Pages

Sunday, July 15, 2007

மலர்ந்தும் மலராத இசையமைப்பாளர்கள் - பாகம் 3

Unknown MDs Part 3...


மலர்ந்தும் மலராத இசையமைப்பாளர்கள் தொடரில் இந்தவாரம் வரும் இசையமைப்பாளர்களில் முதலில் வருபவர் மரகதமணி என்னும் எம்.எம்.கீரவாணி. இவர் குறித்து இன்னொரு தொடரும் றேடியோஸ்பதியில் வந்துகொண்டிருக்கின்றது. இருந்தாலும் ஒரு சிறு அறிமுகத்தோடு மரகதமணி இசையில் "ஜாதி மல்லி" திரைக்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பாடும் "கம்பன் எங்கு போனான்" பாடல் இடம்பெறுகின்றது.

தொடர்ந்து வருபவர், "சொல்லாமலே" திரைப்படத்திற்கு இசையமைத்த "பாபி" என்ற இசையமைப்பாளர். இயக்குனர் சசி இதுவரை தன்னுடைய இயக்கத்தில் வெளிவந்த மூன்று படங்களுக்குமே பரத்வாஜ், பாபி, விஜய் ஆன்ரனி ஆகிய புது இசையமைப்பாளர்களையே பயன்படுத்தி வந்தார். அந்த வகையில் "சொல்லாமலே" திரைக்காக பாபி இசையில் ஹரிஹரன், சித்ரா பாடும் "சொல்லாதே சொல்லச் சொல்லாதே" என்ற பாடல் வருகின்றது.

5 comments:

Sud Gopal said...

ஜாதிமல்லி தான் கே.பி - மரகதமணி கூட்டணியில் வெளி வந்த கடைசிப்படம்.அதற்குப்பின்னால் ஏ.ஆர்.ரகுமான்,தேவா மீண்டும் ரகுமான்,வித்யாசாகர் என்று ஒரு சுற்று வந்துவிட்டார் பாலச்சந்தர்.மரகதமணி கூட அதற்குப்பின்னால் சொல்லிக் கொள்ளும்படி தமிழில் ஒரு படமும் செய்யவில்லை.

குஷ்பூவின் அலை அடித்துக்கொண்டிருந்த காலம் அது.பாரதிராஜாவின் இயக்கத்தில் கேப்டன் மகள்,பாலச்சந்தரின் இயக்கத்தில் ஜாதிமல்லி என்று கதாநாயகிக்கு முக்கியத்துவம் தந்து தமிழ்த்திரையுலகின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களால் இயக்கப்பட்ட இரு படங்களில் ஒரே சமயத்தில் நடித்தது ஒரு பெரும் பாக்கியமாகக் குஷ்பூ கருதுவதாக ஒருமுறை பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

மௌனம் கொண்டு ஓடி வந்தேன்
வார்த்தை வரம் கேட்டாய்...ஹூம்ம்... நல்ல தெரிவு.

அப்புறம் ஹம்சலேகா,V.S.நரசிம்மன்,குன்னக்குடி வைத்தியநாதன் போன்றோரையும் உள்ளே இழுத்து வரலாமே.

Anonymous said...

Maragathamani's "Kammangade" in Vaname ellai and "Adhu edho ennidam.." of Captain magal were major hits in that period.
Maragathamani is a hit music director in Telugu in the name Keeravani.
Talking about Hamsalekha, his memorable number is "selai kattum pennukoru" from kodi parakuthu.
Not sure if he is the one who composed for Vedam pudithu (kannukul nooru nilava is a fabulous song).
SPB could be a candidate for this list. His last movie was "Unnai saranadainthen". Adulla paatu ellam sumaar than. But BGM....amazing...uyirai urukkidum...

கானா பிரபா said...

வணக்கம் சுதர்சன்

நீங்க குறிப்பிட்ட இசையமைப்பாளர்களின் நிறையப் பாடல்கள் நல்லவை இருக்கின்றன, எனவே மரகதமணி போன்றி சிறப்பு பதிவு தருகிறேன். மேலதிக தகவல்களுக்கும் நன்றிகள்.

Thanjavurkaran said...

Sivaji Raja endru oru music director - Katrukkenna Veli pondra padathukku isai amaithavar - Vibram theriyuma - irundhal podungalen

கானா பிரபா said...

//Nataraj said...
Maragathamani's "Kammangade" in Vaname ellai and "Adhu edho ennidam.." of Captain magal were major hits in that period.//

உண்மை தான் நடராஜ்

சென்னை வானொலி தான் அப்போது என் செவிக்கு சோறு போட்டது, அடிக்கடி அதில் வரும் பாட்டு இவை.

ஹம்சலேகாவும் அருமையான பாட்டு கொடுத்திருக்கிறார், வேதம் புதிது இசை தேவேந்திரன். ஹம்சலேகாவின் ஹிட் படங்களில் ஒன்று பருவராகம்.

அடிக்கடி வாங்க, உங்களைப் போன்ற நண்பர்களுடன் பேசுவது இனிமையாக இருக்கிறது.