Pages

Friday, August 1, 2008

றேடியோஸ்புதிர் 15: யார் அந்தக் கதாசிரியர்?


கடந்த வாரப் புதிர் காய்ச்சி எடுத்தது என்று பல போட்டியாளர்கள் சொல்லியிருந்தார்கள். எனவே இந்த வாரம் சற்று இலகுவான புதிரோடு வந்திருக்கின்றேன். இதைவிட புதிரை இன்னும் இலகுவாக்கினால் "புதிர் புதிரா இருக்கணும்யா' என்று அய்யனார் கோய்ச்சுப்பார் ;-)

இங்கே தரும் பின்னணி இசை ஒரு படத்தின் முகப்பு இசையின் ஒரு பாதி. கேள்வி இது தான்.

இந்தப் படத்தின் பிரபல இயக்குனரின் சீடர்கள் பலர் இந்த இயக்குனருக்கு கதாசிரியர்களாகவும் இருந்து பின்னர் பிரபல இயக்குனர்கள் ஆனவர்கள். ஆனால் இந்தப் படத்தின் கதாசிரியர் கூட பின்னாளில் இயக்குனர் ஆனவர். ஆனால் அவ்வளவு பெரிதாகப் பேசப்படவில்லை.
இந்தப் படத்தின் டைட்டிலில் கூட இந்தக் கதாசிரியரின் வேறு பெயர் தான் இருக்கும். ஆனால் அவர் இயக்குனராக வந்தபோது இன்னொரு பெயரில் படங்களை இயக்கினார். இந்தக் கதாசிரியர் யார் என்பதே கேள்வி.

உங்கள் பதிலைச் சுலபமாக்க சில உப குறிப்புக்கள்.

இங்கே கொடுக்கப்பட்டுள்ள பின்னணி இசை வரும் திரைப்படத்தின் காட்சிகள் எடுக்கப்பட்ட பிரதேசத்தைப் பற்றி நம் சக வலைப்பதிவர் ஒருவர் புத்தகம் போடுமளவுக்கு இந்த இடம் பிரபலம்.

இந்தக் கதாசிரியர் இயக்குனரானபோது 80 களில் பிரபலமான வாரிசு நடிகரை வைத்து இரண்டு படங்களை இயக்கியிருக்கின்றார். அதில் ஒரு படத்தின் தலைப்பு ஒரு இசையமைப்பாளரின் பெயரின் பாதியாக இருக்கின்றது.

இந்த இயக்குனரின் படங்கள் பெரிதாக ஓடாவிட்டாலும் பாடல்கள் ஓரளவு பேசப்பட்டவை.

சரி,பதிலோடு ரெடியா?


50 comments:

MyFriend said...

//சரி,பதிலோடு ரெடியா?//

இன்னும் இல்லை. :-P

கோபிநாத் said...

தல

படம் - கடலோர கவிதைகள்

கதாசிரியர் - ஆர். செல்வராஜ்

தமிழன்-கறுப்பி... said...

அண்ணன் என்னால பின்னணி இசையை கேட்க முடியலை இருந்தாலும் மற்றய விபரங்களோட வச்சு சொல்ல முயற்சி செய்கிறேன்...

கானா பிரபா said...

மைபிரெண்ட்

போட்டி நாளை மாலை வரை இருக்கும், சாவகாசமா வாங்க ;-)

தமிழன்

இந்தப் பின்னணி இசையை முழுமையாகக் கேட்டால் இந்தப் படத்தை அறியலாம், குறிப்புக்களை வச்சுக் கேள்விக்கான விடையை சுலபமா சொல்லலாம்.

Anonymous said...

கானாஸ், எனக்கு பதிலை மின்னஞ்சலில் அனுப்பவும்...பின்னர் நான் இங்கு வந்து எழுதுகின்றேன்..

Anonymous said...

இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்

கோபிநாத் said...

தல பதில் ராஜேஷ்வர் ;-)

\\\இந்தக் கதாசிரியர் இயக்குனரானபோது 80 களில் பிரபலமான வாரிசு நடிகரை வைத்து இரண்டு படங்களை இயக்கியிருக்கின்றார். அதில் ஒரு படத்தின் தலைப்பு ஒரு இசையமைப்பாளரின் பெயரின் பாதியாக இருக்கின்றது.\\

கார்த்திக்...படம் அமரன் ;)

சென்ஷி said...

இயக்குனர் ராஜேஷ்வர்..

கடலோர கவிதைகள் படத்தில் இவர் எந்த பெயரை உபயோகித்தார் என்று நினைவில் இல்லை :(

இவரது கதைகள் அனைத்தும் வெற்றிப்படங்களாக உருவானது.

அவள் அப்படித்தான், பன்னீர் புஷ்பங்கள், வெற்றிவிழா, மீண்டும் ஒரு காதல் கதை(இந்த கடைசி படம் தோல்வியில்லை.. படு தோல்வியுற்றது)

இவர் இயக்கிய மற்ற படங்கள் நியாயத்தராசு, இதயத்தாமரை, அமரன், துறைமுகம், மற்றும் அதிரடி "கோவில்பட்டி வீரலட்சுமி" ஆகியவை அடங்கும்.

இப்போது எடுக்க இருக்கும் படம்.. இந்திரவிழா...

இந்த கடலோர கவிதைகள் படத்தின் கதைக்கு தங்க மெடல் பரிசு கிடைத்தது..

மேலும் இந்த இயக்குனர் பற்றிய விபரம் அறிய...
http://www.cinemaexpress.com/archaics/01032008/interview/interview5.asp

நன்றி கூகிளுக்கும், எ-கலப்பைக்கும் :))

MyFriend said...

இயக்குனர் ராஜேஷ்வர்..

கடலோர கவிதைகள், வெற்றிவிழா போன்ற படங்களில் கதாசிரியராகவூம்

அமரன், இதயத்தாமரை போன்ற படங்களின் இயக்குனராகவும் இருந்தார்.

கானா பிரபா said...

// Thooya said...
கானாஸ், எனக்கு பதிலை மின்னஞ்சலில் அனுப்பவும்...பின்னர் நான் இங்கு வந்து எழுதுகின்றேன்..//

தூய்ஸ்

இண்டைக்கு நான் ஒருத்தருக்கும் மின்னஞ்சல் அனுப்ப மாட்டேன் ;-)


வெயிலான்

ஆர்.வி.உதயகுமார் ரொம்ப பிரபலமாச்சே, அந்த விடை தவறு.

pudugaithendral said...

கடலோரக் கவிதைகள்.

சிநேகிதன்.. said...
This comment has been removed by the author.
கானா பிரபா said...

சினேகிதன்

அந்த விடை தவறு, இன்னொரு முறை முயலுங்களேன்.

ஆயில்யன் said...

//Thooya said...
கானாஸ், எனக்கு பதிலை மின்னஞ்சலில் அனுப்பவும்...பின்னர் நான் இங்கு வந்து எழுதுகின்றேன்..
//

ஆமாம் அதுதான் சரியான வழியாயிருக்கும் :)

சென்ஷி said...

//கானா பிரபா said...
சினேகிதன்

அந்த விடை தவறு, இன்னொரு முறை முயலுங்களேன்.
//

சிங்கத்தைப் பார்த்து முயல் எனச் சொல்வதை கடும் கண்டனங்களுடன் ஆட்சேபிக்கிறேன் :))

சென்ஷி said...

பார்த்தீங்களா.. சிங்கமே கோவப்பட்டு கமெண்ட அழிச்சுடுச்சு :)

கானா பிரபா said...

//சென்ஷி said...
பார்த்தீங்களா.. சிங்கமே கோவப்பட்டு கமெண்ட அழிச்சுடுச்சு :)/

ஆஹா, இதெல்லாம் தமாசு விளையாட்டு தானே, கோவம் எல்லாம் படக்கூடாது ;-)

சிநேகிதன்.. said...

kovama? yaruku? thappana answerala avamanapada venamenu delete panen pa.. ithhuku poi !!! avvvvvvv

சென்ஷி said...

//கானா பிரபா said...
//சென்ஷி said...
பார்த்தீங்களா.. சிங்கமே கோவப்பட்டு கமெண்ட அழிச்சுடுச்சு :)/

ஆஹா, இதெல்லாம் தமாசு விளையாட்டு தானே, கோவம் எல்லாம் படக்கூடாது ;-)
//

அத சிங்கத்துக்கிட்ட சொல்லுங்கப்பூ :))

Anonymous said...

பதிலை எனக்கு சொன்ன கானாஸ் வாழ்க...

சென்ஷி said...

//Thooya said...
பதிலை எனக்கு சொன்ன கானாஸ் வாழ்க...
//

தூயாக்கா.. இது போங்கு ஆட்டம்.. அப்புறம் தூகச பதிவு போட ஆரம்பிச்சுடுவேன். :)

Unknown said...

தந்திருக்கும் இசை, கடலோரக் கவிதைகள் படத்திலிருந்து..

1980 ல் வெளியான படம் அமரன்.

உங்கள் கேள்விக்கு விடை கே.ராஜேஸ்வர்.

சரியான விடை சொன்ன எனக்கான பரிசை பார்சலில் அனுப்பவும். :)

சிநேகிதன்.. said...

கானா அண்ணா ஒரே ஒரு நல்ல க்ளூ கொடுங்களேன் ப்ளீஸ்..

ஆயில்யன் said...

பதில் 1ண்ணொண்ணா சொல்றேன்

பாரதி ராசா

பின்னணிகாட்சிகள் எடுக்கப்பட்ட பிரதேசம் - முட்டம்

புத்தகம் போடுமளவுக்கு மேட்டர் வைத்திருப்பவர் - நம்ம சிறில் அலெக்‌ஸ் அண்ணா!

கார்த்திக் வைச்சு ஒரு படம் அம்ரன் அதுல நம்ம கங்கை அம்ரன் பேருல செகண்ட் பார்ட்

மொத்தத்தில் நீங்க கேட்ட கேள்விக்கு பதில் ராஜேஷ்வர்!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் (இது ஆனந்த கண்ணீர்!)

கானா பிரபா said...

தல சென்ஷி

சிங்கமே வந்து சொல்லிட்டாரே, பாருங்க ;)


///Thooya said...
பதிலை எனக்கு சொன்ன கானாஸ் வாழ்க...//


தூய்ஸ் இன் வதந்தியை நம்பாதீர் ;)

Anonymous said...

இயக்குனர் ராஜேஸ்வர்

;)

Anonymous said...

இனி கானாஸ் சொல்வதையும் நம்ப வேண்டாம்..

சென்ஷி said...

//கானா பிரபா said...
தல சென்ஷி

சிங்கமே வந்து சொல்லிட்டாரே, பாருங்க ;)
//

ஆமா.. சிங்கத்துக்கு இனிஷியலா "அ" சேர்த்தா பிடிக்காதுன்னு கமெண்ட அழிச்சுட்டாராம்... என்ன கொடும சிங்கம் இது :))

Anonymous said...

எனக்கு பதில் சொல்லி தந்தது ஜோண்ணா என கனாஸ் சொல்வார்..நம்பாதீர்கள்..கிகிகி

Anonymous said...

ஸ்.... யப்பா! ஒரு வழியா கண்டுபிடிச்சிட்டேனு நினைக்கிறேன்.

இயக்குநர் கே. ராஜேஸ்வர் தானே அது?

pudugaithendral said...

varisu nadigar karthi enbathu varai kandu pidichen praba
:(

ப்ரசன்னா said...

மணிவண்ணன்

கானா பிரபா said...

வெயிலான்

உங்க விடை சரி ;)

புதுகைத் தென்றல்

மிச்சத்தையும் கண்டுபிடிக்கிறது

பிரசன்னா

மணிவண்ணன் என்ற விடை தவறு

thamizhparavai said...

manojkumar...?

அரவிந்த் said...

கே. ராஜேஷ்வர்...
மற்றொரு பெயர் தெரியவில்லை.
கார்த்திக்கை வைத்து இரண்டு படங்கள் என நினைக்கிறேன். 'கங்கை' என தொடங்கும் ஒரு படம்.

சரியா??

கானா பிரபா said...

தமிழ்ப்பறவை

மனோஜ்குமார் என்பது தவறான பதில்

அரவிந்த்

உங்களின் கணிப்பு சரியானது, ஆனால் அந்த இசையமைப்பாளரின் மறுபாதி பேரில் தான் அந்தப் படத்தலைப்பு இருக்கு.

thamizhparavai said...

prathap pothan...?

thamizhparavai said...

prathap pothtan

கானா பிரபா said...

தமிழ்ப்பறவை நண்பா

இந்த முறையும் தவறு, பிரதாப் போத்தனுடனும் இவர் இணைந்து பணியாற்றியிருக்கிறார்.

கானா பிரபா said...

தங்கக்கம்பி

உங்க தரவுகள் சரியானவை, ஆனா கேட்ட கேள்வி நீங்க சொன்ன படத்தின் கதாசிரியர் யார்?

நிஜமா நல்லவன் said...

நீங்க கொடுத்திருக்கும் இசை கடலோரகவிதைகள் படத்தில் வரும். இந்த படம் முட்டம் பகுதியில் படமாக்கபட்டது. கதாசிரியர் கே. ராஜேஷ்வர் வாரிசு நடிகர் கார்த்திக்கை வைத்து எடுத்த இதய தாமரை மற்றும் அமரன் படங்கள் வெற்றிகரமாக ஓடவில்லை என்றாலும் பாடல்கள் நன்றாகவே இருக்கும்.

தங்ஸ் said...

கே. ராஜேஷ்வர்????

கானா பிரபா said...

நிஜமா நல்லவன்

பின்னீட்டீங்க

தங்க்ஸ்

சரியான கணிப்பு

அரவிந்த் said...

கானா பிரபா, கார்த்திக்கை வைத்து ராஜேஷ்வர் இயக்கியது 'அமரன்' மற்றும் 'இதய தாமரை'. நீங்கள் கொடுத்துள்ள பின்னணி இசை 'கடலோர கவிதைகள்'. சரியா??

Ayyanar Viswanath said...

தல

மியூசிக் கேட்டஒடனே புடிச்சிட்டோம் இல்ல..கே.ராஜேஷ்வர் தான? :)

கடலோர கவிதைகள் பட கதாசிரியர்
அமரன்,இதயத்தாமரை ரெண்டு படமும் அவர்தான எடுத்தார்...

அமரன் கங்கை வந்திடுச்சே :))

Ayyanar Viswanath said...

தல வாரிசு நடிகர்..கதாசிரியர் பிரபலமாகாத டைரக்டர்ன ஒடனே அனந்து ன்னு நெனச்சேன்..நல்லவேள கரெக்டா கண்டுபுடிச்சோம் இல்ல :))

ஜோசப் பால்ராஜ் said...

சரியான பதில் சொன்ன என் தங்கை தூயாவுக்கு பரிசு இல்லையா? ஒரு பாராட்டுப்பத்திரம் கூட இல்லையா?

கானாஸ் அண்ணா, நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே.

என் தங்கையின் பதிலில் என்ன குறை கண்டீர்கள்?


அந்த கதாசிரியர் பின் நாட்களில் இயக்குநர் ஆன ராஜேஷ்வர் தானே?
அவர் இயக்கிய படம் அமரன்,( கங்கை அமரனின் பின் பாதி) , அதில் நடித்தவர் முத்துராமனின் வாரிசான கார்த்திக் தானே? இதில் எது தவறு ?

எங்கள் பெரியண்ணண் கூகுள் தவறா? கூகுளில் தேடியது என் தவறா? நான் கண்டறிந்ததை என் தங்கை தூயாவிடம் சொல்லியது தவறா? சொல்லுங்கள் கானாஸ் அண்ணா?

கானா பிரபா said...

இந்தப் புதிரில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி, போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

என்னது பரிசா? எனக்கா? உங்களுக்கா ;)

சரியான பதில் : கே.ராஜேஷ்வர்


கூகிளில் வழமையாகத் தேடிக் களைக்கும் பலர் இம்முறை கூகிளாண்டவனைச் சரணடையாமல் விட்டது அவர்களுக்கே ஆப்பாகி விட்டது.

மீண்டும் இன்னுமொரு ஆப்பில் சாரி புதிரில் சந்திப்போம் ;)

தமிழன்-கறுப்பி... said...

அண்ணே மறக்க முடியாத பாடல்கள்

நன்றி...

Anonymous said...

பரிசு இன்னும் வந்து சேரவில்லை :P