Pages

Sunday, August 17, 2008

பன்னிரண்டாந் திருவிழா - நற்சிந்தனைப் பாடல்கள்




இன்றைய திருவிழாப் பதிவில், சிவயோக சுவாமிகள் அருளிச் செய்த "நல்லூரான் திருவடியை என்ற பாடலை" இன்னிசை வேந்தர் பொன்.சுந்தரலிங்கம் அவர்கள் பாடக் கேட்கலாம்.



அடுத்து வருகின்றது "நில்லடா நிலையிலென்று சொல்லுது" என்னும் தலைப்பில் அமைந்த நற்சிந்தனைப் பாடல்.

ஓம்நாம் நாமென்று ஒலிக்குது
ஞாதுருஞானம் போயோடி ஒளிக்குது

நமக்கு நாமே துணையென்று விழிக்குது
நாதாந்த முடியிலேறிக் குளிக்குது

வேதாந்தசித்தாந்தஞ் சமமென்று களிக்குது
மாதாபிதாவை மறவாதிருக்க மதிக்குது

மூதாதைமார் சொல்நெஞ்சில் மதிக்குது
சூதான வார்த்தைதன்னைத் தொலைக்குது

நில்லடா நிலையிலென்று சொல்லுது
நீயேநான் என்று சொல்லி வெல்லுது

உல்லாச மாயெங்குஞ் செல்லுது
உண்மை முழுதுமென்று சொல்லுது

நல்லூரில் செல்லப்பன் என்னப்பன்
நானவரைக் கேட்கும் விண்ணப்பம்

நன்றி: சிவயோக சுவாமிகள் அருளிச் செய்த நற்சிந்தனைப் பாடல்கள்

4 comments:

தங்க முகுந்தன் said...

நல்லூரான் திருவடியை மாத்திரமல்ல ஆலயத்தினினதும் அங்கு வீற்றிருந்து எம்மைக் காத்து இரட்சிக்கும் கந்தப் பெருமானையும் மிகத் தத்துவார்த்தமாக படங்களுடனும் பாடல்களுடனும் எமக்கு அளிக்கும் உங்களை மனதாரப் பாராட்டுவதுடன் தொடர்ந்தும் இதுபோன்ற தகவல்களை எமக்குத் திருவிழா 25 நாட்கள் மாத்திரமல்ல தொடர்ந்தும் தரவேண்டும் எனப் பணிவாய்க் கேட்டுக்கொள்ளுகின்றேன்.

வளர்க உம் தொண்டு
வாழ்க பல்லாண்டு.

கானா பிரபா said...

வணக்கம் தங்க முகுந்தன்

என் சக்திக்குட்பட்டு இவை போன்ற பதிவுகளை நிச்சயம் தருவேன்.

தங்க முகுந்தன் said...

திரு. பொன் சுந்தரலிங்கம் அவர்களுடைய நல்லூர் முருகனை நீ நாடு நாள் தொறும் அவன் புகழை நீ பாடு என்ற பாடலை முடிந்தால் சேர்க்கவும்

கானா பிரபா said...

வணக்கம் தங்கமுகுந்தன்

நீங்கள் கேட்ட அந்தப் பாடல் இல்லை, பொன்.சுந்தரலிங்கம் அவர்களின் வேறு சில பாடல்கள் இருக்கின்றன. அவற்றைத் தருவேன்.