Pages

Sunday, July 8, 2007

மலர்ந்தும் மலராத இசையமைப்பாளர்கள் - பாகம் 2




மலர்ந்தும் மலராத இசையமைப்பாளர்கள் பாகம் இரண்டில் ஒரு சில படங்கள், அல்லது குறிப்பிட்ட சில காலங்கள் மட்டுமே திரையுலகில் இருந்து ஒதுங்கிக் கொண்ட அல்லது வாய்ப்பற்றுப் போன இசையமைப்பாளர்கள் வரிசையில்

கோகுலம் திரைப்படத்தின் மூலம் இயக்குனர் விக்ரமனின் அறிமுகத்தால் திரையுலகிற்கு வந்து, தொடர்ந்து உள்ளத்தை அள்ளித்தா, நான் பேச நினைப்பதெல்லாம் , உன்னை நினைத்து போன்ற படங்களுக்கு இசையமைத்த சிற்பி முதலில் இடம்பெறுகின்றார். திடீரென ஒரு வருடம் தொடர்ந்து படங்கள் சிலவற்றுக்கு இசையமைத்து விட்டு தொடர்ந்த சிலவருடங்கள் காணாமற் போய் மீண்டுவருவது சிற்பிக்கு வாய்த்த அதிஷ்டமென்று சொல்ல வேண்டும். சிற்பி பற்றிய அறிமுகத்தோடு அவரின் இசையில் வந்த "உன்னை நினைத்து" திரைப்படத்தில் இருந்து "யார் இந்த தேவதை" என்ற ஹரிகரன் பாடிய பாடல் இடம்பெறுகின்றது.

தொடர்ந்து வருபவர் சந்திரபோஸ். தன் ஆரம்ப காலத்தில் "போஸஸ் தேவா" இசைக்குழுவில் பின்னாளில் இசையமைப்பாளராக வந்த தேவாவோடு இணைந்து மெல்லிசைக் கச்சேரிகளை வைத்தவர். தேவாவின் இசையில் தாமரை திரைப்படத்தில் பாடியும் இருக்கின்றார். தேவாவிற்கு முன்னரேயே திரையுலகிற்கு வந்து, 80 களில் இளையராஜாவின் ஏக போக இசைராஜ்ஜியத்தில் தன் எல்லைக்குட்பட்ட குறுநில மன்னராக இருந்து இசையாட்சி புரிந்தவர் சந்திரபோஸ். 80 களில் ஏ.வி.எம் இன் பல படங்களுக்கு சந்திரபோஸ் தான் ஆஸ்தான இசையமைப்பாளர். மத்திய கிழக்கில் சில காலம் இருந்து தற்போது தொலைக்காட்சி நாடகங்கள் சிலவற்றில் நடித்து வருகின்றார். இவரின் மகன் கூட ஒரு படத்திற்கு இசையமைத்தவர். சந்திரபோஸ் குறித்த அறிமுகத்தைத் தொடர்ந்து அவரின் இசையில் "அண்ணா நகர் முதல் தெரு" திரைப்படத்தில் இருந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பாடும் "மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு" என்ற இனிமையான பாடல் வருகின்றது.

இந்தப் பகுதியின் இறுதி இசையமைப்பாளர் "லவ் டுடே" சிவா. ஆர்.பி.செளத்ரியின் தயாரிப்பில் பாலசேகரன் இயக்கத்தில் வந்த "லவ் டுடே" என்ற வெற்றிப்படத்தின் இசையமைப்பாளர் தான் "லவ் டுடே சிவா". முதற்படம் வெற்றிப்படமாக இருந்த போதும் இவருக்கு படவாய்ப்புக்கள் என்பது எட்டாக்கனிதான். லவ் டுடே, பூமகள் ஊர்வலம், காதல் சுகமானது ஆகிய திரைப்படங்களே சிவாவின் இசையில் வந்த சொற்பப் படங்கள். ஆனால் இவரின் இசையில் மலர்ந்த அனைத்துப் பாடல்களுமே அருமை தான். லவ் டுடே சிவா வின் இசையில் "காதல் சுகமானது" திரையில் இருந்து "சொல்லத்தான் நினைக்கிறேன், சொல்லாமல் தவிக்கிறேன் " என்ற சித்ரா பாடும் இனிமையான பாடல் நிறைவாக ஒலிக்கின்றது.



அல்லது

இங்கே அழுத்தவும்

9 comments:

Sud Gopal said...

//கோகுலம் திரைப்படத்தின் மூலம் இயக்குனர் விக்ரமனின் அறிமுகத்தால் திரையுலகிற்கு வந்து//

அப்ஜெக்ஷன் மை லார்ர்ட்ட்ட்ட்.
இவரோட அறிமுகப் படம் செண்பகத்தோட்டம்.

இவர் இசையமைச்சு வந்த மேட்டுகுடி,கண்ணன் வருவான் லிஸ்டில விட்டுட்டீங்களே...

பூமகள் ஊர்வலத்தில "மலரே ஒரு வார்த்தை பேசு" அப்படீன்னு ஒரு அருமையான பாடல் இருக்கும்.கேட்டிருக்கீங்களா?

அப்புறம் உங்க லிஸ்டில எப்போ பாக்யராஜ் வரப்போறாரு? :-D

Anonymous said...

//. சிற்பி பற்றிய அறிமுகத்தோடு அவரின் இசையில் வந்த "உன்னை நினைத்து" திரைப்படத்தில் இருந்து "யார் இந்த தேவதை" என்ற ஹரிகரன் பாடிய பாடல் இடம்பெறுகின்றது//

உன்னை நினைத்து படத்துக்கு இசையமைத்தது ராஜ்குமார் என்ற நினைவு.

விக்ரமன் படத்துக்கு அவர்தான் ஆஸ்தான் இசையமைப்பாளர். ஓரிரண்டு பாடல்கள் நன்றாக அமைவதுண்டு. அவரை template இசையமைப்பாளர் என்று வர்ணிப்போம். ஏனென்றால் விக்ரமன் படத்தில் இருக்கும் செண்டிமெண்ட்டுக்கு லா...லல்லல்லல்லா என்று ஒரே மாதிரி மாற்றி ஒலிக்க வைப்பதில் ராஜ்குமாருக்கு இணையேது

கானா பிரபா said...

//சுதர்சன்.கோபால் said...
//கோகுலம் திரைப்படத்தின் மூலம் இயக்குனர் விக்ரமனின் அறிமுகத்தால் திரையுலகிற்கு வந்து//

அப்ஜெக்ஷன் மை லார்ர்ட்ட்ட்ட்.
இவரோட அறிமுகப் படம் செண்பகத்தோட்டம்.//

வாங்க சுதர்சன் கோபால்

சன் டீவியின் "இளமை புதுமை" மற்றும் சிறப்பு பேட்டியொன்றில் விக்ரமனின் கோகுலம் திரைப்படமே தன் திரையிலக வாழ்வுக்கு அடியெடுத்துக் கொடுத்த படம் என்று குறிப்பிட்டிருக்கின்றார் சிற்பி. சினிமா எக்ஸ்பிரசில் "நான் பேச நினைப்பதெல்லாம்" என்ற இயக்குனர் விக்ரமனின் தொடரிலும் இதைக் குறிப்பிட்டதாக நினைவு. செண்பத் தோட்டம் , ஒன்றில் சிற்பி இசையமைத்து முதலில் வெளிவந்த திரைப்படம் அல்லது முதல்வாய்ப்பில் வெளிவராத திரைப்படமாக இருக்கலாம்.

"மலரே ஒரு வார்த்தை பேசு", "அந்த வானுக்கு" என்ற அருமையான பாடல்கள் பூமகள் ஊர்வலத்தில் இருக்கும் இல்லையா?

பாக்யராஜ் வருவார், கூடவே அவரின் சுந்தரகாண்டத்துக்கு இசையமைத்த "தீபக்" கூட வருவார் ;-)

கானா பிரபா said...

//அல்வாசிட்டி.விஜய் said...
//. சிற்பி பற்றிய அறிமுகத்தோடு அவரின் இசையில் வந்த "உன்னை நினைத்து" திரைப்படத்தில் இருந்து "யார் இந்த தேவதை" என்ற ஹரிகரன் பாடிய பாடல் இடம்பெறுகின்றது//

உன்னை நினைத்து படத்துக்கு இசையமைத்தது ராஜ்குமார் என்ற நினைவு.//

வாங்க விஜய்

உன்னை நினைத்து, வருசமெல்லாம் வசந்தம் ஆகிய இரண்டு படங்களும் 2002 ஆம் வருஷம் சிற்பியின் இசையில் வந்து தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளர் என்ற விருது கூட இவ்விரு படங்களுக்கு இசையமைத்ததற்காக சிற்பிக்கு கிடைத்தது.

விக்ரமனைப் பொறுத்தவரை அவரிடம் அகப்படும் இசையமைப்பாளர் யாராக இருந்தாலும் லாலாலா போட வைப்பார். கோகுலம் படத்துக்கு இசையமைத்த சிற்பி, சமீபத்தில் வந்த சென்னைக் காதல் ஜோஷ்வா சிறீதர் ஆகியோரின் பின்னணி இசை உதாரணம்.

Anonymous said...

//உன்னை நினைத்து, வருசமெல்லாம் வசந்தம் ஆகிய இரண்டு படங்களும் 2002 ஆம் வருஷம் சிற்பியின் இசையில் வந்து தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளர் என்ற விருது கூட இவ்விரு படங்களுக்கு இசையமைத்ததற்காக சிற்பிக்கு கிடைத்தது.//

தகவலுக்கு நன்றி பிரபா.

//விக்ரமனைப் பொறுத்தவரை அவரிடம் அகப்படும் இசையமைப்பாளர் யாராக இருந்தாலும் லாலாலா போட வைப்பார்//

:-))) விக்ரமன் படத்தின் உச்சக்கட்ட எரிச்சலே இந்த லாலாலா தான்.

CVR said...

நல்ல பதிவு!!
இப்பொழுதுதான் பார்க்கிறேன்.
சிற்பி என்றாலே நினைவுக்கு வருவது "உள்ளத்தை அள்ளித்தா" தான். ஆனால் அந்த படத்தின் எல்லா பாட்டையும் அட்டை காபி அடித்ததால் எனக்கு அவர் மீது அவ்வளவாக மதிப்பு இல்லாமல் போய் விட்டது. :)

கானா பிரபா said...

வாங்க நண்பரே

சிற்பிக்கு தனித்துவமாக இசையமைக்கும் திறன் இருந்தாலும் காப்பியினால் தன் சுயத்தை இழந்தார். இவர் இசையமைத்த சுந்தர புருஷன் படத்தில் சோகக் காட்சிகளில் அந்த 7 நாட்கள் படத்தில் எம்.எஸ்.வி இசையமைத்த பின்னணி இசையை அச்சாகப் போட்டிருப்பார். ஆக, பாட்டு மட்டுமல்ல எல்லாவற்றிலும் இவருக்கு ஆசை ;-)

Anonymous said...

Actually, "Shenbaga thottam" is Sirpi's first movie. Its acted by Saravanan, Vinodhini I think.
It has a good song "Muthu muthu malai". Sirpi probably changed track with fast beats from the Sarathkumar movie Captain.
Sirpi's latest good number is "Ragasiyamanathu Kadhal" from the movie Kodambakkam.
(sorry for not typing in tamil)

கானா பிரபா said...

வாங்க நடராஜ்


சுதர்சன் சொன்ன தகவல்களை மீள உறுதிப்படுத்தியமைக்கு நன்றி, கேப்டன் படத்தில் "கன்னத்துல வை" மற்றும் நாட்டாமை "கொட்டப்பாக்கும்" போன்ற பாடல்கள் சிற்பிக்கு புகழ்கொடுத்த மேலும் சில.