Pages

Sunday, August 3, 2008

"கடலோரக் கவிதைகள்" - பின்னணி இசைத்தொகுப்பு

கடந்த றேடியோஸ்புதிரில் கடலோரக் கவிதைகள் திரைப்படத்தின் பின்னணி இசை கொடுத்து அப்படத்தின் கதாசிரியர் யார் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு சரியான விடை இயக்குனர் ராஜேஷ்வர். கடலோரக் கவிதைகள் திரைப்படத்திற்காக என்ற கே.சோமசுந்தரேஷ்வர் என்ற பெயரில் அவர் கதாசிரியராக இருந்தார். இப்படத்திற்கு வசனம்: ஆர்.செல்வராஜ். இயக்கம்: பாரதிராஜா.

இயக்குனர் ராஜேஷ்வர் அவள் அப்படித் தான், பன்னீர் புஷ்பங்கள், கடலோரக் கவிதைகள், இது ஒரு காதல் கதை போன்ற திரைப்படங்களுக்கு கதாசிரியராக இருந்திருக்கின்றார். பின்னர் கார்த்திக் நடிப்பில் இதயத் தாமரை, அமரன் போன்ற படங்களையும் நியாயத்தராசு, துறைமுகம் போன்ற படங்களையும் அளித்திருக்கின்றார்.

கடலோரக் கவிதைகள் திரைப்படம் அதுவரை வில்லனாக நடித்து வந்த நடிகர் சத்யராஜ்ஜுக்கு வில்லத்தனம் இல்லாத நாயகன் அந்தஸ்தைக் கொடுத்தது. இப்படத்தில் ரேகா, ராஜா, ரஞ்சினி போன்றவர்கள் அறிமுகமாகியிருந்தார்கள். எனது புதிரில் சொன்ன சகவலைப்பதிவர் சிறில் அலெக்ஸ் தான் இந்தப் படம் உருவாகியிருந்த முட்டம் பகுதி குறித்த நூலை எழுதியிருப்பவர்.

பாரதிராஜா, இளையராஜா,வைரமுத்து ஆகியோர் இணைந்து படைத்த சகாப்தம் முடிவுக்கு வந்த திரைப்படம் இது என்பது ஒரு சோகம். பாரதிராஜாவின் சிறப்பான இயக்கம், வைரமுத்துவின் முத்தான கவிவரிகள், ராஜாவின் நிகரற்ற இசை போன்றவை இப்படத்திற்கு முடி சூட்டியவை என்றால் மிகையில்லை. இங்கே நான் கொடுத்திருக்கும் பின்னணி இசை, இளையராஜா எவ்வளவு ஈடுபாட்டோடு இப்படத்தின் கதைக்கு இசையால் உயிர் கொடுத்திருக்கின்றார் என்பதற்குச் சான்றாக இருக்கின்றது.

படத்தின் முகப்பு இசைஜெனிபர் டீச்சர் முட்டம் கிராமத்துக்கு வருதல்சின்னப்பதாஸுக்கு ஜெனிபர் டீச்சர் மேல் மரியாதை ஏற்படுதல் (அடி ஆத்தாடி பாடலின் மெட்டிசை பல வயலின்களோடு இசைக்கப்படுகின்றது)


சின்னப்பதாஸ் தன் தாயிடன் மன்னிப்புக் கேட்டல் உருக்கமான இசையோடு


ஜெனிபர் டீச்சரிடம் நட்பு பாராட்டும் சின்னப்பதாஸ் (புல்லாங்குழல் இசையில் அடி ஆத்தாடி)


ஜெனிபர் டீச்சர் கோபம் கொண்டு பள்ளிக்கு போகாமல் திரும்பல்


ஜெனிபர் டீச்சர் சின்னப்பதாஸுக்காக பிரார்த்தனை (அடி ஆத்தாடி இசையோடு அருமையான கலவை)


ஜெனிபர் டீச்சர் காதலில் மனம் தடுமாறல் (கீபோர்டில் அடி ஆத்தாடி பாடலின் மெட்டிசை)


சின்னப்பதாஸ் மலை உச்சியில் இருக்கும் ஜெனிபர் டீச்சரை தெய்வமாகப் போற்றும் காட்சி


மேய்ப்பானின் விளக்கத்தோடு காதலைச் சொல்லும் ஜெனிபர்


ஜெனிபர் டீச்சரைத் தான் இழக்கப் போகின்றோமோ என்று சஞ்சலப்படும் சின்னப்பதாஸ்
(புல்லாங்குழலில் அடி ஆத்தாடி பாடலின் சோக இசையும் கலக்கின்றது)சின்னப்பதாஸ் ஜெனிபர் டீச்சரிடம் கவலையோடு பேசுதல் (அடி ஆத்தாடி பாடலின் ஆரம்ப துள்ளிசையோடு)


ஜெனிபர் டீச்சர் சின்னப்பதாஸிடம் தனக்கு குருதட்சணை கேட்டல்


காதலனைப் பிரிந்த ஏக்கத்தோடு அவன் தந்த வலம்புரிச் சங்கைப் பார்க்கும் ஜெனிபர் டீச்சர்

இந்தப் படத்தின் இறுதிக் காட்சி இசை என்னை வியக்க வைக்கின்றது. கிட்டத்தட்ட 10 நிமிடங்களுக்கு மேலாக எந்தவிதமான வசனங்களும் இல்லாமல் வெறும் இசைக்கலவையோடு மட்டுமே பின்னப்பட்டு, வாத்தியக் கலவைகளின் நர்த்தனம் அழகிய பிரவாகமாகப் பெருக்கெடுக்கின்றது. அடி ஆத்தாடி பாடலின் இன்னொரு வாத்தியக் கோர்வையும் கலந்து இங்கே வயலின் உட்பட பல வாத்தியங்களில் அந்த மெட்டு இசைக்கப்படுகின்றது.

23 comments:

Tech Shankar said...Ilayaraja The great.

I love all the songs in this movie.

Exceptional Extraordinary.
Outstanding

Super hit songs from Kadalorakkavidhaigal.

Thanks Dear றேடியோஸ்பதி


pudugaithendral said...

போட்டியில் நான் பாதி கிணறு வரைதான் தாண்டினே.

ஒன்னு மாத்திரம் புரியல பிரபா.

எப்படி இப்படி பொறுமையா ஒரு படத்தின் பாடல்களை தரம் பிரிச்சு
கொடுக்கறீங்க.

ஒவ்வொரு முறையும் சொல்வது போல் இம்முறையும் என் மனமார்ந்த பாராட்டுக்கள், தங்களின் பணிக்காக.

pudugaithendral said...

எங்களுக்கு விடை கிடைக்குதோ இல்லையோ, ப்ரைன் டீசர் மாதிரி ஒரு நல்ல பொழுதுபோக்காக புதிர் போட்டிகளை கொடுப்பதற்கு வலையுல நண்பர்கள் சார்பில் (விழா எடுக்காலாமா?!!?) வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

ஆயில்யன் said...

அடி ஆத்தாடி புல்லாங்குழல் இசை & கிளைமாக்ஸ் பாட்டு இசை - ( எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டும்கூட :)- )

அருமை!

நன்றி !

ஆனாலும் அந்த ”கொடியிலே மல்லிகைப்பூவு மணக்குதே மானே” அந்த பாட்டை ஸ்பெஷ்லா கொடுத்திருக்கலாம்! :(

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரேடியோஸ்பதி ல நீங்க எப்படி கதாசிரியரெல்லாம் கேக்கலாம்..போட்டியில் விடை தெரியலன்னா ..இப்படித்தான் எதாச்சும் சொல்லுவோம் கண்டுக்காதீங்க.. :)

Thanjavurkaran said...

உங்களது பதிவு மிகவும் அருமையாக உள்ளது.
இளையராஜா பின்னணி அமைத்த படங்களில் என்னை மிகவும் கவர்ந்த இசை இதயம் படத்துக்காக அமைத்ததுதான்.
மற்ற நல்ல படங்கள் இளையராஜாவின் பின்னணி இசையினால் மிக நல்ல படமாக அமைந்திருக்கும். ஆனால் இதயம் என்ற மிக சுமாரான படம் இளையராஜாவின் பின்னணி இசையினால் மிக நல்ல படமாக அமைந்திருக்கும்.

அதேபோல் இதயத்தை திருடாதே படத்தில் கதாநாயகி தனது மரணம் குறித்து கதாநாயகனிடம் சொன்ன பிறகு உற்சாகத்தோடு நாகர்ஜுன் நடை போடும் காட்சி. இரண்டு பட பின்னணி இசையை இந்த அடியேனின் விருப்பமாக போட முடியுமா.

கானா பிரபா said...

வருகைக்கு நன்றி விஜய் பாலாஜி

//புதுகைத் தென்றல் said...
ஒன்னு மாத்திரம் புரியல பிரபா.

எப்படி இப்படி பொறுமையா ஒரு படத்தின் பாடல்களை தரம் பிரிச்சு
கொடுக்கறீங்க.//

வாங்க புதுகைத் தென்றல்

முழுப்படத்தையுமே பார்த்துக் கொண்டே அவ்வப்போது பின்னோக்கிப் போய் இந்த இசையைப் பிரித்தெடுக்கணும் சுமார் 3 - 4 மணி நேர வேலை ஆனாலும் ராஜாவின் இசைமழையில் நனையும் திருப்திக்காக எவ்வளவு நேரமும் ஒதுக்கலாம்.

கானா பிரபா said...

// ஆயில்யன் said...
அந்த ”கொடியிலே மல்லிகைப்பூவு மணக்குதே மானே” அந்த பாட்டை ஸ்பெஷ்லா கொடுத்திருக்கலாம்! :(//

வாங்க ஆயில்யன்

அந்தபாட்டு அருமையான பாட்டுத் தான். இன்னொரு ஸ்பெஷல் நாளுக்காக ஒதுக்கி வச்சிருக்கேன் ;)

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
ரேடியோஸ்பதி ல நீங்க எப்படி கதாசிரியரெல்லாம் கேக்கலாம்..போட்டியில் விடை தெரியலன்னா ..இப்படித்தான் எதாச்சும் சொல்லுவோம் கண்டுக்காதீங்க.. :)//

ஆஹா, ஆனாலும் 23 பேர் சரியாகச் சொல்லிட்டாங்களே ;-)

கானா பிரபா said...

//thanjavurkaran said...
இளையராஜா பின்னணி அமைத்த படங்களில் என்னை மிகவும் கவர்ந்த இசை இதயம் படத்துக்காக அமைத்ததுதான்.//

வணக்கம் நண்பரே

இதயம், மெளனராகம், போன்றவற்றின் பாடல்களோடு அவற்றோடு ராஜாவின் பின்னணி இசையும் பேசப்பட்டது. நீங்கள் கேட்டவை நிச்சயம் வரும்.

Tech Shankar said...Ilayaraja The great.

I love all the songs in this movie.

Exceptional Extraordinary.
Outstanding

Super hit songs from Kadalorakkavidhaigal.

Thanks Dear றேடியோஸ்பதி


தமிழன்-கறுப்பி... said...

இவ்வளவு இசையை தொகுத்து போட்டிருக்கிங்க ஆனா இந்த கம்பியூட்டர்ல அதை கேக்க முடியலையே அண்ணன்...

ஹேமா said...

பிரபா,இப்பிடியெல்லாம் கஸ்டமா கேட்டா என்ன செய்ய ஏலும் நான்.ஒவ்வொரு நாளும் வந்து பாத்திட்டு போனேன்.யாராச்சும் சரியா சொன்னா நானும் பாத்து சொல்லிடலாமே எண்டு.சரிவரேல்ல.

அருமையான் பாட்டுக்கள்.உங்கள் பொறுமையான முயற்சிகளுக்கு பாராட்டுக்கள் பிரபா.

நிஜமா நல்லவன் said...

தல....வழக்கம் போல பிரமாதமான பதிவு....பின்னிட்டீங்க....புதுகைத்தென்றல் அக்கா சொல்லுற மாதிரி உங்களுக்கு விழா எடுத்துற வேண்டியதுதான்....வாழ்த்துக்கள்!

Aravinthan said...

நீங்கள் இணைத்த படங்களில் சில தெரியவில்லை.

கானா பிரபா said...

வருகைக்கு நன்றி தமிழ் நெஞ்சம்

தமிழன்

ஆறுதலா வீட்டை போய் கேளுங்க, பாட்டில்லை, இசை ;)

//ஹேமா said...
பிரபா,இப்பிடியெல்லாம் கஸ்டமா கேட்டா என்ன செய்ய ஏலும் நான்.ஒவ்வொரு நாளும் வந்து பாத்திட்டு போனேன்.//

வாங்கோ ஹேமா

கஷ்டமா கேட்காட்டி அது கேள்வியா இராதே ;)

கானா பிரபா said...

//நிஜமா நல்லவன் said...
புதுகைத்தென்றல் அக்கா சொல்லுற மாதிரி உங்களுக்கு விழா எடுத்துற வேண்டியதுதான்....வாழ்த்துக்கள்!//

நல்லவரே

புதிருக்கு பதில் சொல்லி ஒத்துளைப்பைக் கொடுத்தாலே போதும் ;)

//Aravinthan said...
நீங்கள் இணைத்த படங்களில் சில தெரியவில்லை.//

அரவிந்தன்

படங்கள் லோட் ஆக நேரம் எடுக்கும்.

Anonymous said...

கடந்த சனிக்கிழமை நான் தலைவர் வீட்டிற்கே சென்று சந்தித்தேன். அவருடன் 10 நிமிடங்கள் பேசினேன். the most modest man i have ever seen!!! He stumped me. i was damm shivering in front of him. எனக்கு பேச்சே வரல வெறும் காத்து தான் வந்தது :-)

கானா பிரபா said...

ஆஹா ராஜாவைச் சந்திச்சீங்களா, உங்களை அடையாளமே காட்டவில்லையே? அந்த அற்புத கணங்களை பதிவாக இடலாமே.

Anonymous said...

sure, i will post it soon, i will post that with my photos as well, if you can share your email id

Raj said...

Links are not working.....Can you do the needful plssssss.

கானா பிரபா said...

// Anonymous said...
sure, i will post it soon, i will post that with my photos as well, if you can share your email id//

வணக்கம் நண்பரே

என் மின்னஞ்சல் முகவரி kanapraba@gmail.com

// Raj said...
Links are not working.....Can you do the needful plssssss.கடலோரக் கவிதைகள் இசைத் தொகுப்பு வேலை செய்யவில்லை என்று குறிப்பிட்டீர்கள், எனது நண்பர்களிடம் இணைப்பைக் கொடுத்துப் பரிசோதித்தேன். அனைவரும் வேலை செய்வதாகக் குறிப்பிட்டார்கள். நீங்கள் முதல் தடவை தான் எனது பதிவுக்கு வந்திருந்தீர்கள் என்றால் கொஞ்ச நேரம் காத்திருந்தால் பக்கத்தில் உள்ள ஆடியோ பிளேயர் லோட் ஆகி பின்னர் உங்களால் அதை இயக்க முடியும். அல்லது www.apple.com/quicktime/download/ என்பதை தரவிறக்கி விட்டு மீண்டும் எனது பக்கம் சென்று இப்பிளேயரை இயக்கிப் பார்க்கவும்

anujanya said...

முதலில் ஒரு பெரிய நன்றி. சில பாரதிராஜாவின் படங்களை பின்னணி இசைக்காக மட்டும் கேட்டால் அது ஒரு தனி அனுபவம். முதல் முரியாதை அப்படிப்பட்ட படம். கடலோரக் கவிதைகளும் மற்றொன்று. காதலை தமிழ்த்திரையில் பாரதிராஜா போல் வேறு யார் சொல்லியிருக்கிறார்?

என் ஒரே குறை, தாஸ் தாஸ் சின்னப்ப தாஸ் தாஸ் பாடலின் முகுப்பு இசையும் போட்டிருக்கலாம். பாடலும், கடலலைகள் கூடவே ஓடி வரும் காமெராவும் மனதைக் கவரும். வாழ்த்துக்கள் பிரபா.

அனுஜன்யா

கானா பிரபா said...

வாங்க அனுஜன்யா

தாஸ் தாஸ் பாட்டுக்குள் வரும் என்பதால் தவிர்த்தேன். அந்தப் பாட்டின் முகப்பு இசை முகப்பு இசையில் அடங்கியிருக்கு.