கற்பகம் என்று பழைய படம், அதில் பெண் குரல் மட்டுமே பின்னணி பாடல்கள் எல்லாவற்றிலும் இருக்கும். பின்னர் ஒருதலை ராகம் படத்தில் டி.ராஜேந்தர் ஆண் குரலை மட்டுமே பின்னணிப் பாடல்களில் பயன்படுத்தி இருப்பார். அப்படி வந்த இன்னொரு படம் தான் இது. இந்தப் படத்தின் இயக்குனர் அடிப்படையில் ஓவியர் என்பதால் ஒவ்வொரு காட்சியையும் ஸ்கெட்ச் ஆக வரைந்து விட்டுத் தான் எடுப்பாராம் என்று படம் வெளிவருவதற்கு முன்னான காலத்தில் ஜெமினி சினிமா, பொம்மை போன்ற ஊடகங்கள் அப்போது பரபரப்பு பப்ளிசிட்டியை கிளப்பியிருந்தன.
இதயத்தை திருடாதே படத்துக்குப் பிறகு இசைஞானி இளையராஜாவுக்குக் கிடைத்த இன்னொரு இளமையான அழகான கரு என்பதால் மனுஷர் பின்னணி இசையில் பின்னி பெடல் எடுத்து விட்டார். கூடவே கவிஞர் மு.மேத்தாவின் காதல் ரசம் கொட்டும் புதுக்கவிதையையும் அழகாகச் சேர்த்து நெய்த அற்புதக் களஞ்சியம் இப்படம்.
இளையராஜாவும் இந்த இயக்குனரும் இணைந்த முதல் படமே பெரு வெற்றி. ஆனால் இயக்குனர் தொடர்ந்து ராஜாவுக்கு கா விட்டு விட்டு ரஹ்மானுடன் ராசியாகி விட்டார்.
சரி ஏகப்பட்ட க்ளூ கொடுத்திருக்கிறேன், மனசை நோகடிக்காமல் கண்டுபிடிங்க தம்பி தங்கைங்களா ;)
சரியான படம் : இதயம்
இயக்குனர்: கதிர்
போட்டியில் பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி
Subscribe to:
Post Comments (Atom)
28 comments:
படம்: இதயம், இயக்குனர்: கதிர் ;)
ithayam ??
கோடை விடுமுறையில் உள்ளேன் ஐயா :)
Idhayam - Mike Murali, Heera Rajagopal.
All songs sung by males only.
I found that easily, since you gave
a good hint - The director gave a megahit, then went to ARR.
It's Kadhir.
Sudharsan
சொக்கரே
வழக்கம் போல பின்னீட்டிங் ;)
ஆயில்
கோடை விடுமுறையிலும் பதில் சொல்லலாம் இது தொலைக்கல்வி ஆச்சே
Idhayam / Kather
ராமன்
கலக்கிட்டீங்க ;)
சுதர்சன்
அதே தான், வாழ்த்துக்கள்
கார்த்திக்
சரியான பதில், கலக்கல்
திரைப்படம் - இதயம்
இயக்குனர் - கதிர்
பாஸ் நீங்க இதயம் படத்துல வர பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா பாட்ட ராஜா சார் வாய்சுல கேட்டு இருக்கீங்களா ?
~நாரத முனி
பாஸ் நீங்க இதயம் படத்துல வர பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா பாட்ட ராஜா சார் வாய்சுல கேட்டு இருக்கீங்களா ?
~நாரத முனி
நான் பார்த்த அழகான ஓவியம்
உன் முகம் தான் என்று சொன்ன
"இதயம்" மோ
சரிதானா தல!
தெரியலை
intha mauraiyum easya poyittathey. Neenga overa clues tharreenga.
Ans. Idhayam
சின்ன அம்மணி
என்னது, இது கூடவா :(
நாரதமுனி
அதே தான் ;) ராஜா பாட்டும் கேட்டிருக்கிறேன் கலக்கல்
மகராஜரே
கவிதையாவே பதிலா ;)
அனானி நண்பர்
:( என்ன செய்றது எப்படிப் போட்டாலும் பிடிக்கிறீங்களே ;)
படம் பெயர் - இதயம் ;)
இசைஞானியுடன் இணைந்து முதல் படம் பெரும் வெற்றி படமாக கொடுத்த பல இயக்குனார்களில் இயக்குனர் கதிரும் ஒருவர்.
படத்தின் இசையை பிரித்து விட்டால்....!!!!
தல கோபி
பின்னீட்டிங் ;)
படம்: இதயம்
இயக்குனர்: கதிர்
படம்: இதயம்..
சரியா தவறா தெரியவில்லை..
டைரக்டர் கதிர், இளையராஜா சரியாக வருகிறது..ஆனால் மு.மேத்தா என்பதால் சின்ன சந்தேகம் வருகிறது
படம்: இதயம்..
சரியா தவறா தெரியவில்லை..
டைரக்டர் கதிர், இளையராஜா சரியாக வருகிறது..ஆனால் மு.மேத்தா என்பதால் சின்ன சந்தேகம் வருகிறது...
படம்-இதயம்
இயக்குனர்-கதிர்
ஆனா இதயம் படம் வந்தது 91ல..இதயத்தை திருடாதே வந்தது 95 ல..நீங்க சொன்னதின்படி பிழைக்குது..அதோட பாடல் எழுதினது மேத்தாவோ எண்டு தெரியேல்ல...
பதில் "இதயம்"... சரியா கானா?
வணக்கம் பிரபா
படம்: இதயம்
இயக்குனர்: கதிர்
இதயம்
அண்ணே அது இதயம் படம்ணே
மீனாட்சி சுந்தரம், பாசமலர், தாருகாசினி, லோகேஷ், அருண்மொழி வர்மன், sharav, பாரதி
நீங்கள் அனைவரும் சொன்ன பதில் சரியானவையே வாழ்த்துக்கள்.
தாருகாசினி
இதயத்தை திருடாதே தான் முதலில் வந்தது.
பாசமலர்
படத்தில் வரும் கவிதைகள் தான் மு.மேத்தா என்றேன்.
சரியான படம் : இதயம்
இயக்குனர்: கதிர்
போட்டியில் பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி
//படத்தில் வரும் கவிதைகள் தான் மு.மேத்தா என்றேன்.//
சரி..சரி...என் கவனக்குறைவுதான்...
ஆம்...இதயத்தை திருடாதே 89 இல் வெளிவந்திருக்கிறது...நான் முதலில் பார்த்த பாடல் தொகுப்பு தளம் ஒன்றில் அது 95 என்று இருந்ததால் தான் அவ்வாறு குறிப்பிட்டேன்....தவறுக்கு வருந்துகிறேன்...
Post a Comment