Pages

Wednesday, October 13, 2021

ஶ்ரீகாந்த்


தென்றலுக்கு என்றும் வயது

பதினாறே அன்றோ....

செவ்வானத்தின் வண்ண நிலாவும்

சின்னவள்தான் அன்றோ...

கடந்த ஒரு வருடத்தில் அதிக தடவை கேட்டது, அதுவும் எஸ்பிபியின் பிரிவுக்குப் பின் இன்னும் ஆழமாக நேசித்த பாட்டு. இதற்காகவே யூடியூப் தேடிப் போய்க் கேட்கும் பழக்கத்தில் அந்தக் காட்சியில் தோன்றி நடித்த நடிகர் ஶ்ரீகாந்தும் அடிக்கடி வந்து நினைப்பு மூட்டுவார்.

பால்ய காலத்தில் பழகிய உருண்டு திரண்ட முகவெட்டுக் கொண்டோரைப் பல்லாண்டு கழித்துப் பார்க்கும் ஒரு அதிர்ச்சி தான் எழுந்தது பல்லாண்டுகளுக்குப் பின் அந்த மொழு மொழு முகம் கொண்ட ஶ்ரீகாந்தின் முதுமைப் படத்தை எஸ்.வி.சேகர் ஒரு தினம் பேஸ்புக்கில் பகிர்ந்த போது.

சின்ன வயசில் தங்கப் பதக்கம் பார்த்த போது கடும் கோபம் கோபமாக வந்தது அந்த துர் நடத்தை மகனாக நடித்த ஶ்ரீகாந்த் மேல்.

“அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி” 

என்று பட்டு மாமியுடன் கிட்டு மாமாவாக வந்து ஆட்டம் போட்ட போது கைதட்டி ரசிக்க வைத்தார்.

இது மாதிரித் தினுசு தினுசான குணச்சித்திரங்களில் அவர் ஆளுமைப்படுத்தியதால் தான் அந்த எரிச்சலும், பூரிப்பும் வந்ததைப் பின்னாளில் நடிப்பென்றால் என்ன என்று புரிந்த காலத்தில் தெரிந்தது.

ஶ்ரீதரின் “வெண்ணிற ஆடை” தொடங்கி, கே.பாலசந்தரின் படங்கள், 

ஞான ஒளி, தங்கப்பதக்கம், பட்டிக்காடா பட்டணமா, இவற்றோடு இன்னும் முத்திரை பதித்த “காசேதான் கடவுளடா” ஈறாகவும், இன்னும் இன்னும் இன்னும் என்று தமிழ் சினிமாவின் குணச்சித்திர அடையாளமாக ஶ்ரீகாந்த் மிளிர்ந்தார். அந்த சிரிப்பும், வாயை ஒருக்களித்துப் பேசும் பேச்சும் அவரின் இயல்பின் தனித்துவம்.

 நடிகர் ஶ்ரீகாந்த் இன் பழைய பேட்டி ஒன்று

https://www.youtube.com/watch?v=WfSMlOZKbfk&t=28s

நடிகர் ஶ்ரீகாந்த் நாயகனாகவும், இணை பாத்திரத்திலும் தோன்றி நடித்த போது அவருக்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் கொடுத்த பாடல்கள் இவை.

ஆஞ்சனேயா அனுமந்தய்யா (காசி யாத்திரை) 

இசை : சங்கர் கணேஷ்

https://www.youtube.com/watch?v=FOd_PxN-J-I

அம்மாடியோ சித்தப்பா (காசி யாத்திரை) 

இசை : சங்கர் கணேஷ்

https://www.youtube.com/watch?v=rBJJLa3n2GM

பூங்கொடியே பூங்கொடியே (ஸ்கூல் மாஸ்டர்) 

இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் 

https://www.youtube.com/watch?v=fuSfooy7rwA

தேவன் வேதமும் (ராஜ நாகம்) 

இசை: வி.குமார்

https://www.youtube.com/watch?v=8sMRbGtDxQg

டேய் வாடா ராஜா (கை நிறையக் காசு) 

இசை : சங்கர் கணேஷ்

https://www.youtube.com/watch?v=FnUPNZKdXU4

நான் ராதை தான் (இன்ஸ்பெக்டர் மனைவி)
இசை : சங்கர் கணேஷ்

தென்றலுக்கு (பயணம்)

இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

https://www.youtube.com/watch?v=XcBQ58qEqcc&t=27s

தன் தோழர்கள் நாகேஷ், வாலிக்கு அடைக்கலம் கொடுத்தவர் இப்போது அவர்களின் இடத்துக்குப் போயிருக்கிறார். நிறையப் பேசிக் கொள்ளட்டும்.

கானா பிரபா

13.10.2021


0 comments: