கடந்த றேடியோஸ்புதிரில் இடம்பெற்ற புதிராக ஆண்பாவம் திரைப்படக் கேள்வி அமைந்திருந்தது. இயக்குனர் ஆர் பாண்டியராஜனின் "கன்னி ராசி" என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, இரண்டாவதாக இயக்கிய படமே ஆண்பாவம். 1985 வெளியாகி வெள்ளி விழாக் கண்ட படம் இது. படத்தில் பெரும்பாலான நடிகர்களுக்கு அவர்களின் பெயரிலேயே இப்படத்தின் கதாபாத்திரப் பெயரும் அமைந்திருக்கும். பாண்டியனுடன் சீதா அறிமுக நாயகியாகவும், பாண்டியராஜன், ரேவதி போன்றோரும் நடித்திருக்கும் இப்படம் யதார்த்தமான நகைச்சுவை கலந்த திரைக்கதையைப் பலமாகக் கொண்டது. வி.கே.ராமசாமி, ஜனகராஜ் போன்றோரின் நடிப்பும் விலக்கமுடியாத சிறப்பைக் கொடுத்தது.
ஆண்பாவம் திரைப்படத்தின் பெரும்பலங்களில் ஒன்று இசை. இசைஞானி இளையாராஜா இசையில் முத்தான பாடல்களும், அழகான பின்னணி இசையும் இப்படத்துக்கு மேலும் மெருகூட்டியது. இன்றுவரை இப்படத்தின் பின்னணி இசையைப் பல ரசிகர்கள் நினைவில் வைத்திருப்பதே இப்பின்னணி இசையின் சிறப்பாக இருக்கின்றது.
தொடர்ந்து ஆண்பாவம் திரைப்படத்தின் பின்னணி இசைத் தொகுப்பைக் கேளுங்கள்.
றேடியோஸ்புதிரில் வந்த பின்னணி இசை முழுவடிவம்
ராமசாமி அண்ணனின் தியேட்டர் திறப்பை கரகாட்டத்துடன் வரவேற்றல்
கனகராஜ் கபே திறப்பும் ஆட்கள் வராததும்
சண்டைக்காட்சியில் வரும் பின்னணி இசை
சீதா அறிமுகக் காட்சி
சீதாவை பாண்டியன் பெண் பார்க்கும் காட்சி
மாப்பிளையை புடிச்சிருக்கு
பாண்டியன் கொடுத்த கைக்கடிகாரத்தை தண்ணீர் குடத்தில் மறைத்து அவஸ்தை
கள்ள கவுண்டர் திறக்கும் சின்ன பாண்டி
சீதாவின் மனதில் பாண்டியன் நிரந்தரமாக இடம்பிடித்தல்
பாண்டியனை தேடிப் போய் காணாமல் தவிக்கும் சீதா
சீதாவை தேடி புதுமாப்பிளை வரும் நேரம்
ரேவதி தற்கொலை முயற்சியில் காப்பாற்றப்படுதல்
Subscribe to:
Post Comments (Atom)
47 comments:
மீ த பர்ஸ்டூ :))
திரைக்கதை வசனம்
இசை
யதார்த்தமான நகைச்சுவை
கிராமத்து சூழல்
அழகிய லொக்கேஷன் - காதலர் சந்திப்புக்கு!
”பாண்டி”கள்
அழகிய கதாநாயகிகள் - தாவணி கலாச்சாரத்தினோடு
இப்படி ஒரு அருமையான படம் எப்ப வேணும்னாலும் பாருங்க! கலக்கலா இருக்கும் :))
//ஆயில்யன் said...
திரைக்கதை வசனம்
இசை
யதார்த்தமான நகைச்சுவை
கிராமத்து சூழல்
அழகிய லொக்கேஷன் - காதலர் சந்திப்புக்கு!
”பாண்டி”கள்
அழகிய கதாநாயகிகள் - தாவணி கலாச்சாரத்தினோடு
இப்படி ஒரு அருமையான படம் எப்ப வேணும்னாலும் பாருங்க! கலக்கலா இருக்கும் :))//
repeat..!
சக்கரைப்பட்டி ஊராட்சி உங்களை இனிதே வரவேற்கிறது!
யாரு பேருக்கு அர்ச்சனை?
ராமசாமி!
ராமசாமி!
ராமசாமி!
ராமசாமி!
ஆகா..கானா உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.. ஜனகராஜ் பீஸ் கூட போட்டிருக்கீங்களே..
இந்த படத்தை எத்தனை தடவை பார்த்திருப்பேன்னு கணக்கே இல்லை..
அருமையான படம் .. ஹ்ம்.. இப்பவும் வருதே...
கானாஸ்..
நேத்துதான் முதன்முதலா இந்தப் படம் பார்த்தேன்..ஒருசில காமெடி மட்டும் முன்னரே பார்த்திருக்கிறேன்!!
செம கலக்கல்...சான்ஸே இல்லை...அதுவும் அந்த க்ளைமாக்ஸில்
பெரியபாண்டியின் கை கட்டையை
எடுத்துப் போடுமே! LOL ..
உங்க இசைதொகுப்பை கேட்டதும், அந்த காட்சிகள் அப்படியே கண்முன்!!
அட பயித்திய காரா எலெக்ஷன்ல நின்னு என்ன செஞ்சுடப்போறாரு?
ரோடு போடுவாரு !
வெளக்கு போடுவாரு!
துண்டு போடுவாரு !
திட்டு வாங்குவாரு!
ஆனா நம்ம ராமசாமியண்ணன் செஞ்சிருக்கற காரியத்தால இன்னிக்கு நம்ம கிராமமே தலை நிமிர்ந்து நிக்கப்போகுது!
சாயந்திரம் வரைக்கும் உசுரோடத்தானே இருக்கப்போற அப்ப பாரு ! (எப்படி ஒரு தத்துவார்த்தமான வார்த்தை பாருங்களேன்!)
என்ன தலைவரே வளவளன்னுபோய்க்கிட்டிருக்கு சீக்கிரம் கூப்பிட்டு முடிங்க
அவுங்க என்ன கமலா பழத்தையா கேக்குறாங்க ஆளுக்கு ஆறு சுளை உறிச்சுக்கொடுக்கறதுக்கு?
ரெண்டு நாள் அவகாசம் கொடுங்க எங்க் வீட்டுக்காரர் வந்ததுமே அவர்கிட்ட கேட்டு சொல்றேன் :))
நான் இன்னும் படம் பார்க்கலை.. ஆனா இவ்வளவு சிறப்பாச் சொல்றீங்கன்னா படம் நல்லாத்தானிருக்கும்.பார்த்துட்டு திரும்ப வர்றேன் :)
301 - கண்ணீர் பொகை ரெடி சார்!
302- ஜீப் ரெடி சார்!
303 - டிபன் ரெடி சார்!
உருப்படவே மாட்டய்யா!
ஆயில்யன்: அரச பட்டியில இறங்கி ஒரு கிணறு இருக்கு அதுல குதி - மூதேவி
நான் : ?????
ஆயில்யன்: நான் சின்னவன விவேகானந்தர், வினோபாஜி அளவுக்கு வளர்க்கணும்னு ஆசைப்படுறேன்..
நான் : முதலில் கல்யாணம் பண்ணுங்க ஆயில்ஸ்:)
ஆயில்யன்: என் கல்யாண வேஷ்டியை கட்ட்டிட்டு போக சொல்லு ரொம்ப ராசியனாது.
நான் : ஆயில்ஸ் உங்களுக்கு கல்யாணம் ஆய்டுச்சா? ??????
ஆயில்யன்: யோவ் திரி நாட் போர் சார் டீபன் ரெடி சார்
நான் : அதுக்கென்ன இப்போ...கொட்டிக்கோங்க:)
எல்லாருக்கும் வணக்கம்!
நான் ஒரு கோயிலை கட்டுனேன் நீங்க யாரும் சாமி கும்பிட வர்லை!
பள்ளிகூடத்த கட்டுனேன் நீங்க யாரும் படிக்க வர்லை!
குளத்தை வெட்டுனேன் நீங்க யாரும் குளிக்கவே வர்லை!
ஆனா சினிமா கொட்டாய கட்டுனேன் கொட்டு மேளத்தோட என்னிய வரவேற்கிறீங்க!
இத பார்க்கும்போது இந்த ய்யோசனை இவ்ளோ நாளா என் அறிவுக்கு ஏன் எட்டலைன்னு வருத்தப்படுறேன்
அதே நேரத்தில் உங்க அறிவுக்கு இவ்ளோ சீக்கிரமா எட்டிடுச்சேன்னு சந்தோஷப்படுறேன்
அதுல பாருங்க கண்னையா நீங்க படுற கஷ்டத்தை பார்த்துட்டுத்தன தேங்கா மட்டையில போடுற காசை சினிமா கொட்டகையில போட்டோன்!
ஏதோ நல்லது செஞ்சீங்க ஐயா!
ஆயில்யன்: பிரிட்ஜ்ல முட்டுதான்னு பாருப்பா..
நான் : முட்டு சந்துல எதுங்க பிரிட்ஜ்????
கொட்டகை கட்டிய கோமகன் ராமசாமி
வாழ்க!
அண்ணே கூட்டம் கொஞ்சம் அதிகமா வந்திக்கிட்டிருக்கு நாம புறப்படலாமா?
நானா வரமாட்டேங்கறேன் கொட்டய துறக்கப்போற இரண்டு சிங்க குட்டிகள் இன்னும் தயாராகலையே!
ஏண்ணே இரண்டு பேரும் சேர்ந்தேவா தொறக்கப்போறாங்க!????
நீ மட்டும் எங்க அம்மாவ கட்டிக்கிட்ட நான் உங்க அம்மாவ கட்டிக்க கூடாதா? இந்த வசனத்தை சொல்லாம விட்டுட்டீங்களே ஆயில்ஸ்?
ஒற்றுமைக்கு இலக்கணமே என் பையனுங்கதான்
பெரியவனுக்கு சின்னவன் மேல உசுரு!
சின்னவன் இருக்கானோ அவுங்க அண்ணனுக்கு ஒண்ணுன்னா பதறிடுவான் பாஞ்சுடுவான்! :))
நி.நல்லவன் கேப்ல கிடா வெட்டுற மாதிரியே தெரியுது?
அது இருக்கட்டும் ஜாலிம் லோஷன்னா என்னா???
ஒட்டி வந்த சிங்ககுட்டி குத்துசண்டை போடலாம
பெத்த அப்பன் வீட்டு வெளியே பெருமை பேசறான்
சினிமா கொட்டகையை கட்டி வைச்சு முட்டிக்கலாம நீங்க முட்டிக்கலமா????
அடிச்சிக்கிடாதீங்கப்பா என் தங்க ராசா
அடிச்சிக்கிடாதீக!
அடிச்சிக்கிடாதீங்கப்பா
அடிச்சிக்கிடாதீக!
அடிச்சிக்கிடாதீங்கப்பா
அடிச்சிக்கிடாதீக!
யேய் வந்தனம் வந்தனம்
வந்த சனமெல்லாம் குந்தனும் குந்தனும் :))
(இப்பத்தான் டைட்டிலே போடுறாங்களா?அவ்வ்வ்வ்வ்)
வெள்ளிக்கிழமையே கிடா வெட்டி விருந்து போட்டது இன்னைக்கு தான் தெரிஞ்சுதா ஆயில்ஸ்?
இப்ப மட்டும் என்ன குடியா முழுகிப்போச்சு!
இன்னொரு நாளைக்கு திறப்பு விழா வைச்சுக்குவோம்!
இன்னிக்கு
இத்தோட ஊத்தி மூடிடுவோம்!!!!!!!!
மொதலாளி அதுல என்ன தொழில் ரகசியம்ன்னா!!!!???
///ஆயில்யன் said...
அது இருக்கட்டும் ஜாலிம் லோஷன்னா என்னா???//
அட கொடுமையே...உங்களுக்கு தேவைப்படுதா? ... தினமும் ரெண்டு வேளை நல்லா குளிங்க...அய்யோ பாவம் ஆயில்ஸ் நீங்க:)
நான் சின்னவன விவேகானந்தர், வினோபாஜி அளவுக்கு வளர்க்கணும்னு ஆசைப்படுறேன்!
///ஆயில்யன் said...
மொதலாளி அதுல என்ன தொழில் ரகசியம்ன்னா!!!!???//
இப்படி சொல்லிட்டு வலது கைய இடது அக்குள் பக்கம் கொண்டுட்டு போய்..என்னத்த சொல்லுறது?
வர்ர வழியிலே இரண்டு எருமைமாடு முட்டிருச்சுன்னு சொன்னேனே அது இதுங்கதான்னு சொல்லுவாரே அது சொல்லல ஆயில்...ரொம்ப மனப்பாடம் செய்துட்டீங்க போலயே..படத்தை.. கேசட் கேப்பீங்களா..?
//முத்துலெட்சுமி-கயல்விழி said...
வர்ர வழியிலே இரண்டு எருமைமாடு முட்டிருச்சுன்னு சொன்னேனே அது இதுங்கதான்னு சொல்லுவாரே அது சொல்லல ஆயில்...ரொம்ப மனப்பாடம் செய்துட்டீங்க போலயே..படத்தை.. கேசட் கேப்பீங்களா..?//
அய்ய்யோ!
அக்கா!
மீ த எஸ்கேப்பு!
யேய் ! பின்னாடி வண்டி எடுக்கறேன் பிரிட்ஜ்ல முட்டுதா பாரு!
(அய்யோ இன்னும் எவ்ளோ இருக்கு !!!!!!!)
//முத்துலெட்சுமி-கயல்விழி said...
வர்ர வழியிலே இரண்டு எருமைமாடு முட்டிருச்சுன்னு சொன்னேனே அது இதுங்கதான்னு சொல்லுவாரே அது சொல்லல ஆயில்...ரொம்ப மனப்பாடம் செய்துட்டீங்க போலயே..படத்தை.. கேசட் கேப்பீங்களா..?//
கயலக்கா...இதுல ஏதோ உள்குத்து இருக்கிற மாதிரி இருக்கு....ஆயில் வழியில் நானும் எஸ்கேப்:)
அட ஆண்பாவம்தானா ரொம்ப சின்ன வயசுல பாத்தாலும் அப்படியே நினைவுல நிக்கிற காட்சிகள்...
சீதா சூப்பரா இருப்பாங்க...
அண்ணன் இந்த இசைத்தொகுப்புகளை நான் பயன்படுத்துகிற கணினில கேட்க முடியல...
முன்னர் பயன் படுத்திய முறைகளில் தரலாமே..
//நிஜமா நல்லவன் said...
//முத்துலெட்சுமி-கயல்விழி said...
வர்ர வழியிலே இரண்டு எருமைமாடு முட்டிருச்சுன்னு சொன்னேனே அது இதுங்கதான்னு சொல்லுவாரே அது சொல்லல ஆயில்...ரொம்ப மனப்பாடம் செய்துட்டீங்க போலயே..படத்தை.. கேசட் கேப்பீங்களா..?//
கயலக்கா...இதுல ஏதோ உள்குத்து இருக்கிற மாதிரி இருக்கு....ஆயில் வழியில் நானும் எஸ்கேப்:)//
நல்லவேளை படத்தில் ரெண்டு எருமை தான், நான் தப்பிச்சேன் ;)
//தமிழன்... said...
அண்ணன் இந்த இசைத்தொகுப்புகளை நான் பயன்படுத்துகிற கணினில கேட்க முடியல...
முன்னர் பயன் படுத்திய முறைகளில் தரலாமே....//
தம்பி
அதே முறைப்படி தான் தந்தனான், ஆயில்யனிடம் விசாரித்து அவர் பேரீச்சம்பழத்துக்கு தன்ர ஸ்பீக்கரை வித்த இடத்தை கேட்டு வைக்கவும் ;)
:)))
அந்த காலத்து ஆளுங்க எல்லாம் படத்தை பத்தி சும்மா புட்டு புட்டு வைக்கிறிங்க...இந்த காலத்துல எங்களை போல இளசுங்களுக்கு எல்லாம் ரொம்ப யூஸ் புல்லாக இருக்கு....;))
இதுல தல கானா இளசா இல்ல பழசான்னு மக்கள் தான் சொல்லானும் ;)
//கோபிநாத் said...
:)))
அந்த காலத்து ஆளுங்க எல்லாம் படத்தை பத்தி சும்மா புட்டு புட்டு வைக்கிறிங்க...இந்த காலத்துல எங்களை போல இளசுங்களுக்கு எல்லாம் ரொம்ப யூஸ் புல்லாக இருக்கு....;))
இதுல தல கானா இளசா இல்ல பழசான்னு மக்கள் தான் சொல்லானும் ;)
//
தல அந்த காலத்து பெருசு!
வயசான காலத்துல மலரும் நினைவுகள்ல காலத்தை ஓட்டுதுப்பா! ஏதோ நமக்கும் நல்ல நல்ல விஷயமெல்லாம் தெரியவைச்சுக்கிட்டே....!
\\ஆயில்யன் said...
//கோபிநாத் said...
:)))
அந்த காலத்து ஆளுங்க எல்லாம் படத்தை பத்தி சும்மா புட்டு புட்டு வைக்கிறிங்க...இந்த காலத்துல எங்களை போல இளசுங்களுக்கு எல்லாம் ரொம்ப யூஸ் புல்லாக இருக்கு....;))
இதுல தல கானா இளசா இல்ல பழசான்னு மக்கள் தான் சொல்லானும் ;)
//
தல அந்த காலத்து பெருசு!
வயசான காலத்துல மலரும் நினைவுகள்ல காலத்தை ஓட்டுதுப்பா! ஏதோ நமக்கும் நல்ல நல்ல விஷயமெல்லாம் தெரியவைச்சுக்கிட்டே....!
\\
ரைட்டு...;))
அடப்பாவி மக்கா
ஆணி அடிச்சு வர்ரதுக்குள்ள சைக்கிள் கேப்பில் என்னை கற்காலத்துக்கு கொண்டு போய் விட்டுட்டீங்களே ;)
யோய் சின்னப்பாண்டி(ஆயில்ஸ்)
உமக்கே நல்லாயிருக்காப்பா
//இப்படி ஒரு அருமையான படம் எப்ப வேணும்னாலும் பாருங்க! கலக்கலா இருக்கும் :))//
சரிங்க :P
Post a Comment