவா....//

சிஷ்யனே!

உமது சந்தேகம் நியாயமானது தான். காரணம், முன்பொரு காலத்திலே இயக்குனர் கே.விஸ்வநாத் இயக்கிய சங்கராபரணம் திரைப்படத்திற்கு இசை வழங்கியவர் கே.வி.மகாதேவன் தான்.

ஆனால் பின்னர் கே.விஸ்வநாத் இயக்கிய சிப்பிக்குள் முத்து (ஸ்வாதி முத்யம்)மற்றும் சலங்கை ஒலி (சாகர சங்கமம்) ஆகிய திரைப்படங்களுக்கு இசைமைத்தது சாட்சாத் அந்த பரப்பிரம்மாவாகிய இளையராஜாவே தான்.

எனவே உமது சந்தேகம் மூலம் மேலதிக தெளிவும் யாம் அருளக் கூடியதாக இருந்தது குறித்துப் புழகாங்கிதம் அடைகின்றேன்

(பிற்குறிப்பு: இப்பதிலை வாசித்த கோபி பாலைவனமணலைப் பிறாண்டியவாறே சைக்கிளில் வேகமெடுத்து ஓடுகின்றார் ;))))

Unknown said...

எனக்கு மணிசித்ரதாழு படத்தில இருந்து

"ஒருமுறை வந்து பார்த்தாயா " பாட்டு வேண்டும்.. முடிஞ்சா வீடியோவோட


நன்றி

கோபிநாத் said...

\எனவே உமது சந்தேகம் மூலம் மேலதிக தெளிவும் யாம் அருளக் கூடியதாக இருந்தது குறித்துப் புழகாங்கிதம் அடைகின்றேன்\\

எனது பாக்கியம் தலைவா.. :))

Anonymous said...

dear praba this is the first time i am comming to ur blog coz ,i would like to heard silu silu siluvena kathu.... athu padikkuthu padikkuthu pattu.... i dont know picture name so can u plz ply this song for me
thanks

mr.Gopinath he is the one advice to me to visit ur bloger comming days i will see ur every post

கானா பிரபா said...

//VSK said...
பாடியவர் ஜானகி
இடையில் இளையராஜாவும் ஒரு வசனம் பேசுவார்.

//

வணக்கம் நண்பரே

நீங்கள் கேட்ட பாடல்கள் கோவில் புறா படத்தில் இடம்பெற்றது. இந்தப் பாடல்கள் என்னிடம் இருக்கின்றது. கட்டாயம் அவை வரும்

கானா பிரபா said...

//Iyappan Krishnan said...
எனக்கு மணிசித்ரதாழு படத்தில இருந்து

"ஒருமுறை வந்து பார்த்தாயா " பாட்டு வேண்டும்.. முடிஞ்சா வீடியோவோட//

வணக்கம் ஐயப்பன்

வீடியோ வடிவில் இப்பாடலை என் சக வலைப்பூவான வீடியோஸ்பதியில் இணைத்திருக்கின்றேன். இதோ

http://videospathy.blogspot.com/2007/09/blog-post_28.html

கானா பிரபா said...

//backi sharjah said...
dear praba this is the first time i am comming to ur blog coz ,i would like to heard silu silu siluvena kathu.... athu padikkuthu padikkuthu pattu.... i dont know picture name so can u plz ply this song for me
thanks //

வணக்கம் நண்பரே

முதல் வருகைக்கு நன்றி. நீங்கள் கேட்ட பாட்டு கிழக்குக் கரை படத்தில் சித்ரா பாடியது. நிச்சயம் வரும்.

G.Ragavan said...

// VSK said...
படம் பெயர் நினைவுக்கு வரவில்லை.

பாடலோ மறக்கவொண்ணா பாடல்1

"அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே!"

பாடியவர் ஜானகி
இடையில் இளையராஜாவும் ஒரு வசனம் பேசுவார். //

வியெஸ்கே, நீங்கள் குறிப்பிடும் பட்டம் கோயில் புறா. நீங்கள் குறிப்பிடும் பாடலைப் பாடியவர் பி.சுசீலா. எஸ்.ஜானகி அல்ல. உடன் பாடியவர் உமா ரமணன்.

G3 said...

ரொம்ப நன்றிங்க. ரொம்ப நாளா நான் தேடிய பாடல் இது. இப்போ உங்க புண்ணியத்துல கேட்டு மகிழ்கிறேன்.

மீண்டும் நன்றிகள் பல :)

கானா பிரபா said...

வாங்க G3

பாட்டுக் கேட்டுப் பதிலளித்தற்கு நன்றி, இன்னும் கேளுங்க கொடுப்போம்.

Sud Gopal said...

ஆஹா...தன்யனானேன் மகாப்பிரபோ...என்னுடைய விருப்பத்தை இசைத்தமைக்கு நன்றிகள்.

வரலட்சுமியம்மாவோட குரல் மேல் ஏனோ எனக்கு ஒரு இனம்புரியா ஈர்ப்பு உண்டு.வெள்ளிமலை மன்னவா,இந்தப் பச்சைக்கிளிக்கொரு என்று தொடங்கி உன்னை நானறிவேன் வரை....

கானா பிரபா said...

இந்தப் பச்சைக்கிளிக்கொரு பாட்டு நம்ம பேவரிட்டும் ஆச்சே