Pages

Monday, October 29, 2007

வி.எஸ். நரசிம்மனின் இசைச்சித்திரம் - பாகம் 2


வி.எஸ்.நரசிம்மனின் தேனிசையில் மலர்ந்த பாடல்களின் தொகுப்பு ஒன்றை முன்னர் தந்திருந்தேன். அதனைக் கேட்க

தொடர்ந்து அடுத்த பாகமாக வி.எஸ்.நரசிம்மனின் மீதிப் பாடல்களோடு, பின்னணியில் சில துணுக்குகளுடன் மலர்கின்றது இப்பதிவு.

முதலில் வருவது, கே.பாலசந்தரின் இயக்கத்தில் "கல்யாண அகதிகள்" திரையில் இருந்து சுசீலா பாடும் "மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய்",

அடுத்து, இளையராஜாவை மூலதனமாக வைத்துப் பல இசைச் சித்திரங்களை அளித்த தயாரிப்பாளர் கோவைத்தம்பி தயாரிப்பில், ஈ.ராம்தாஸ் இயக்கத்தில் வந்த படம் "ஆயிரம் பூக்கள் மலரட்டும்". இத்திரைப்படத்தில் இருந்து "ஆயிரம் பூக்கள் மலரட்டும்" என்ற பாடல் பி.சுசீலா குரலில் ஒலிக்கின்றது.

தொடர்ந்து கே.பாலசந்தரின் முதல் சின்னத்திரை விருந்தான "ரயில் சினேகம்" படைப்பில் "இந்த வீணைக்குத் தெரியாது" என்ற பாடலை கே.எஸ்.சித்ரா பாடுகின்றார்.

"தாமரை நெஞ்சம்" என்ற தமிழ்ப்படத்தினைக் கன்னடத்தில் "முகிலு மல்லிகே" என்று மொழிமாற்றம் செய்தபோது வி.எஸ்.நரசிம்மனுக்கு முதன் முதலில் கன்னடத்திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமானார். அப்படத்தில் இருந்து ஒரு பாடல் பி.சுசீலா, வாணி ஜெயராம் இணைந்து பாடக் கேட்கலாம்.

அடுத்து சுரேஷ் மேனன் இயக்கத்தில் வந்த "பாச மலர்கள்" திரைப்படத்தில் இருந்து சுஜாதா, எஸ்பி.பி பாடும் இனிமையான பாடலான "செண்பகப் பூவைப் பார்த்து" என்ற பாடல் ஒலிக்கின்றது.

நிறைவாக இளையராஜாவின் தனி இசைப் படைப்புக்களுக்கு உருவம் கொடுத்தவர்களில் ஒருவரான வி.எஸ்.நரசிம்மன் இல் வழங்கும் வயலின் இசை மனதை நிறைக்க வருகின்றது.
தொடர்ந்து இந்த ஒலித்தொகுப்பைக் கேளுங்கள்



இந்தத் தொகுப்பை வெளியிடும் போது "இந்த வீணைக்குத் தெரியாது" என்ற பாடலின் ஆண்குரலைத் தருமாறு நண்பர் ரவிசங்கர் அன்பு வேண்டுகோள் விடுத்தார். அவரின் விருப்பை நிறைவு செய்ய, இதோ என் ஒலிக்களஞ்சியத்திலே, நான் ஊருக்குப் போனபோது ஒலிப்பதிவு செய்து பத்திரப்படுத்திய பாடலான " இந்த வீணைக்குத் தெரியாது" என்ற பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் பாடக் கேட்கலாம்.

7 comments:

கோபிநாத் said...

அருமையான பதிவு தல ;))

ஆயிரம் பூக்கள் மலரட்டும் மிக அருமை..சுசீலா அவர்களின் குரலில் கேட்டும் போது இன்னும் அழகு கூடுகிறது.

கானா பிரபா said...

வருகைக்கு நன்றி தல, இதே படத்தில் "பூமேடையோ" பாடலும் அருமை.

Anonymous said...

மனதை மயக்கும் இசைக்கோலங்கள். உங்கள் இசை அர்ப்பணிப்பு என்னை ஆச்சர்யப்பட வைக்கிறது. தடை இன்றி தொடருங்கள் உங்கள் இந்த பணியை. வாழ்த்துக்கள்.

கானா பிரபா said...

தங்கள் அன்புக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பரே

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

நன்றி பிரபா. பாடல்கள் மீதான உங்கள் ஆர்வமும் உழைப்பும் வியப்பளிக்கிறது.

G.Ragavan said...

அடியே அம்முலு.... எப்படிங்க மறக்க முடியும்? கல்யாண அகதிகள். எனக்கு ரொம்பப் பிடிச்ச படம். இசையரசியின் குரலில் மிகவும் அருமை.

ஆயிரம் பூக்கள் மலரட்டும் பாட்டும் அருமையோ அருமை.

நீங்க சொன்ன மாதிரி...அச்சமில்லை அச்சமில்லைல இருந்து இசையரசியைத்தான் இவர் நெறைய பயன்படுத்தியிருக்காரு.

கானா பிரபா said...

ரவிசங்கர் & ராகவன்

ஒலித்தொகுப்பைக் கேட்டுத் தங்கள் கருத்தைப் பதிந்தமைக்கு மிக்க நன்றிகள். இதைப் போல இன்னும் சில படைப்புக்களைப் பின்னர் தருகின்றேன்.