![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgEOIjm4nfW4TlGaVCdkw1YMmm_x412_WoXoXx-edoGrI_YGew1OzaWDccnzd2RdwnIyCmhdu24vHprvKXsyGizFbUYl7-pS2g1_Ii1ID-Y1qxjsBWyIHvwCQ01Pgp0mretwbBHmk6PF8/s400/onam1.jpg)
இன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு சேட்டன்களுக்கும், குறிப்பா சேச்சிகளுக்கும் இனிய பண்டிகை வாழ்த்துக்கள்.
இதோ உங்களுக்காக ஷ்பெஷல் பாட்டுப் படையல்
முதலில் வருவது சலீல் செளத்ரி இசையில் பி.லீலா குழுவினர் பாடிய "செம்மீன்" திரைப்பாடலான "பெண்ணாளே பெண்ணாலே" என்ற பாடல்.
அடுத்து ரவீந்திரன் இசையில் "ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா" திரைக்காக மலையாளப் பாட்டுக்கடவுள் கே.ஜே.ஜேசுதாஸ் பாடிய "ப்ரமதவனம் வீண்டும்" என்னும் பாடல் வருகின்றது.
தொடர்ந்து "மரக்குடையால் முகம் மறைக்கும் மானல்லா" என்ற பாடலை "மனசினக்கரே" திரையில் இருந்து நம்ம குலதெய்வம் இளையராஜா போட்ட டியூனைப் பாடுகிறார்கள் எம்.ஜி.சிறீகுமார் குழுவினர்.
மலையாளத் திரையுலகில் ஒரு சகாப்தம் படைத்துக் காலமான ரவீந்திரன் இசையில் வந்த இறுதித் திரைப்படமான "வடக்கும் நாதன்"படத்தில் இருந்து "பாகி பரம்பொருளே" என்ற இறைமணம் கமிழும் பாடலைப் பாடுகின்றார்கள் மஞ்சரி மற்றும், சிந்து பிரேம்குமார் குழுவினர்.
நம்ம தல கோபி ஓணம் பண்டிகைக்கு ஒரு பாட்டு வேணும்னு அடம்பிடிச்சார். அவருக்காக நோட்டம் திரையில் கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் "பச்ச பானம்" என்ற பாடல் ஜெயச்சந்திரன் இசையில் வருகின்றது.
எந்தா இது? ஓணம் டோயில் ஒரே மெலடி பாட்டு?
என்று அலுக்கும் சேட்டன்களுக்காக ஒரு துள்ளிசைப் பாடல் நிறைவாக "காழ்ச்சா" திரையில் இருந்து கலாபவன் மணி குழு மோகன் சித்தார்த்தா இசையில் பாடும் "குத்தநாடன் காயலிலே" வருகின்றது.
வரட்டே.....;-)
Powered by eSnips.com |
13 comments:
எந்தன் பொண்ணு சேட்ட எல்லா பாட்டும் அடிபேலியானு ;)))
ராஜாவோட பாட்டுகள் ஒருபாடு உண்டு....இனி அதையும் நான் கேட்கும்...என்னோட இஷ்ட கானத்திற்கு ஒரு ஸ்பெசல் நன்றி கேட்டோ ;))
வாங்க தல
ஏதோ என்னால் முடிஞ்ச சமூக சேவை ;-)
அடிபொளியா
பொன்னோணத்திண்டே ஆசம்ஸகள்
Thulasimma
ஆசம்ஸகள் to you ;)
உங்கள் சேவை தொடரட்டும் பிரபு!
கேரள கலை நிகழ்ச்சிகளில் தமிழ் பாடல்கள் நிறைய இடம் பெற்றிருக்கும்.
நன்றி!
thanks for the songs
particularly, i like the song kuttanada..
others are to be heard tomorrow
after hearing that, i w'll comment
வருகைக்கு நன்றி வெயிலான் மற்றும் அநாமோதய நண்பர். மற்றைய பாட்டுக்களையும் கேட்டுச் சொல்லுங்க.
எனது மச்சான் ஒரு கேரள பிள்ளையைத்தான் திருமணம் செய்திருக்கிறார். அவவுக்கு உங்களது பாடல்களை எல்லாம் அனுப்பி வைச்சேன். தொலைபேசி ஊடாக. திணறிப்போனா. அத்தனை பூரிப்பும் உங்களுக்கே சொந்தம். எனது மச்சான் சொன்னார். கவனம் கேரளாப்பெண்கள் ஊரில் சொல்வது போல மட்டக்களப்பு பெண்கள் போல என. மந்திரம் கொண்டு திரிவர்களாம். (பகிடிக்கு.)அத்தனை அழகான பெண்களாம். மாட்டியிட்டாரோ கானா பிரபா ஒரு கேரள பொண்ணிடம். எண்டு கேட்டு சொல்லும்படி. அவர்கள் வருவார்களாம் திருமணம் செய்துவைக்க கேரளாவுக்கு. டோன் வோரி கானா. இனியென்ன நாங்கள் இருக்கிறம்.
பறையடா கள்ளக்குயிலே
கானா பிரபா said...
வாங்க தல
ஏதோ என்னால் முடிஞ்ச சமூக சேவை ;-)
இது தானே வேண்டாமெண்டிறது.
ஆகா தமிழ் பேசினவையை எல்லாம் மலையாளி ஆக்கிப் போட்டன் ;)
அக்கா
"சேரநன் நாட்டிளம் பெண்களுடனே"
எண்டு பாரதியே பாடினவர், நான் மட்டும் எம்மாத்திரம். இயற்கை எழில் தரும் கேரளாவுக்குப் போய்ப் பாருங்க, என்னை மாதிரி இப்பிடிப் பித்துப் பிடிக்கும் ;-)
நல்லா இருக்கு பாட்டுக்கள் என்றால் எனக்கும் பிரியம் தான் அண்ணா தொடர்ந்து உங்கள் வரவுக்காக காத்து நிக்கும் தம்பி நான்
வாங்கோ தம்பி விஜே
தாயகத்தில் இருந்து உங்களைக் காணச் சந்தோசமா இருக்கு. நல்லூர்த் திருவிழாப் பதிவுகளில் கொஞ்சம் மினக்கடுகின்றேன்.அடுத்த வாரம் முதல் பாட்டுக்கள் தொடரும்
Post a Comment