Pages

Friday, August 29, 2008

நல்லைக் கந்தனின் ரதோற்சவத் திருவுலா இன்று

ஈழ நல்லூர் கந்தசுவாமி ஆலயம் இந்த ஆண்டு கொடியேறி கடந்த இருபத்து மூன்று நாட்கள் தொடர்ந்த மகோற்சவ நிகழ்வில் இன்று எம்பெருமான் ஆறுமுகக் கந்தன், வள்ளி தெய்வயானை சமேதராக ரதோற்சவத்தில் பவனி வரப்போகும் காட்சி நம் மனக் கண் முன் விரிகின்றது. எல்லாம் வல்ல ஆண்டவனின் பெருங்கருணை நம் எல்லோர் மீதும் பரவட்டும். அநீதிகள் ஒழிந்து, இன்னல்கள் அகன்று, சுபீட்சமானதொரு யுகத்தை நம் உறவுகள் பெறட்டும்.

கடந்த ஆண்டு நாம் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் வழங்கிய ரதோற்சவ நாள் ஒலிப்படையல்கள் இதோ:

காலை 5 மணிக்கு, முதலில் கணேசருக்கு அபிஷேகம் மற்றும் பூசை நிகழ்ந்த போது, எமது சிறப்புச் செய்தியாளர் சிவத்தொண்டர் ஆறு. திருமுருகன் அவர்கள் வழங்கிய ஒலிப்பகிர்வு
Get this widget
Share
Track details



ரதோற்சவ நிகழ்வின் நேரடி அஞ்சல், கொழும்பு ஊடகங்கள் வாயிலாகப் பெற்று வழங்கியது
Get this widget
Share
Track details



தமிழறிஞர், செழுங்கலைப் புலவர் குமரன் அவர்கள் வழங்கிய "தேர்த் திருவிழாவின் சிறப்பு" என்னும் விடயம் குறித்த ஒலிப்பகிர்வு



அல்லது இங்கே சொடுக்கவும்

4 comments:

HK Arun said...

//எம்பெருமான் ஆறுமுகக் கந்தன், வள்ளி தெய்வயானை சமேதராக ரதோற்சவத்தில் பவனி வரப்போகும் காட்சி நம் மனக் கண் முன் விரிகின்றது//

ஆம் மனக் கண் முன் மட்டுமே விரிகின்றது. மீண்டும் என்று நேரில் காணும் பாக்கியம் கிடைக்கப்பெறும் என்பது நல்லூர் கந்தனுக்கே வெளிச்சம்.

எல்லாம் கனவாகிப் போனக் காலங்கள்....

கானா பிரபா said...

வாருங்கள் அருண்

நேற்று நடந்தவைகள் கனவாகிப் போய், நிஜமான நல்ல நாளை பிறக்கவேண்டும்.

Anonymous said...

we are expecting something interesting from you.
why are you posting unique genre's in ur blog?
i visit ur blog everyday twice and quitting with yematram!!!!
do something different and interesting prabha.

கானா பிரபா said...

வாங்க சுரேஷ்

எங்கள் நாட்டின் தனித்துவமான ஒரு ஆலயமாக இந்த ஆலயம் இருப்பதால் தற்போதைய நாட்டு சூழ்நிலைகளால் செல்லாதவர்களுக்கு பழைய நினைவுகளையும், பக்திச் சூழ்நிலையினையும் கொடுக்கவே இவற்றைக் கொடுத்து வந்தேன். குறிப்பிட்ட ஒரு எல்லைக்குள் நிற்காமல் பக்தி இசையை அறிமுகப்படுத்தவும் இது ஒரு வாய்ப்பாக அமைந்தது. இன்றோடு இந்த ஆலயத்தின் நிகழ்வுகள் நிறைவை அடைகின்றது.தொடர்ந்த உங்கள் ஒத்துளைப்புக்கு நன்றி, காத்திருங்கள், உங்களுக்கு பிடித்தமானவற்றையும் கொடுப்பேன்.