
மினி ஜோசப் என்ற பெயரிலேயே வலம்வந்திருக்கின்றார் இது தமிழ்த்திரையுலகுக்கு வரமுன்னர். மினி ஐ மின்மினி என்று பெயர் சூட்டியதும் ராஜாவே தான். செர்ணலதா போல இவருக்கும் ஓரவஞ்சனை இல்லாது நிறைய நல்ல நல்ல பாடல்களை ராஜா கொடுத்திருக்கின்றார். ஆனால் அன்றைய சூழலில் ஜானகி, சித்ரா போன்ற முதல் வரிசைப் பாடகிகள் அளவுக்கு வராமற் போயிருந்தார். இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் வரவு ரோஜா படத்தின் மூலம் ஆரம்பமாக, அந்தப் படத்தின் முத்திரைப் பாடல் "சின்னச் சின்ன ஆசை" பாடல் மின்மினிக்குக் கிடைக்க அவர் அதுவரை தொடாத உயரங்களைத் தொட்டார் இந்தப் பாடல் கொடுத்த புகழால். இசைஞானியின் பாடகிகளில்

மாலைச் சந்திரன் (உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்) பாடலை எஸ்.பி.பி என்ற ஜாம்பவானுடன் பாடும் போது அதில் வரும் 2.28 நிமிடத்துளிகளில் மின்மினி அனாயாசமாக "மாலைச் சந்திரன் மலரைத் தேடுது மன்மத ராகத்திலே" என்று பாடுவதிலாகட்டும் "ஏ அம்மன் கோயில் வாசலிலே வாசலிலே" (திருமதி பழனிச்சாமி) என்று ( 2.47 நிமிடம்) அதுவரை கலாய்த்துப் பாடிய எஸ்.பி.பி, சுந்தரராஜன் குழுவுக்குப் போட்டி போட்டுப் பாடுவதிலாகட்டும் மின்மினியின் குரலின் கனிவுக்கு சில சான்றுகள். "அடி பூங்குயிலே பூங்குயிலே" (அரண்மனைக் கிளி) பாடலில் மனோவோடு இணைந்து பாடும் மின்மினிக்கு மாற்றீடாக இந்தப் பாடலில் இன்னொரு குரலைப் பொருத்திப் பார்க்கமுடியவில்லை. ஆர்.வி.உதயகுமாரின் உதவியாளராக இருந்து இயக்குனராக வந்த செய்யாறு ரவியின் இயக்கத்தில் வந்த தர்மசீலன் படத்தில் வரும் "தென்றல் வரும் முன்னே முன்னே" பாடல் மின்மினிக்கு ராஜா கொடுத்த அங்கீகாரங்களில் ஒன்று. வள்ளி படத்தில் வரும் "என்னுள்ளே என்னுள்ளே" என்ற பாடலில் சொர்ணலதா வழியாக ஏங்கும் காதலியின் உணர்வைக் கொண்டு வந்த ராஜா, உன்னை நெனச்சேன் பாட்டுப் படிச்சேன் படத்தில் "தொட்டுத் தொட்டு தூக்கிப்புட்டே" பாடலை மின்மினிக்குக் கொடுத்து அதே பரிமாணத்தைக் காட்டியிருக்கிறார். இவையெல்லாவற்றுக்கும் மேலாக என் மனசுக்கு நெருங்கிய பாடல்களில் ஒன்றான "நல்ல தலைவனும் தலைவியும்" (பிள்ளைப்பாசம்) பாடலில் "எங்கும் பொழியுது ஒளிமழை வண்ண விளக்குகள் பலவகை... ஊரெல்லாம் திருவிழா" என்று பாடும் அந்தக் கணங்களில் நெஞ்சில் நிறைந்த் நிற்கின்றார்.
இந்தப் பகிர்வில் இசைஞானி இளையராஜாவின் இசையில் பாடகி மின்மினிக்குக் கிட்டிய பாடல் முத்துக்கள் சிலவற்றைப் பகிர்கின்றேன். கேட்டு அனுபவியுங்கள்.
"லவ்வுன்னா லவ்வு மண்ணெண்ணை ஸ்டவ்வு" (மீரா) மனோவுடன் மின்மினி
"மாலைச் சந்திரன் மலரைத் தேடுது" (உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்) எஸ்.பி.பியுடன் மின்மினி
"அம்மன் கோயில் வாசலிலே" (திருமதி பழனிச்சாமி) எஸ்.பி.பி, சுந்தரராஜன், மின்மினி
"தொட்டுத் தொட்டுத் தூக்கிப்புட்டே" (உன்ன நெனச்சேன் பாட்டுப் படிச்சேன்) மின்மினி தனித்து
"தென்றல் வரும் முன்னே முன்னே" (தர்மசீலன்) அருண்மொழியுடன் மின்மினி
"நல்ல தலைவனும் தலைவியும் வாழும் வீடு தேவன் ஆலயம்" (பிள்ளைப்பாசம்) மனோவுடன் மின்மினி
"அடி பூங்குயிலே பூங்குயிலே" (அரண்மனைக்கிளி) மனோவுடன் மின்மினி
12 comments:
"அடி பூங்குயிலே பூங்குயிலே" சரண மெட்டு எல்லாம் சான்சே இல்லை கானா. கூவாமா கூவுறியே குகூ குகூ பாட்டு என்று வரும் இடத்தில் அவரின் குறல் கணீரெண்டு சங்கதி சொல்லும் .. அந்த டூயட்டை இருவரும் நல்ல ஒரு ரொமாண்டிக் மூட்டுடன் பாடி இருப்பார்கள். நன்றி பகிர்வுக்கு.
யப்பா...மீரா, அரண்மனைகிளி தவிர பெருசாக மீதி பாடல்கள் எல்லாம் கேட்டதாக நினைவு இல்ல தல !
உங்கள் மூலமாக அனைத்தையும் மீண்டும் கேட்டுட்டேன். மிக்க நன்றி தல ;-)
thanks kana..
thanks for the song poongkuile :)
அருமையான பாடல்கள். இன்னும் அவர் ராஜாவுடன் பாடிய பாடல்கள் இருக்கின்றன. அவற்றையும் முடிந்தால் சேருங்கள்.
வருகைக்கு மிக்க நன்றி ஜே.கே
வருகைக்கு நன்றி தல கோபி
மிக்க நன்றி முத்துலெட்சுமி
அன்பின் சுரேஷ்
மின்மினியின் விடுபட்ட பாடல்களை இன்னொரு தொகுப்பில் சேர்க்கின்றேன்.
அப்படியே சுனந்தா பாடிய பாடல்கள் பற்றி ஒரு தொகுப்பு போடுங்கள்,(ஏற்கனவே இருக்குதா என்ன?).
சுனந்தா பாடல்கள் தொகுப்பும் உண்டு http://radiospathy.blogspot.com/2010/04/blog-post_18.html
றேடியோஸ்பதியின் முகப்பில் தேடல் கருவியும் உண்டு :)
நீங்கள் தொகுத்த எல்லாப்பாடலும் எனக்கும் பிடிக்கும் அதிலும் திருமதி பழனிச்சாமி டாப் பாடல் நன்றி பிரபா அண்ணா இனிய பாடல்களை மீளப்பார்வைக்கு தந்ததற்கு!
மின்மினியின் மேலும் சில அற்புதமான பாடல்கள் இசைஞானியின் இசையில் ...
1 உடல் தழுவ தழுவ - கண்மணி
2 அன்பே வா - ஏழை ஜாதி
3 உன் இடுப்பு சுருக்கு - சின்ன ராமசாமி பெரிய ராமசாமி
IMO, Minimini's voice resembles SJ voice.
மெதுவா தந்தி அடிச்சானே - தாலாட்டு படத்தில வரும். ராத்திரியில் பாடும் பாட்டு - அரண்மனை கிளி மிக சிறந்த பாடல்கள்.
Post a Comment