Pages

Wednesday, October 6, 2021

புலவர் புலமைப்பித்தன் அகவை 86

உடலால் பிரிந்தாலும் நம் உள்ளத்துள் உறைந்திருக்குக்கும் தமிழ்த் தேசியர், புலவர் புலமைப்பித்தன் ஐயா அவர்களின் 86 ஆவது பிறந்த தினம் இன்றாகும்.

தமிழ் தேசிய சிந்தனையோடு வாழ்ந்த அந்தப் பெருமகனின் திரையிசைப் பாடல் ஆக்க இலக்கிய வாழ்வியலும் கொண்டாடப்பட வேண்டியது.

இசையைத் தேடி “தீரா உலா” இணைய வானொலியில் புலவர் புலமைப்பித்தன் அவர்கள் உதிர்ந்த தினமன்று வழங்கிய

“புலவர் புலமைப்பித்தன் அவர்களுக்கு வானலையில் ஓர் பிரியாவிடை” என்ற நிகழ்வின் பகிர்வை அவரின் பிறந்த தினமன்று பகிர்ந்து கொள்கின்றேன்.

https://www.youtube.com/watch?v=uzCTpT70A2o

2 மணி நேரம் 35 நிமிடங்கள் பயணிக்கும் இந்த நிகழ்ச்சியில் புலவரவர்கள் “குடியிருந்த கோயில்” படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வ நாதன் இசையில் கொடுத்த முதல் பாடலான “நான் யார்?” பாடலோடு பல்வேறு இசையமைப்பாளர்களோடு சேர்ந்திய அனுபவங்களில் இருந்து எழுமாற்றாகப் பாடல்களை இணைத்துத் தருகின்றேன்.


அந்த வகையில் இந்தத் தொகுப்பில் இடம்பெறும் பாடல்கள்


1. நான் யார் நான் யார் – குடியிருந்த கோயில் – எம்.எஸ்.விஸ்வநாதன்

2. ஆயிரம் நிலவே வா – அடிமைப்பெண் – கே.வி.மகாதேவன்

3. சந்தனம் பூசும் - துடிக்கும் கரங்கள் – எஸ்.பி.பாலசுப்ரமணியம்

4. இந்தப் பச்சைக்கிளிக்கொரு – நீதிக்குத் தலைவணங்கு – எம்.எஸ்.விஸ்வநாதன்

5. ஒரு சின்னப்பறவை – மதன மாளிகை – எம்.பி.ஶ்ரீனிவாசன்

6. அம்மா அம்மா என்னும் – நந்தா என் நிலா – தட்சணாமூர்த்தி ஸ்வாமிகள்

7. கங்கை நதியோரம் – வரப்பிரசாதம் – ஆர்.கோவர்த்தனம்

8. அந்தப்புரத்தில் ஒரு மகராணி – தீபம் – இளையராஜா

9. மணியோசையும் – அந்த ராத்திரிக்குச் சாட்சி இல்லை – கே.வி.மகாதேவன்

10. மேகங்களே இங்கு – மல்லிகை மோகினி – ஜி.கே.வெங்கடேஷ்

11. மரகதத்தோரணம் வாசலில் - பிள்ளையார் - சூலமங்கலம் ராஜலட்சுமி

12. உச்சி வகுந்தெடுத்து – ரோசாப்பூ ரவிக்கைக்காரி – இளையராஜா

13. பட்டு வண்ண ரோசாவாம் – கன்னிப் பருவத்திலே – சங்கர் – கணேஷ்

14. வெள்ளி ரதங்கள் அழகு மேகம் - பருவகாலம் - ஜி.தேவராஜன்

15. சித்திரை நிலவு – வண்டிச்சோலை சின்ராசு – ஏ.ஆர்.ரஹ்மான்

16. பாடி அழைத்தேன் – ரசிகன் ஒரு ரசிகை – ரவீந்திரன்

17. முத்து முத்துப் புன்னகையோ – சந்தோஷக் கனவுகள் – ஷியாம்

18. இனங்களிலே என்ன இனம் – நல்ல பெண்மணி – வி.குமார்

19. அம்மாடி இதுதான் – இது நம்ம ஆளு – கே.பாக்யராஜ்

20. ஆத்து மேட்டுத் தோப்புல – மனசுக்கேத்த மகராசா - தேவா 

21. அதோ வானிலே – தண்டனை – சந்திரபோஸ்

22. மழையும் நீயே – அழகன் – மரகதமணி

23. பட்டு வண்ண ரோஜா – ஜீவா – கங்கை அமரன்

24. மனசும் மனசும் – புதுவயல் – அரவிந்த்

25. ஓடம் இது ஓடட்டுமே மங்கை ஒரு கங்கை – லஷ்மிகாந்த் பியாரிலால்

26. அமுதே தமிழே – கோயில் புறா – இளையராஜா

இன்னும் சபேஷ் – முரளி இசையில் “இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி”, வித்யாசாகரின் “எலி” உள்ளிட்ட ஏராளம் இசையமைப்பாளர்களோடு புலவரர்களின் திரையிசைப் பாடல் அனுபவம் உண்டு என்பதையும் இங்கே பதிவாக்கிக் கொள்கின்றேன்.


கானா பிரபா

0 comments: