Pages

Sunday, July 1, 2007

மலர்ந்தும் மலராத இசையமைப்பாளர்கள் - 1

மலர்ந்தும் மலராத இசையமைப்பாளர்கள் என்ற புதிய தொடர் றேடியோஸ்பதியில் புதிதாய் ஆரம்பிக்கின்றது. தமிழ்திரையுலகில் ஒரு சில படங்களுக்கே இசையமைத்தாலும் நல்ல சில பாடல்களை விட்டுச் சென்ற இசையமைப்பாளர்கள் குறித்த சிறு அறிமுகமும் அவர்களின் இசையில் மலர்ந்த இனிய பாடல்களும் இப்பகுதியில் அரங்கேறுகின்றன.

அந்த வகையில் இன்றைய முதற்பாகத்தில் "சேரன் பாண்டியன்" திரைப்படம் மூலம் திரைக்கு அறிமுகமான இசையமைப்பாளர் செளந்தர்யன், அவரின் இசையமைப்பில் "காதல் கடிதம் வரைந்தேன்" என்ற பாடல் ராஜ்குமார், சுவர்ணலதா குரல்களிலும்,

"தலைவாசல்" திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இசையமைப்பாளர் "பாலபாரதி", அவரின் இசையில் வந்த "அமராவதி" திரைப்பாடலான "தாஜ்ஜுமஹால் தேவையில்லை அன்னமே" என்ற பாடல் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி குரல்களிலும் ஒலிக்கின்றன.

21 comments:

G.Ragavan said...

இரண்டு பாடல்களும் மிகச்சிறப்பான பாடல்கள்.

சௌந்தர்யன் நல்ல இசைக்கவிஞர்தான். ஆனால் இவர் முன்னுக்கு வந்திருக்கலாம். இசையமைப்பாளருக்கு இசை மட்டும் தெரிந்திருந்தால் போதாது. அதெல்லாம் அந்தக் காலம்.

பாலபாரதி திரைப்படத்திற்குள் வந்த பொழுதுதான் ரகுமானும் வந்தார். ரகுமானின் பெருவெற்றியோசையில் பாலபாரதியின் மெல்லிசை கேட்கவேயில்லை.

இவையிரண்டு மட்டுமில்லாது....இந்த இருவரிடமும் இருந்த ஒரு பலவீனம்....புதுமையைப் புகுத்தாமை. இருவருமே....அன்றைய காலகட்டத்தில் இசை எப்படியிருந்ததோ...அதே பாணியில் பாடல்களைக் கொடுத்தமை. ஆனால் இவர்களோடு வந்த ரகுமான் தமிழிசையை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றார். கருநாடக சங்கீதம் பாடிக்கொண்டிருந்த திரையிசையை மெல்லிசைக்கு விஸ்வநாதன் கொண்டு சென்றார். விஸ்வநாதனிடமிருந்து இளையராஜா அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றார்...இளையராஜாவிடமிருந்து ரகுமான். ஆகையால்தான் இவர்கள் மூவரும் தமிழ்த்திரையில் வேறெந்த இசையமைப்பாளர்களையும் விடப் போற்றப்படுகிறார்கள்.

Anonymous said...

நல்ல புதுமையான முயற்சி பிரபு. வாழ்த்துக்கள்!!

Vassan said...

கானா பிரபா

தகவலுக்கு

other composers

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பிரபா!
தேவா, ஸ்ரீகாந் தேவாவிலும் கற்பனை
வழமுண்டு. ஏன் பின் தங்கினார்கள்.
சொந்தக் கற்பனை என்பதாலா?

CVR said...

நல்ல முயற்சி!!
வாழ்த்துக்கள்!! :-)

கானா பிரபா said...

ராகவன் நீங்கள் குறிப்பிட்ட கருத்துக்களோடு உடன்படுகின்றேன். தக்கன வாழும் தகாதன அழியும் என்பது போல், தன்னையும் தன் இசையையும் தனித்துவப்படுத்துபவன் நீங்கா இடம்பெறுகின்றான். திறமை மட்டுமல்ல புதுமையும் இருந்தால் தான் இந்தத் துறையில் நிலைத்து நிற்கலாம்.

வெயிலான்

தொடர்ந்த ஊக்குவிப்புக்கு என் மேலான நன்றிகள்.

சினேகிதி said...

புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா என்றொரு பாட்டிருக்கல்லோ...அதும் அமராவதி படம் தானே??

ஒரு சில படங்களில் மட்டும் நடித்த நல்ல நடிகர்/நடிகர்களைப் பற்றி எழுத மாட்டிங்கிளோ பிரபாண்ணா :-)

கானா பிரபா said...

வாங்கோ தங்கச்சி

எனாக்கு தாஜ்ஜுமகால் தேவையில்லை பாட்டில் வரும் வயலின் இசை ரொம்ப பிடிக்கும், யான் பெற்ற இன்பத்தை வையகத்துக்கும் கொடுத்தோம். புத்தம் புது மலரேயும் அருமையான பாட்டு தான்.

ஒரு சிலபடங்களில் நடித்த நல்ல நடிகர்களைப் பற்றிக் கேட்டிருந்தீர்கள். எனக்கு சுய தம்பட்டம்
அடிக்கப் பிடிக்காது, முயற்சி செய்கிறேன் ;-)

கானா பிரபா said...

//CVR said...
நல்ல முயற்சி!!
வாழ்த்துக்கள்!! :-) //

வாங்க நண்பரே ;-)


// யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
பிரபா!
தேவா, ஸ்ரீகாந் தேவாவிலும் கற்பனை
வழமுண்டு. ஏன் பின் தங்கினார்கள்.
சொந்தக் கற்பனை என்பதாலா?//

வணக்கம் யோகன் அண்ணா தேவா மற்றும் அவரின் மகனின் பலவீனம் சொந்தச் சரக்கு நல்லாயிருந்தாலும் அடுத்தவனை எடுத்து காப்பி போட இவர்களுக்கு நல்லாப் பிட்க்கும். தேவாவின் சொந்தச் சரக்கில் வந்த அருமையான படமாக காதல் கோட்டையை சொல்லலாம்.

Anonymous said...

என் விருப்பமாக "நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா" என்ற பாடல், படத்தின் பெயர் நினைவில்லை.

தங்களுடைய தொகுப்பின் பாடல்கள் ஒரே அலைவரிசையில்
(தனி,இணை,சோகம்,வேகம்)

இருந்தால்
இன்னும்
இனிமை

சேர்க்குமென்பது என் கருத்து.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

இந்தமாதிரி வித்தியாச வித்தியாசமான இடுகைகள் பிடிச்சிருக்கு பிரபா. முடிஞ்சளவுக்கு இந்தமாதிரியான இடுகைகளையே குடுங்க. நேயர் விருப்பத்தை விட. ;) பிள்ளைக்கு ஓவரா செல்லம் குடுத்தா பக்கத்துவிட்டுக்காரர் நாலு தட்டு தட்டிருவம். சரியே. ;) :)))

தல அஜித்தோட தொடங்கியிருக்கிறியள். நல்ல முழிவழந்தான். ;)

-மதி

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

//ஒரு சில படங்களில் மட்டும் நடித்த நல்ல நடிகர்/நடிகர்களைப் பற்றி எழுத மாட்டிங்கிளோ பிரபாண்ணா :-)//

//ஒரு சிலபடங்களில் நடித்த நல்ல நடிகர்களைப் பற்றிக் கேட்டிருந்தீர்கள். எனக்கு சுய தம்பட்டம்
அடிக்கப் பிடிக்காது, முயற்சி செய்கிறேன் ;-)//

இதையெல்லாம் என்ன ஏதெண்டு கேக்கிறதுக்கு ஆக்களில்லையே. :(

தம்ப்ர்ர்ர்ரீஈஈஈ, சினேகிதி என்ன கேட்டவ? திரும்பி நல்லா வாசியும் பாப்பம். உமக்கு அந்த 'அண்ணை றைட்' பஸ் கண்டக்டரைத்தான் கூட்டியண்டு வரோணும்போல.

ஒரு சில படங்களில மட்டும் நடிச்ச நல்ல நடிகர்களைப்பற்றி எழுதச் சொன்னவா. அதில சுயபுராணம் எங்கய்யா வந்தது? :(((

;))

-மதி

கானா பிரபா said...

வணக்கம் வெயிலான்

நீங்கள் கேட்ட பாடல் பாரதி படத்தில் இடம்பெற்றது. பாடல்களைப் பலதரப்பட்ட நேயர்கள் கேட்பதால் இப்படி வித்தியாசப்படுத்துவதில் சிரமம் இருக்கின்றது. முயற்சி செய்து உங்கள் ஆலோசனையை நிறைவேற்றுகின்றேன்.

கானா பிரபா said...

வணக்கம் மதியண்ணை

ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானா வளரும். றேடியோஸ்பதிக்கு ஆக்கமும் ஊக்கமும் தர உரமாக இருக்கும் உங்களைப் போல் அன்பர்க....... சரி சரி நிறுத்திக்கிறேன் ;-)


நான் நடிச்ச படங்கள் நீங்கள் பார்க்கேல்லை என்பது வியப்பா இருக்கு, உலக சினிமாவை அக்கு வேறு ஆணி வேறா விமர்சனம் செய்யும் உங்களிடமிருந்து இந்தப் பதிலை நான் எதிர்பார்க்கலை.

நான் நடிச்ச படங்கள் சில:

ஓடிப் போன உத்தமி
படி தாண்டிய பத்தினி

தேடி எடுத்துப் பாருங்க ;-)

சினேகிதி said...

மதியண்ணா பிரபாண்ணா உங்களுக்குத் தம்பியா?? சொல்லவே இல்லை:-))) ஏற்கனமே மதியை ஏதோ 40 வயசு பெரியம்மா கணக்கில கற்பனை பண்ணி வச்சிருக்கினம் சில பேர் நான் நேரில பார்த்தனான் என்று சொன்னாலும் நம்பினமில்ல இந்த லட்சணத்தில நீங்கள் பிரபாண்ணாவைத் தம்பி என்று கூப்பிடுறது அவ்வளவு ஆரோக்கியமான விசயமா எனக்குப் படேல்ல :-)

படிதாண்டா பத்தினி அந்தக்காலப் படம்.."தனச்சித்தி சுட்ட தோசை" என்ற படத்தில நடிச்சது நீங்கதானே பிரபாண்ணா?

கானா பிரபா said...

வடிவாக வாசிக்கவும், நான் சொன்ன படம் "படி தாண்டிய பத்தினி" ;-)

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

சினேகிதி: அண்ணா எண்டே கூப்பிடுங்கோ. எல்லாவிசயமும் தலைகீழா இருந்தா நல்லாத்தானே இருக்கு. ;)

பிரபா: படத்தின்ர தலைப்புகள் பிழையாக்கிடக்கே.

ஓடிப்போன உத்தமன்
படிதாண்டிய பத்தினிவிரதன்

எண்டெல்லோ இருக்கோணும்.

சினேகிதி: நீங்கள் சொன்ன படமும் தனச்சித்தி சுட்ட மஞ்சள் தோசை எண்டெல்லோ இருக்கோணும்.

தனம் எண்டோடண நினைவு வருது. நந்திதா தாஸ் நடிச்ச படப் பாட்டுகள் எண்டு ஒரு நிகழ்ச்சி வைக்கலாமோ?

இடக்குமடக்கா ஒரு கேள்வியோட முடிக்கிறன். அழகி மாதிரியே பார்த்திபன்ர இடத்தில நந்திதா தாஸை வச்சு ஒரு கதை வந்திருந்தா எவ்வளவு ஓடியிருக்கும். அழகி சரி ஆட்டோகிராப் சரி படம் பார்த்திற்று நண்பர்களோட கதைச்ச ஒரு விசயம் இது.

-மதி

கானா பிரபா said...

நந்திதா தாஸ் நடிச்ச படங்கள் குறைவு, பதிவும் 3 பாட்டோட போயிடும், பார்ப்போம், ஆனால் முன்பே "விஸ்வ துளசி" படத்தின் நல்ல stills எடுத்து வச்சிருக்கிறன், பிறகு உபயோகப்படும் என்று

Sud Gopal said...

சோழா கிரியேஷன்ஸ் என்னும் நிறுவனம் சென்னைத்தொலைக்காட்சிக்காக தயாரித்து வழங்கிய தொடர்கள் வாயிலாகத் தனது இசைப் பயணத்தைத் துவங்கியவர் பாலபாரதி.அழ.வள்ளியப்பாவின் கதை,செல்வாவின்(தலைவாசல்,அமராவதி,பூவேலி,புதையல்,கர்ணா,நான் அவன் இல்லை) இயக்கம்,தலைவாசல் விஜய்,மகாநதி ஷோபனாவின் நடிப்பில் வந்த நீலா மாலா இதில் குறிப்பிடத்தக்க ஒன்று.
பின்னர் சோழா கிரியேஷன்சார் எடுத்த முதல் திரைப்படமான தலைவாசலில் தான் பாலபாரதிக்கு திரை அறிமுகம்.
சில கானாக்களுடன் ஒரு அருமையான மெலோடி சேர்ந்த அப்படம் ஒரு ஆவரேஜ் ஹிட்.நாசருக்கு அது நூறாவது படம்.எஸ்.பி.பாலசுப்ரமணியம் கேளடி கண்மணிக்கு முன்பாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த படம் அது.பாலபாரதி இசையில் கடைசியாக வந்த படம்,மகேந்திரன் இயக்கிய சாசனம்.இப்போ தொலைக்காட்சித் தொடர்களுக்கு இசையமைச்சுக்கிட்டு இருக்கார்.

சரி..சௌந்தர்யனுக்கு வருவோம்.சேரன் பாண்டியனுக்கு அப்புறம் இவர் இசையமைச்சு வந்த பாடல்கள் ஹிட்டான மற்றுமொரு படம் சிந்துநதி பூ.

ஹூம்...பழையன களைதலும்ம் புகுதன புகுதலும்...

Sud Gopal said...

நல்லதொரு முயற்சி பிரபா அண்ணாச்சி.

கானா பிரபா said...

வணக்கம் சுதர்சன்

சோழா கிரியேஷன்ஸ் இன் பாலபாரதி குறித்த அறிமுகத்தை ஒலிப்பதிவில் சொல்லியிருக்கின்றேன். தலைவாசலில் ஆனந்த் இள நாயகனாகவும் எஸ்.பி.பி. தலைவாசல் விஜய் நல்ல பாத்திரங்களிலும் நடித்திருப்பார்கள். தொடர்ந்து வாங்க, நான் விட்ட விஷயங்களை இப்படி அருமையாகத் தாருங்கள். நன்றி.