Pages

Friday, July 13, 2007

நீங்கள் கேட்டவை 13



எல்லாருக்கும் வணக்கம்!

எப்பிடி சுகமாய் இருக்கிறியளே?
நீங்கள் கேட்டவை 13 இலை உங்களைச் சந்திக்கிறதில எனக்கு ஒரே புழுகம் தான். சரி வாங்கோ நிகழ்ச்சிக்குப் போவம்.

இன்றைய நீங்கள் கேட்டவை பதிவில் முதல் பாடலைக் கேட்டிருக்கின்றார், கேள்வியின் நாயகன் சுதர்ஸன் கோபால், செவ்வந்திப்பூக்களில் செய்த வீடு தான் வேணும்னு இவர் இரண்டு தடவை மடல் கூடப் போட்டு விட்டார். நான் நினைக்கிறேன் இணையத்தளங்களிலே அகப்படாத இந்த அரிய பாடல் என் பொக்கிஷங்களில் ஒன்றாக இருக்கிறதென்று. இதோ உங்களுக்காக சிறப்பாக வரும் இந்தப் பாடல் "மெல்லப் பேசுங்கள்" திரைக்காக , தீபன் சக்ரவர்த்தி, உமா ரமணன் ஆகியோர் பாடுகின்றார்கள். எஸ்.பி.பாலு, ஜானகி ஜோடி போல இந்த ஜோடிக்கூட்டும் இனிமையானது.
இசையமைத்தவர் யாரென்று சொல்ல மாட்டேன். இவர் பெயரை ஒவ்வொருவாரமும் அதிகப்படியாகத் தட்டச்சி, அந்த எழுத்துக்களே தேய்ந்துவிட்டன.
நீங்களே கண்டு பிடியுங்கள் ;-)


இங்கே அழுத்தவும்


அல்லது

Sevanthi.wma


அடுத்ததாக வலையுலகில் சமையல் முதல் சமூகம் வரை ஒரு கை பார்க்கும் மதி கந்தசாமி
"பாஞ்சாலங்குறிச்சி" திரைப்படத்தில் இருந்து காப்பி நிறையக் குடிக்கும் தேவா சார் இசையில் ஹரிஹரன், அனுராதா ஸ்ரீராம் பாடியது. இந்த மேற்கத்தேய ஜாஸ் இசையோடு போட்டி போடும் இந்த கிராமத்து ஜாஸ் ;-)(எங்கேயோ இடிக்குதே)

Get this widget | Share | Track details


ஒவ்வொரு பதிவிலும் என்னைக் கண்காணித்துத் தன் விமர்சனங்களை அளிக்கும் நண்பர் வெயிலான் பாடல் கேட்பது அரிது. ஆனால் அவர் பாடல் கேட்டால் கர்னாடக சங்கீதத்தின் தாக்கம் உள்ள பாடலாகத் தான் இருக்கும். "நின்னைச் சரணடைந்தேன்" என்ற பாடலை அவர் கேட்டிருந்தார். அந்தப் பாடல் "பாரதி" படத்திலும் இடம்பிடித்தது. ஆனால் நான் அவருக்காகத் தரும் இந்தப் பாடல் கர்னாடக சங்கீதப் பாடகி "பாம்பே ஜெயஸ்ரீ" பாடிய படத்தில் வராத தனிப்பாடலான "நின்னைச் சரணடைந்தேன்". இந்தப்பாடலின் சிறப்பு என்னவென்றால் மேற்கத்தேய இசையோடு வித்தியாசமாக வருகின்றது. அதிகம் நீங்கள் கேட்டிருக்கமாட்டீர்கள் என்பதற்காகத் தருகின்றேன். இதோ

Get this widget | Share | Track details


வலையுலகில் புதிதாக நுழைந்திருக்கும் அன்புத் தம்பி சினேகிதன் கேட்டிருக்கும் "ஆத்மா" திரைப்படப்பாடலைக் கேட்டுக் கொண்டேயிருக்கலாம். அவ்வளவு அருமையான பாடல்.
" கண்ணாலே காதல் கவிதை" என்ற இந்த இனிய பாடலை கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.ஜானகி பாடியிருக்கின்றார்கள். பாடல் இசை கங்கை அமரனின் அண்ணன்.

Get this widget | Share | Track details


வலைப்பதிவு உலகில் முதன் முறையாக (பிளீஸ் யாராவது குறிச்சுக்கோங்க ;-))) நீங்கள் கேட்டவை ஒளி வடிவில் வருகின்றது. முதல் பாடலே அம்மா செண்டிமெண்டோடு வரும்
" தளபதி" திரைப்பாடலான "சின்னத்தாயவள்", பாடியவர் எஸ்.ஜானகி. You Tube இல் பாடலை ஏற்றி உதவிய தீனதயாளனுக்கு மிக்க நன்றிகள். முதல் ஒளி மூல நீங்கள் கேட்டவை பாடலைப் பெறும் அதிஷ்டசாலி நம்ம பாலைவனத்துச் சிங்கம் கோபிநாத்



16 comments:

Anonymous said...

/// ஒவ்வொரு பதிவிலும் என்னைக் கண்காணித்துத் தன் விமர்சனங்களை அளிக்கும் நண்பர் வெயிலான் ///

பிரபா! இசையின் மீதுள்ள ஆர்வத்தின் காரணமே உம் பதிவுக்கு வந்து விமர்சித்தோம். (திருவிளையாடல் வசன பாணியில் படிக்கவும்).

அதற்காக என்னைப்பற்றி இவ்வளவு முன்னுரையா? மேலும் எனக்கு கர்நாடக இசை தெரியாது. ஆனால் பிடிக்கும்.

நன்றி!

பாடலைக் கேட்டுவிட்டு விமர்சனம் எழுதுகிறேன்.

சிநேகிதன்.. said...

நன்றி அண்ணா...
\\"ஆத்மா" திரைப்படப்பாடலைக் கேட்டுக் கொண்டேயிருக்கலாம். அவ்வளவு அருமையான பாடல்.\\
இசைதான் கங்கைஅமரன் அண்ணாவாயிற்றே அதான்!!!

கானா பிரபா said...

வாங்க வெயிலான்

தொடர்ந்தும் உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன், பாடலைக் கேட்டுவிட்டுச் சொல்லுங்கள்

வடுவூர் குமார் said...

அந்த ஆத்மா பாடலுக்கு இசை அமைத்தது "கார்த்திக் ராஜா".படத்தில் இளையராஜா பெயருடன் வந்தது.

Anonymous said...

Hi
கண்ணாலே காதல் கவிதை -KJ song ennaku piditha padal..
melaum sila padalkal

1. chinna chinna pove(sangar guru)
2. katti vachchukko enthan anbu (en jeevan paduthu)
3. ninaiye rathiendru (KJ yesudos)
4. nee kattum selai..(pudiya manarkal)

eppadi download seivathu?

mikka nandri
Nakkeeran

கானா பிரபா said...

//சிநேகிதன்.. said...
நன்றி அண்ணா...
\\"ஆத்மா" திரைப்படப்பாடலைக் கேட்டுக் கொண்டேயிருக்கலாம். அவ்வளவு அருமையான பாடல்.\\
இசைதான் கங்கைஅமரன் அண்ணாவாயிற்றே அதான்!!! //

வாங்க சினேகிதன்

உங்க புண்ணியத்தில் நானும் நல்ல பாட்டைக் கேட்கக் கூடியதாக இருக்கின்றது.

சிநேகிதன்.. said...

கானா அண்ணா எனது அடுத்த விருப்பப் பாடல் "100வதுநாள்" படத்திலிருந்து நமது ராஜாவின் ராஜாங்க இசையில் எஸ்.பி.பி மற்றும் எஸ்.ஜானகி பாடிய "விழியிலே மணி விழியில்" என்ற பாடல்

Anonymous said...

என் விருப்பப்பாடலை மேற்கத்திய இசையோடு இணைந்த வித்தியாசமானதாக வழங்கியதற்கு மிக்க நன்றி!

மேற்கத்திய இசை சிறிது செவிகளுக்கு உறுத்தல் ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது.

குரலோடு இழைந்த இசை சேர்த்த, அதான் உங்களை அதிகமாக தட்டச்சி எழுத்துக்களை தேய வைத்தவரின் பாடல் போல் இல்லை.

கோபிநாத் said...

\\வலைப்பதிவு உலகில் முதன் முறையாக (பிளீஸ் யாராவது குறிச்சுக்கோங்க ;-))) நீங்கள் கேட்டவை ஒளி வடிவில் வருகின்றது. முதல் பாடலே அம்மா செண்டிமெண்டோடு வரும்
" தளபதி" திரைப்பாடலான "சின்னத்தாயவள்", பாடியவர் எஸ்.ஜானகி. You Tube இல் பாடலை ஏற்றி உதவிய தீனதயாளனுக்கு மிக்க நன்றிகள். முதல் ஒளி மூல நீங்கள் கேட்டவை பாடலைப் பெறும் அதிஷ்டசாலி நம்ம பாலைவனத்துச் சிங்கம் கோபிநாத் \\

ஆஹா....மிக்க மகிழ்ச்சி தலைவா.....எத்தனை முறை இந்த பாடலையும், பாடத்தையும் பார்த்தேன்னு கணக்கே இல்ல....

SurveySan said...

இதோ இதோ என் நெஞ்சினிலே ஒரெ பாடல்,
ப்ளீஸ் :)

Sud Gopal said...

ஜூப்பர்னேன்...நன்றி அண்ணாத்தே...
திருவெம்பாவையோட ஆரம்பிக்கும் இந்தப் பாடலை எழுதியது கவிப்பேரரசு...

இதை எங்கிட்டாவது தரவிறக்கம் செய்ய முடியுமா?

என்னோட பட்டியலில் மீதி இருக்கும் பாடல்கள்:
1)ஏய்,அடி மனம் நில்லுன்னா - நீங்கள் கேட்டவை
2)சின்னப்புறா ஒன்று -அன்பே சங்கீதா
3)வான் நிலா நிலா - பட்டினப்பிரவேசம்..

G.Ragavan said...

கூவின பூங்குயில்
கூவின கோழி
குருகுகள் இயம்பின
விளம்பின காண் சங்கம்
யாவரும் அறிவறியா
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

இது திருவெம்பாவை. மாணிக்கவாசகர் எழுதியது. இதை விடியலில் பாடுவார்கள். அந்த விடியல் சுகமாக உமாரமணன் குரலில் கேட்டுக் கொண்டே செவ்வந்திப் பூக்களில் செய்த வீட்டிற்குள் நுழைவது மிக இனிமை.


ஓ ஒதட்டோடரச் சிரிப்பு பாட்டு மட்டுமல்ல...பாஞ்சாலங்குறிச்சியில் அனைத்துப் பாட்டுகளுமே நன்றாக இருக்கும். தேவாவும் தனித்துவம் கொண்ட இசையமைப்பாளர்தான். மெல்லிசை மன்னரின் சாயல் நிறைய இருக்கும். இரூந்தாலும் இயக்குனர்கள் அவரைப் பார்க்கப் போகையில் பல சிடிகளோடு போவார்களாம். இதை அவரே வருத்தத்தோடு ஒருமுறை சொல்லியிருக்கிறார்.

கண்ணாலே காதல் கவிதை பாடல் எனக்கு மிகவும் பிடித்தது.

தளபதி படத்தில் சிறந்த பாடல் எது என்று கேட்டால் நான் தயங்காமல் சொல்வேன் "சின்னத்தாயவள் தந்த" பாடல் என்று. இது நாயகன் படத்தில் வரும் "தென்பாண்டிச் சீமையிலே" பாடலின் தங்கச்சி என்றாலும் அருமையான பாடல்.

இவ்வளவு சொல்லி விட்டுச் சும்மாப் போக முடியுமா? ஒரு பாட்டு கேக்கணுமே. சந்திப்பு படத்தில் இடம் பெற்ற "ராத்திரி நிலாவில் ரகசியக் கனாவில்" என்ற பாடல் என்னுடைய விருப்பமாகத் தரவும்.

கானா பிரபா said...

//வடுவூர் குமார் said...
அந்த ஆத்மா பாடலுக்கு இசை அமைத்தது "கார்த்திக் ராஜா".படத்தில் இளையராஜா பெயருடன் வந்தது. //

புதுத்தகவலாக இருக்கின்றது நன்றி.


//சிநேகிதன்.. said...
கானா அண்ணா எனது அடுத்த விருப்பப் பாடல் "100வதுநாள்" படத்திலிருந்து நமது ராஜாவின் ராஜாங்க இசையில் எஸ்.பி.பி மற்றும் எஸ்.ஜானகி பாடிய "விழியிலே மணி விழியில்" என்ற பாடல் //

இந்தப் பாடலை ஒரு வித்தியாசமான பதிவில் விரைவில் வழங்க இருக்கின்றேன்,காத்திருங்கள்.

//Nakkeeran said...
Hi
கண்ணாலே காதல் கவிதை -KJ song ennaku piditha padal..
melaum sila padalkal//

வாங்க நக்கீரன்

உங்க பாடல்கள் ஒவ்வொன்றாக வரும்.

நெல்லைக் கிறுக்கன் said...

பிரபா,
பாடல்கள் அணைத்தும் அருமை. எனக்காக "ஏதோ நினைவுகள்" பாட்ட போடுவீகளா?

சிட்னி வந்திருந்தப்போ இந்தப் பாட்டப் பத்தி உங்ககிட்ட சொன்னேன் ஞாபகம் இருக்கா?

கானா பிரபா said...

//வெயிலான் said...
மேற்கத்திய இசை சிறிது செவிகளுக்கு உறுத்தல் ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது//


வாங்க வெயிலான்

எனக்கும் அதே உணர்வுதான் ;-)


//SurveySan said...
இதோ இதோ என் நெஞ்சினிலே ஒரெ பாடல்,
ப்ளீஸ் :) //

பாட்டு வந்து கொண்டேயிருக்கு ;-)


//நெல்லைகிறுக்கன் said...
பிரபா,
பாடல்கள் அணைத்தும் அருமை. எனக்காக "ஏதோ நினைவுகள்" பாட்ட போடுவீகளா?//


நெல்லைகிறுக்கன் said...
பிரபா,
பாடல்கள் அணைத்தும் அருமை. எனக்காக "ஏதோ நினைவுகள்" பாட்ட போடுவீகளா?

கானா பிரபா said...

வணக்கம் சுதர்சன் மற்றும் ராகவன்

தங்கள் வருகைக்கு நன்றிகள், உங்கள் இருவரது தேர்வுகளும் கட்டாயம் வரும், கூவின பூங்குயில் தற்போதைக்கு றேடியோஸ்பதியில் மட்டுமே கூவுமாம் ;-)

நெல்லைக் கிறுக்கரே

நினைவுகள மறக்கமுடியுமா, பாட்டும் வரும் ;-)