கடந்த றேடியோஸ்புதிரில் நான் கேட்ட முதற்கேள்வி எஸ்.பி.வெங்கடேஷ் என்ற பெயரில் மலையாளத்திலும் தமிழில் வேறொரு பெயரிலும் இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் யார் என்று கேட்டிருந்தேன். சரியான பதிலாக அமைவது சங்கீதராஜன்.
நடிகர் தியாகராஜன் தயாரித்து, இயக்கி தானே இருவேடமிட்டு நடித்த "பூவுக்குள் பூகம்பம்" என்ற திரைப்படத்தின் மூலம் 1988 இல் தமிழுக்கு அறிமுகமானவர் சங்கீதராஜன். அந்தப் படத்தில் வரும் "அன்பே ஒரு காதல் கீதம்" அந்தக் காலகட்டத்தின் பிரபலமான பாடல்களில் ஒன்றாக அமைந்திருந்தது.
சங்கீதராஜன் தொடர்ந்து காவல் பூனைகள், என் கணவர், சேலம் விஷ்ணு, விக்னேஷ்வர், நிலாக்காலம் போன்ற திரைப்படங்களுக்கும் இசையமைத்ததோடு எஸ்.பி.வெங்கடேஷ் என்ற பெயரில் கூட தமிழில் ஒரு சில படங்களுக்கு இசையமைத்திருக்கின்றார்.
இவர் மலையாளத்தில் அதிகம் பேசப்படும் இசையமைப்பாளராக எஸ்.பி.வெங்கடேஷ் என்ற பெயரில் இசையமைத்து வருகின்றார். குறிப்பாக கிலுக்கம், மன்னர்மதி ஸ்பீக்கிங், காக்காகுயில், சந்திரலேகா போன்ற பிரபல படங்கள் உட்பட பல படங்களுக்கு இசையமைத்துப் பிரபலம் பெற்றிருக்கின்றார்.
சங்கீதராஜன் என்னும் எஸ்.பி.வெங்கடேஷ் இசையமைத்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும்
"பூவுக்குள் பூகம்பம்" திரைப்படப்பாடல் "அன்பே ஒரு ஆசை கீதம்"
சேலம் விஷ்ணு திரைப்படத்தில் இருந்து எஸ்.பி பாலசுப்ரமணியம் பாடும் "மயங்கினேன் மன்னன் இங்கே கொஞ்சம் வா வா"
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
//நடிகர் தியாகராஜன் தயாரித்து, இயக்கி தானே இருவேடமிட்டு நடித்த "பூவுக்குள் பூகம்பம்" என்ற //
இந்த படம் தான் நான் வாழ்க்கையிலேயே முதன் முதலாக ரீலிசான அன்னிக்கே கவுண்டர்ல பர்ஸ்ட்டு நின்னு டிக்கெட் எடுத்து பார்த்த படமாக்கும் :))))
Kalakkal paatu Prabha sir. Nandri >> covai ravee
சுவையான தகவல்களுடன் நல்ல பதிவு
பதிவு இன்று சுவை கம்மிதான்.
இரு பாடல்களும் இன்றுதான் முதலில் கேட்கிறேன்.
முதல் பாடல் பரவாயில்லை. ஹிந்தி வாடை அடிக்கிறது.
'சேலம் விஷ்ணு' பாடல் நன்றாக இருந்தது. பாடல் இடை நிரப்பு இசை இரண்டாவது பாடலில் இனிமை.(ராஜாவின் சாயலில்).
பல மலையாள மொழி மாற்றுப் படங்களில் இவர் பெயர் பார்த்ததாக ஞாபகம்.
இந்தப் பார்வதி தான் ஜெயராமின் பார்யாள்.
தற்பொழுது சங்கீத ராஜன் என்ன செய்கிறார்?
'பூவுக்குள் பூகம்பம்' படத்தை ஒருமுறை டிவியில்தான் அரையும், குறையுமாகப் பார்த்தேன். பார்த்தவரை மொக்கைதான்.
முன்பே சொன்னது போல அன்பே என் ஆசை கீதம் பாடலின் தீராத அடிமை நான். அற்புதமான பாடல். அதில் வரும் ட்ரம்ஸ் அடி பிரபலம். சற்று நாட்களின் பின்னர் கேட்க அருமையாக உள்ளது.
நன்றி பிரபா.... ஆனால் இம்முறை மற்ற இரண்டு பாடல்கள் பற்றிய விபரங்கள் ஏதும் வரவில்லையே ஏன்
// ஆயில்யன் said...
இந்த படம் தான் நான் வாழ்க்கையிலேயே முதன் முதலாக ரீலிசான அன்னிக்கே கவுண்டர்ல பர்ஸ்ட்டு நின்னு டிக்கெட் எடுத்து பார்த்த படமாக்கும் :))))//
நீங்க சொந்த செலவில் சூனியம் வச்சிட்டீங்க, இந்தப் படம் பார்த்ததை வச்சு நீங்களும் பழைய ஆள் தான்னு நிரூபிச்சீட்டீங்க ;)
//Covai Ravee said...
Kalakkal paatu Prabha sir. Nandri >> covai ravee//
//முரளிகண்ணன் said...
சுவையான தகவல்களுடன் நல்ல பதிவு//
வருகைக்கு நன்றி முரளிக்கண்ணன்
//தமிழ்ப்பறவை said...
பதிவு இன்று சுவை கம்மிதான்.
இரு பாடல்களும் இன்றுதான் முதலில் கேட்கிறேன்.//
வாங்க தல
ராஜா பாட்டு போடாவிட்டால் சுவை கம்மியாத்தான் இருக்கும் போல ;)
பூவுக்குள் பூகம்பம் அந்தக் காலகட்டத்தில் பெரும் பொருட்செலவில் காஷ்மீரெல்லாம் போய் எடுத்த படம், ஆனா எடுத்தவகையில் டப்பாவே தான்
//அருண்மொழிவர்மன் said...
நன்றி பிரபா.... ஆனால் இம்முறை மற்ற இரண்டு பாடல்கள் பற்றிய விபரங்கள் ஏதும் வரவில்லையே ஏன்//
வணக்கம் அருண்மொழிவர்மன்
மற்றைய பாடல்களில் வருஷம் 16 பற்றி ஏற்கனவே முந்திய பதிவில் போட்டுவிட்டேன். இசையமைப்பாளர் ரவீந்திரன் குறித்து இன்னொரு தனிப்பதிவு போட இருக்கின்றேன்.
பூவுக்குள் பூகம்பம் படத்தில் வரும் தாலி செய்யட்டுமா, சம்மதமா பாடலும் அற்புதமான ஆக்கம். சங்கீதராஜனை தமிழுக்கு அழைத்து வந்த தியாகராஜனுக்கு நன்றி.
Post a Comment